, 'பீட்டா' பின்னணி ?

மிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், வீர விளையாட்டாகவும் திகழும் ஜல்லிக்கட்டிற்கு தடை வாங்கிய அமெரிக்க அமைப்பின் பெயர், 'பீட்டா!' 
ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, போராட்டக்களத்தில் குதித்துள்ளவர்களின் முக்கிய கோரிக்கை, இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதே.







'பீட்டா' அமைப்பின் பின்னணி 
விலங்கு வதையை தடுப்பதற்கு, 1980 மார்ச் 22ல், உருவான தன்னார்வ அமைப்பு தான் 'பீட்டா.' அமெரிக்காவின் வர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதனை இன்கிரிடுநியூகிர்க், அலெக்ஸ் பாச்சேகோ தொடங்கினர்.

'மனிதர்களைப் போல, விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்' என்கிறது இந்த அமைப்பு. 

ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை கொண்டாடும் வீர விளையாட்டுக்கள் நடந்தால் தான், காளை இனம் சிறக்கும் ,மனிதர்களும் கலையை நன்கு கவனித்து பாதுகாத்து வளர்ப்பார்கள் என்பது இந்த அமெரிக்க அமைப்பிற்கு தெரியாதாது அல்ல.

இந்த அமைப்பில் உலகம் முழுவதும், சுமார் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக அவர்களே கூறுகின்றனர். 
முழுநேர ஊழியர்களாக 389 பேர் இருக்கின்றனர். 
உறுப்பினராக சேர குறைந்தபட்ச கட்டணமாக, 1,000 ரூபாய் வசூலிக்கின்றனர். 

2014-ல் இந்த அமைப்புக்கு, 292 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

மிருகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைப்புக்கு 400 பேர்கள் கைநிறைய சமபலம் வாங்கும் முழு நேர ஊழியர்களாக இருப்பதும் ஆண்டுக்கு 200 கோடிக்கு மேல் நன்கொடை என்ற பெயரில் வருமானம் கொட்டுவதும் இந்த பீட்டா அமைப்பின் செயல்பாடுகளை உலக மூன்றாம் நாடுகளை சந்தேகம் கொள்ள வைக்கிறது.

 காரணம் இந்த பீட்டா அமைப்பு மிருக  பாதுகாப்பு வேகமான செயல்பாடுகள் அனைத்தும் வளரும் நாடுகளில் மட்டுமே உள்ளது.

எருது சண்டை நடக்கும் பிரான்ஸ்,ஸ்பெயின் போன்ற நாடுகளில் எருதுகளை கையில் வாளுடன் தான் அங்குள்ள மாடுபிடி வீரர்கள் எதிர் கொள்வார்கள்.அச் சண்டையில் பெரும்பாலான எருதுகள் ,காளைகள் கொள்ளப்பட்டு விடும்.அங்கு இந்த பீட்டா அமைப்புகள் வாயை திறப்பதில்லை.

இவர்கள் வாலாட்டல் எல்லாம் இந்திய போன்ற கீழை நாடுகளிடம் மட்டும்தான்.

இதற்காகத்தான் மேற்கத்திய நாடுகளின் தொழிலதிபர்கள் பீட்டாவுக்கு நன்கொடையை வாரி வழங்குகிறார்கள்.அப்படி வழங்க வேண்டிய கட்டாயம் என்ன?பலனை எதிர்பாராமல் ஒரு காசையும் மேற்கத்திய தொழிலலதிபர்கள் செலவழிப்பதில்லையே?
உலகம் முழுவதும் நன்கொடை பெற்று செயல்படுவதாக கூறும் பீட்டாவின் வருவாய், நடைமுறைகள் குறித்து பல நாடுகளிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.


இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியாவிலும் இந்த அமைப்பு செயல்படுகிறது.ஆனால் அங்கெல்லாம் எருது,காளை பிடி போட்டிகள் ஆண்டுகள்தோறும் வண்ணமயமாக சிறப்பாக நடக்கிறது.

இதன் தலைமை செயல் அதிகாரியாக(சி.இ.ஓ.,) அமெரிக்காவை சேர்ந்த பூர்வா ஜோஷிபுரா உள்ளார். இவர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற, அரசின் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் (அஙிஆஐ) நியமன உறுப்பினராகவும் இருக்கிறார்.
..
இந்தியாவில் 2000 ஜனவரியில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 

தலைமையகம் மும்பையில் உள்ளது. உணவுக்காக விலங்குகளைக் கொல்வதை எதிர்ப்பதாகவும், சைவ உணவு முறைக்கு பிரசாரம் செய்வதாகவும் இதன் இணைய தளம் தெரிவிக்கிறது.

இதற்காக நிறைய தன்னார்வலர்களை தன் இணைய தளத்தில் இணைத்துள்ளது. 

