வாரம் தவறாமல் அடி ?

suran

கேஜ்ரிவால் இப்போதெல்லாம் செய்திகளில் மட்டுமல்ல மனிதர்களிடமும் அடி பட ஆரம்பித்து விட்டார்.வாரம் தவறாமல் அடி அல்லது முட்டை-மை தாக்குதலில் மையம் ஆகி விற்கிறார்.
ஆனால் இந்தியாவில் எத்தனையோ கட்சிகள்,அவர்களுக்கு எத்தனையோ கொள்கைகள்.
இதில் பலர் மதவாதம்,சாதி வாதம் என்றெல்லாம் திரியும் போது அவர்களை எல்லாம் தாக்காதவர்கள் கேஜ்ரிவாலை மட்டும் தாக்க  வருவது ஏன் ?
இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது.ஒரு கட்சித்தலைவர் சொன்னது போல் விளம்பரப் படுத்தப்படுவதே நோக்கமாக இருக்கலாம்.
எனென்றால் அவர் திடீர் தலைவர்.அமெரிக்க உளவுத்துறையினரின் பொருளாதார அடியாள் என்ற சந்தேகம் அனேகமாக எல்லோருக்கும் வந்து விட்டது.
டெல்லியில் காங்கிரசுக்கு எதிராக களம் இறங்கினாலும் அதனுடைய ஆதரவினால் ஆட்சியமைத்தவர்.
பின் நாற்காலியின் அதிகார புயத்தினாலும் தன்னால் ஒன்றும் செய்யாமுடியாமல் போனால் மக்கள் தனது சின்னத்தாலேயே அடித்து விரட்டி விடுவார்கள் என்ற பயத்தினாலும் ,காங்கிரசு-ஆம் ஆத்மி இருவரையும் இந்தியாவில் வழி நடத்தும் சிஐ ஏ  யின் அறி வுரை யின் படியுமே கேஜ்ரி பதவியை விட்டு விலகினார என்று நமபத்தகுந்த செய்திகள் உள்ளன.
காரணம் இன்னும் கொஞ்சம் நாள்  இருந்தால் ஆம் ஆத்மி யாருடைய ஆமாம் ஆத் மி என்ற குட்டு வெளியாகி விடும்.
இப்போதைக்கு கெஜ்ரிவாலின் நோக்கம் முதல்வராகவோ,பிரதமராகவோ நாற்காலியில் அமர்வதல்ல.
இந்தியாவில் எதிர் கட்சிகளின் வளர்ச்சியைத்தடுப்பதுதான்.அதுதான் அமெரிக்காவில் அவருக்கு தரப்பட்ட திட்டம் அல்லது ப்ராஜக்ட் .குறிப்பாக மக்களிடம் காங்கிரசுக்கு எதிராக அந்நிய மூலதனங்க்களுக்கு எதிராக எழுந்துள்ள அதிருப்தியின் பயன் இடதுசாரிகள் ஆதரவாக போய்விடக் கூடாது என்பதுதான் திட்ட நோக்கம்.
suran
ஊழலை எதிர்க்கும் கேஜ்ரி நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் அந்நிய மூலதனங்களை பற்றி கண்டு கொள்வதில்லை.
பதவி வந்தும் தனது கொள்கைகளை செயல் படுத்த முடியாதவர் எப்படி ஒரு நல்ல தலைவராக இருப்பார்.அவரின் நோக்கங்களே வெறு.போராடி மக்கள் கவனத்தை திசை திருப்புவதுதான் அது.அதற்காக ஊடகங்களும் அவருக்கு அளவுக்கதிகமாக விள்மபரத்தை இக்குறுகிய காலத்தில் தந்து விட்டன.தந்தும் வருகின்றன.இனி தரும்.
இப்போதைய தேர்தல் பரபரப்பில்.மோடிக்கான விளம்பரத்தில் தனது விளம்பரம் குறைந்து விடக் கூடாது என்றே இந்த அடிவாங்கும் நிகழ்வுகள் அரங்கேற்றப் படுகின்றன.கெஜ்ரிவாலின் விளம்பரப் படுத்தலில் இதுவும் ஒரு அங்கமே.
suran

-------------------------------------------------------------------------------------------------------------------------
முகனூல் அடி.

Yuva Krishna
 
சீமானும், சவுக்குவும் போராளிகள் அல்ல. அதிமுகவின் அடிமைகள், அல்லக்கைகள், அடிவருடிகள் என்று 2011 தேர்தலின் போதே சொன்னோம். அப்போது நடுநிலைமை என்று சொல்லிக்கொள்ளக்கூடிய இணைய மொக்கைகள் அந்த கூற்றை கடுமையாக எதிர்த்தார்கள். ”திமுகதானே ஆட்சியில் இருக்கிறது, எனவேதான் அதை எதிர்க்கிறார்கள். அதிமுக வந்தவுடனேயே பாருங்கள். கிழித்தெறிவார்கள்” என்றார்கள்.

இப்போது மேற்படி புரட்சியாளர்கள் அதிமுகவின் தலைசிறந்த அடிமைகளான அமைச்சர்களை மிஞ்சும் வகையில் புரட்சித்தலைவி அம்மாவுக்கு பால்காவடி தூக்கி வருவதை அதே மொக்கைகள் உணர்ந்திருக்கிறார்கள்.

