ஊடக (யாசகர்) ங்கள்.
ரூ.360 கோடி ரூபாய் லஞ்சம் தொடர்புடைய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், இந்திய ஊடகங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், ஊடகங்களின் வாயை அடைக்கும் விதமாக ரூ. 50 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது என்று பத்திரிகையாளர் ஹரி ஜெய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில், ஹெலிகாப்டர் ஊழலை விசாரித்து வரும், சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
1953 மார்ச் 1 அன்று பிறந்த மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி-தயாளு அம்மாள் ஆகியோரின் மூன்றாவது மகனாவார்.
1967 – அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது.
14 வயதில் பள்ளி மாணவராக இருந்தபோது மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1967 தேர்தலில் அவர் தி.மு.க.வுக்கு பிரச்சாரம் செய்தார். அவருக்குக் கீழ் குழந்தைகள் சீர்திருத்த சங்கம் உருவாயிற்று. ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் அணியின் எளிமையான தொடக்கம் நடந்தது. மாணவர்களுக்கும் இளம் வயதினருக்குமான தெருமுனைக் கூட்டங்கள் பின்னாளில் தமிழ்நாட்டின் மிகவும் மதிக்கப்பட்ட கட்டுப்பாடான இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக உருவான அமைப்புக்கு அடித்தளமிட்டன.
1976 – அவசரநிலையை எதிர்த்ததற்காக மிசா சட்டத்தின் கீழ் கைது.
உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் 31 ஜனவரி 1976 அன்று அவர் கைது செய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின் வயது 23. அப்போதைய அரசு அவரை அடித்து உதைத்து அடக்குவதற்கு செய்த அனைத்து முயற்சிகளையும் மீறி தனது கொள்கையில் உறுதியாக நின்றவராக மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கைதியாக அவரது பெயர் தேசிய நாளேடுகளில் தலைப்பு செய்தியாகியது.
1984ல் அவர் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார், இன்று இளைஞர் அணி அவரது தலைமையில், இளைஞர் அணி அதன் அமைப்பு வலிமைக்கும், இளைஞர்களை சென்றடையப் புதுமையான வழிமுறைகளுக்கும், மக்களுக்கு சேவை செய்வதில் முழுமையான அர்ப்பணிப்புக்கும் சிறப்புமிக்கதாகத் திகழ்கிறது. தலைமைப் பண்பு, பொதுக்கூட்ட உரைகள், அமைப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு திறமைகள் ஆகியவற்றில் அணியினர் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.
1989 – சட்டமன்ற உறுப்பினராக (ஆயிரம் விளக்கு).
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 1989ல் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது முதல் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நான்கு முறை 1989, 1996, 2001, 2006ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 – சென்னை மேயராகத் தேர்வு
1996-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் முதல் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பெருமை பெற்றார். 1996ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் மேயராக இருந்த காலத்தில் அவர் எடுத்த முக்கியமான முன்முயற்சிகளில் ஆரம்ப சுகாதார மையங்கள், சிறு பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள், பழைய கால்வாய்களைத் தூர்வாருதல் ஆகியவையும் அடங்கும்.
2001 – சென்னை மேயராக மீண்டும் தேர்வு
2001ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தமிழ் நாட்டில் அப்போதைய ஆளுங்கட்சி சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி அவரை வெளியேற்ற இடையறாத அரசியல் பிரச்சாரத்தை நடத்தியதன் காரணமாக சட்டத்தை மதித்து அவர் ராஜினாமா செய்தார். எந்தவிதமான ஆரவாரமுமின்றி அவர் பதவியைவிட்டு இறங்கி, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து சென்னை மாநகர மக்களுக்காகப் பாடுபட்டார்.
2003 – தி,மு,க, துணைப் பொதுச் செயலாளராக தேர்வு
சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வின் 12வது பொதுக் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006 – உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
தமிழ் நாடு அரசில் 13 மே 2006 அன்று மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்ட்து. 2006 முதல் 2011 வரை அவரது பதவி காலத்தில், அவர் மகளிர் சுய உதவிக் குழுக்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மின்னணு நிர்வாக மையங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் போன்றவற்றை நிறைவேற்றினார்.
