"ஒ” பட் ஸ்மேன்"

 இப்போது யாரும் வங்கி சென்றுவரிசையில் நின்று காசு வாங்கும் வழக்கம்

இல்லை.போகிற வழியில் கண்ணில் கண்ட எடிஎம் மில் நுழைந்து

அட்டையை சொருகி 100 வரையில் செலவுக்கு எடுத்து கொண்டு போய்க் 

கொண்டே இருக்கும் காலம் இது.

ஆனால் அப்படி இருக்கையில் அட்டையை சொருகி பணம் எவ்வளவு தேவை 

என்று கொடுத்தப்பின்னர் பணம் வராமல் ஆனால் பணம் வழ ங்கப்பட்டு 

விட்டது என்று பணத்தை கழித்து செய்தி வரும் நிகழ்வை பலர் எதிர் கொண்டு 

அலறி அடித்து வங்கி சென்று அங்குள்ளோரிடம் தொங்கிக் 

கொண்டிருப்பதை யும் சந்தித்திருக்கலாம்.

அப்படி பட்ட நேரங்களில் வங்கியில் உள்ள சிலர் நம்மை கண்டு கொள்ளாமல் 

அலட்சியப் படுத்துவதையும் கண்டிருக்கலாம். வேறு வங்கி 

தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு வங்கிகள் சேவை உங்களுக்கு எதிராக இருந்தால்  அல்லது அப்படி பட்ட 

சூழல் எற்பட்டால் 

அதை சமாளிக்க 

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள்

 வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" 

{ Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், 



அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து 

சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் சென்னையில் நடந்தது. 

நண்பர் சென்னை 

நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து 

ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் 

எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த நண்ப ர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி 

உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் 


மேலும் 

அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று 

கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து 


பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் 

இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு 

கொண்டார்.

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்தநண்பர்  தனது நண்பரும்  


 தனியார் வங்கியில் வேலை 

செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி 

உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி 


உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் 


வாயிலாக  Ombudsman  படிவத்தில்  தெரிவித்துள்ளார்.

 கூறிய உடனே மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 5

25/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை 

தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து பணம் வந்தமைக்கும்,நட்ட ஈடு கொடுத்தமைக்கும் கைப்பட கடிதமும் 

வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது 

குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் 

யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }"Ombudsman  சொடுக்கி உங்கள் 

குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் 


சமந்தப்பட்ட 

அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { 

Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் 


சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் 

உள்ளது.

நமது குறைகளை கவனிக்காமல் அல்லது கண்டு கொள்ளாமல் செயல்படும் 

வங்கிகளுக்கு கிடுக்கி பிடி போட்டு செயல்பட வைக்கும் ரிசர்வ் வங்கி குறை 

கூறும் தளம் இதோ :Ombudsman 


நன்றி:தக வல்தளம்.
====================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?