அவசரப் பேட்டி - ஏன்?
........................
தினமணி, பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். ஏடு என்று நாம் சுட்டிக்காட்டிய போதெல்லாம் - அதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்காதவர்கள்கூட, இந்தத் தேர்தலில் அது நடந்து கொண்டு வரும் போக்கினை நிதானமாகச் சிந்தித்தால் - திராவிடர் கழகத்தின் கணிப்பு விடுதலை யின் - மதிப்பீடு மிகவும் துல்லியமானதே என்று புரிந்து கொள்வார்கள்.
இதற்காக வெகு தூரத்திற்குச் சென்று ஆராய...்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டாம்.
இன்று தமிழ்நாடெங்கும் - புதுவையும் சேர்த்து 40 இடங்களில் வாக்குப் பதிவு; இந்தக் கால கட்டத்தில் நேற்றைய தினமணி (23.4.2014) அவசர அவசரமாக தினமணியின் ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான திருவாளர் நரேந்திரமோடியைப் பேட்டி கண்டு, தினமணியின் முதல் பக்கத்தில் விரிவாக வெளியிடு கிறார் என்றால் இதன் அவசியம் என்ன? இதன் பின்னணி என்ன? என்பது - தமிழ்நாட்டில் கோலி விளையாடும் கோவணம் கட்டத் தெரியாத சிறுவன் கூடப் புரிந்து கொள்வானே!
பேட்டிக்கு முகவுரையாக தினமணி ஆசிரியர் அய்யர்வாள், மோடிபற்றிக் கொடுக்கும் முன்னுரை அவரின் முகவரியைப் பச்சையாகக் கட்டம் கட்டி வெளிப்படுத்தக் கூடியதாகும்.
ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய மோடியின் அரசியல் பயணம் பிரமிப்பை ஏற்படுத்தும், இவரது சுறுசுறுப்பும், மன வலிமையும் நிகரற்றது. சொலல் வல்லன், சோர்வு இலன் அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்கிற வள்ளுவப் பேராசானின் குறளுக்கு நரேந்திர மோடியை உதாரணம் கூறலாம்.
இப் போது குஜராத் முதல்வர், தேர்தல் முடிவானால் அனேகமாக இந்தியப் பிரதமர்
என்று மோடிக்கு தினமணி ஆசிரியர் இப்பொழுதே பிரதமர் என்கிற மணிமுடியைச் சூட்டி விட்டார். தமது ஆசையைக் குதிரையாக்கி சவாரியும் செய்து விட்டார்.
மோடி என்றால் இதுதானா? மோடி என்றால் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் என்ற விலாசம் கிடையாதா?
மோடி என்றால் சிறுபான்மை மக்களுக்குப் பயங்கரமான எதிரி, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லீம்கூட வேட்பாளராக பி.ஜே.பி. சார்பில் போட்டியிட வாய்ப்புத் தராதவர் என்ற அறிமுகம் அவரைப் பற்றிக் கிடையவே கிடையாதா?
பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முஸ் லிம்கள், ஒருவர் சீக்கியர்; இந்து ஒருவரும் கிடையாது என்ற நிலைப்பாடு, மோடி எத்தகைய பாசிஸ்டு என்பதை உலகுக்கு அறிவிக்கவில்லையா?
வெளிநாடுகளில்கூட கல்வியாளர்கள், பேராசிரி யர்கள் பல்துறைகளைச் சேர்ந்த பெரு மக்கள், இந்தியாவில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் நாடு மரண பூமியாகும் - அண்டைய நாடுகள்கூடப் பதற்றம் அடையும் என்று கையொப்பமிட்டு அறிக்கை களே கொடுத்து இருக்கிறார்களே - அவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் அற்பம்தானா?
அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை மோடி தங்கள் நாட்டுக்கு வந்திட விசா கொடுக்க மறுத்து வருவது - ஏன்? இதுபற்றியெல்லாம் வைத்திய நாதய்யர் களுக்குத் தெரியவே தெரியாதா?
நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிர்மாணிக்க 11,00 ஏக்கர் நிலத்தை சதுர அடி ரூ.900-க்கு அடி மாட்டு விலைக்கு விற்றதால் மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் என்ன?
சதுர அடி ரூ.10,000 சந்தை மதிப்பு!
