டிசம்பர்

suran
முக்கிய தினங்கள்

1 - எய்ட்ஸ் தினம்
3 - மாற்றுத் திறனாளிகள் தினம்

4 - தேசிய கடற்படை தினம்
7 - கொடி நாள்
10 - மனித உரிமைகள் தினம்
18 - சிறுபான்மையினர் தினம்
20 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு தினம்
23 - உலக விவசாயிகள் தினம்
24 - தேசிய நுகர்வோர் தினம்
suran

25 - கீழவெண்மணி நினைவு தினம்
26 - சுனாமி நினைவு தினம்

முக்கிய நிகழ்வுகள்

1-12-1965 - இந்தியாவின் எல்லைக் காவல் படை உருவானது.
1-12-1965 - இந்தியாவின் 16-வது மாநிலமாக நாகாலாந்து உருவானது.
4-12-2010 - ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக, பிரான்ஸ் அதிபர் சர்கோஸி ஆதரவு அறிவிப்பு வெளியிட்டார்.
6-12-1971 - வங்க தேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

12-12-1961 - போர்ச்சுக்கல் நாட்டின் காலனியாக இருந்த கோவா, இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்பட்டது.
13-12-2001 - இந்திய நாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது.
25-12-1911 - இந்திய தேசிய காங்கிரஸ் பிறந்தது.
26-12-2004 - சுனாமி தாக்குதல்- இந்தியா, இந்தோனேஷியா நாடுகளில் லட்சக்கணக்கானோர் பலி.
27-12-1911 - கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் தேசிய கீதமான ஜனகணமண பாடப்பட்டது.

பிறந்த தினங்கள்

2-1912 - நாகிரெட்டி, சினிமா தயாரிப்பாளர், வாஹினி ஸ்டூடியோ அதிபர்.
3-1884 - டாக்டர் ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.
6-1732 - வாரன் ஹேஸ்டிங்ஸ், இந்தியாவில் ஆங்கில அரசு அமையக் காரணமான வைஸ்ராய்.
suran
?-1720 - ஹைதர் அலி, மைசூர் அரசர்.
9-1608 - ஜான் மில்டன், ஆங்கிலக் கவிஞர்.
9-1878 - ராஜாஜி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், சுதந்திராக் கட்சி நிறுவனர்.
9-1946 - சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவி.
11-1882 - மகாகவி பாரதியார்.
11-1922 - திலீப் குமார், இந்தி நடிகர்.
11-1935 - பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர்.
11-1969 - விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் சாம்பியன்.
18-1878 - ஜோசப் ஸ்டாலின், முன்னாள் ரஷ்ய அதிபர்.

18-1932 - தீபம் நா.பார்த்தசாரதி, சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நாவலாசிரியர்.
22-1853 - அன்னை சாரதாதேவி.
22-1887 - எஸ்.ராமானுஜம், கணித மேதை.
suran

25-0001 - இயேசு கிறிஸ்து, கிறிஸ்துவ மத ஸ்தாபகர்.
25-1642 - சர்.ஐசக் நியூட்டன், விஞ்ஞானி.
25-1876 - முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமான தலைவர்.
25-1924 - அதல் பிஹாரி வாஜ்பாயி - முன்னாள் பாரதப் பிரதமர்.
27-1822 - லூயி பாஸ்டர், நாய்க்கடிக்கு மருந்து கண்ட விஞ்ஞானி.
26-1893 - மா சே துங், சீனாவின் முன்னாள் அதிபர்.
29-1949 - சையத் கிர்மானி, முன்னாள் கிரிக்கெட் வீரர்.
30-1879 - ரமண மகரிஷி.