2008 – தி.மு.க.பொருளாளராகத் தேர்வு
மு.க.ஸ்டாலின் மீது கட்சியும் தலைமையும் நம்பிக்கை வைத்து 2008ஆம் ஆண்டு தி,மு,க. பொருளாளராகத் தேர்வு செய்தது.
2009 – தமிழ் நாட்டின் துணை முதல்வராக நியமனம்
தமிழ் நாடு வரலாற்றில் முதலாவதாக மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பதவியை வகித்தார். அவர் 29 மே 2009 முதல் 15 மே 2011 வரை இப்பதவியை வகித்தார்.
கழிவுநீர், வெள்ள நீர் அகற்றல், சுகாதாரம், குப்பை அகற்றல், பூங்காக்களை அழகுபடுத்தல், நீர்வழிகளை மீட்டல், துணை நகரங்கள் போன்ற நகர்ப்புற சவால்களுக்கு தீர்வுகாண அவரது முன்முயற்சிகள் தமிழ்நாடு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அவரது நிர்வாகத் திறமையும் தொலைநோக்குப் பார்வையும் தமிழகத்தில் பொற்காலத்தைப் படைக்க கலைஞர் அவர்களின் சீர்மிகு வழிகாட்டுதலின் கீழ் இணைந்து பணியாற்றிய கட்சி, அரசு மற்றும் மக்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
2011 – கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று 13 மே 2011 அன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
2016---மீண்டும் கொளத்தூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்...
தொகுப்பு :ஜெயராமன் திமுக(முகநூலில்)
டிசம்பர்-05.
ஊழல் மம்தா கட்சி.
குறிப்பாக, ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், ஊடகங்களின் வாயை அடைக்கும் விதமாக ரூ. 50 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது என்று பத்திரிகையாளர் ஹரி ஜெய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில், ஹெலிகாப்டர் ஊழலை விசாரித்து வரும், சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் மிக முக்கியப் பிரமுகர்கள் (விவிஐபி) பயணம் செய்வதற்காக, இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத் திடமிருந்து 12 ஹெலிகாப்டர்களை ரூ. 3 ஆயிரத்து 600 கோடிக்கு வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதற்காக, ரூ. 2 ஆயிரத்து 360 கோடி மதிப்பிலான வங்கி ஒப்பந்தங்களை முன்பணமாக இந்தியா அளித்திருந்தது.
இந்நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை பெறு வதற்காக, இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு ரூ. 360 கோடி லஞ்சம் கொடுத்ததாக இத்தாலி நாட்டில் குற்றச்சாட்டு எழுந்தது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் அளித்த ரூ. 360 கோடி லஞ்சத்தை பெற்றவர்கள் யார்?
என்ற கேள்வி இந்தியாவில் முன்னுக்கு வந்தது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
எனினும், முந்தைய மன்மோகன் சிங் அரசோ, தற்போதைய மோடி அரசோ முழு மனதுடன் விசாரணை நடத்தவில்லை.இதனிடையே, இத்தாலி நாட்டின் புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம், இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்தது உறுதிப்படுத்தப்ப ட்டது.
அதனடிப்படையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைவர் உட்பட 2 பேருக்கு இத்தாலியின் மிலன் நகர் நீதிமன்றம் சிறைத் தண்டனையும் விதித்தது.
இது இந்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவே, வேறு வழியின்றி விசார ணையைத் துரிதப்படுத்தியது.
இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உட்பட 13 பேர் மீது, ஏற்கெனவே சிபிஐ வழக்குபதிவு செய்திருந்த நிலையில், ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பாக, எஸ்.பி. தியாகி 10 முறை இத்தாலிக்குப் பயணம் செய்தி ருந்தது; அவர் துணைத் தளபதியாக இருந்தபோதே அகஸ்டா நிறுவனத்தின் தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்தது; ஒப்பந்தம் அகஸ்டா நிறுவனத்திற்கு போக வேண்டும்என்பதற்காகவே, ஹெலிகாப்டர் பறக்கும் உயரத்தை 6 ஆயிரம் மீட்டரில் இருந்து 4 ஆயிரத்து 500 மீட்டராக குறைத்தது உள்ளிட்டவை தொடர்பான ஆதாரங் களையும் சேகரித்தது.
