திங்கள், 7 ஏப்ரல், 2014

அம்பானிகள் என்று வாக்களித்தார்கள் .?

சோனியா சந்தித்தப் பின்னர் ஆதரவாக  தில்லி இசுலாமிய அமைப்புக்கு காங்கிரசு கட்சி சார்பில் 200 கோடிகள் கொட்டிக்கொடுக்கப் பட்டதாக தமிழ் சிஎன் என் தளம் செய்தி கசிய விட்டுள்ளது.
ஏற்கனவே மோடியின் மீது கடுப்பில் இருக்கும் இசுலாமியர்கள் வாக்குகளை காங்கிரசு எளிதாக பெறலாம்.ஆனால் காங்கிரசின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் லட்சணம் சொந்த கட்சிக்காரனே வாக்கை மாற்றிப் போடும் அளவிற்கு மாற்றி விட்டது.
அறிவிக்கப் பட்ட காங்கிரசு வேட்பாளர்களே வேட்பு மனுவை தாக்கல் செய்யாமல் கட்சியை விட்டு ஓடும் அவலம் நடக்கிறது.இத்தனைக்கும் சோனியா,ராகுல்,மன்மோகன்சிங்,ப.சிதம்பரம்,மாண்டேக் சிங் அலுவாலியா நடத்திய அமெரிக்க கட்டளை ஆட்சி தான் காரணம்.
தன்னுடன் கூட்டனியில் இருப்பவர்களையாவது நம்பிக்கையுடன் நடத்தியதா?எவ்வளவு அடித்தாலும் கூட்டணியில் நல்லவனாக இருந்த கருணாநிதியை 2ஜி மோசடியில் தன்னந்தனியாக மாட்டிவிட நினைத்தது.திமுக மட்டுமே இந்த ஊழலை செய்தது காங்கிரசுக்கு ஒன்றுமே தெரியாது என்று நம்பிக்கைத்துரோகம் செய்தது போன்றவைதானே இன்று காங்கிரசுடன் கூட்டனி வைத்து தேர்தலை சந்திக்க ஒரு கட்சியும் முன் வர மாட்டேன்கிறது.
suran
உடன் இருக்கும் கட்சி சிலவும் மோடி-பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
பாஜக-மோடி எதிர் கட்சி என்ற தகுதி இருந்தும் கூட காங்கிரசுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் எட்டாக்கனியாக காரணம் ?
அவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள் கொண்ட ஆட்சிதானே.ஒவ்வொரு சட்டம்.மசோதா கொண்டுவருகையிலும் இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேறிவிடும்.இந்தியா வல்லரசாகி விடும் என்று மன்மோகன் அடித்து விடுவார் .ஆனால் நடந்தது பொருளாதார வீழ்ச்சி.ரூபாயின் மதிப்பு தரைக்கு இறங்கியதுதானே .அதுமட்டுமின்றி மாதா,மாதம் 2ரூபாய் பெட்ரோல் விலை அதிகரிப்பு.நான்கு மாதத்தில் எப்போதாவது 50 பைசா விலை குறைப்பு என்ற அம்பானி ஆதரவு பொருளாதாரக் கொள்[ளை]கை மக்களை கடுமையாக பாதித்தது தான் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு பாட ம் கற்பிக்க காத்திருக்கிறது.
இதே நிலைதான் தமிழகத்தில் காங்கிரசுக்கு 50 ஆண்டுகளுக்கு முன் நடந்தது,அன்று வீழ்ந்த ஆட்சி இன்றுவரை கனவாகி போனதே.ஆனால் அன்று காங்கிரசுக்கு மாற்றாக மக்களுக்கு திமுக இருந்தது போல் இன்று மத்தியில் ஒரு பலமான அமைப்பு இல்லை.பாஜக.விளம்பர பலத்தில் மோடி பலுனை ஊதி பெரிதாக்கி வைத்து மாற்றுப் போல் இருந்தாலும் அனைத்து மக்களின் ஆதரவு அதற்கு இல்லை.
விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்பதால் மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம்.
உண்மையிலேயே மாற்றாக இருக்க வேண்டிய இடதுசாரிகள் அடிக்கடி மாற்றீக்கொள்ளும் மார்க்சிய அடிப்படையில்  அமையாத கொள்கை முடிவுகள் அவர்களை மக்கள் இன்னமும் முழு மனதுடன் எற்றுக்கொள்ள முடியவில்லை.ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே காங்கிரசு அரசை கட்டிக் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி நிச்சயம் இல்லை. அ.தி.மு.க. வுடன் கூட்டணி என்பது குறித்து இப்போதைக்கு கூற முடியாது.
-வாய்ச்சவடால் நாஞ்சில் சம்பத்.!

