மின்சார சதிகள்?

"மின் பற்றாக்குறை இல்லாத நிலையில், மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டதாக கூறினர். உடனுக்குடன் பழுது சீர் செய்யப்பட்டபோதும், சில நாட்களில் வேறொரு மின் உற்பத்தி நிலையம் பழுதுபட்டது.
மக்களவைத் தேர்தல் வேளையில், சதித் திட்டம் மூலம் மின் உற்பத்தி நிலையங்களில் பழுதுபட்டதாக கூறி, செயற்கையாக மின் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிமுக அரசு மீது மக்கள் அதிருப்தியடைய வேண்டும் என திட்டமிடப்படுகிறது. இந்த சதி, நாச வேலைகளில் ஈடுபடுவோரை இனம் கண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"என்று நெல்லை கூட்டத்தில்  ஜெயலலிதா தேர்தல் பரப்புரைத்திருக்கிறார்.
suran
.
இதுவரை திமுக காரணம் என்று தனது நிர்வாகத்திறமையின்மையை மறைத்து வந்த ஜெயலலிதா மூன்றா ண்டுகளாக என்ன செய்தீர்கள் என்ற கேள்விகள் பல முனைகளில் இருந்தும் வரவே இப்போது செயற்கை மின்தட்டுப்பாடு என்கிறார்.
இந்த ஆட்சிக்கு தான்தான் தலைமை என்றும் மக்களை வருத்தும் மின்தடையை காரணம் கண்டறிந்து நீக்கும் கடமை தனக்குத்தான் உண்டும் என்பதை உணரவே மூன்றாண்டுகள்.
அதுவும் செயற்கையாக மின்தட்டுப்பாட்டை உருவாக்குபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமால் என்ன நிர்வாகத்தை -தலைமையை தமிழகத்திற்கு தருகிறார் .ஜெயாலலிதாவிற்கு நிர்வாகத் திறமை வல்லிசாக கிடையாது என்பதை நாம் முன்பே கூறியுள்ளொம்.அதை தனது வாயாலேயே ஒத்துக் கொண்டுள்ளார்.
suran

சரி.இதன் பின்னாவது மின்தடைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்றால் இப்போது வாக்களியுங்கள்.தேர்தல் முடிவுக்குப்பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்.இவருக்கு எதிராக செயற்கையாக மின்தடையை இவ்வளவு காலம் செய்ய யாரால் முடியும்?
நத்தம் விசுவநாதன் என்ற அமைச்சர் இருக்கிறாரே அவர் தனது துறையை இந்த ஆக்கத்தில்தான் நிர் வகிக்கிறாரா?

எனது ஆட்சி,நான் ஆணையிட்டுள்ளேன்.நான் செய்துதுள்ளென்.என்கிற ஜெயலலிதாதானே இந்த மின்தடைக்கும் பொறுப்பு.நல்லவைக்கு மட்டும் தான் பொறுப்பு.கொஞ்சம் சிக்கல் என்றால் திமுகவும்,செயற்கையான சதீயும்  காரணமா?
இப்போது கருணாநிதியை விட்டு விட்டார்.அரசு ஊழியர்களை சதியாளர்கள் என்று வசை பாடியுள்ளார்.அவர்களை ஒழங்காக வேலை வாங்க முடியாத மின் துறை அமைச்சரும் அவருக்கு தலைவரான ஜெயாவும்தானே பொறுப்பு.
அம்மா திட்டாத்தில் இருந்து,அம்மா உணவகங்கள் வரை சிறப்பாக செயல்படுத்திவருகிறவர்கள் இதே அரசு ஊழியர்கள்தான்.அதை அம்மையார் கவனத்தில் வைத்துக்கொள்ள வெண்டும்.
மின் நிலையங்களில் திமுகவினர் வெளிய பார்க்கவில்லை.அங்கு உங்கள் கட்சியினர் வேலை பார்க்கிறார்கள்.அண்ணா தொழிற்சங்கத்தி னர் உள்ளனர்.அவர்கள் சத் செய்ய விட்டு விடுவார்களா என்ன ?
ஆடத் தெரியாதவர்கள்தான் மேடை சரியில்லை.தெரு கோணல் என்றெல்லாம் சொல்லுவார்கள்.
நல்ல வேலை காங்கிரசு கட்சி ,தேர்தல் ஆணையம் இதில் மாட்டிக் கொள்ளவில்லை.
suran



வாக்குறுதிகள் நிறைவேற்றுவது எப்படி?
இது அதிமுக பாணி.!
பிரியாணி , தண்ணீர், ரூ.200 பணம் எதுவும் தரவில்லை எனக் கூறி ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட 650 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 பஸ்களை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, கோவை அருகே உள்ள காரமடையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் இருந்து பஸ்களில் பொதுமக்களை கட்சி நிர்வாகிகள் காரமடைக்கு அழைத்துச் சென்றனர். அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த எல்லப்பாளையம் சுப்ரமணிக்கவுண்டன்புதூர், வெள்ளாளபாளையம், காந்திகர் பகுதிகளைச் சேர்ந்த 650 பேர், 5 பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். 
அவர்களுக்கு ரூ.200, சாப்பாடு, தண்ணீர் தருவதாக கட்சி நிர்வாகிகள் கூறியிருந்தனர். இவர்கள் சென்ற பஸ், காரமடைக்கு முன்பாக உள்ள குமரன் குன்று பகுதி அருகில் சென்றது. அதற்குள் முதல்வர் ஜெயலலிதா கூட்டம் துவங்கி விட்டது. 
suranபிரியாணி , தண்ணீர், ரூ.200 பணம் எதுவும் தரவில்லை எனக் கூறி ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட 650 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 பஸ்களை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் 5 பஸ்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. மாலை 5 மணி வரை பஸ்சுக்குள் மக்களை காக்க வைத்தனர். 

அதுவரை அவர்களுக்கு தண்ணீர், சாப்பாடு எதுவும் வழங்கவில்லை. பிறகு அதே பஸ்சில் அவர்களை மாலை எல்லப்பாளையம் அனுப்பி வைத்தனர். சாப்பாடு, தண்ணிதான் இல்ல..ரூ.200 பணமாவது கிடைக்கும் என மக்கள் நினைத்திருந்தனர். 
ஆனால் பணமும் வழங்கப்படாததால், பஸ்சில் இருந்து இறங்கியதும் மக்கள் ஆவேசமடைந்து 4 தனியார் பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

எங்களுக்கு உறுதியளித்தபடி தண்ணீர், உணவு, பணம் வழங்காமல் அதிமுகவினர் கொடுமைப்படுத்தி விட்டீர்கள். பணம் மற்றும் இரவு உணவு கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால், அதிமுக வினர்  அவர்களை கண்டு கொள்ளாமல் தங்கள் காரில் சென்று விட்டனர். வேறு வழியின்றி  போராட்டம் நடத்திய மக்கள் புலம்பிக் கொண்டே  கலைந்து சென்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------
suran

இன்று ஏப்ரல் 12 சாலையோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) 
suran
.
 உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள சாலையோரச் சிறுவரின் நல்வாழ்வு மற்றும் அவர்களின்  உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட  சர்வதேச நாள் . 

ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது-
 மற்றும் அவர்களைப்பற்றி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வருகிறது .

மற்றபடி அவர்கள் வாழ்வு மலர்ந்ததா என்றால்.இல்லை.
அப்படி ஆகி விட்டால் அடுத்த ஆண்டு சாலையோரச்  சிறார் நாள்  கொண்டாட முடியாதே என்ற நல்ல நோக்கம் அரசுகளுக்கு இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?