அதே டாட்டாவுக்கு 0.1 சதவீத வட்டியில் ரூ.9750 கோடியை 20 வருடத்தில் திருப்பி செலுத்த வாய்ப்பு அளித்தவரும் இந்த மோடிதானே. இவர்கள் கண்ணோட்டத்தில் டாட்டா பரம ஏழையோ!
மோடியைப் பிரதமர் ஆக்குவதில் 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் - ஆர்வத்துடன் அந்தரத்தில் பறந்து கொண்டு இருக்கிறார்களே - உயர் ஜாதி ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றனவே - இந்தப் பின்னணிகளைக் கொண்ட பிற்போக்குவாதிகள் என்ற அடையாளம் வெகு மக்கள் மத்தியில் அறவே அழிக்கப்பட வேண்டும் என்ற தந்திரம் தானே இந்தத் தினமணியின் அவசரப் பேட்டிக்கான அவசியம்!
மோடியை நோக்கி தினமணி ஆசிரியர் வைக்கும் கேள்விக்குள்ளேயே விடையிருக்குமாறு தேர்ந்தெடுத் தல்லவா மோடி முன் வைக்கிறார்.
மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் - அவரைத்தானே இந்த அக்கிரகாரவாசிகள் முன் வைக்கின்றனர் என்ற வினா எழலாம்.
ஒரு வகையிலே அவர்களின் கெட்டிக்காரத்தனம் இது; பச்சையாகப் பார்ப்பனர்களை முன்னிறுத்தும் போது, வெகு மக்கள் அந்த வன்மத்தை, நச்சுக் கோப்பையையும் பளிச்சென்று புரிந்து கொள்வார்கள்.
தந்தை பெரியார் மொழியில் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் நிஜப் புலிகளை விட, வேடம் தரித்த புலிகள் அதிகம் குதிக்கும். அதனால்தான் இந்த வேடப் புலியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். அதுவும் ஆர். எஸ்.எஸில் பயிற்சிக் கொடுத்துப் புடம் போடப்பட்ட வரைப் பயன்படுத்தி, தங்களின் மனுதர்ம ஹிந்துத்துவா சாம்ராஜ்ஜியத்துக்கு அடிகோல நினைக்கிறார்கள்.
இந்த ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் தான் சோ ராமசாமிகளின், தினமணி வைத் தியநாதய்யர் அண்ட் சோக்களின் விஷம ஊற்று எங்கே, எப்படி மய்யம் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வாக்கு சாவடி வரிசையில் நிற்பவர்களுக்கே பணம் பட்டுவாடா .நல்லாயிருக்குது.
தேர்தல் ஆணையம்,காவல்துறை நியாயமாக தேர்தல் நடத்தும் லட்சணம்.
இதில் 144 தடை சட்டம் வேறு .
அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்யத்தான் 144 தடை சட்டம் போடப்பட்டதாக பொதுமக்கள் கருதுகிறார்களே.இந்திய தேர்தல் ஆணைய பிரவீன் குமார் பதில் என்ன?இதோ புகைப்படமும் வெளியாகி விட்டது.நடவடிக்கை எடுப்பாரா?மாட்டார் என்பது உத்திரவாதம்.கண்டனம் மட்டும் அதிமுகவுக்கு வழங்குவார்.அவ்ளோதான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 25:
மலேரியா நோய்
விழிப்புணர்வு தினம்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் 6 முதல் 7 லட்சம் மக்களை மலேரியா நோய் பலிவாங்கியபடி இருக்கிறது.
''கொசுக்களில் ஆண் கொசுக்கள் சைவம். அவை தாவரச் சாறை மட்டுமே அருந்தி வாழும். பெண் கொசுக்கள்தான் ரத்தம் குடிப்பவை. மலேரியாவைப் பரப்பும் கொசுக்களுக்குப் பெயர் அனோபிலெஸ்.
இந்த அனோபிலெஸ் பெண் கொசுக்கள் 'பிளாஸ்மோடியம்’ என்ற ஒட்டுண்ணியை மனிதர்களிடம் பரப்புகின்றன. இந்தக் கொசுக்கள் பகலில் நிழல் உள்ள இடங்களில் மறைந்து இருக்கும். இரவில்தான் மனிதர்களைக் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ் நீர் வழியாக மலேரியாக் கிருமிகள் மனிதனின் உடலில் புகுந்துவிடும்.
பின்பு, அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குள் செல்லும். இந்தக் கிருமிகள் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையிலும் கல்லீரலில் தங்கிப் பல்கிப் பெருகும்.