இவற்றின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி எஸ்.பி. தியாகி, கவுதம் கேதான், சஞ்சீவ் தியாகி உள்ளிட்டோரை திடீரென சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பான வழக்கு, செவ்வாயன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
பத்திரிகை யாளர் ஹரி ஜெய்சிங் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் இந்திய ஊடகவியலாளர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கிறது;
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் அதன் தாய் நிறுவன மான பின்மெக்கானிகா ஆகியவற்றுடனான இந்திய அரசின் ஒப்பந்தத்திற்குச் சாதகமாக செய்திகளை வெளியிடுவதற்காக, முக்கிய பத்திரிகையாளர்கள் சிலருக்கு ரூ. 50 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டு இருக்கிறது;
எனவே, ஹெலிகாப்டர் ஊழலில் ஊடகங் களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமை யில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெய்சிங் வலியுறுத்தி இருந்தார்.
பின்மெக்கானிகா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜியுசெப் ஆர்சிமற்றும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முதன்மைசெயல் அதிகாரி புரூனோ சாப்கிளியானி ஆகியோர், இந்திய அரசு அதிகாரிகளை ‘கவனிக்க’ கிறிஸ்டியன் மைக்கேல் என்பவ ரிடம் ரூ. 217 கோடியை ஒதுக்கித் தந்ததாகவும், இந்த ரூ. 217 கோடியில் ஊடகங்களை கவனிக்க மட்டும் ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டு, 2013-ல் கிறிஸ்டியன் மைக்கேல் ஃபின்மெக்கானிகா நிறுவனத்தின் அழைப்பின் பேரில் இந்திய பத்திரிகையாளர்கள் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது என ஆதாரப்பூர்வமான தகவல்களையும் ஜெய்சிங் குறிப்பிட்டிருந்தார்.
முக்கியமாக, ஒரு சில பத்திரிகை யாளர்களுக்கு ரூ. 5 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது; சராசரியாக ஒரு பத்திரிகையாளர் மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ. 28 லட்சம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பத்திரிகையாளர் கள்தான் நடக்காத ஊழலை ,இழப்பு இவ்வளவு இருக்கலாம் என்று கருதுவதாக 2ஜி ஏல விவகாரத்தில் மத்திய பொது கணக்கு அலுவலர் குறிப்பிட்டதை திமுக,கலைஞர் ,ஆ.ராசாவுக்கு எதிராக வரிந்து கட்டி 1700000கோடி ஊழல் என்று எழுதிய உத்தமர்கள்.
தங்களுக்கு கவர் தராதவர்களை பற்றி தரக்குறைவாக எழுதுபவர்கள் இந்த நடுநிலை ஊடகங்கள்தான்.
தங்களுக்கு படை அழைப்பவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றாலும் அதை மக்களுக்காக சிறைக்கு சென்று செக்கிழுப்பதுபோல் காட்டி எழுதுவார்கள்.
கன்டெய்னர்களில் கோடி,கோடியாக கடத்தி மாட்டிக்கொண்டாலும் அதை கண்டும் காணாமல் குப்பாயி வயதுக்கு வந்ததை எட்டுக்கால செய்தியாக வெளியிடும் சமூகப்போராளிகள்.
மற்ற்வர்கள் புறம் போக்கு நில ஆக்கிரமிப்புகளை சமூக நலனுக்கா தட்டிக்கேட்டு ஆக்ரோஷமாக எழுதும் இந்த நடுநிலை நக்கிகள்தான் தூத்துக்குடியில் புறம்போக்கு நிலத்தை மாநகரட்சி ஆணையர் ஆணையை மதிக்காமல் அன்றைய மேயர் அந்தோணி கிரேசி துணையுடன் ஆக்கிரமித்து அதிமுக அமைசர்கள் கவுன்சிலர்களிடம் காசை வாங்கி பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் கட்டிடம் கட்டிக்கொண்டனர்.