மழை வரும் வரைதான் [குள்ள நரிகளின் ]நீலச்சாயம் தாக்குப்பிடிக்கும்!




suran


-------------------------------------------------------------------------------------------------------------------------
சனி நீர் ?

சனிக்கிரகத்தை சுற்றும் துணைக்கோள்களில் ஒன்றான என்செலாடஸில் உறைபனி மூடிய அதன் மேற்பரப்புக்கு கீழே திரவ நீர்நிலை ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

இந்த குட்டிக் கிரகத்தின் தென் துருவத்தில் வரிவரியாகத் தோன்றும் ஒரு இடத்தில் இருந்து உறைபனியாலான துகள்கள் போலத் தோன்றிய பொருட்கள் பீய்ச்சியடித்ததை விஞ்ஞானிகள் கண்ட காலம்தொட்டே அவர்கள் இது தொடர்பில் உற்சாகம் அடைந்திருந்தனர்.

suran

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவின் கஸ்ஸினி என்ற விண்கலம் இந்த துணைக்கோளின் மேலே பறந்து செல்கையில் அது சேகரித்த தகவல்களை தற்போது ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் இந்த துணைக்கோளில் திரவ நீர் இருப்பதற்கான அறிகுறிகளை அக்கோளின் ஈர்ப்பு சக்தி பற்றிய விவரங்களில் கண்டுள்ளதாக கூறுகின்றனர்.

வட அமெரிக்காவில் இருக்கும் லேக் சுப்பீரியர் என்ற ஏரியின் அளவுக்கு தண்ணீரைக் கொண்டுள்ள நீர் நிலை ஒன்று இந்த துணைக்கோளில் இருப்பதற்கான அடையாளங்களை இந்த தரவுகள் காட்டுகின்றன.

சூரிய குடும்பத்தில் பூமிக்கு வெளியே நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுள்ள ஒரு இடம் என்று பார்த்தால் அது என்செலாடஸாக இருக்க முடியும் என்ற பேராசிரியர் லெஸ் மற்றும் அவரது அணியினரின் நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாக இந்தப் புதிய தரவுகள் அமைந்துள்ளன.

என்செலாடஸின் மேற்பரப்புக்கு கீழே நாற்பது கிலோமீட்டர் அடியில் இந்த திரவ நீர்நிலை இருக்கலாம் என இத்தரவுகள் குறிப்புணர்த்துகின்றன.

என்செலாடஸைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் நீராவில் கலந்திருக்க வாய்ப்புள்ளது என கஸ்ஸினி விண்கலம் 2005ஆம் ஆண்டு கண்டதில் இருந்தே, அந்த கோளின் மேற்பரப்பில் உள்ள உறைபனிக்கு கீழே திரவ வடிவில் நீர் இருக்கலாம் என்ற ஊகங்கள் வலுப்பெற்றன.

பிற்பாடு இந்த வாயு மண்டலத்தில் நீராவி கலந்திருக்க காரணம் இத்துணைக்கோளின் மேற்பரப்பில் வரிவரியாக காணப்படும் பிளவுகளில் இருந்து நீராவி பீய்ச்சியடிக்கப்படுவதுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பீய்ச்சியடிக்கப்படும் நீராவியில் ஊடாகப் பறந்து, அவற்றில் உப்புக் கரிக்கிறதா கரிமம் செறிந்த இரசாயணங்கள் இருக்கின்றனவாக என்று கஸ்ஸினி ருசிபார்த்தும் இருந்தது.
suran

நீராவி பீய்ச்சியடிக்கப்படுவதன் காரணம் என்னவென்று இன்னும் முழுமையான புரிதல் நமக்கு இல்லை.

சனிக்கிரகத்தை மையத்தில் கொண்ட ஒரு வட்டப்பாதையில் என்செலாடஸ் சுற்றிவரவில்லை, மாறாக சனிக்கிரகத்தை பாதிநேரம் அருகிலும் பாதி நேரம் தொலைவிலும் கொண்டிருக்கக்கூடிய ஒரு நீள்வட்டப் பாதையில் இந்த துணைக்கோள் பயணிக்கிறது. எனவே இந்த துணைக்கோளின் மீது சனிக்கிரகத்தின் ஈர்ப்புசக்தி சில காலம் குறைவாகவும் சில காலம் அதிகமாகவும் இருக்கிறது.

புவியீர்ப்பு சக்தியின் மாறுதல்களின் காரணமாக உறைபனி உருகி வாயுமண்டலத்தில் பீய்ச்சியடிக்கப்படுவதாக கருதப்படுகிறது.

என்செலாடஸின் தென் துருவத்தை ஒட்டிய இடங்களில் எட்டு கிலோமீட்டர் முதல் பத்து கிலோமீட்டர் வரை ஆழமான நீர் நிலை ஒன்று மேற்பரப்புக்கு அடியில் அமைந்துள்ளது என்பதையே  தற்போது கிடைத்துள்ள ஈர்ப்புசக்தி பற்றிய செய்திகள் உணர்த்துகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------.
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?