பின்னர் அங்கே இருந்து ரத்தத்துக்குத் திரும்பிவந்து ரத்தச் சிவப்பு அணுக்களை அழிக்கத் துவங்கும். அப்போதுதான் காய்ச்சல் ஏற்படுகிறது.
மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாக வெளிப்படும்.

முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலை வலி, உடல் வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர்க் காய்ச்சல் ஏற்படும். உடல் நடுக்கம் எடுக்கும். இது சுமார் அரை மணி நேரம் நீடிக்கும். இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும்.
இது சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும். மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல குளிர்ந்துவிடும்.
இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார். பிறகு, இதே காய்ச்சல் மறுநாளோ ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறையோ மீண்டும் வரும். இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
மித வெப்ப நாடுகளில் கொசுக்கள் அதிகமாக வாழும். குறிப்பாக, பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள நாடுகளில் கொசுக்களின் பாதிப்பு அதிகம். காரணம், மிகக் குறைந்த வெப்ப நிலையிலும் மிக அதிகமான வெப்ப நிலையிலும் கொசுக்களால் உயிர் வாழ முடியாது. இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளிலும் பொதுச் சுகாதாரம் குறைந்த வளரும் நாடுகளிலும் கொசுக்களின் ஆதிக்கம் அதிகம். ஒரு கொசுவின் சராசரி ஆயுள் காலம் 12 நாட்கள். அதிகபட்சம் 34 நாட்கள். பெண் கொசுக்களைவிட ஆண் கொசுக்களுக்கு வாழ்நாள் குறைவு. சுமார் 11 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கொசுக்களால் பறக்க முடியும். பெண் கொசு முட்டை இடும் நேரத்தில்தான், ரத்தம் குடிக்க மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் கடிக்கும். ஒரு கொசுவின் எடை 0.025 மில்லிகிராம் இருக்கும். அது தன் வாழ்நாளில் 3,000 முட்டைகளை இடும்.
பொதுவாக எல்லா வகைக் கொசுக்களும் மாலை நேரத்திலும் இரவிலும்தான் கடிக்கும். டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் மற்றும் சிக்குன் குன்யா கொசுக்கள் மட்டும் பகலில் கடிக்கும்.

வீடுகளில் இருட்டான மூலைகளில் தங்கி ஓய்வெடுக்கும். வீட்டுக்கு வெளியில் கிணறு, தண்ணீர் தேங்கியுள்ள இடங்கள், சாக்கடை, தாவரங்கள், மாட்டுத்தொழுவம் போன்றவற்றில் தங்கும்.
அனோபிலெஸ் கொசுக்கள் சுத்தமானத் தண்ணீரில் அடைகாக்கும். க்யூலெக்ஸ் கொசுக்கள் அசுத்தமான தண்ணீரில் அடைகாக்கும். ஏடிஸ் கொசுக்கள் தாவர இலை தழைகளில் அடைகாக்கும்.
கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க வழி.
மலேரியாவுக்கு எதிரான போரில் கொசுக்களை ஒழிப்பது என்பது மிக முக்கியம்.

இதற்கு வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும்.
வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை’ப் புகைய விட்டால், கொசுக்கள் இறக்கும்.
கொசுக்கள் வாழும் இடங்களைத் தாக்குவது இந்தப் போரின் அடுத்தக் கட்டம். சுத்தமான தண்ணீரில் மலேரியா கொசுக்கள் உற்பத்தி ஆவதால், வீட்டின் மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும். குப்பைத் தொட்டி, தேங்காய் மூடி, உபயோகம் அற்ற டப்பாக்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் பாழடைந்த கிணறு இருந்தால், மூடிவிட வேண்டும்.
வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைப்பதன் மூலமும் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம்.
வீடுகளில் வாளிகளில் நிரப்பிவைக்கப்படும் தண்ணீரையும் வாரம் ஒரு முறை முற்றிலும் வெளியேற்றி, வாளியை இரண்டு மணி நேரம் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். பூந்தொட்டிகள், ஏர்கூலர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் இவ்வாறே சுத்தப்படுத்த வேண்டும்.
வீட்டைச் சுற்றி தண்ணீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, சாக்கடை நீர் தேங்குவதைத் தவிர்ப்பது, தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலமும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும்!
சிறுகதை மன்னன்
என்று பெயர் வாங்கிய
"புதுமை பித்தன் "
பிறந்த நாள்.
[ஏப்ரல்-25]