ஏற்கனவே பத்திரிகையாளர்களுக்கு அருள்ராஜ் மருத்துவமனை அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தும்,தற்போதைய இடம் நீர்நிலை புறம்போக்கு என்று மூன்றாம் மைலில் இருந்து ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி வரும் நிலையிலும் கூட இடம் மதிப்பு 50 லட்சம் வரை போகும் என்பதால் சட்டத்தை மீறி ,மாநகரட்சி ஆணையர் எதிர்ப்பையும் மீறி கட்டியுள்ளனர்.
அதுவும் பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் இதை செய்தவர்கள் யார் என்று பார்த்தால் சமூக முறைகேடுகளை,அரசியல்வாதிகள் முறைகேடுகளை தட்டிக்கேட்டு எழுதுவதாக கூறிக்கொள்ளும் அரசியல் புலனாய்வு வார இதழ்களான குமுதம் ரிப்போர்ட்டர்,ஜூனியர் விகடன் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்கள்தான்.
இப்படி செய்திக்கு காசு வாங்கி எழுதும் இவர்களுக்கும் கூலிபடையினருக்கும் என்ன வித்தியாசம்.
இவர்கள் எழுதும் செய்திகளை உண்மை என்று நம்பி வாரா வாரம் காசு கொடுத்து வாங்கி படிக்கும் ,அதில் எழுதியதை அலசி பேசும் நாம்தான் அய்யோ பாவம்.
தளபதி ஸ்டாலின் சிறு குறிப்பு. திமுகவின் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பற்றிய சில குறிப்புகள்.
1953 – மு.க.ஸ்டாலின் பிறப்பு 1953 மார்ச் 1 அன்று பிறந்த மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி-தயாளு அம்மாள் ஆகியோரின் மூன்றாவது மகனாவார்.
1967 – அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது.
14 வயதில் பள்ளி மாணவராக இருந்தபோது மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1967 தேர்தலில் அவர் தி.மு.க.வுக்கு பிரச்சாரம் செய்தார். அவருக்குக் கீழ் குழந்தைகள் சீர்திருத்த சங்கம் உருவாயிற்று. ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் அணியின் எளிமையான தொடக்கம் நடந்தது. மாணவர்களுக்கும் இளம் வயதினருக்குமான தெருமுனைக் கூட்டங்கள் பின்னாளில் தமிழ்நாட்டின் மிகவும் மதிக்கப்பட்ட கட்டுப்பாடான இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக உருவான அமைப்புக்கு அடித்தளமிட்டன.
1976 – அவசரநிலையை எதிர்த்ததற்காக மிசா சட்டத்தின் கீழ் கைது.
உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் 31 ஜனவரி 1976 அன்று அவர் கைது செய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின் வயது 23. அப்போதைய அரசு அவரை அடித்து உதைத்து அடக்குவதற்கு செய்த அனைத்து முயற்சிகளையும் மீறி தனது கொள்கையில் உறுதியாக நின்றவராக மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கைதியாக அவரது பெயர் தேசிய நாளேடுகளில் தலைப்பு செய்தியாகியது.
1982 – தி.மு.க. இளைஞர் அணி தலைமையேற்பு
1984ல் அவர் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார், இன்று இளைஞர் அணி அவரது தலைமையில், இளைஞர் அணி அதன் அமைப்பு வலிமைக்கும், இளைஞர்களை சென்றடையப் புதுமையான வழிமுறைகளுக்கும், மக்களுக்கு சேவை செய்வதில் முழுமையான அர்ப்பணிப்புக்கும் சிறப்புமிக்கதாகத் திகழ்கிறது. தலைமைப் பண்பு, பொதுக்கூட்ட உரைகள், அமைப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு திறமைகள் ஆகியவற்றில் அணியினர் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.
1989 – சட்டமன்ற உறுப்பினராக (ஆயிரம் விளக்கு).