#அடபாவிகளா, கதற கதற அடித்து, உதைத்து, காறி துப்பி, எட்டி உதைத்து வெளியே அனுப்பிய ஆத்தாவுடன் கூட்டணி பற்றி ஒன்றும் கூறமுடியாது என்று கூறி போயாஸ் தோட்டத்தில் பிச்சை எடுக்க இப்போவே முதல் ஆளா க்யூவில் நிற்க கர்சீஃப் போட்டு இருக்கிறார்..
தன்மானமுள்ள மதிமுகனா இதுதானா?? :-)
#பிழைப்பு வாதம்#

.காத்தவ்ர்கள்தான் அவ்ர்கள்.

ஆனால் தமிழகத்தில் 2ஜி யை காரணம் காட்டி திமுகவை விலக்கி வைத்தவர்கள்.
பெங்களூரில் 6000 கோடிகள் மதிப்பில் வருமானத்திற்கு அதிகமாக [ஒரு ரூபாய் சம்பளம் ஆக வெறும் 60 ரூபாய்கள் மட்டுமே பெற்ற காலத்தில் ]சொத்துக்களை குவித்த வழக்கு,வருமானவரி மோசடி வழக்கு,பிறந்த நாள் காசோலை வழக்கு என்று குவிந்துள்ள ஜெயலலிதாவை வீட்டின் முன் காத்துக்கிடந்து கூட்டணி அமைக்க நின்றது அவர்கள் மார்க்சை விட ஜெயலலிதாவைத்தான் மதிக்கிறார்கள் என்பதை காட்டியது.
இத்தனைக்கும் 2ஜி வழக்கு உண்மை குற்றவாளிகளை இன்னமும் சொல்லவில்லை.
மேலும் லட்சம் கோடி ஊழல் இல்லை-அரசுக்கு இழப்பு என்ற மதிப்பீடு மட்டும்தான் .
அதையும் ஆ.ராசா வழக்கை எதிர் கொள்கிறார்.என்னை விசாரியுங்கள் என்கிறார்.மக்களவை கூட்டுக் குழுதான் விசாரிக்க மறுக்கிறது.இப்படியான ஒரு குழப்பம் நிறை வழக்கு அது.
எவ்வளவோ தோட்டத்திற்கு காவடி எடுத்தும் தன்மானத்தை ஒதுக்கி வைத்துக் காத்திருந்தும் கடைசியில்  ஜெயா இடதுசாரிகளை விரட்டியது தமிழக மக்கள் மத்தியில் இடதுசாரிகளை கேவலமாக பார்க்கும் நிலைக்கு தள்ளி விட்டது.
suran
ஆம் ஆத்மி நிச்சயம் மாற்றே அல்ல.இன்னமும் அவர்களிடம் தங்கள் கொள்கை என்ன என்ற இறுதி முடிவே இல்லை.கையில் கிடைத்த ஆட்சிப் பொறுப்பை பயந்து போய் விட்டு விட்டு வந்தவர் கள்.மத்தியில் ஆட்சியை அமைக்க முடியுமா?ஒரு மாநிலத்தை யே ஆளப் பயப்பட்டு வந்தவர்கள் பாரதத்தையே ஆள  முடியுமா என்ன?ஆம் ஆத்மியின் கொள்கையும் நோக்கமும் சாலையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும்.விதிகளை மீறி விளம்பரம் தேடுவதும்தான்.ஆரம்பத்தில் அக்கட்சியில் ஆர்வத்துடன் சேர்ந்தவர்களில் பலர் இன்று இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .
இன்றைய மத்திய தேர்தல் முடிவுகள் ஆங்காங்கு இருக்கும் மாநிலக் கட்சிகளுக்கு சார்பாகவே இருக்கும்.
கூட்டணியில் இருப்பதால் பாஜகவும்,காங்கிரசும் கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையில் இடங்களைப்பெறும்.
மோடியை வைத்து ஊதப்பட்ட ஊடகப் பலுனால் காங்கிரசை விட பாஜக அறுவடை அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இத்தேர்தலிலும் மோசமான தோல்வியை சந்திக்க இருப்பது இவர்களாவது நம்மை கவனிப்பார்களா என்று வாக்களித்த பாமர மக்கள்தான்.
அம்பானிகள் என்று வாக்களித்தார்கள் .?
வென்றவர்கள் அனைவரும் அவர்களின் அ டிமைகள்ஆக்கிவிடுபவர்கள் தானே?
suran
நன்றி:நாகூர் ஜமால்[முகனூலில்] [
==========================================================================
Happy birthday Jackie chan!!!!!
இன்று பிறந்த நாள் 
 
 காணும் ஜாக்கிக்கு வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------------------

சிங்கம்  ஒரு பார்வை.


இன்று உலகின் சில காடுகளில் மட்டும் வாழும் சிங்கங்கள் எங்கே, எப்போது உருவாகின, இந்தச் சிங்கங்களின் மூதாதையர்கள் யார் என்ற கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.

இன்றைய சிங்கங்களையும் அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள சிங்கங்களின் உடல் படிமங்களையும் மரபணு ஆராய்ச்சிக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள், கடைசியாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய சிங்கங்களின் பொதுவான மூதாதை மிருகங்கள் வாழ்ந்துள்ளதாக உறுதிசெய்துள்ளனர்.

