ஏப்ரல் மாதத்தில் .....

முக்கிய நிகழ்வுகள்1.
 1935 - இந்தியாவில் ரிசர்வ் வங்கி துவக்கப்பட்டது.
 1912 - இந்தியத் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. முன்னர் கொல்கத்தா
 தலைநகராக இருந்தது.
 1936 - பீகாரிலிருந்து ஒடிசா பிரிக்கப்பட்டது.
 1985 - பயிர் பாதுகாப்பு (இன்சூரன்சு) அமலாக்கப்பட்டது.
 2012 - வங்கிக் காசோலைகள், கேட்பு வரைவோலைகள் 6 மாத காலத்திலிருந்து 3 மாத காலமே செல்லுபடி
 யாகும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு செய்தது.

 2, 1970 அசாம் மாநிலத்திலிருந்து பிரிந்து மேகலாயா
 உருவானது.
 4, 1973 ரஷ்யா - சல்யூட் - 2 விண்கலத்தை விண்ணில்
 செலுத்தியது.
 4, 1991 சென்னை - லண்டன் நேரடி விமான சர்வீஸ்
 துவங்கியது.
 6, 1805 இந்திய கோஹினூர் வைரம் இங்கிலாந்து சென்றது.
 6, 1896 முதல் ஒலிம்பிக் போட்டி ஏதென்ஸ் நகரில் நடந்தது. 13 நாடுகள் பங்கேற்றன. முதலாம் ஜார்ஜ் அரசர்
 விழாவைத் தொடங்கி வைத்தார்.
 6, 1942 இந்தியப் பகுதி மீது ஜப்பான் விமானம் குண்டு
 வீசியது.
 7, 2005 இந்தியா - பாகிஸ்தான் - "ஸ்ரீநகர் டூ முஸôபர்பாத்' பேருந்து போக்குவரத்து ஆரம்பம்.
 10, 1790 கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு அமெரிக்கா
 காப்புரிமையை அறிமுகம் செய்தது.
 11, 1953 சென்னை நகரில் "ட்ராம் போக்குவரத்து ' நிறுத்தப்பட்டது.
 11, 1961 முதன்முதலாக விண்வெளியில் வாஸ்டாக் விண்கலத்தில் ரஷ்யாவின் யூரி ககாரின் பயணம் செய்தார்.
 12, 2007 இந்தியாவில் அக்னி-3 - 3000 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை
suran

 செய்யப்பட்டது.
 13, 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலாபாக் படுகொலை டயர் என்பவரால் நடத்தப்பட்டது.
 13, 1948 ஒடிசாவின் தலைநகராக புவனேஷ்வர் அறிவிக்கப்
 பட்டது. முன்னர் "கட்டாக்' தலைநகராக இருந்தது.
 14, 1912 டைட்டானிக் கப்பல் 1052 பயணிகளுடன்
 இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவில்
 பனிப்பாறையில் மோதி உடைந்தது.
 15, 1980  வங்கிகள் தேச உடைமையாக்கப்பட்டன.
 முன்னர் 14 + 6ம் ஆக 20 வங்கிகளும், ஸ்டேட்பேங்க் -
 7-ம் ஆக 27 வங்கிகள் தேச உடைமையாக உள்ளன.
 17, 1952 இந்தியாவில் முதல் மக்களவை அமையப் பெற்றது.
 19, 1971 ரஷ்யா சல்யூட்-1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
 19, 1975 இந்தியாவில் இஸ்ரோ - ஆர்யபட்டா செயற்கைக் கோளுடன் தனது விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது.
 19, 2012 இந்தியா - அக்னி-5 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் வெற்றி.
 20, 1770 கேப்டன் ஜேம்ஸ் குக் - ஆஸ்திரேலியா பகுதியில்
 நியூ சௌத்வேல்ஸ் பகுதியைக் கண்டுபிடித்தார்.
 20, 1902 மேடம் கியூரி தம்பதியினர் ரேடியத்தைக்
 கண்டுபிடித்தனர்.
 20, 1960 ஏர் இண்டியா ஜெட் விமானம் முதன்முதலாக
 லண்டன் சென்றது.
 21, 1837 ஜெர்மனியில் ஃபிரைடிரிச் புரோபெல் என்பவரால் முதன்முதலாக பாலர் பள்ளி (கின்டர் கார்டன்) தொடங்கப்பட்டது.
 21, 1995 இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை, தரையிலிருந்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் சோதனையில்
 வெற்றியடைந்தது.
 26, 1962 அமெரிக்காவின் - ரேஞ்சர் 4 நிலவில் இறங்கியது.
 27, 1918 இந்தியாவில் முதன்முதலாக சென்னையில், திரு.வி.க.வும், வாடியாவும் "தொழிலாளர் சங்கம்' அமைப்பை நிறுவினர்.
suranமுக்கிய தினங்கள்
 1 முட்டாள்கள் தினம்.
 2 சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்.
 2 அறிவுத்திறன்
 (ஆடிஸம்) குறைபாடு விழிப்புணர்வு தினம்.
 5 இந்தியக் கடல்
 போக்குவரத்து தினம்.
 7 உலக பொது சுகாதார நாள்.
 10 உலக ஹோமியோபதி தினம்.
 18 பாரம்பரிய தினம்.
  22 பூமி தினம்.
 23 உலக புத்தக தினம்.
 25 மலேரியா நோய் விழிப்புணர்வு தினம்.
 28 உலகத் தொழிலாளர் நினைவு தினம்.
 29 உலக நடன தினம்.

