சனி, 12 ஏப்ரல், 2014

மோடியா? மோ[ச]டியா??


பிரதமர் கனவோடு வலம் வரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நரேந்திர மோடி, தனக்கு திருமணமான தகவலை கடந்த தேர்தல்களில் மறைத்தது மட்டுமின்றி, மனைவியின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது பற்றி அரசியல் அரங்கில் கடும் கண்டனக்குரல் எழுந் துள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது வரை மனைவியோடு சேர்ந்து வாழாமல் அவரை கைவிட்டது மட்டுமின்றி, அவருக்கு வாழ்வாதார நிதி கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியிருப்பதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மோடிக்கு தற்போது 62 வயதாகிறது. 
45 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகர் ஆகும் பொருட்டு மோடி தனது மனைவியை கைவிட்டுச் சென்றுவிட்டார். 
1968ம் ஆண்டு மோடியின் சொந்த ஊரான வத்நகருக்கு அருகில் உள்ள பிரம்மன்வாடா என்ற கிராமத்தைச் சேர்ந்த யசோதாபென் என்ற பெண்ணுக்கும் மோடிக்கும் திருமணம் நடந்தது.
suran

அப்போது யசோதா பெண் 13 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஆவார். மோடிக்கு வயது 17. இதன் பின்னர் யசோதாபென்னை நிராதரவாக விட்டுவிட்டு மோடி சென்று விட்டார். இதுவரையிலும் அப்பெண்ணுக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவியும் மோடி செய்யவில்லை.
இத்தனைஆண்டுகளாக யசோதா பென், தனது சொந்த கிராமத்தில் தனது மூத்த சகோதரரால் நடத்தப்படும் ஒரு சிறிய மளிகைக்கடையில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிச்சத்திற்கு வந்த திருமணம் : இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவதற்காக நரேந்திர மோடி வேட்புமனுத்தாக்கல் செய்தார். 
அந்த வேட்புமனுவில் மனைவி என்ற இடத்தில் யசோதா பென்னின் பெயரை நிரப்பி அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்தே மோடியின் திருமணமும், அவர் தனது மனைவியை கைவிட்டு வந்ததும் வெளிச் சத்திற்கு வந்தது. 
ஆனால் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி திருமணமானவர் என்றோ, மனைவியின் பெயரையோ குறிப்பிடவில்லை. எனவே இது தற்போது சட்டரீதியான பிரச்சனை யாக மாறியுள்ளது. 
தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி புகார் பதிவு செய்துள்ளது.
தேர்தல் ஆவணங்களில் தனதுகடந்த கால வாழ்க்கை குறித்த உண்மை களை நரேந்திர மோடி திட்டமிட்டு மறைத்துள்ளார். 
ஆனால் முதல் முறையாக தனதுமனைவியின் பெயரை குறிப்பிட வேண்டிய தேவை என்ன? 
suran

இதற்கு முந்தைய தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடும்படி அவரிடம் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த வில்லையா? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்“ என்றார்.
3 முறை குஜராத் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற மோடி தேர்தல் விண்ணப்பத்தில் எல்லாம் திருமணம் ஆகாதவர் என்றே பொய் சொல்லியிருக்கிறார்.
தற்போது ஏதோ பயம் வந்து, திருமணம் ஆகிவிட்டது மனைவி இருக்கிறார் என்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். 
13 வயதுடைய பெண்ணைத் தனது 17 வயதில் மணந்ததாகச் சொல்கிறார். 
இந்தத் திருமணமே சட்டப்படி செல்லாதே. 
இவர் மோடியா? 
மோ[ச]டிப் பேர்வழியா? 
இப்படிப்பட்ட பொய்யரிடம்- மதவெறி பிடித்த மோசடிக் காரரிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கலாமா?” 

இவரைப் போய் வெண்தாடி வேந்தர் பெரியாருக்கு நடிகர் விஜய் காந்த் ஒப்பிட்டு இவரை பிரதமராக்க பரப்புரை செய்கிறாரே?

---------------------------------------------------------------------------------------------
குஜராத் மாநிலத்தை சார்ந்த கேத்தன் தேசாய், இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்தபோது ஊழல் செய்த பணம் 1800 கோடி ரூபாய் மற்றும் 1500 கிலோ தங்கத்தை அவருடைய வீட்டிலிருந்தே சிபிஐ பறிமுதல் செய்து 3லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.

இந்த கேத்தன் தேசாய் மீது சுமார் 19 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
.இந்த உத்தம பேர்வழி, மீண்டும் "ஊழலுக்கு எதிரான மோடியின்" குஜராத் மாநிலத்தின் சார்பில், தேசிய மருத்துவ கவுன்சில் உறுப்பினராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்..
இதுதான் மோடி அலையின் லட்சணம்.

---------------------------------------------------------------------------------------------

ஜாலியன் வாலாபாக்.


