சனி, 14 ஜனவரி, 2017

பக்கவிளை வில்லாத மருத்துவம்,.


நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளை வில்லாத மருத்துவத்தை பார்ப்போம்.


அந்தவகையில், வயிற்று கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், தோல்நோய்களை போக்கவல்லதும், மூலநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டதுமான  மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.‘

10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டு பந்தியிலும் அமரலாம்’ என்று கூறும் அளவுக்கு மிளகு பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது. 
மிளகு காரச் சுவை கொண்டது. இது, பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் வலி, காய்ச்சல், மாதவிலக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

மிளகை பயன்படுத்தி செரிமான கோளாறு, வயறுமாந்த பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி, சுக்கு பொடி, திப்லி பொடி, சோம்புதூள், சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். 

இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்துவர வயிற்று கோளாறுகள் சரியாகும். 
பசியை தூண்டும். இது பித்த சமனியாக விளங்குகிறது. 
மாந்தத்தால் ஏற்படும் கழிச்சலை குணமாக்குகிறது. மிளகு பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. நுண்கிருமிகளை அளிக்கும். 
வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளக் கூடியது. வலியை போக்க கூடியது. வயிற்று வலி, சிறுநீரக பாதையில் ஏற்படும் வலி, மார்பு வலி போன்றவற்றை குணப்படுத்தும். 
சுக்கு, மிளகு, திப்லி ஆகியவை சேர்ந்தது திரிகடுகம் என்று அழைக்கப்படுகிறது. இது, மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

நெஞ்சு, இதயத்துக்கு சுக்கு பலம் கொடுக்கிறது. செரிமானத்தை சீர் செய்கிறது. தலைபாரத்தை குறைக்கிறது.  மிளகை பயன்படுத்தி மூலநோய்க்கான மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: மிளகுப் பொடி, சோம்பு பொடி, தேன். 
செய்முறை: கால் ஸ்பூன் மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் சோம்பு பொடி ஆகியவற்றை கலந்து, இதனுடன் சிறிது நீர்விட்டு வேக வைத்து தேன் சேர்த்து கலக்கவும். 
இதை ஆறவைத்து காலை, மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மூலநோய் குணமாகும். ரத்த, வெளி, உள் மூலத்துக்கு இது நல்ல பலன் கொடுக்கும்.

மிளகை பயன்படுத்தி புழுவெட்டுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம், உப்பு, மிளகுப்பொடி. 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சின்ன வெங்காய சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு, மிளகுப்பொடி சேர்த்து கலந்து புழுவெட்டு இருக்கும் இடத்தில் பஞ்சால் நனைத்து தேய்த்துவர புழுவெட்டு சரியாகும். புழுவெட்டால் முடி உதிர்வது நிற்கும்.
 அன்றாடம் பயன்பட கூடிய முக்கிய உணவுப்பொருள் மிளகு. இதில் புரதம், மினரல் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது தோல்நோய்களை போக்கவல்லது. உணவுக்கு சுவை தரக்கூடியது. 
மிளகை உணவில் சேர்த்துகொள்வது உடல்நலத்துக்கு நன்மை தரும்.  வியர்வையால் உண்டாகும் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர் ஆகியவற்றை சம அளவு வாங்கி பொடித்து, இதனுடன் சிறிது பாசி பயறு சேர்த்து உடலுக்கு தேய்த்து குளித்துவர துர்நாற்றம் இல்லாமல் போகும்.
நன்றி:தினகரன்.
=====================================================================================

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு, அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவ தாகும்.
என்றாலும் பார்ப்பனர் இதை மதத் தொடர்பு ஆக்குவதற்காக வேளாண்மை, வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும், அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முதன்மை ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன். ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து வேளாண்மையில் விளைந்து வெள்ளாண்மை யாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.
பொங்கல் பண்டிகை முதல் நாளான தை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உண வருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்ப மாகக் காலம் கழிப்பதையும், நம்மால்கூடிய அளவு மற்றவர்களுக்காக உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களைச் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.
அதே நேரம், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமல் இருந்து தங்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.
மானமும் அறிவுமே மனிதற்கழகு.
– பெரியார் ஈ.வெ.ராமசாமி
பொங்கல் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

====================================================================================
ன்று,
ஜனவரி -14.

  • ஸ்பெயின் க்யூபாவை இணைத்துக் கொண்டது(1539)
  • திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது(1974)
  • உலகின் முதலாவது 24 மணி நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு துவக்கப்பட்டது(1996)
====================================================================================
குடிநீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்து மாயமாக்கும் தன்மை கொண்டது. 
நமது உடலில் கோபத்தின்போது, அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால், உருவாகும் அமிலங்கள் ரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே, நீரை சரியாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.

நீண்ட நேரம் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் காரணமாக மலச்சிக்கல், மலம் கெட்டிப்படுதல் ஆகியன உண்டாகும். 
அச்சமயம், காலையில் 1 முதல் 3 டம்ளர் குடிநீர் குடிக்கலாம்.

நீரை சரியாகப் பயன்படுத்தும் கலையை அறிந்தாலே நமது மன அழுத்தம் பாதி குறைந்துவிடும்; விலகி விடும். அதேபோல் உண்மைப் பசியை அறிவதற்கும், நீர் நல்ல வழிகாட்டியாக உள்ளது. 
நீர் அருந்திய ஐந்து நிமிடத்திற்குள் நல்ல பசி எடுத்தால், அது உண்மைப் பசி எனலாம். உணவுடன், உணவு முடித்தவுடன் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 
உணவு முடித்து, 30 நிமிடம் கழித்துக் குடிக்கும் நீர் நல்ல பலனைத் தரும்.
இளஞ்சூடான சீரகக் குடிநீர் குடிப்பது ரத்த ஓட்டம் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரி செய்து வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சமன்படுத்துகிறது. 
சீரகக் குடிநீர் உடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, காய்ச்சல், சளி, தும்மல் போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது. நீர் வடிவத்தில் மருந்து உட்கொள்ளும்போது, திசுக்களால் எளிதாக உறிஞ்சப்பட்டு, விரைவாகப் பலன் தரும். 
அதனால் குடிநீரை பயன்படுத்தி, பல்வேறு கஷாயங்கள், மருந்துகள், மருத்துவ குடிநீர்கள் தயாரிக்கப்படுகின்றன. 
குறிப்பாக, நிலவேம்புக் குடிநீர், காய்ச்சலின் தீவிரத்தை விரைவில் குறைக்கும் வல்லமைகொண்டது.