ஏப்ரல் மாதம் விடுதலை பெற்ற நாடுகள்
 4 - ஸெனகல்
 9 - ஜியார்ஜியா
 15 - இஸ்ரேல்
 17 - சிரியா
 18 - ஜிம்பாப்வே
 24 - அயர்லாந்து
 28 - ஜப்பான்

suransuranபிறந்த தினங்கள் 1, 1578 வில்லியம் ஹார்வி - ரத்த ஓட்டம் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானி.
 1, 1937 ஹமீத் அன்சாரி - இந்தியக் குடியரசுத் துணைத்
 தலைவர். இரண்டாம் முறையாகத் தேர்வு பெற்றவர்.
 2, 1881 வா.வே. சுப்ரமணிய அய்யர் - தமிழறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர்.
 3, 1914 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா - இந்தியாவின் முதல் ராணுவ தளபதி.
  5, 1827 ஜோசப் லிஸ்டர் - ஆன்டிசெப்டிக் மருத்துவ
 முறையைக் கண்டறிந்தவர்.
 6, 1815 மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை -
 சேக்கிழார் பிள்ளைத்தமிழ் இயற்றிய தமிழ் பேரறிஞர்.
 7, 1770 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் - ஆங்கிலக் கவிஞர்.
 7, 1920 ரவிசங்கர் - சித்தார் இசைக் கலைஞர்.
 10, 1847 ஜோசப் புலிட்சர் - இலக்கியம், இசை, நாடகம் போன்ற துறைகளில் சிறந்தோர்க்கு "புலிட்சர் விருது' வழங்கப்படுகிறது.
  13, 1930 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 14, 1891 டாக்டர். அம்பேத்கார்
 16, 1867 வில்பர் ரைட் - விமானத்தைக் கண்டுபிடித்த
 ரைட் சகோதரர்களில் ஒருவர்.

 16, 1889 சார்லி சாப்ளின் - 
  22, 1870 புரட்சித் தலைவர் வி.இ.லெனின் - .
 23, 1564 வில்லியம் ஷேக்ஸ்பியர் - புகழ்பெற்ற ஆங்கில
 நாடகாசிரியர்.