                                                                                                                                           -என். நன்மாறன் , 
                                                                                                                                                               முன்னாள் ச.ம.உ ,.
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13ம் நாள் இந்திய வரலாற்றில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத மறக்கக் கூடாத நாள்.1600 ஆம்ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்யும் நோக்குடன் பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெற்று இந்தியாவிற்கு வந்தது. படிப்படியாக வேரூன்றி இந்தியாவில் அன்றைய நிலையில் இருந்த பலவீனங்களைச் சாதகமாக்கி வேரூன்றிக் கொண்டே வந்தது. 
1757 ஆம்ஆண்டு பிளாசிப்போரில் வென்று தனது அதிகாரத்தை உறுதிப் படுத்தியது. இதற்கு ஆன காலம் 157 ஆண்டுகள்.அதன்பின்பு 1857 ஆம் ஆண்டு சிப்பாய் களின் எழுச்சி ஏற்பட்டது. 
மாமேதை மார்க்ஸ் இதனை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைத்தார்.
1857 ஆம்ஆண்டுடன் கம்பெனி ஆட்சி முடிந்தது. 1858லிருந்து மகாராணியின் நேரடி ஆட்சிக்கு இந்தியா உட்பட்டது. பெயர் மாறியது. கொள்கை மாறவில்லை.இந்தியாவைக் கொள்ளை அடிப்பது நிற்கவில்லை.
பொழுதெல்லாம் எங்கள் செல்வம்கொள்ளை கொண்டுபோகவோ?நாங்கள் சாகவோஎன்ற பாரதியின் வரிகள் வரலாற்றை வெளிப்படுத்தக் கூடிய வரிகள்.இந்தியக் கைவினைப் பொருட்கள் புறக் கணிக்கப்பட்டன. இந்திய ஆடை களைப் பின் தள்ளி அந்நிய ஆடைகள் முன்னிறுத்தப்பட்டன. தொழில்கள் அழிந்தன. 
தொழிலாளர்கள் துயருற்றனர்.சுதேசிப் பொருட்களை வாங்குவோம் விதேசிப் பொருட்களைப் பகிஷ் கரிப்போம் என்ற குரல்கள் ஓங்கின.லோகமான்ய பாலகங்காதர திலகர் டாக்டர் அன்னிபெசன்ட் மகாத்மாகாந்தி ஆகியோர் முன்னின்றனர். டாக்டர் பெசன்ட் அவர்கள் ஹோம்ரூல் என்ற (சுயஆட்சி) முழக்கத்தை வெளியிட்டார்.1914 ம் ஆண்டில் இருந்து 19 ம்ஆண்டு முடிய உலகயுத்தம் நடைபெற்றது. உலகம் குலுங்கியது. எண்ணற்ற உயிர்கள் உதிர்ந்தன.
இதற்கு இடையில் 1917 ம்ஆண்டு சோவியத் யூனியனில் லெனின் தலைமையில் ஆன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புரட்சி நடைபெற்றது. ஜார் சக்கரவர்த்தியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. தொழிலாளர் விவசாயிகள் ஆட்சி அமைந்தது பாரதியின் பார்வையில் இது ஓர் யுகப்புரட்சி.இந்திய மக்களிடமும் விழிப்புணர்வு பெருகியது. பிரிட்டிஷ் ஆட்சி மருண்டது. 
suran

ரௌலட் என்பவனின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தியர்களிடம் ருஷ்யப் புரட்சியின் தாக்கம் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தனர். 
மக்கள் அதனை ஆதரிப்பதும், உத்வேகம் பெற்றதும் ஆக்கம் பெற்று இருப்பதும் புலனாகியது.
ஆகவே அரசு ஒரு சட்டம் இயற்றியது. 
அதற்கு ரௌலட் சட்டம் என்று பெயரிட்டது.புரட்சிகரமான பிரசுரங்களை அச்சடித்தால் விநியோகித்தால் கையில் வைத்திருந்தால் அவர்களைக் காவலர்கள் கைது செய்யலாம். விசாரணை வேண்டாம் நேரடியாக சிறையில் தள்ளலாம் என்று அச்சட்டம் இருந்தது. 
 இதனை ஆள் தூக்கிச் சட்டம் என்றனர். 
தேசியத் தலைவர்கள் எதிர்த்தனர். 
சத்தியாகிரக இயக்கம் தொடங்கப்பட்டது. வலுப்பெற்றது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.1919 ஏப்ரல் 6 அன்று கடையடைப்புக்கு அறைகூவல் விடப்பட்டது. 
வெற்றிகரமாக நடந்தது. இந்து முஸ்லீம் ஒற்றுமை வலுப்பட்டது. 
அனைத்து மதத்தவரும் இணைந்தனர். 
தொழிலாளர் விவசாயிகள் படித்த வகுப்பினர் வணிகர்கள் கைவினைஞர்கள் திரண்டனர்.