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 1989ல் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது முதல் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நான்கு முறை 1989, 1996, 2001, 2006ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 – சென்னை மேயராகத் தேர்வு
1996-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் முதல் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பெருமை பெற்றார். 1996ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் மேயராக இருந்த காலத்தில் அவர் எடுத்த முக்கியமான முன்முயற்சிகளில் ஆரம்ப சுகாதார மையங்கள், சிறு பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள், பழைய கால்வாய்களைத் தூர்வாருதல் ஆகியவையும் அடங்கும்.
2001 – சென்னை மேயராக மீண்டும் தேர்வு
2001ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தமிழ் நாட்டில் அப்போதைய ஆளுங்கட்சி சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி அவரை வெளியேற்ற இடையறாத அரசியல் பிரச்சாரத்தை நடத்தியதன் காரணமாக சட்டத்தை மதித்து அவர் ராஜினாமா செய்தார். எந்தவிதமான ஆரவாரமுமின்றி அவர் பதவியைவிட்டு இறங்கி, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து சென்னை மாநகர மக்களுக்காகப் பாடுபட்டார்.
2003 – தி,மு,க, துணைப் பொதுச் செயலாளராக தேர்வு
சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வின் 12வது பொதுக் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006 – உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
தமிழ் நாடு அரசில் 13 மே 2006 அன்று மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்ட்து. 2006 முதல் 2011 வரை அவரது பதவி காலத்தில், அவர் மகளிர் சுய உதவிக் குழுக்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மின்னணு நிர்வாக மையங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் போன்றவற்றை நிறைவேற்றினார்.
2008 – தி.மு.க.பொருளாளராகத் தேர்வு
மு.க.ஸ்டாலின் மீது கட்சியும் தலைமையும் நம்பிக்கை வைத்து 2008ஆம் ஆண்டு தி,மு,க. பொருளாளராகத் தேர்வு செய்தது.
2009 – தமிழ் நாட்டின் துணை முதல்வராக நியமனம்
தமிழ் நாடு வரலாற்றில் முதலாவதாக மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பதவியை வகித்தார். அவர் 29 மே 2009 முதல் 15 மே 2011 வரை இப்பதவியை வகித்தார்.
கழிவுநீர், வெள்ள நீர் அகற்றல், சுகாதாரம், குப்பை அகற்றல், பூங்காக்களை அழகுபடுத்தல், நீர்வழிகளை மீட்டல், துணை நகரங்கள் போன்ற நகர்ப்புற சவால்களுக்கு தீர்வுகாண அவரது முன்முயற்சிகள் தமிழ்நாடு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அவரது நிர்வாகத் திறமையும் தொலைநோக்குப் பார்வையும் தமிழகத்தில் பொற்காலத்தைப் படைக்க கலைஞர் அவர்களின் சீர்மிகு வழிகாட்டுதலின் கீழ் இணைந்து பணியாற்றிய கட்சி, அரசு மற்றும் மக்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
2011 – கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று 13 மே 2011 அன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
2016---மீண்டும் கொளத்தூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்...
தொகுப்பு :ஜெயராமன் திமுக(முகநூலில்)
===================================================================================
இன்று,டிசம்பர்-05.
- நாசிக் கட்சி அமைக்கப்பட்டது(1918)
- பண்பலை வானொலி முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1940)
- டெய்லி மெயில்,கடல் தாண்டி சென்ற முதல் செய்தி தாளானது(1944)
- உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்பேர்ணில் நடைபெற்றது(1971)
- ====================================================================================
ஊழல் மம்தா கட்சி.
சாரதா சீட்டுக் கம்பெனி ஊழல், மம்தாவின் திரிணாமுல் கட்சியின் தலைமையே நேரடியாகத் திட்டம் தீட்டி அரங்கேற்றிய மெகா ஊழல் என்பது நிரூபணமாகி வருகிறது என முகமது சலீம் குற்றம் சாட்டினார்.
மேற்குவங்கத்தில், கடந்த டிசம்பர் 30 அன்று ‘ரோஸ்வேலி சீட்டுக் கம்பெனி’ ஊழல் தொடர்பான வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தபஸ்பால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஊழல் வரலாற்றை கொண்டது. இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் முகமது சலீம் கூறியுள்ளார்.