 25, 1874 மார்க்கோனி - ரேடியோவைக் கண்டறிந்த
 விஞ்ஞானி.
 25, 1912 பேராசிரியர் மு. வரதராசனார் -

 28, 1937 சதாம் ஹுசைன் - ஈராக் முன்னாள் அதிபர்.
 29, 1848 ராஜா ரவிவர்மா - புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்.
 29, 1891 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

suran
நினைவு தினங்கள் .
 4, 1968 மார்டின் லூதர் கிங் - அமெரிக்கர். நீக்ரோ மக்கள்
 உரிமைக்காகப் பாடுபட்டவர்.
 5, 2007 லீலா மஜூம்தார் - வங்காள எழுத்தாளர்.
 5, 1957 டாக்டர் அழகப்ப செட்டியார் - கல்வியாளர், வள்ளல்.
 8, 1857 மங்கள் பாண்டே - சுதந்திரப் போராட்ட வீரர்.
 8, 1894 பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய - வங்காள
 எழுத்தாளர்.
 8, 1973 பிக்காசோ - ஓவியர்.
 8, 2013 மார்கரெட் தாட்சர். பிரிட்டனின் முதல் பெண் பிரதமர்.
 10, 1995 மொரார்ஜி தேசாய் - முன்னாள் பாரதப் பிரதமர்.
 12, 1817 சார்லஸ் மெஸ்ஸியர் - வால் நட்சத்திர ஆராய்ச்சி
 விஞ்ஞானி.
 12, 1945 ரூஸ்வெல்ட் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி.
 18, 1955 ஐன்ஸ்டீன் - பிரபஞ்ச ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி.
 14, 1962 எம். விஸ்வேஸ்வரய்யா - கிருஷ்ணராஜசாகர் அணை கட்டிய பொறியாளர்.
  15, 1990 எஸ். பாலசந்தர் - வீணை வித்வான், தமிழ்ப்பட
 இயக்குநர்.
 19, 1882 சார்லஸ் டார்வின் - விஞ்ஞானி.
  21, 1978 டி.ஆர். மகாலிங்கம் - தமிழ்த் திரைப்பட நடிகர்,
 பாடகர்.
 21, 2013 சகுந்தலா தேவி - கணித மேதை.
 21, 1964 பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்.
 22, 2013 லால்குடி ஜெயராமன் - வயலின் மேதை.
  23, 1992 சத்யஜித்ரே - வங்காளத் திரைப்படத் தயாரிப்பாளர்.
 26, 1920 ஸ்ரீனிவாச ராமானுஜன் - கணித மேதை.
 28, 1942 உ.வே. சாமிநாத அய்யர் (உ.வே.சா.) ஓலைச்
 சுவடிகளிலிருந்த நூல்களைச் சேகரித்து அச்சிட
 உதவிய மேதை.
 29, 1980 ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் - ஆங்கிலப்பட இயக்குநர்.
 28, 1945 முசோலினி - இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி.


.

"கேரளாவில் பொதுவுடமை கட்சி 1957-ம் அண்டு ஏப்ரல் 5-ந்தேதி முதன்முறையாக பொதுவடமை கட்சி ஆட்சி அமைத்தது. ஈ. எம்.எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்."

=========================================================================
கசகசா 

போஸ்தக்காயின் உள்ளேயுள்ள விதைதான் கசகசா  .
 குடற்புண்ணை ஆற்றும்-உடலிற்கு வலிவு தரும்.
\இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம்.
தூக்கமின்மை, வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் ஆகியவற்றுக்குக் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். கசகசா, வால் மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு இவற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத் தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டால், உடல் மழமழப்புடன் வலிவு பெறும்.
சுக்கில விருத்தி ஏற்படும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு மாதவிடாய் காலத்திற்கு முன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிடலாம்.
வாதுமைப் பருப்பையும் 3 முதல் 5  கசகசாவையும் (அரை ஸ்பூன்) பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிட, பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் பெருகும்.
பொதுவாக உடல் வலிமை அடையவும் பருமனாகவும் காங்கை தணியவும் ஏற்ற பானம். தனித்துக் கசகசாவை ஊற வைத்து அம்மியில் அரைத்து ஜலம் விட்டுக் குழப்பிப் பால் பிழிந்து அடுப்பிலேற்றிக் காய்ச்சிக் கொதி வந்ததும் இறக்கி, பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவு பெறவும் ஏற்ற காலை உணவு இது.
suran
கசகசாவை முதல் நாளிரவு ஊற வைத்துக் காலையில் அரைத்துத் தேங்காய்ப்பால், மோர், தயிர், வடித்த கஞ்சி,  காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மழமழப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப் பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம்.
பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிக் கூறும்போது, போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியை பச்சையாய் இருக்கும்போது கீறினால் வரும் பாலை  காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன் குழைத்து சாப்பிட்டால் பேதியை நிறுத்துமென்றும், மார்பில் சளி சேர்ந்து ஏற்படும் இருமலை குணப்படுத்திவிடுமென்றும் கூறியிருக்கிறார்.
  குளிர்ச்சி தரும் கசகசாவை மசாலாப் பொருட்களுடன் உணவில் ருசி சேர்ப்பதற்காக அரைத்துச் சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதனுடைய அளவு கூடுமேயானால் மயக்கத்தை ஏற்படுத்தும். கசகசாவிற்கு மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருப்பதால் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை நன்றாக அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால், அழுகை குறைந்து குழந்தை நன்றாகத் தூங்கும்.
 பத்து கிராம் கசகசாவுடன், ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள், ஒரு பிடி வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகள் ஏற்பட்ட முகப்பகுதிகளில் பூசினால் தழும்புகள் மறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலையில் சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில்
போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
=========================================================================