மறைவு  தினங்கள்

2-1911 - பாண்டித்துரைத் தேவர், தமிழ்ச்சங்க அமைப்பாளர்.
2-1933 - எஸ்.ஜி.கிட்டப்பா, நாடக, சினிமா நடிகர்.
5-1954 - கல்கி கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர்.
6-1956 - டாக்டர் அம்பேத்கர், சட்ட வல்லுநர்.
7-1976 - மா சே துங்.
suran
10-1896 - ஆல்ஃப்ரட் நோபல் - நோபல் பரிசு நிறுவனர்.
11-2001 - எம்.எஸ்.சுப்புலட்சுமி, கர்நாடக இசை அரசி.
13-1987 - நா.பார்த்தசாரதி, தீபம் பத்திரிகை ஆசிரியர்.
15-1940 - சர்தார் வல்லபாய் படேல், முன்னாள் மத்திய துணைப் பிரதமர், சமஸ்தான ஒருங்கிணைப்பாளர்.
23-1981 - கக்கன், முன்னாள் தமிழக அமைச்சர்.
24-1524 - வாஸ்கோடகாமா, இந்தியாவுக்கு கடல் வழி வந்த மாலுமி.
24-1973 - ஈ.வெ.ரா.பெரியார், திராவிடக் கட்சி நிறுவனர், பகுத்தறிவாளர்.
24-1987 - எம்.ஜி.ராமச்சந்திரன், நடிகர், முன்னாள் தமிழக முதல்வர்.
25-1972 - ராஜாஜி, சுதந்திரப் போராட்ட வீரர்.
25-1977 - சார்லி சாப்ளின், ஆங்கில நகைச்சுவை நடிகர்.
31-1940 - விஸ்வநாத தாஸ், நாடக நடிகர், சுதந்திரப் போராட்ட வீரர்.
31-1971 - விக்ரம் சாராபாய், இந்திய விண்வெளி விஞ்ஞானி.

சட்டமும் ஒழுங்கும் 










ப.கவிதா குமார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கி றதா என்ற கேள்வியை ஆட்சியைப் பிடிப்பத ற்கு முன்பு ஜெயலலிதா அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவர் ஆட் சியில் அதே கேள்வியை தமிழக மக்கள் அவ ரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

அன் றாடம் நடைபெறும் கொலை,கொள்ளை, பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் இந்த கேள்வியை எழுப்ப வைக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மா வட்டச் செயலாளர் சுப.முத்துக்குமார், கூலிப் படையால் வெட்டிப்படுகொலை செய்யப்பட் டார். இக்கொலை வழக்கின் போது நீதிபதி கிருபாகரன், தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், கடந்த 10 ஆண்டுகளில் மாவட்ட வாரியாக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை, தண்டனை விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


இதையடுத்து தமிழக காவல்துறை தலை வர் ராமானுஜம் நீதிமன்றத்தில் ஒரு அறிக் கையைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் காவல்நிலையத் தில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியல் மூலம் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் மாநிலம் முழுவதும் உள்ளதாக அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் அதிக அளவில் சென்னையில் 3175 ரவுடிகளும், அடுத்ததாக நெல்லை நகரில் 334 ரவுடி களும்,புறநகரில் 1214 ரவுடிகளும், மூன் றாவதாக மதுரை நகரில் 888 ரவுடிகளும், புற நகரில் 484 பேரும் இருப்பதாக புள்ளி விபரக்கணக்குகள் கூறப்பட்டன. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சியை அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் குரல் எழுப்பியதற்கு முதல்வர் ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?“ தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை, 2001ல், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 422 ஆக இருந்தது. 2011ல் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 879 ஆக உயர்ந்து ள்ளது. தேசிய குற்ற ஆவணங்கள் கூடம் தயாரித்துள்ள விவரங்களை பார்த்தாலும், அகில இந்திய அளவில் குற்றங்கள் கூடி வருவது தெரியவரும்”. ஆகவே, குற்ற எண் ணிக்கை விண்ணைத்தொட்டு வருவதற்கு காரணம் கண்டுபிடித்தாகிவிட்டது!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

