மீண்டும் மாநில சுயாட்சி
மோடி அரசின் செயல்கள் ஒவ்வொன்றும் தமிழர்களுக்கு விரோதமான ஒன்றாகவே இருக்கிறது.
திட்டமிட்டே அவ்வாறு அமைக்கப்படுகிறதா?அல்லது வடபுறத்தார்கள் திராவிட பகைமை உணர்வா என்பது கேள்வியாக எழுகிறது.
பாஜக தமிழ் நாட்டில் காலூன்ற முயற்சிப்பதாக வரும் செய்திகளை இது போன்ற தமிழர் விரோத செயல்பாடுகள் பகல் கனவாக்கி விடும் என்பது இங்குள்ள போன்.ராதாகிருஷ்ணன்,தமிழிசை போன்றோருக்கு தெரியாததல்ல.
அவர்களின் கருத்துக்கள் தமிழ் நாட்டு செயல்பாடுகள் தொடர்பாக கேட்கப்படுகிறது என்பதே ஐயமாக இருக்கிறது.
காவேரி தண்ணீர் பிரசனையில் கர்நாடக பாஜகவினர் பேச்சை க்கேட்டு தமிழ் நட்டு மக்களவை உறுப்பினர்களை சந்திக்க மறுத்ததுடன் பகிரங்கமாகவே கர்நாடக அரசுக்கு ஆதரவாக மோடி நடந்து கொண்டதை தமிழர்கள் மறக்கவே இல்லை.
ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் மோடியின் பாஜக அரசு இரட்டை வேடம் போடுகிறது.
பழமையான ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றத்தடையை கரணம் கட்டி அலைக்கழிக்கும் மோடி வடக்கே நீதிமன்றத்தடையை மீறி நடந்த ஒட்டகப் போட்டியை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.
இன்று பெரிதாகி வரவும் ஜல்லிக்கட்டு பிரசினையை திசை திருப்ப தமிழர்களின் பரம்பரை சாதி,மதமற்ற பொங்கல் திருநாளுக்கு பொது விடுமுறையை நீக்கம் செய்வதாகக் கூறி பெரிதாக அறிவிப்பு விட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு போராடியவர்கள் இன்று பொங்கல் விடுமுறைக்காக போராட்ட வேண்டிய நிலைக்கு தள்ளுவதுதான் மோடி அரசின் எண்ணம்.
மத்திய அரசின் கட்டாய விடுமுறைப்பட்டியலில் விநாயகர் சதுர்த்தி,கிருஷ்ண ஜெயந்தி போன்ற வட மாநிலத்தவர் விழாக்கள் உண்டு.ஆனால் பொங்கல் விடுமுறை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடையாது.
பொதுவாகவே மத்திய அரசு விடுமுறை பட்டியலில் தேசிய விழாக்கள் மட்டுமே அடங்கும்.
ஆனால அந்தந்த மாநில முக்கிய விழாக்களுக்கு இரெண்டோரு நாட்கள் ஒதுக்கப்படும் .ஒதுக்கப்படவேண்டும்.
குருநானக் பிறந்த நாள்,புத்த பூர்ணிமா போன்றவை தமிழகத்தில் ஏன் தென் மாவட்டங்களில் கொண்டாடப்படுவதில்லை.ஆனால் அவை கட்டாய விடுமுறை தினத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்த பண்டிகைகளை அதை கொண்டாடாத மாநிலங்களில் நீக்கி விட்டு அதற்கு பதிலாக,பொங்கல்,ஓணம் போன்றவற்றை அந்ததந்த மாநிலங்களுக்கு கட்டாய விடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட வேண்டும் .
பொங்கல் விழா மட்டுமல்ல தை தமிழ்ப் புத்தாண்டு பிறப்பும் கூட .
இந்தியா பல்வேறு மொழிகள் ,கலாசாரம் கொண்ட நாடு .
இதற்கு இந்தி பேசும் மாநிலத்தவர்கள் எண்ணப்படிமட்டும் விடுமுறைகளை தீர்மானிப்பது எப்படி சரியாகும்.
தமிழர்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள் பற்றியும்.அதற்கு விடுமுறை பற்றியும் தீர்மானிக்க இவர்கள் யார்.
முன்பு தமிழர்கள் பெருவாரியாக கண்டறியாத,கொண்டாத விநாயகர் சதுர்த்திக்கு கட்டாய விடுப்பு தந்து இன்றைய மதக்கலவர சூழலை உருவாக்கியது முந்தைய ஜனசங்க பாஜக அரசுதான்.
இன்று ஒரே குறியாக தமிழர்களை அவர்களின் ஜல்லிக்கட்டு,பொங்கல் கொண்டாட்டங்களை பறிக்கும் முயற்சியில் பகிரங்கமாகவே மத்திய பாஜக,மோடி அரசு இறங்கி விட்டது.
இது மீண்டும் மாநில சுயாட்சி ,திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற ஐம்பதுகளுக்குள் தமிழர்களை கொண்டு போய்விடும் அபாயத்தை உண்டாக்கி விடும்.
ஏற்கனவே காவிரி பிரசனையில் மத்திய அரசின் பாராமுகத்தை கண்டு கலங்கி,வெறுத்துப்போயுள்ள தமிழர்களை ஜல்லிக்கட்டுக்கு,பொங்கல் மறுப்பும் மத்திய அரசின் மீது அவநம்பிக்கையை,வெறுப்பை அதிகரித்து வருகிறது.
கூட்டாட்சி என்ற பெயரால் தங்கள் வாக்களிக்கவே செய்யாத நபர் பிரதமர் என்று தங்களை வட்டி வதைப்பதை அதிக நாட்கள் பொறுத்துக்கொண்டிருப்பார்களா?
மோடியின் காவிரி நீர் பாராமுகத்தால்தான் தமிழகத்தில் இதுவரை 560க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம்,மாரடைப்பு,தற்கொலை என்று அதிகரித்து வருகிறது.
அதற்கு தமிழக அதிமுக அரசின் கையாலாகாத்தனமும் ஒரு காரணம்தான், என்றாலும் இரு மாநில அரசுக்கு இடையிலான பிரசனையை பிரதமர் இல்லாமல் வேறு யார்தான் தீர்க்க முடியும்.
தமிழக மக்களுக்கு பாஜக மோடி அரசு செய்யும் பழிவாங்கல் நடவடிக்கைகளை விட அதற்கு ஜால்ரா விளக்கங்களைத்தந்து சப்பைக்கட்டும் தமிழிசை,பொன்.ராதாகி மீதுதான் எரிச்சல் அதிகம்.
அது அடுத்த தேர்தலில் நிச்சயம் தெரியும்.
======================================================================================
இன்று,ஜனவரி -10.
- தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தம் ரங்கம்பிள்ளை இறந்த தினம்(1761)
- உலகின் மிகப் பழமையான சுரங்க ரயில்பாதை லண்டனில் திறக்கப்பட்டது(1863)
- முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது(1920)
- விக்கிப்பீடியா, நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது(2001)
- பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாஸ்,பிறந்த தினம் (1940)
உலகை பார்க்க வைத்த புகைப்படங்கள்.
எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவரின் மரண வேளை.