suran
செய்வீர்களா?செய்வீர்களா?னு கேட்டா போதுமா?
நீங்கள் என்ன செய்தீர்கள்னா மூஞ்ச இப்படி வைச்சுக்கிட்டா எப்படி?

========================================================================

விமர்சன வித்தகர் தி.க.சி.

                                                                                                                                     -தோத்தாத்ரி 

நெல்லை நகரம் தந்த இலக்கியவாதிகளில் தி.க.சி. என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தி.க.சிவசங்கரனும் ஒருவர்.
1925ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் பிறந்து 25.03.2014 வரை ஜீவித்த இந்த மனிதரை சந்திக்காத தமிழக இலக்கியவாதிகளும் கிடையாது; பத்திரிகையாளர்களும் கிடையாது.
நெல்லை தந்த மற்றொரு படைப்பாளியான வல்லிக்கண்ணன் தி.க.சி.யின் இலக்கிய வழிகாட்டி. மணிக்கொடி வ.ரா.வின் பாணியைப் பின்பற்றி எழுதிய தி.க.சி., பாரதி மீது மாளாக் காதல் கொண்டவர்.
நெல்லையில் தனது பள்ளிப் படிப்பினைத் தொடங்கிய இவர், மாணவப் பருவத்திலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கத்துடன் தொடர்பு கொண்டார். அதன்பின்னர் இடதுசாரி இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை ஜீவா தொடங்கிய பொழுது, அதில் பங்கு கொண்டார். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிய பொழுது தி.க.சி. அதனை வரவேற்றார். அவர் தன்னை ஒரு குறுகலான நம்பிக்கை வளையத்துக்குள் அடைத்துக் கொள்ளவில்லை.
அந்தக் காலத்தில் நெல்லையில் முற்போக்கான சிந்தனையுள்ளவர்களைக் காண வேண்டும் என்றால் நெல்லை ரயில் நிலையம் அருகே இயங்கிக் கொண்டிருந்த "நெல்லைப் புத்தக நிலைய'த்தில் காணலாம். மாலை சுமார் ஐந்து மணிக்குப் பின்னர் பல இலக்கியவாதிகள், பேராசிரியர்கள் சந்தித்து உரையாடும் இடமாக அந்த இடம் விளங்கியது. இந்தப் புத்தக நிலையத்தை தி.க.சி.யும், சிந்துபூந்துறை அண்ணாச்சி சோ. சண்முகம் பிள்ளையும் இணைந்து நடத்தினர். நியூ செஞ்சுரி புத்தக நிலையம் தோன்றுவதற்கு முன்னரே ரஷ்ய, சீன இலக்கிய நூல்களை இப்புத்தக நிலையத்தார் மொழிபெயர்த்து வெளியிட்டனர்.
suran
இந்தப் புத்தக நிலையத்தில்தான் தி.க.சி., சோ.சண்முகம் பிள்ளை, பேரா. நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோர் சந்தித்து உரையாடுவது வழக்கம். இக்கால கட்டத்தில்தான் ரகுநாதனின் "சாந்தி' என்ற மாத இதழும் வெளிவந்தது. இதிலும் தி.க.சி. பங்கு பெற்றார்.
