சகாப்தம் முடிந்தது

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், மிகப் பிரபலமான விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வாழ்நாள் ஏப்ரல் 8 அன்று முடிவடைந்தது. 
பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த சிஸ்டம் இனி கம்ப்யூட்டர்களில் தவிக்க இருக்கிறது. 
13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.
suran
2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், இன்னும் உலக அளவில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. 
2009ல் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 சிஸ்டம் தான், இன்னும் 50% கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ளது.இருந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய இலக்கு விண்டோஸ் 8 அல்லது 8.1 சிஸ்டத்தினை, மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்வதுதான். 
இந்த ஏப்ரல் 8க்குப் பின்னர், பாதுகாப்பற்ற அபாயமான நிலைக்கு விண்டோஸ் எக்ஸ்பி வருவதால், இதனை விட்டுச் செல்லும் பெர்சனல் கம்ப்யூட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகிடும். 
இப்போது  குறியீட்டுப் பிழைகளுக்கான தானாக காத்துக் கொள்ளும் பேட்ச் பைல்கள் கிடைக்காது. 
ஏன் எக்ஸ்பி கைவிடப்படுகிறது? 
மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த நிலைக்கு மேலாகவே, அதிக விற்பனையான, பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக எக்ஸ்பி உருவெடுத்தது. இதனை அடுத்து வெளியான விஸ்டா, பரிதாபமாக 4% பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனாலேயே, தொடர்ந்து, அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றது எக்ஸ்பி. 
இந்த பிடிப்பினைக் கண்ணுற்ற மைக்ரோசாப்ட், விஸ்டாவிற்கு வரவேற்பு கிடைக்காததால், எக்ஸ்பியைக் கைவிட திட்டமிட்டது. பலமுறை அது போல அறிவிப்பினை வெளியிட்டாலும், மக்கள் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், அதற்கான சப்போர்ட் பைல்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தது. 
விண்டோஸ் 8 வெளியான பின்னர், இனிமேல் முடியவே முடியாது. தொடர்ந்து பாதுகாப்பிற்கான பைல்களை வெளியிடுவது, நிறுவனத்திற்கு அதிக செலவினைத் தரும் என்று கணக்கிட்டு, மொத்தமாக சப்போர்ட் தருவதை நிறுத்துகிறது.
அப்படியானால், என்ன விபரீதங்கள் நடக்கும்? விபரீத விளைவுகள் ஏற்படாது என்று வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து இன்னும் பல கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பி இயங்கும். மைக்ரோசாப்ட் நிறுவனமும், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான போராட்டத்தினை, ஏப்ரல் 15, 2015 வரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, தானாக எந்த கம்ப்யூட்டரும் பாதுகாப்பு தரும் பேட்ச் பைல்களை அப்டேட் செய்திடாது. 
விண்டோஸ் எக்ஸ்பி சகாப்தம் முடிகிறது

ஆனால், மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஹேக்கர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பிற்கான பைல்களை வழங்கும்.
சென்ற வாரம், விண்டோஸ் எக்ஸ்பி பாதுகாப்பிற்கான திட்டங்களுக்கான அப்டேட் பைல்கள் வரும் ஜூலை 14,2015 வரை, அதாவது மேலும் 15 மாதங்களுக்கு வழங்கபப்டும் என அறிவித்துள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பாதுகாப்பு தரும், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான, Microsoft Security Essentials புரோகிராமிற்கான அப்டேட் பைல்கள் தொடர்ந்து கிடைக்கும். அதாவது, விண்டோஸ் எக்ஸ்பி இனி பாதுகாப்பு பெறும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருக்காது. 
சிஸ்டத்திற் கான பாதுகாப்பு பைல்கள் இனி அப்டேட் செய்யப்பட மாட்டாது. ஆனால்,வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கும் புரோகிராம் மட்டும் அவ்வப்போது எதிர்கொள்ளும் மால்வேர்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் வகையில் அப்டேட் செய்யப்படும். 
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு தர்மசங்கடமான நிலையில் தான், மேலே சொல்லப்பட்ட முடிவினை எடுத்துள்ளது. ஒரு நிலையில், தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும், எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து விடுபட வைத்து, புதிய கூடுதல் பாதுகாப்பு கொண்ட நிலைக்கு, சிஸ்டத்திற்கு தள்ள விரும்புகிறது. இன்னொரு நிலையில், எக்ஸ்பியிலேயே தொடரும் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை நட்டாற்றில் கைவிடுவது போல, சப்போர்ட் பைல்களைத் தராமல் இருந்தால், அவர்களுக்கு நல்லது எதுவும் செய்திடாமல் இருப்பது மட்டுமின்றி, ஆபத்தில் தள்ளிவிடும் செயல்பாட்டினையும் மேற்கொள்ளும். 
எனவே தான், மைக்ரோசாப்ட் பாதுகாப்பிற்கான பைலை மட்டும் ஜூலை 15, 2015 வரை அப்டேட் செய்வதாக அறிவித்துள்ளது. அது கூட, மால்வேர்களுக்கு எதிரான போராட்டத்தில் வலுவான எதிர்ப்பைத் தருமா என்பது அந்நிறுவத்திற்கே சந்தேகமாக உள்ளது. எனவே தான், கூடுதல் பாதுகாப்பு தரும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, நவீன சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து சாப்ட்வேர் புரோகிராம்களுக்கும் தொடர்ந்து செக்யூரிட்டி அப்டேட்களை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கை தந்துள்ளது. கூடுதலாக, இற்றை நாள் வரை அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையே பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. 
இனி, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவான முக்கிய நிலைகளை இங்கு காணலாம்.
இந்த உலகையே புரட்டிப் போட்ட ஒரு சாதனமாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்னும் பலர் கருதுகின்றனர். 
அது உண்மையும் கூட.
விண்டோஸ் சரித்திரத்தில், எக்ஸ்பி சிஸ்டத்தின் பங்கு, இதுவரை எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் கிடைக்காத ஒன்றாகும். 
suran
விண்டோஸ் ஓ.எஸ்.வெளியான நிகழ்வு களைச் சுருக்கமாக காணலாம்.