suran

தமிழகத்தின் தலைநகரான சென்னை யில் பி.டெக் மாணவி ஒருவரின் மீது ஆசிட் வீசப்பட்டதில் அவரது இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல அன்றாடம் பெண்களுக்கு எதிராக கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்பதை புள்ளிவிபரங்களைப் பார்த்தால் புரியும். பெண் களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்த மட்டில் பாலியல் பலாத்காரம், மானபங்கம், கட த்தல், பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவு களின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத் தில் கடந்த 2009 ஆம் ஆண்டு 1242 மான பங்க வழக்குகளும், 2010 ஆம் ஆண்டு 1405 வழக்குகளும், 2011 ஆம் ஆண்டு 1467 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தல் என்பது 2009 ஆம் ஆண்டு 1113 கடத்தல் வழக்குகளும், 2010 ஆம் ஆண்டு 1464 வழக்குகளும், 2011 ஆம் ஆண்டு 1743 கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட் டுள்ளன. இந்த கடத்தல் வழக்குகள் அனை த்தும் பெண் கடத்தல் வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம், மானபங்கம், கடத்தல், வரதட்சணை மரணம்,கணவன் கொடுமை, பெண் குழந்தைகள் இறக்குமதி, வரதட்ச ணை தடுப்புச் சட்டம், பாலியல்கொடுமை என மூன்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 300 ஆகும். ஆண்டு தோறும் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களில், கடந்த ஆண்டு இறுதி வரை 5012 புகார்கள் மீதான வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

காவல்நிலைய மரணங்கள்


தமிழகத்தில் கடந்த 17 மாதங்களில் 41 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. காவல்நிலையங்களில் மட்டும் 28 மரணங் கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. துப்பாக் கிச்சூட்டில் 7 பேர், போலி மோதல் சாவு மூலம் 6 பேர் இறந்துள்ளனர். இந்த மரணங்கள் குறித்து மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தாமல், தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவிட்டு அமைதி காப்பதன் காரணமாக, 41 மரணங் களில் ஒரு காவல்துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சா ட்டு தமிழக அரசு மீது சுமத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2007ம் ஆண்டு 80 கொலைகள், 2008ல் 89 கொலை கள், 2009ல் 95 கொலைகள், 2010ம்ஆண்டு 83 கொலைகள் நடந்தன. 2011ம்ஆண்டு 97 கொலைகள் நடந்துள்ளன. இதில் 4 கொலை கள் நகை, பணத்துக்காக நடந்துள்ளன. 2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிக மாகியுள்ளது. ஓராண்டு ஆட்சியின் நூறாண்டு சாதனை என இந்த கொலைச் சம்பவங்க ளைச் சொல்லலாம்.


தமிழகத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடு படும் கூலிப்படைகளின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. 


