கனவுலகில் இருந்து.........!


suran


அழகிரி கதை முட்டுசந்தில் நிற்கிறது.தனது அடியார்களை வைத்து திமுக தலைமையை மிரட்டி தனது கதையை சாதித்துக் கொள்ளலாம்.தனது செல்வாக்கை தமிழகத்திற்கு காட்டலாம் என்று எண்ணியவர் திட்டத்தில் மண்ணை அள்ளி ந டிகர் ரித்திஷ் போட்டு விட்டு அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார்.
இது நிச்சயம் திமுகவிற்கு இழப்பே இல்லை.அழகிரிக்குதான் அடி.
ரித்திஷை திடிரென திமுகவில் நுழைத்து அவருக்கு உடனேயே மக்களவை தேர்தலில் போட்டியிட இடமும் வாங்கிக்கொடுத்து மக்களவை அனுப்பியவர் அழகிரி.

ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவை வளர விடாமல் மாவட்ட செயலாளருடன் மோதி அடிதடியில் இறங்கி கட்சியை கெடுத்துக்கொண்டிருந்தவ்ர்தான் ரித்தீஷ்.
இவர் போனது திமுகவை பொறுத்தவரை நல்ல விடயம்.
அழகிரி அடியார்களில் அவரால் இனி ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று இடத்தை காலி செய்பவர்கள் அதிகரிக்கிறார்கள்.
அழகிரியின் வலது கையாக இருந்த கோபி ஸ்டாலினை சந்தித்து பாவ மன்னிப்பு கேட்டு சென்று விட்டார்.ரித்தீஷ் அதிமுக.
கே.பி. ராமலிங்கம் கருணாநிதியை சந்தித்து சமாதானப் படு த்த சென்று வாங்கிக்கட்டிக் கொண்டு திரும்பியுள்ளார்.
நெப்போலியன் அமெரிக்காவில் அரசியல் செய்கிறார்.அவர் கூட அதிமுக சென்றால் அழகிரி ரொம்ப மனமுடைந்து போய் விடுவார்.
அழகிரியிடம் இருப்பது வெறும் அதிரடி பேச்சு மட்டும்தான் என்பதை அவரின் அடியார்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.இனி அவரால் ஒன்றும் ஆவதில்லை என்றுதான் ரித்தீஷ் கடையை மாற்றி விட்டார்.
ஆக இதுவரை திமுக வின் தேர்தல் பரப்புரைக்கோ,கட்சி நிகழ்ச்சிக்களுக்கோ  தமிழ்நாட்டிற்குள் மதுரையை தவிர்த்து எங்குமே செல்லாத அழகிரி இன்று  ஊர்,ஊராக சென்று படுக்கையில் இருக்கும் கட்சியினரின் நலம் விசாரித்து ஆங்காங்கே செய்தியாளர்களிடம் முழங்கி வருகிறார்.
ரித்தீஷ் போனபின் இப்போது அழகிரி சவால் சுதி குறைந்துள்ளது.இவரின் அரசியல் கதைக்குதவாது என்று மீண்டும் திமுக பக்கம் போக வழி இல்லாதவர்கள் அதிமுக பக்கம் ஓடுகிறார்கள்.அந்த அதிர்ச்சி அழகிரிக்கு அதிகம்.
suran

முன்பே சொன்னதுதான் இன்னொரு முறை சொல்லி வைப்போம்.
அழகிரி அரசியல் விளம்பர அரசியல்.செய்திதாள் வெளியிடுவோர் வேறு நல்ல பரபரப்பு செய்தி கிடைத்து விட்டால் அழகிரியை கண்டு கொள்ள மாட்டார்கள் அவரின் விஷ்வரூபம் காற்று இறங்கிய பலூன் ஆகி விடும்.
கருணாநிதி எதிர்ப்பு அரசியலுக்கு இன்றைய கருவி அழகிரி
என்பதுதான் அவர்களின் கருத்து.நாளை வேறு வந்து விடும்.அப்போது அழகிரி?
வடிவேலு சொல்லுவதிப் போல் உசுப்பேத்தி ,உசுப்பேத்தி உங்களை வண்டு முருகனாக்கி விட்டார்கள்.இனி இவன் இதற்கு சரிப்பட்டு வரமாட்டான் கதைதான் .
அழகிரி பேசுவதும் வெறும் பேத்தலாகவே உள்ளது.

திமுக தான் என் கட்சி.கலைஞர் என் தலைவர்.வேறுகட்சி ஆரம்பிக்க மாட்டேன்,வேறு கட்சியில் சேர மாட்டேன் என்று சொல்லும் அவரே திமுக 40 லும் தோற்க வேண்டும் .இத் தேர்தலில் 4 வது இடத்துக்கு போக எனது ஆதரவாளர்கள் பாடு பட வேண்டும் என்கிறார்.

திமுக வின் அறிவாலயத்தை என்னவோ கருணாநிதியின் குடும்ப  சொத்து போல் தனக்கும் அதில் பங்கு உள்ளது.நீதிமன்றம் போவேன் என்கிறார்.
என்ன செய்கிறோம்,என்ன செய்ய வேண்டும் என்றே புரியா குழப்ப நிலையில் இருக்கிறார்.
கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட போது வீர வசனம் ,அதிரடி அறிவிப்பு வெளியிட்டால் கட்சி பணிந்து தம்மிடம் வந்து விடும் என்ற நினைப்பில் பேசியது அவரை கட்சியை விட்டே வெளியெற்றியதால் உண்டான அதிர்ச்சியில் தான் இன்னமும் உள்ளார்.
திருமங்கலம் தேர்தலில் திமுக ஆளுங்கட்சி இன்றைய நிலவரப்படி வென்றது.அது தனது செல்வாக்கால்தான் என்ற மாயை அழகிரி கண்னை இன்னமும் மறைத்துள்ளது.
அதன் பின் அதிமுக ஆட்சியில் மதுரையில் அவர் குடியிருக்கும் சொந்த வட்டத்தில் கூட அவரது அடி பொடியை அவரால் வெற்றி பெறச் செய்து மதுரை மாநகராட்சிக்கு உறுப்பினராக அனுப்பி வைக்க முடியா நிலையை மறந்து விட்டார்.
suran