சொந்த வாழ்க்கைக்கான பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய வங்கியில் தி.க.சி. பணியாற்றினார். ஆனால் அது நீடிக்கவில்லை. 1962ஆம் ஆண்டு வங்கிப் பணியை ராஜிநாமா செய்தார். மூர்த்தி என்பவர் மூலம் "சோவியத் நாடு' பத்திரிகையின் துணை ஆசிரியராக சேர்ந்து பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் (1965-1972) "தாமரை' ஆசிரியராகவும் பண்யாற்றினார். இது சற்று சிரமமான பணி. பகல் முழுவதிலும் சோவியத் நாடு பத்திரிகையில் பணியாற்ற வேண்டும். மாலை நேரத்திலும், காலையிலும், "தாமரை'க்கான கதை, கட்டுரைகளை சரிபார்க்க வேண்டும்.
அலுவலகம் என்பது ஒரு மேசை, நாற்காலி ஆகியவற்றோடு முடிந்துவிடும். ஏ.சி. கிடையாது, மின்விசிறி கிடையாது, மங்கிய விளக்கொளியில் இந்தப் பணியினைச் செய்ய வேண்டும்.
இந்தச் சூழலில்தான் "தாமரை' ஆசிரியராக அக்காலத்தில் இயங்கினார். இதே காலகட்டத்தில் "தீபம்', "கணையாழி', "கண்ணதாசன்', "எழுத்து', "இலக்கியவட்டம்', "சுபமங்களா', "செம்மலர்', "வானம்பாடி' ஆகிய இதழ்களுக்கும் தி.க.சி உதவியுள்ளார்.
தி.க.சி.க்கு புதுமைப்பித்தனைத் தெரியும். அவரது இறுதிக் காலத்தில் தி.க.சி. உதவியுள்ளார். ஜெயகாந்தனுடன் பழக்கம் உண்டு. கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு உண்டு.
தி.க.சி. ரகுநாதனுடனும் பேரா. நா. வானமாமலையுடனும் நெருங்கிப் பழகியவர். ஜீவாவுடன் பழகியவர். இவர்கள் சகோதர பாசத்துடன் பணியாற்றியவர்கள். முதல் மூவரும் ஆழ்ந்த படிப்பாளிகள், கொள்கையாளர்கள். அந்தக் காலத்தில் இவர்களைக் "கொள்கைக் கோமாளிகள்' என சிலர் கிண்டல் செய்வார்கள். தி.க.சி. அவ்வாறு அல்லர்.
அவர் இலக்கியக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து விமர்சனம் எழுதியவர் அல்லர். அவர் ஒரு பரந்த படைப்பாளி. மேல்நாட்டு இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் ரசித்துப் படித்தவர். இது நடைமுறை அனுபவம் சார்ந்தது. பாரதி பற்றியும், புதுமைப்பித்தன் பற்றியும் பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். அவை தீர்க்கமானவை; ஆணித்தரமானவை. அனுபவ அறிவு மூலமாகவே பல விஷயங்களைக் கற்றுத் தெரிந்துகொண்டு, கொள்கையாளர்களுக்குச் சமமாக உயர்ந்தவர் தி.க.சி.
தி.க.சி. என்ற இந்த மனிதர் தொடர்புகொள்வதில் வல்லவர். ஒரு கதை அல்லது கட்டுரை வந்தால் அதனை உடனே பாராட்டுவார். தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் செய்வார். பல மணி நேரம் உரையாடுவதிலும் வல்லவர். அவரிடம் சென்று உரையாடிவிட்டு வரும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.
தி.க.சி. ஒரு சிறந்த மனித நேய வாதி. நெல்லையின் 10 சுடலைமாடன் கோயில் தெரு இனி தி.க.சி. இல்லாமலேயே இருக்கும். ஆனால் இலக்கிய நண்பர்கள் மனதில் தி.க.சி. என்றும் வாழ்வார்.

நன்றி:தினமணி.
==================================================================================================================
 
suran
குழந்தைகளுடன் 
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?