இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

பக்கவாதம் :வரும் முன் தடுக்க ..


மக்களில் மனிதனுக்கு வேகமாக வரக்கூடிய இரண்டாவது பெரிய  நோய் என்ற இடத்தை பிடித்திருப்பது பக்கவாதம். 

உடலின் ஒரு பக்கம் செயல் இழப்பதால், இதை பக்கவாதம் என்கிறோம். பல நோய்களுக்கு உள்ள விழிப்புணர்வு கூட, பக்கவாதத்திற்கு இல்லை. போதிய சிகிச்சை இன்றி, மரணங்களும் ஏற்பட்டு இருக்கின்றன.

பக்கவாதத்தைத் தவிர்க்க முடியாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. உண்மையில், 70 சதவீத பக்கவாதத்தை தடுக்க முடியும். பக்கவாதத்திற்கு சிகிச்சைகள் உண்டு. 
பக்கவாதம் வயதானவர்களுக்கு என்றில்லை; 
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில், அடைப்பு ஏற்படுவது அல்லது ரத்தக் கசிவு காரணமாக, மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதையே, பிரெய்ன் அட்டாக் என்கிறோம்; அதாவது பக்கவாதம்.
ரத்தக் குழாய் அடைப்புக் காரணமாகவே, பக்கவாதம் வருகிறது. எனவே, பாதிக்கப்பட்டவரை, நரம்பு மண்டல சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு, இரண்டு மணி நேரத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும். 


'கோல்டன் ஹவர்' எனப்படும், இரண்டு மணி நேரத்திற்குள், 'இன்ட்ராவீனஸ் த்ராம்போலிசிஸ்' சிகிச்சை அளித்தால் போதும்.


பக்கவாதம் ஏற்படுபவர்களுக்கு, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்க்கு, உணவும், ஆக்சிஜனும் கிடைக்காமல், மூளை செல்கள் உயிரிழப்பதே. 

மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து, பேச்சு, பார்வை, நினைவாற்றல், உணர்ச்சி, தசைகளின் வலுத்தன்மை போன்றவை பாதிப்படைகின்றன. இதனால் தான், பக்கவாதப் பாதிப்பு வந்த, இரண்டு மணி நேரத்திற்குள், சிகிச்சைக்கு வர வலியுறுத்தப்படுகிறது.


சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம், என்ன விதமான பாதிப்பு, எந்த இடத்தில் பாதிப்பு என்பதை துல்லியமாக கண்டறியலாம்.

பரிசோதனையின் முடிவில், டி.பி.ஏ., என்ற சிகிச்சை அளிக்கப்படும். அதாவது ரத்த குழாய்க்குள், உறைந்த ரத்தத்தைச் சரிசெய்யும் சிகிச்சை அளிக்கப்படும்.


ரத்தக் குழாய் வெடிப்பு காரணமாக, ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தால், ரத்தம் உறைவதற்கான மருந்து அளிக்கப்படும். மூளையில் ரத்தம் தங்கி ஏற்படும் அழுத்தத்தைப் போக்க, அறுவை சிகிச்சை செய்யப்படும். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட ரத்தக் குழாயை சீரமைக்கவும், மூளையில் ஏற்பட்ட வீக்கத்தைப் போக்கவும், சிகிச்சை அளிக்கப்படும். 


இரண்டு மணி நேரத்துக்குப் பின் வருபவர்களுக்கு, உடல் செயல் இழப்பு ஏற்படலாம். சிறிய அளவில் செயல் இழப்பு என்றால், சிகிச்சைகள் உள்ளன. முழுமையான செயல் இழப்பு என்றால், அதைச் சரிசெய்ய முடியாது. 


பாதிக்கப்பட்ட செல்களுக்கு பதிலாக, புதிய செல்களும் உருவாகாது. 


பொதுவான அறிகுறிகள் :
பக்க வாதம் ஏற்படுவதற்கு முன் பாக சில அறிகுறிகள் தோன்றும். அப்போதே நாம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அப்படிப்பட்ட சில முக்கியமான அறிகுறிகளாவன:

 1. உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்களில் மரத்துப் போனது போன்ற உணர்வு.