1.விண்டோஸ் 1.0 - 1985:
 விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அறிவிப்பு முதலில் 1983ல் வெளியானது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தே விண்டோஸ் 1.0, 1985ல், வெளியானது. அதுவரை, எம்.எஸ். டாஸ் இயக்கத்தின், கட்டளைப் புள்ளியில் கட்டளைகளை அமைத்து, கம்ப்யூட்டர் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. கீழ்விரி மெனு பட்டியல், ஸ்குரோல் பார்கள், ஐகான்கள், டயலாக் பாக்ஸ்கள் முதன் முறையாக, விண்டோஸ் 1.0.ல் வெளிவந்து மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தினை அளித்தன. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில், மக்கள் தங்கள் கம்ப்யூட்டர் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டனர்.
2. விண்டோஸ் 3.0. - 1990: 
விண்டோஸ் 3 பதிப்பு 1990 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 1992ல் விண்டோஸ் 3.1 பதிப்பும் வெளியானது. இவை இரண்டும் இணைந்த உரிம விற்பனை ஒரு கோடியை எட்டியது. முதன் முறையாக 16 வண்ண கிராபிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. Solitaire, Hearts and Minesweeper ஆகிய விளையாட்டுக்கள் மக்களுக்கு உற்சாகம் தந்தன. 
3. விண்டோஸ் 95, 1995:
 விற்பனைக்கு அறிமுகமாகி, ஐந்தே வாரங்களில், 70 லட்சம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டு, உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் தான், முதல் முதலாக ஸ்டார்ட் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டது. மிக முக்கியமாக, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து இணையத்திற்கான சப்போர்ட் தரப்பட்டது. டயல் அப் நெட்வொர்க்கிங் முறை அமலுக்கு வந்தது. 
4. விண்டோஸ் 98, 1998: 
வீடுகளிலும், சிறிய அலுவலகங்களிலும், பணிமனைகளிலும், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு வேகமாக வளர்ந்த போது, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், நுகர்வோர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. முதல் முறையாக, டிவிடி மற்றும் யு.எஸ்.பி.க்கள் இதில் சப்போர்ட் செய்யப்பட்டன. 
5. விண்டோஸ் எம்.இ., 2000:
 விண்டோஸ் எம்.இ. (Windows ME (or Millenium Edition)) பலவகையான வசதிகளைக் கொண்டு வந்தது. விண்டோஸ் மூவி மேக்கர் போன்ற மல்ட்டி மீடியா சமாச்சாரங்கள் எல்லாம் இதனுடன் வந்தவையே. ஆனால், இந்த சிஸ்டத்தினை நம்பி செயல்பட முடியவில்லை. இதனால், மக்கள் இதனை ஒதுக்கினார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனைக் கைவிட்டது.
6. விண்டோஸ் எக்ஸ்பி, 2001
எங்கு விண்டோஸ் எம்.இ. தவறியதோ, அங்கு விண்டோஸ் எக்ஸ்.பி. வெற்றி கொடி நாட்டியது. பயன்படுத்த மிக மிக எளிதான சிஸ்டம் என்ற பெயரை எடுத்தது. அத்துடன், நம் நம்பிக்கையை வாரிவிடாமல், நிலையாக நின்று இயங்கியது. வெளியாகி ஐந்து ஆண்டுகளில், 40 கோடி உரிமங்கள் விற்கப்பட்டன. மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் பாதையில், மற்ற புதிய பதிப்புகளுடன் முன்னேறினாலும், மக்கள் எங்களுக்கு இதுவே உகந்தது என்ற முடிவுடன் தொடர்ந்து இதனையே வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இப்போதும் கூட மொத்த கம்ப்யூட்டர் பயன்பாட்டில், 30% பேர் இதனையே மிக முக்கியமாகக் கருதி இயக்கி வருகின்றனர்.
7. விண்டோஸ் விஸ்டா, 2006:
 விண்டோஸ் எக்ஸ்பிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பலியான சிஸ்டம் என இதனைக் கூறலாம். எக்ஸ்பிக்குக் கிடைத்த நல்ல வரவேற்பினால், இது மக்களிடையே எடுபடவில்லை. மேலும், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் பலர், இதனால், வைரஸ்களின் தாக்கத்தினை எதிர்த்து நிற்க இயலவில்லை எனவும் குற்றம் சாட்டி னார்கள். எனவே, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மக்களிடையே ஒரு கேலிக்குரிய பொருளாகத் தான் இருந்தது. அதனாலேயே, ஆப்பிள் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, இதற்குப் போட்டியாக, ""நான் ஒரு மேக் கம்ப்யூட்டர்'' என்று ஒரு இயக்கத்தினைத் தொடங்கி வெற்றி பெற்றது.
suran
8. விண்டோஸ் 7, 2009: 