இன்றைய நவீனச் சிங்கங்கள் இரண்டு குழுக்களாக பரிணாமம் அடைந்துள்ளன.

கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியங்களில் ஒருவகைச் சிங்கங்கள் வாழ்கின்றன. மற்றைய சிங்கக்கூட்டம் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்கப் பிராந்தியத்திலும் இந்தியாவிலும் உள்ளது.

இரண்டாவது வகை இன்று அழியக்கூடிய அபாயத்தில் இருக்கின்றது.அதாவது, இந்தச் சிங்கங்களின் மரபணு பல்வகைத் தன்மைகள் அரைவாசியாக அருகிவிடும் அபாயம் நிலவுகிறது.

பொதுவாக வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் மிருகங்களின் பழைய வரலாறுகளைக் கண்டுபிடிப்பது இலகுவானது அல்ல. மரபணுக்கள் கிடைக்கக்கூடிய படிமங்களை அந்த மிருகங்கள் விட்டுச் செல்வதும் குறைவு.

இதனால் உலகெங்கிலும் அருங்காட்சியங்களில் பேணிப்பாதுகாக்கப்படும் சிங்க உடல் படிமங்களின் டிஎன்ஏ மரபணுத் தகவல்களை சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.

இதன்படி இன்றுள்ள பேன்தேரா லியோ-(Panthera leo) என்ற பொதுவான சிங்கக் குடும்பம், கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியங்களில் முதலில் உருவாகியுள்ளது.

ஒரு காலத்தில் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கில் இருந்த சிங்கங்கள் இப்போது மனிதக் குடியேற்றங்கள் காரணமாக அருகி விட்டன

அதன்பின்னர், அதாவது ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இந்தச் சிங்கக் குடும்பத்தின் மற்ற உப குழுக்கள் பரிணாமம் அடையத் தொடங்கியுள்ளன.

ஆப்பிரிக்காவின் பூமத்திய ரேகைப் பகுதிகளில் வெப்ப மண்டல மழைக்காடுகளும் சஹாராப் பகுதியில் சமதள புல்வெளிகளும் விரிவடைந்த காலம் அது.

அப்போது தான் ஆபிரிக்கா கண்டத்தின் பொதுவான சிங்கக் குடும்பம், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி-மேற்கு மற்றும் வடக்குப் பகுதி என்று தனித்தனி குடும்பங்களாக பிரியத் தொடங்கியது.

இந்த இரண்டு சிங்கக் குழுக்களுக்கும் இடையிலான மரபணு வித்தியாசங்களும் இன்றளவும் உள்ளன.

சுமார் 51 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்கக் கண்டம் வறண்டு, சஹாரா பாலைவனம் விரிவடைந்தபோது இரண்டு குடும்பங்களும் நிரந்தரமாகவே பிரிந்துவிட்டன.

அதே காலப் பகுதியிலேயே, மேற்கு ஆப்பிரிக்கச் சிங்கங்கள் மத்திய ஆபிரிக்காவுக்குள்ளும் சென்று தங்களின் வம்சத்தை விருத்தி செய்துள்ளன.

ஆபிரிக்காவின் நைல், நைஜர் ஆகிய பெரிய நதிகளும் இந்த இரண்டு சிங்கக் குடும்பங்களும் நிரந்தரமாகப் பிரிந்திருக்க காரணமாகிவிட்டன.

சுமார் 21 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கங்கள் தங்களின் குடிபெயர்வைத் தொடங்கியிருக்கின்ற என்ற விபரமும் இன்னொரு மரபணு ஆய்வில் உறுதியாகியுள்ளது.


அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வடக்கு ஆப்பிரிக்காவை விட்டு சிங்கங்கள் வெளியேறி இந்தியா வரை தொலைதூரம் வந்துசேர்ந்துள்ளன.

இன்னும் தாமதமாக, 5000 ஆண்டுகளுக்கு முன்னர், இன்னொரு சிங்கக் கூட்டம் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வெளியேறி இன்று மத்திய கிழக்கில் இரான் உள்ள பகுதிக்கு வந்துசேர்ந்துள்ளது.

இன்று இந்தியாவின் குஜராத் மாநிலம் கத்தியாவார் தீபகற்பத்தில் வெறும் 400 சிங்கங்கள் தான் உள்ளன.

ஆப்பிரிக்கச் சிங்கங்களின் மூன்றில் ஒரு பங்கு கடந்த 20 ஆண்டுகளில் காணாமல்போய்விட்டது.

மேற்கு ஆப்பிரிக்காவில் 400 முதல் 800 வரையும்-மத்திய ஆபிரிக்காவில் 900 சிங்கங்களும் இன்று உள்ளதாக கணக்கிடப்படுகிறது.

இந்தச் சிங்கங்கள் இன்னும் ஒழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவும் என்று ஆய்வை நடத்திய பிரிட்டனின் டுர்ஹாம் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரோஸ் பார்னெட் கூறுகிறார்.
suran

suran