 டாக்டர் கைபுதீன் கிச்சலு டாக்டர் சத்யபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
மக்களின் கோபம் கூடுதல் ஆனது.1919 ஆம்ஆண்டு ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் பல்லாயிரம் பேர் கூடினர். 
suran

20 ஆயிரம் பேர் என்று மதிப்பிடப்படுகிறது. மூன்று பக்கமும், பெருஞ்சுவர், ஒரே ஒரு சிறிய வழி தான் வாசல். 
வாசல் மறைக்கப்பட்டது. 
100 ஆங்கில சிப்பாய்கள், 50 இந்திய சிப்பாய்கள் பாதையை மறித்தனர். உள்ளிருந்த மக்கள் மீது கடும் துப்பாக்கிக்சூடு 10 நிமிடங்கள் இடைவிடாமல் நீடித்தது. 1650 தடவைகள் சுடப்பட்டன. 
ஒரு சிப்பாய் 33 முறை சுட்டான் .
வெளியே வரமுடியாமல் மக்கள் உயிரிழந்தனர்.1000 பேருக்கு மேல் உயிரிழப்பு. பல்லாயிரக்கணக்கில் உடல் ஊனம். உலகமே அதிர்ந்தது. பிரிட்டன் அரசு 379 பேர் உயிரிழந்ததாகக் கூறியது.ஹண்டர் என்பவன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஜெனரல் டயர் வாக்கு மூலம் தந்தான்.
குண்டுகள் தீர்ந்து விட்டன. இருந்திருந்தால் இன்னும் சுட்டிருப்பேன் என்றான். மக்களை அச்சுறுத்துவது மட்டும் அல்ல நம்மை நினைத்தாலே குலை நடுக்கம் ஏற்பட வேண்டும் அதற்காகவே இவ்வாறு செய்தேன் என்றான்.
இக்கொடுமைகளுக்கு பழி வாங்கவே மக்கள் புரட்சியாளர்கள் பகத் சிங்,சுகதேவ் ,ராஜ குரு போன்றோர்  தீவிரவாதிகளாக மாறினர்.
suran

சொந்த நாட்டு நலனுக்காக சொந்தத் தொழிலைப் பாதுகாப்பதற்காக நமது முன்னோர் உயிரிழந்தனர். 
அனைத்து மதத்தவரும் திரண்டனர்.
இன்றும் கிழக்கிந்திய கம்பெனிக்கு மாற்றாக அந்நிய - கார்ப்பரேட் நிறுவனங்கள் இராட்சதக் கழுகுகளாக வருகின்றன. நமது இந்தியாவையே 
விலைக்கு காங்கிரசு அரசு விற்று வருகிறது
.அதை தொடரவே பாஜக வும் எண்ணுகிறது.இயற்கை வளங்களையும் தாரை வார்த்து அதை நம்பி பிழைக்கும்-உழைக்கும் மக்களை அகதிகளாக்கி வருகின்றனர்.அன்று வெள்ளையன் செய்ததை இந்திய கொள்ளையர்கள் செய்கிறார்கள்
.மக்கள்தான் இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை.
இன்னொரு ஜாலியன் வாலாபாக் வரக் கூடாது.
==================================================
தேர்தல் களத்தில் சூடு பறக்கிறது.ஆனாலும் செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் இருப்பதால் அந்த படபடப்பு இல்லாமல் போகிறது.

மதுரையில் தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேட்டி எடுத்த போது, 

 “பிரசாரத்துக்குச் செல்லும் அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.க்களை கிராம மக்கள் உள்ளே விட மறுக்கின்றனரா?” 
 அமைச்சர் கோபப்படவில்லை.
செல்லூர் ராஜு

சாந்தமான புன்னகையுடன், “நீங்கள் (செய்தியாளர்கள்) அதை அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரசாரத்துக்கு வரும் அ.தி.மு.க.வினரை பொதுமக்கள் அன்புடன்தான் எதிர்கொள்கின்றனர்" என்றார்.
வேன் முன் படுத்து, கார்களை வீதியில் போட்டு மறிப்பதற்குத்தான், ‘அன்புடன்’ எதிர்கொள்ளல் என்று இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோ?.
அமைச்சரை நோக்கி அடுத்த கேள்வியை செய்தியாளர்கள்  கேட்டனர்.
“மதுரை தொகுதியில் 5 லட்சம் வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க. சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறதே?”
suran

இந்தக் கேள்விக்கு அசராத அமைச்சர் செல்லூர் ராஜூ, 
“அ.தி.மு.க.வினர் யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. மக்கள்தான் தாங்களே முன்வந்து எங்களுக்கு தேர்தல் பணிக்காக பணம் கொடுத்து உதவி வருகின்றனர்.
அது அம்மா மீது மக்கள் வைத்திருக்கும் பாசத்தைக் காட்டுகிறது.” 

-என்று அமைதியாக பதில் கூறி செய்தியாளர்கள் அடுத்தக் கேள்வியை கேட்க முடியாமல் வாயை அடைத்து விட்டார் .

இது தாண்டா பதில்.
---------------------------------------------------------------------------------------------
suran