மேற்குவங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான கோடிரூபாய் நிதி நிறுவன மோசடிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது தபஸ்பாலின் கைது மூலமாக மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தபஸ்பால் சம்பந்தப்பட்டுள்ள சீட்டுக்கம்பெனியான ரோஸ் வேலி நிதி நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களிடமிருந்து முதலீடுகளை பெற்று இயங்கி வந்தது.
இது திடீரென மூடப்பட்டது.
இதில்17,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கெனவே வங்கத்தை உலுக்கி வரும்சாரதா நிதி நிறுவன மோசடியிலும் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள், மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிதி நிறுவன மோசடிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுக்கு நேரடித்தொடர்பு உள்ளது அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.
ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குணால் கோஷ் மற்றும் மதன் மித்ரா உள்ளிட்ட பலருக்கும் உள்ள தொடர்புகள் அனைத்தையும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவார்.
இது குறித்து அரசியல் நோக்கர்கள் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.
முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.இதேநேரத்தில் மத்தியில் அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்காக காங்கிரஸ்கட்சி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளோடு மம்தா பானர்ஜி நெருக்கத்தைப் பேண முயற்சித்து வருகிறார்.இந்நிலையில், பாஜக மேலிடம்,மம்தாவை தங்களது கட்டுப்பாட்டிற் குள்ளேயே வைத்திருக்கும் நோக்கத்துடன் நிதிநிறுவன மோசடி குறித்து மட்டும்கூடுதல் அழுத்தம் கொடுத்து சிபிஐ விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இது மத்திய அரசின் அரசியல் தந்திர நடவடிக்கை மட்டுமே.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட தலைவர்களின் மீதான ஊழல்மோசடி குறித்த ஏராளமான ஆதாரங்கள்உள்ளன. ஏற்கெனவே பல்வேறு விஷயங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தியும் இருக்கின்றன.
சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டால் முழுமையான மோசடி பேர்வழிகளை அடையாளப்படுத்த முடியும் என சட்ட வல்லுனர்கள்கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் முழுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மறுத்து வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
இதுகுறித்து கொல்கத்தா முசாபர் அகமது பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேற்கண்ட விபரங்களைச் சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம், ‘நிதி நிறுவன மோசடியில் எம்.பி. தபஸ்பால் கைது நடவடிக்கை ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இவரோடு நெருக்கமாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கூறினார்.
‘இந்த நிதி நிறுவன மோசடிக்கும் எங்கள் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெளிவான அறிக்கையை வெளியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தைரியமிருக்கிறதா’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களும், எம்பிக்களும் நிதி நிறுவன மோசடியில் நேரடியாகஈடுபட்டுள்ளனர்.
நள்ளிரவு பேரங்களைவடக்கு வங்காளம் மாவட்டத்தில் குர்ஷியாங் மலைப் பகுதியில் நடத்தியுள்ளனர்.
இதில் தொடர்புடையவர்கள் மீது விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க திரிணாமுல் தலைமை மறுத்து வருகிறது.
கள்ளக் கதவுகளை உடைத்து உண்மைகளை வெளிக்கொண்டுவர அதிகாரமற்றவராக மம்தா பானர்ஜி நாடகமாடுகிறார். ஏழை மக்களின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிப்புப் பணம் சூறையாடப்பட்டத்தில் மலிவான அரசியலை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஊழல்வாதிகள் சுதந்திரமாக அரசியல் அதிகாரத்தில் உள்ளனர்’ என்றும் முகமது சலீம் விமர்சித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுதிப் பந்தாயாபாத்யாயாவுக்கு இந்த மோசடி வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி தங்கள் கட்சியின் எம்பிக்கள் மீதானநடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் என்கிறார். இது கட்சித் தலைமையே திட்டமிட்டு நடத்திய நிதி மோசடியாக இருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
முதல்வருக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள அப்பாவி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் சலீம் குறிப்பிட்டார்.