அழகிரி கொஞ்ச ம் கனவுலகில் இருந்து மீண்டு வருவதே அவருக்கு நல்லது.
இவரின் இந்த நடவடிக்கைகள்தான் திமுகவின் அடிமட்டத் தொண்டனையும் ஸ்டாலினை அடுத்த தலைவராக எற்றுக் கொள்ள வைத்து விட்டது.கட்சியும் முழுமையாக ஸ்டாலின் வசம் செல்ல காரணமாகவும் ஆகி விட்டது.
இனி அவர் திமுகவுக்கு திரும்பினாலும் பத்தோடு பதினொன்றுதான்.
காலியானால் இப்போதைய அன்பழகன் இருக்கைதான் அவருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------


வாய்  நாற்றமா?

நீங்கள் பேசும் போது  உங்கள் நண்பர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசுவதால்  நீங்கள் அவமானமடைந்தது போல உணர்கின்றீர்களா? 
 துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் முகம் கொடுத்து கதைப்பதற்கு பெரிதும் கஷ்டப்படுகின்றீர்களா? 
  கவலையை விடுங்கள். 
நீங்கள் மற்றவர்களிடம் மனம் விரும்பியது போல முகம் பார்த்து பேசுவ தற்கும், அவர்கள் உங்கள் பேச்சை தாராளமாக கேட்டு ரசிப்பதற்குமான காலம் வெகு தொலைவில் இல்லை.

அதற்கு முதலில் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களைவாய் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வயிற்றில் ஏற்படும் புண்கள் தான் அதற்கு முதலாவது காரணமாக விளங்குகின்றது. ஆமாம் அல்சர் எனப்படும் இவ்வயிற்றுப் புண்களால் வயிற்றில் உருவாகும் நாற்றத்தன்மை வாய் வழியாக வெளியேறும் போது 

தா ன் வாய் துர்நாற்றம் அதிகம் ஏற்படுகின்றது.
 அத்துடன் கீழ் வரும் சில விடயங்களும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
suran
  • உடம்பில் நீர்ச்சத்து குறைந்து போகின்றமை.

  • புகையிலை, வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாயிற்குள் போட்டு மெல்லுதல்.
  • புகைக்கும் பழக்கம்.
  • போதைப் பொருட்களை சாப்பிடுதல்.
  • தொண்டையில் உள்ள டான்சில் எனப்படும் சுரப்பியல் தொற்று ஏற்படுதல். இவ்வாறு தொண்டையில் உருவாகும் கிருமித் தொற்றும் வாய் துர்நாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றது.
  • சிலருக்கு ஒரு வழி பாதையான உணவுக்குழாயினூடாக உணவு பையிலிருந்து அமிலங்கள் மேல் நோக்கி வந்து போகும். Re-Fix எனப்படும் இச்செயற்பாட்டினாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படுகின்றது.
  • உணவு குழாயினூடாக உணவு மண்டலத்திற்கு சென்ற உணவு சுமார் 4 மணித்தியாலத்தில் செறிமானம் அடைய வேண்டும். நான்கு மணித்தியாலத்திற்கு மேல் உணவு செறிமானம் அடையாமல் இருக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் புளிச்ச நாற்றம் வாய் வலியாகவே வெளியேறும் அதுவும் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. இதனையே அஜீரணக்கோளாறு என்கின்றோம்.
  • வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை எப்படி இலகுவாக போக்கி கொள்ளலாம் என்பதை இனி பார்ப்போம். 
    suran
    • உடனடி நிவாரணி எனும் போது வாசனைப் பொருட்களான கராம்பு, கொத்தமல்லி இலை என்பவற்றை வாயில் போட்டு மெல்லுதல்.
    • குடற் புண்னை போக்குவதற்காக காலையில் எழுந்தவுடன் காப்பிக்குப் பதிலாக தினமும் 4 டம்பளர் சுத்தமான நீரை அருந்த வேண்டும்.

    • அரை லீற்றர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து வாயை கொப்பளிப்பதுடன் தினமும் அவற்றை அருந்தி வருவதன் மூலமும் வாய் துர்நாற்றத்தைப் போக்க முடியும். அதனுடன் உப்பு சிறிதளவை சேர்த்துக் கொள்வதன் மூலம் பயனை இரட்டிப்பாக்கிவிட முடியும்.
    • அத்துடன் காலை மாலை என இரண்டு நேரமும் பற்களை நன்றாக துலக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் பல் இடுக்குகளில் தேங்கி விடும் உணவு துகல்களை அகற்றி மாதம் ஒரு தடவையேனும் பல் வைத்தியரிடம் காட்டி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
    • சாப்பிட்டப் பின் வாயை நன்றாக கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    • புகைப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பொருட்களை வாயில் போட்டு மெல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
    • அதிகமான காரம் மற்றும் புளிப்புச் சுவையுள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
    • வாய் சுகாதாரத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்.


    இவ்வாறான விடயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் வாய் திறந்தாலே தூர ஓடும் உங்கள் அன்புக்குரியவர்களை உங்கள் அருகிலேயே அமரச் செய்து விட முடியும். 
  • ------------------------------------------------------------------------------------------------------------
suran






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?