 2. திடீரெனப் பார்வை தெளிவில்லாமல் போவது.
 3. நடந்து செல்லும்போது, திடீரென தலைச் சுற்றல், தடுமாற்றம் போன்றவை ஏற்படுவது.
 4. திடீர் குழப்பம், பேச்சுக் குழறல், பிறர் பேசுவதைப் புரிந்துக் கொள்ள  இயலாமை.
 5. கடுமையான திடீர்த் தலைவலி.
 6. தான் எங்கிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் போவது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை கண்டிப்பாக பக்கவாதம் ஏற்படுத்தும் வாய்ப்பைக் குறைக்கும். 
வயது அதிகரிக்க அதிகரிக்க பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணி. 
பொதுவாக இது எந்த பெரிய அறிகுறியையும் உடலில் ஏற்படுத்துவதில்லை. அதனால் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 
இதயம் மற்றும் இரத்த நாள நோய், சர்க்கரை நோய் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு இருந்தால் அதற்குத் தகுந்த சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது முக்கியம். மனச் சோர்வு மற்றும் மன அழுத்தம் உடம்பை பெருமளவில் பாதித்து பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். 
பெண்கள் கருத்தடை மாத்திரைகளையும் நாளமில்லா சுரப்பிகள் மாத்திரைகளையும், கவனத்துடன் மருத்துவரின் ஆலோசனையில் மட்டுமே உட்கொள்ளவும். புகை பிடித்தல் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 
மதுப்பழக்கம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் இந்த பழக்கத்தை நிறுத்துவது அவசியம். 
உணவு மற்றும் உடற்பயிற்சி அதிக நார்ச்சத்துள்ள காய் மற்றும் பழம் உண்ணவும். ஆரோக்கியமான சமவிகித உணவை உட்கொள்ளவும். உப்பு மற்றும் கொழுப்பு குறைவான உணவு வகைகளை உட்கொள்ளவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். இதில் அதிக உப்பு இருக்கும். 
தொடர் உடற்பயிற்சி பக்கவாதத்தை உண்டாக்கும் காரணிகளைச் சீராக்க உதவும். 
 பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோகாசனப் பயிற்சிகள் மேற்கொண்டபோது அவர்களின் உடல் ஸ்திரத்தன்மை மற்றும் உடலசைவுகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மற்றொரு ஆய்வு, பக்கவாதத்தால் ஏற்படும் பின் விளைவுகளைக் குறைப்பதற்கு யோகப் பயிற்சிகள் உதவுவதாகக் கூறுகிறது. 
முக்கியமாக யோகப்பயிற்சிகள், பக்கவாதம் ஏற்படுத்தும் காரணிகளான அதிக இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிகக் கொழுப்பு, சர்க்கரை நோய், அதிக உடல் எடை, மனச் சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இயற்கை வைத்தியம் முறையில் 
வாதநாராயணன் கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 3 பல் பூண்டு, சுண்டைக்காய், பெருங்காயம், விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்து சாப்பிட்டால் முடக்கு வாதம் மற்றும் விரை வாதம் குணமாகும். 

வாதநாராயணன் கீரை உலர வைத்து அத்துடன் அரிசித் தவிடு, புறா எச்சம் இரண்டையும் சேர்த்து வறுத்து துணியில் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால் பக்கவாதம் குணமாகும். 

வேளைக் கீரை, வாதநாராயணன் கீரை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் தீரும். 

வல்லாரைக் கீரைச் சாற்றில் பூனைக்காலி விதைப் பருப்பை ஊற வைத்துக் காய வைத்துப் பொடியாக்கி, சம அளவு மிளகுத் தூள் சேர்த்து காலை, மதியம் இருவேளையும் சாப்பிட்டு வந்தால் காக்காய் வலிப்பு மற்றும் முடக்குவாதம், கை, கால் வாதம் ஆகியவை குணமாகும். 

லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு, இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து காலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். 

ருத்திராட்சப் பொடி 100 கிராம், முத்துச்சிப்பி பஸ்பம் 100 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து தொடர்ந்து 96 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளையும் அரை கிராம் அளவுக்கு சாப்பிட வேண்டும். முடக்குவாதம் மற்றும் நரம்பு வாதம் குணமாகும்.


சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கும், கிட்னியில் பிரச்னை உள்ளவர்களுக்கும் ரத்தக்குழாய் தடிமனாக இருக்கும். இவர்களது உடலில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் வலியை உணர்வது கடினம். பக்கவாதத்துக்கான அறிகுறிகள் இருந்தாலும் தெரியாது. இது போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்க வாதம் திடீரென தாக்க வாய்ப்புள்ளது. உணவில் அதிகளவு கெட்ட கொழுப்பை எடுத்துக் கொள்ளுதல், எப்போதும் டென்ஷனாக இருத்தல், நீண்டகால ரத்த சோகை போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்கவாதம் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. 

இவர்கள் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை மாதம் ஒருமுறை சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்தஅளவு பரிசோதனையும் செய்து கொள்ளவும். தினமும் வாக்கிங் மற்றும் சரிவிகித சத்துணவும் அவசியம். உணவில் எண்ணெய் மற்றும் தேங்காய் சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்கவும். வெளியிடங்களில் உணவு சாப்பிடுவது, பாஸ்ட் புட், ஜங்க் புட், சாக்லெட், ஐஸ்கிரீம் வகைகள், நெய் ஆகியவற்றையும் கண்டிப்பாக விட்டுவிடவும். 

நார்ச்சத்து உள்ள பச்சைக் காய்கறிகள் கட்டாயம் உணவில் இருக்கட்டும். ராகி, கம்பு, சோளம் போன்ற முழு தானியங்களை உணவில் தினமும் ஒரு வேளை சேர்த்துக் கொள்ளவும். பழங்கள், காய்கறி சாலட் மற்றும் சூப் வகைகளும் அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். அசைவம் மாதம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். கோழி மற்றும் மீன் எடுத்துக் கொள்ளலாம். மீன் எண்ணெயில் பொரித்ததாக இல்லாமல் குழம்பாக சாப்பிடலாம். முடிந்த அளவு எண் ணெய் இல்லாமல் சமைப்பது நல்லது.==========================================================================================

ன்று,
ஜனவரி -15.

  • இந்திய ராணுவ தினம்
  • பிரிட்டன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது(1759)
  • ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்(1892)
  • விக்கிப்பீடியா துவங்கப்பட்டது(2001)
  • மொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான சாஃப்ட்வேர் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது(2005)
=========================================================================================