நான் அடிப்பது போல் ..........!


இந்த முறை தேர்தல் ஆணையம்,காவல்துறை செயல்பாடுகள் ஒட்டு மொத்தமாக அதிமுக வுக்கு துணை என்பது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது.
சம்பளமே வாங்காமல் பணிபுரியும் காவல் உயர் அதிகாரி விசுவாசம் எப்படி இருக்கும் என்பது சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்.அவரை மாற்றாமலேயே துணைக்கு உப்புக்கு-சப்பாணியாக ஒருவரை நியமித்து எதிர் கட்சிகளின் வாயை அடை ப்பதாக ஆணையம் அதாவது பிரவீன் குமார் செயல்பாடிருந்தது
suran

காவல்துறை யாருடைய ஏவல் துறை என்பதும் தெரிந்த விடயம்.
காவல்துறையினருக்கு இம்முறை தபாலில் வாக்களிப்பதை ஒரு வாரம் முன்னதாகவே அனுமதித்து மாவட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப் பட்டு வாக்களித்தார்கள்.அவர்கள் வாக்களிப்பதை ஒரு கட்சிக்கும் தெரிவிக்கவில்லை அதிமுகவை தவிர்த்து.மாவட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரிபவர்க்களுக்கே அன்று காலைதான் விபரம் தெரியும்.அதிமுகவை சார்ந்த  அரசு வழக்குரைஞர்கள் மட்டுமே கண்காணிக்க வந்திருந்தார்கள்.
காவலர்கள் அவர்களின் அதிகாரிகள் -அதிமுகவினரின் முன்னிலையிலேயே வாக்குச் சீட்டில் குறித்தார்கள்.அப்படி என்றால் வாக்குகள் எங்கு போயிருக்கும் என்று தெரியாதா?
வாக்களிப்பு விபரம்  தெரிந்து ஊடகவினரும் ,மற்ற கட்சியினரும் வருவதற்குள் பாதி வாக்குகள் பதிவாகி விட்டன.
ஒரு மாவட்டத்தில் மட்டுமே பிரச்னை பெரிதாக மறு வாக்களிப்பு நடந்துள்ளது.
ஆக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அதிமுக மாவட்ட செயலாளர்களை விட அதிகமாக பன்னீ ர்ச் செ ல்வத்தனமாக நடந்து கொள்கின்றனர்.
அவர்க்களை கண்கானிக்க வேண்டிய தேர்தல் ஆணைய பிரவீன் குமாரோ
மாநில தேர்தல் ஆணையர் போல் அதி விசுவாசியாக மாறியுள்ளார்.
எதிர் கட்சிகள் கொடுத்த புகார்கள் எல்லாம் குப்பை கூடையில்தான்.
பணம் கொடுக்கும் ஆளுங்கட்சியினருக்கு பாதுகாப்பு காவல்துறை தருகிறது என்றால்   பறக்கும் படையினரோ தகவல் எதிர்கட்சியினர் அளித்து ஒரு மணிநேரம் கழித்தே சம்பவ இடத்துக்கு வருகிறார்கள்.
suran
அதற்கு முன் ஆளுங்கட்சியினருக்கு தகவலை அளித்து விடுகிறார்கள்.
ஒரு இடத்தில் அதிமுக பூத் சிலிப்புடன் பணம் கொடுப்பதாக வந்த புகாரில் சிலிப்பை மட்டும் கைப்பற்றி விட்டு 49000/-ரூபாயை அதிமுகவினரிடமே கொடுத்து சென்றிருக்கிறார்கள்.திமுகவினர் பணத்தைக் கைப்பற்றவில்லையா?கைது இல்லையா?என்றதற்கு 50000/-வரை கொண்டு சென்றால் பிடிக்க வே ண்டாம் என்று பொன்மொழியை கூறியுள்ளனர் பறக்கும் அதிகாரி.
தேர்தலுக்கு முன் வாகனங்களில் 50000/-வரை கொண்டு செல்லலாம் என்றுதான் உள்ளது.வாக்காளர்களுக்கு சிலிப்புடன் கொடுக்க 50000/-வரை கொண்டு செல்லலாம் என்ற பறக்கும்படை அதிகாரி வாதம் என்பது தேர்தல் ஆணைய நாணயத்துக்கும்-நடவடிக்கைக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
அதை விட மோசமான ஆணைய நடவடிக்கை 144 தடை ஆணைதான்.
இந்த ஆணை காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தானே உண்டாக்கப் பட்டுள்ளது.
இதுவரை நடந்த எந்த தேர்தலிலும்-வாக்கு பதிவு கலவரங்களின் போதும் கூட இதுவரை 144 பிறப்பிக்கப் பட்டதில்லை.வாக்கு பதிவுக்கு கூட்டமாக போகாமல் என்ன செய்வது.
அதே போல் நடக்கவும் செய்துள்ளது.
இருவராக அதிமுகவினர் பணம் கொடுப்பதை அறிந்து அதை தடுக்க சென்ற திமுக,கம்யூனிஸ்ட் ,மற்ற கட்சினர்களை ஐந்து பேர்களுக்கு மேல் கூடியதாக கூறி காவல்து றையினர் விரட்டி அடித்துள்ளனர்.இது தமிழகம் முழுக்க நடந்துள்ளது.ஆக ஆளுங்கட்சியினர் பணம் கொடுப்பதை எதிர கட்சியினர் தடுப்பதை தடுக்கவே இந்த 144 தடை.
அதனாலேயே தஞ்சாவூரில் அதிமுக கட்சியினர் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களிடமே  பணத்தை கொடுத்து ஆதரவு திரட்டியுள்ளனர்.
ஆக  இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தை விட கொஞ்சம் அதிகமாவே அதிமுக வெற்றியடைய வைக்க வழிகளை எற்படுத்திக்  கொடுத்துள்ளது.அதை அதிமுகவும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டது.
இன்னமும் வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த சின்னத்தை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு விழுவது போல் செய்யாதது மட்டுமே பாக்கி.

முன்பு வாக்குப்பதிவு எந்திரத்தை குறை கூறி வந்த ஜெயலலிதா இப்போது அது பற்றியே பேசுவதில்லையே?
அதுதான் பிரவீன் குமார் ஆணையராக இருக்கிறாரே?

இப்போதுதான் சேஷன் ,ஒஷா போன்றவர்களை நினைக்கத்தோ ன்றுகிறது .
அப்படி என்றால் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் ஆணையத்தை சாடியது?.

"நான் அடிப்பது போல் நடிக்கிறேன் .நீ அழுவது போல் நடி"கதைதான்.

suran


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?