திங்கள், 14 ஏப்ரல், 2014

கடலை போடும் முன்?

இப்போது தேர்தல் காலம் ஆங்காங்கே கட்சிக்காரர்கள் பேசி அறுப்பார்கள் .கொஞ்சம் கடலை சாப்பிட்டுக்கொண்டு நின்று கேட்டால் பொழுதாவது போகும் .
அந்த நிலக்கடலை பற்றி இங்கு ஒரு சின்ன பரப்புரை.

 பசியால் துடிப்பவர்களுக்கு வயிற்றை நிறையச் செய்கிற ஒரு உணவு வேர்க்கடலை. கைப்பிடி வேர்க்கடலையை தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால், அடுத்த சில மணி நேரத்துக்குப் பசித்த வயிறு அமைதி காக்கும்.
 எல்லா பருப்பு வகைகளையும் போன்றதுதான் வேர்க்கடலையும். அதிக புரதச்சத்து நிறைந்தது.
அதே நேரம் மற்ற பருப்பு வகைகளைவிட, இதில் அதிகக் கொழுப்புச் சத்தும் உண்டு. உடலுக்குத் தேவையான ஆற்றலையும், புரதச் சத்தையும் கொடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையே இல்லை எனலாம். 
ஆனால், வேர்க்கடலையை அளவோடுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். 20 கடலைகளுக்கு மேல் எடுக்கவேண்டாம்.
suran
வேர்க்கடலையில் தாதுச்சத்துகளும், வைட்ட மின்களும் மிக அதிகம். தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலமும் அதிகம் கொண்டது. உணவுத் தேவைக்கு அடுத்தபடியாக, வேர்க்கடலையை எண்ணெய் எடுக்கவே அதிகம் பயன்படுத்துகிறோம். 
எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கில், வேர்க்கடலையைவிட அதிக புரதச்சத்து இருக்கிறது.
அதனால்தான் அதை மாட்டுத் தீவனமாக உபயோகிக்கிறோம். அத்தனை அதிக புரதச்சத்து உள்ளதை நாம் ஏன் சாப்பிடக் கூடாது என்கிற கேள்வி வரலாம். 
எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கிற பிண்ணாக்கு பெரும்பாலும் தரமாகவோ, சுத்தமாகவோ பதப்படுத்தப்படுவதில்லை என்பதே காரணம்.
அரிதாக சில இடங்களில் தரமாக பதப்படுத்திய பிண்ணாக்கை குழந்தைகளுக்கான உணவிலும், விளையாட்டு வீரர் களுக்கான உணவிலும் சிறிது சேர்க்கிறார்கள். 
லைசின் எனப்படுகிற மிகச்சிறந்த அமினோ அமிலம் அதில் அபரிமிதமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உடல் பலத்துக்கு மிகவும் உதவும்.
வேர்க்கடலையில் மக்னீசியம் அதிகம் என்பதால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தவிர்க்கும்.
 மாங்கனீசு என்கிற தாது உப்பும் அதிகமாக இருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்காக வைக்கும்.
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3, நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவக்கூடியது. அதிலுள்ள தாமிரச் சத்தானது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்து வதுடன் புற்றுநோய் வராமலும் பார்த்துக் கொள்கிறது.
suran