ஜல்லிக்கட்டு நடத்த உதவிடும் வகையில், மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்ட அறிவிக்கைக்கு, உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதை தங்களது இணையதளத்தில் பெருமையாக வெளியிட்டுள்ளது. 

மேலும், ஜல்லிக்கட்டு எதிராக கருத்து தெரிவிக்கும்படி, தங்களது இணையதளத்தில் பொதுமக்களை துாண்டி விட்டு, தனது வெறுப்பை கொட்டி சேட்டை செய்துள்ளது பீட்டா.

நடிகர் சாகித் கபூர், நடிகைகள் ஹேமமாலினி, ரவீனா டாண்டன்,திரிஷா ,விஷால் போன்ற திரையுலக விளம்பரம் தேடும் பிரபலங்கள், மேனகா காந்தி,கிரண் பேடி போன்ற  பலர்  'பீட்டா' இந்தியா அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். 
ஆனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மூலம் மூக்கை நுழைத்து மக்களின் வெறுப்பை வாங்கிக்கட்டிக்கொண்ட இந்த பீட்டா அடுத்து தனது விளையாட்டை கேரளாவில் யானைகள் கொடுமை படுத்தப்படுவதாக ஆரம்பிக்க உள்ளதாம்.

ஆனால் தமிழ் நாட்டில் எழுந்துள்ள காளை , ஜல்லிக்கட்டு ஆதரவு எழுச்சி பீட்டாவின் கோரமான மறுபக்கத்தை  உலக நாடுகளுக்கு காட்டி வருவதால் யானை விவகாரத்தை தற்போது கையில் எடுக்க பீட்டா தயங்குகிறது.

கேரளாவில் நாய்கள் பெருத்து அதன் தாக்குதலால் பலர் உயிரிழந்து நாய்கள் மீது கையை வைக்கக் கூடாது என்று கூறியதால் "மனித உயிர்களை விட நாய்கள் மேலா?" என்று மக்களின் கடுங்கோபத்துக்கும்,கண்டனங்களும் ஆளான மேனகா காந்தி போன்ற பீட்டா உறுப்பினர்கள் சற்று பம்மியுள்ளனர்.
இந்த நேரம் விடாமல் போராடி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி "பீட்டா அமைப்பை கலைக்க வேண்டும்.காளைகளை காட்சி படுத்தல் விலங்குகள் பட்டியலில் இருந்து நிக்க வேண்டும்.இந்திய  விலங்குகள் நலவாரியத்தில் தமிழகத்தை சேர்ந்த வர்களும் உறுப்பினர்களாக்க வேண்டும்."
என்பதை செயல்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் ஜல்லிக்கட்டு ,யானை எல்லாம் நம் வாழ்க்கையை விட்டு விலகி விடும்.கடித்து குதறும் வெறி மிக்க தெரு நாய்கள் மட்டுமே பெருகி விடும்.
மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த எந்த முயற்சியும் செய்யாது.
உச்ச  நீதிமன்றமோ பீட்டா அமைப்புக்கு ஆதரவாகவே மீண்டும்,மீண்டும் தீர்ப்பை கூறிக்கொண்டே இருக்கும்.
தமிழக மக்கள் இப்போது இவர்களை அடக்கவே போராடவேண்டும்.  
======================================================================================
ன்று,

ஜனவரி-18.
  • லீமா நகரம் அமைக்கப்பட்டது(1535)

  • எக்ஸ்ரே இயந்திரம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1896)

  • ஹாக்கி கழகத்துடன் நவீன ஹாக்கி போட்டிகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டன(1886)

என்.டி.ராமாராவ், ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், நிம்மகுரு என்ற கிராமத்தில், 1923 மே, 28ல் பிறந்தார். 
தெலுங்கு திரைப்படத் துறையில், 1947ல் பிரவேசித்தார். 
200க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், 15 தமிழ் படங்களிலும், ஒருசில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில், சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதை, 10 முறையும், வரகட்னத்திற்காக என்ற படத்திற்காக, 1968ல், தேசிய விருதும் பெற்றுள்ளார். 
மத்திய அரசின் உயரிய விருதான, பத்ம ஸ்ரீ, ஆந்திர பல்கலை சார்பில், 'கவுரவ டாக்டர்' பட்டமும் பெற்றவர். 
ராமர்,கிருஷ்ணர் போன்ற வேடத்தில் நடித்த, என்.டி.ராமாராவ், மக்களிடையே தேவுடு என்று பக்தியுடன் கும்பிடும் அளவு  பெரும் புகழ் பெற்றார். 

எம்ஜிஆர் போன்றே அவரின் ஆலோசனைப்படி திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு, 1982ல் நுழைந்தார். 
தெலுங்குதேச கட்சியை உருவாக்கிய அவர், மூன்று முறை, ஆந்திர முதல்வராக பதவி வகித்தவர். என்.டி.ராமாராவ், 1996 ஜன., 18ல் இறந்தார். 
=======================================================================================
முகநூல் படங்கள்.









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?