சேலம் மாவட்டத்தில் கடந்த 2010 ஆகஸ்ட் முதல், 2011 ஆகஸ்ட் 31 வரை, 16 கொலைகள் நடந்துள்ளன. 2011 ஆகஸ்ட் முதல், 2012 ஆகஸ்ட் 31 வரை, ஒன் பது கொலைகள் நடைபெற்றுள்ளன. விருது நகர் மாவட்டத்தில் 6 மாதத்தில் 31 பேர் கொ லை செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவ ட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில், 28 கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2011 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, 20 கொலை கள் நடைபெற்றுள்ளன. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை, நாகை மாவட்டம் நாகூர் விடுதலைச்சிறுத்தைகள் நகர செயலா ளர் ரெங்கையன் கொலை, விழுப்புரம் மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சிப்பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மேகவர்ணன், மதுரை யில் அதிமுகவின் 88வது வார்டு செயலாளர் மனோகரன், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் முக்காணி அதிமுக செயலாளர் கண்ணன், தரமணி அதிமுக மகளிர் அணி செயலாளர் பானு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ல தோப்புவளசை என்ற கிராமத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக்கொலை, பரமக்குடியில் 3 பேர் கொலை, சிவகங்கையில் சார்பு ஆய்வாளர் ஆல்வின்சுதன் கொலை, திண்டுக்கல் சிறைச்சாலை வாசலில் கொல் லப்பட்ட ஜாகீர் உசேன், மதுரையில் பெட் ரோல் குண்டுவீசி 7 பேர் கொலை, பாமக இளைஞரணி செயலாளர் இளஞ்செழியன் படுகொலை, திருச்சி ராமஜெயம் கொலை, சிவகங்கையில் அதிமுக மாணவரணி செய லாளர் கதிரேசன் உள்ளிட்ட மூன்று பேர் வெட்டிக்கொலை, காஞ்சிபுரம் மாவட்டம், காட் டாங்கொளத்தூர் ஒன்றியம், வல்லம் ஊராட் சியை சார்ந்த தேமுதிக மாவட்டப் பிரதிநிதி கண்ணதாசன் ,இவருடைய நண்பரும், தேமுதிக கிளைச் செயலாளருமான சந்துரு, செங்கல்பட்டு நகர தேமுதிக செயலாளர் சுரேஷ், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த தொண்ட ரணி துணைச் செயலாளர் பாலாஜி ஆகியோ ரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளியைச் சேர்ந்த கூடலூர் ஊரா ட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் தங்கவேல், விருதுநகரில் அதிமுக நகராட்சி கவுன்சிலர் தங்கப்பாண்டியம்மாள், அவரது கணவர் நாகராஜன் ஆகியோர் படுகொலை என தொட ரும் அரசியல் படுகொலைகள் எண்ணிக்கை அதிமுக ஆட்சியில் தான் கூடியுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் தோறும் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களைக் குறிவைக்கும் சமூகவிரோதக்கும்பல், அவர் களை கூலிப்படையாக பயன்படுத்துகிறது. நட்புக்கு துவங்கும் கொலைப்படலம் பல லட்ச ரூபாய்களை சம்பாதிக்க வைக்கும் வகையில் மாற்றம் தருவதால், பலர் தொ டர்ந்து கூலிப்படையாக செயல்படுகின்றனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு,தமிழ்நாடு சிறப்புப் படை, பொதுமக்கள் பாதுகாப்பு, பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை, கடலோர காவல் துறை,குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை, பொருளாதார சிறப்புப் பிரிவு, தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப் படை பள்ளி, இரயில்வே காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு,குற்றப் பிரிவு (நுண் ணறிவு), போக்குவரத்துக் காவல் பிரிவு, மது விலக்கு அமல் பிரிவு , குடிமையியல் பாதுகாப் புப் பிரிவு, பயிற்சிப் பிரிவு என 16 பிரிவுகள் தமிழக காவல்துறையில் உள்ளன. இத்தனை பிரிவுகள் இருந்தும் தமிழகத்தில் நடக்கும் சமூகக்குற்றங்கள் குறையவில்லை.

காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆல்வின் சுதனை கொலைக்கரங்களில் இருந்து காக்கத்தவறிய காவல்துறை,பொதுமக்களை எப்படி பாதுகாக்கப்போகிறது என்ற கேள் வியும் எழுகிறது. அவரைக்கொலை செய்தவர் கள் இருவரை என்கவுன்ட்டர் மூலம் கொலை செய்துள்ளதன் மூலம் காவல்துறை செயல் படுவதைப் போல காட்டிக்கொள்ளப் பார்க் கிறது. நீதித்துறையின் அதிகாரத்தை காவல் துறை பலமுறை தனது கையில் எடுத்துக் கொண்ட போது குட்டு வாங்கியது.

காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்தவுடன் பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கிச்சூட்டைத் துவக்கி வைத்தது அவரின் காவல்துறை. ஆறுபேரின் உயிரைப்பறித்த அச்சம்பவத்தின் தொடர்ச்சி யாக நடைபெற்ற தென்மாவட்ட கலவரங்க ளும், தேவர்ஜெயந்தியையொட்டி மதுரையில் பெட்ரோல் குண்டுவீச்சில் 7 பேர் கொல்லப் பட்ட சம்பவங்களும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் காட்டுகிறது.
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?