மைக்ரோசாப்ட், வெற்றி தராத விண்டோஸ் பதிப்புகளிலிருந்து பல பாடங்களைப் படித்தது. அவற்றின் அடிப்படையில் தன் தவறுகளின் பலவீனங் களை விலக்கி, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், தன் அடுத்த விண்டோஸ் பதிப் பினை, விண்டோஸ் 7 என வெளியிட்டது. மக்களுக்கான விற்பனை பதிப்பை வெளி யிடும் முன், 80 லட்சம் சோதனை உரிமங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் கொடுத்த பின்னூட்டங்களின் அடிப்படையில், இந்த தொகுப்பு வடிவமைக்கப்பட்டது. 
வெற்றி கரமாக இது மக்களிடையே சேர்ந்தது. மக்களும் விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சோதனை வேறு திசையில் இருந்து கிடைத்தது. மைக்ரோசாப்ட் கால் ஊன்றாத மொபைல் சாதனங்கள் இயக்கம், அதற்கு நெருக்கடியைக் கொடுத்தது. உடன், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் சரியான போட்டியைத் தந்தது.
9. விண்டோஸ் 8, 2012: 
தனக்கு போட்டியாக நெருக்கடி கொடுக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முதல் முதலாகக் கம்ப்யூட்டரில் தொடு உணர் திரை இயக்கத்துடன் விண்டோஸ் 8 சிஸ்டத் தினை வடிவமைத்து மைக்ரோசாப்ட் வழங் கியது. 
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக அமைப் பினையே மாற்றி அமைத்தது மைக்ரோசாப்ட். தன்னுடைய டேப்ளட் பி.சி.க்களிலும் இயங்கிடும் வகையில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு கலவையாகத் தரப்பட்டது. இது மிகப் பெரிய, துணிச்சலான செயல்பாடு என இத்துறையில் இயங்கும் அனைவரும், ஆச்சரி யத்துடன் கருத்து தெரிவித்தனர். 
ஆனால், இதனைப் பயன்படுத்தியவர்கள்,அதனுடன் மகிழ்ச்சியாக இல்லை. கம்ப்யூட்டர் வேலை களை மேற் கொள்வதில் சற்று எரிச்சல் அடைந் தனர். இது நாள் வரை பழகி வந்த அமைப்பிலிருந்து முற்றிலும் மாறான ஒன்றை ஏற்றுக் கொள்ள மனம் தடுத்தது. 
இதனால், இதனை அடுத்து வந்த விண்டோஸ் 8.1ல், மைக்ரோசாப்ட் வழக்கமான, தன் பாரம்பரிய டெஸ்க்டாப் முறை இயக்கத்தினையும் சேர்த்து வழங்கியது. 
தொடர்ந்து மெதுவாக, மக்கள் இதற்கு மாறி வந்தாலும், 
இது வெற்றியா? தோல்வியா? 
 காலம் தான் தீர்மானிக்கும்.
நன்றி:தினமலர்.
---------------------------------------------------------------------------------------------
Click Here
மக்களின் வாக்குகளைப் பொறுக்கி மக்களவை அவைத்தளைவரானவருக்கு வாக்களிக்க மனமில்லை.அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் நாங்கள் ஊதியத்தை இழந்து வாக்களிக்கிறோம்.
வாழ்க மக்களாட்சி.
வாழ்க தேர்தல் ஆணையம்.
தேர்தலில் நின்று வென்றவரும்,இப்போதைய தேர்தலில் நிற்பவருமான மீராகுமாரி  வாக்களிகாததனால் அவரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யுமா?
தேர்தல் ஆணையம்.இல்லையென்றால் ஒவ்வொருவரு ம் வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரை இளித்தவாயர் மக்களுக்கு மட்டும் தானா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்புத்தாண்டு பற்றிய முழு வரலாறு!

தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!!

சித்திரை1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
suran
இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டி பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரலக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாம்ல வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாரா,. இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது. 

தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
suran
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
suran

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால் தான் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்கிறோம்.

தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சித்திரை 1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால் தானே! நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் சோற்றை, "சோறு" எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்,

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"

                                                                                        -பாரதிதாசன்.
நன்றி: மதுரை டாண் அசோக்.
=================================================================================

suran


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?