இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 19 ஜனவரி, 2017

"பீட்டா" மற்றும் தன்னார்வ குழுக்களும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட் டான, ஜல்லிக்கட்டு போட்டியை, மூன்றாவது ஆண்டாக நடத்த முடியவில்லை. அதற்கு, 'பீட்டா' போன்ற வெளிநாட்டு நிதி உதவிபெறும் அமைப்புகள் தொடுத்த வழக்கு தான் காரணம். 
இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும், பாரம்பரியத்தை அழிக்கும் பல வழக்குகளை, இது போன்ற அமைப்புகள் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. விலங்குகளை வதை செய்வது, தவறு எனக் கூறுவதை, யாரும் மறுக்கப் போவதில்லை. 
ஆனால், ஜல்லிக்கட்டு எனப்படும், பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை, 'மிருக வதை' என்ற சிறிய வட்டத்திற்குள் திணித்து, கலாசாரத்தை அழிக்க, சிலர் முற்படும் போது, சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பாரம்பரி யத்திற்கு எதிராக, யார் குரல் கொடுப்பது, அவர்களின் பின்னணி, உள்நோக்கம் என்ன என்பது போன்ற அம்சங்களை ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை யும், காலணி தயாரிப்புக்காக, கால்நடைகள் பலியாவதையும், இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களான, என்.ஜி.ஓ.,க்கள் பெரிய அளவில் எதிர்ப்பதில்லை. அதே நேரத்தில், மிருக வதை என்ற அஸ்திரம் மூலம், பாரம் பரிய விளையாட்டுக்கு குறிவைத்திருப்பது ஏன் என்ற கேள்வி, பல சந்தேகங்களை கிளப்புகிறது. நம்மூர் காளை இனங்களை அழித்து, அன்னிய வகை கால்நடைகளை இறக்குமதி செய்ய துடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மறைமுக மாக உதவுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. 

அன்னிய இன மாடுகள் இங்கு அதிகரித்தால், தீவனம் முதல், மருந்து வரை, அன்னிய நிறுவனங்களையே, மக்களும், விவசாயிகளும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த வியாபார நோக்கத்திற்கு துணை போக துடிக்கும் அமைப்புகளாகவே, பீட்டா போன்ற, என்.ஜி.ஓ.,க்கள் இருப்பது தான் வேதனை.


சில ஆண்டுகளுக்கு முன், 'பி.டி., பிரிஞ்சால்' எனப்படும், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக் காயை, அன்னிய நிறுவனங்கள் இங்கு அறிமுகப்படுத்திய தும், இதே வியாபார நோக் கத்தில் தான். அன்னிய நாட்டு நிதியுதவியில் செயல்படும், பீட்டா போன்ற அமைப்புகள், 'ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், மஞ்சு விரட்டு' போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை, தடுக்க நினைக்கும் நோக்கத்தின் பின்னணியிலும், அதே வர்த்தக உள்நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது என்கின்றனர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.

பீட்டா அமைப்பு போல், நாட்டின் பல பகுதிகளில், பாரம்பரியத்தை அழிக்க, அன்னிய நிதியுதவி பெறும் பல, என்.ஜி.ஓ.,க்கள் தீவிரமாக செயல்படுகின்றன. 

* ஹிமாச்சல பிரதேச அரசு, 2007ல், மத சுதந்திர சட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி, ஒருவர் மதம் மாறும் போது, அதை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மதம் மாறியதை மறைத்து விட்டால், அபராதம் விதிக்கப்படும் என, அந்த சட்டத்தில் ஒரு அம்சம் இருந்தது. 

'இந்திய இவாஞ்சலிகல் பெல்லோஷிப்' மற்றும் 'அன்ஹத்' ஆகிய அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நிதி உதவிபெறும், என்.ஜி.ஓ.,க்கள் தொடர்ந்த நீதிமன்ற வழக்கால், அந்த அம்சம் ரத்து செய்யப்பட்டது .

* கர்நாடகத்தில், எருமை மாடுகள் பங்கேற்கும், 'கம்பாலா' பந்தயத்துக்கு எதிராக, பீட்டா தொடர்ந்த வழக்கு, அது தடைபட காரணமாக இருந்தது .

* டில்லியில், யமுனை நதிக்கரை அருகே, வாழும் கலை அமைப்பு நடத்திய, உலக கலாசார விழாவால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாகக் கூறி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், 'ஸ்வெச்சா' என்ற அமைப்பு வழக்கு தொடுத்தது. அந்த அமைப்பிற்கு, பிரிட்டன்,அமெரிக்கா போன்ற நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.
 
* மரபணு மாற்றப்பட்ட விதைகளை, பயிரிட்ட நிலங்களில் சோதனை செய்வதற்கு எதிராக, 'ஜீன் கேம்பெய்ன்' என்ற அமைப்பு, 2014ல் வழக்கு தொடர்ந்தது. அதற்கு, 'ஆக் ஷன் எய்ட்' என்ற பிரிட்டன் அமைப்பு, நிதி உதவி வழங்கி வருகிறது. மேலும், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும்,நிதி உதவி பெறபடுகிறது. 

அன்னிய நிதி உதவிபெறும், என்.ஜி.ஓ.,க் களுக்கு, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், உள்துறை அமைச்சகம், உரிமம் அளிக்கிறது.
 உரிமம் பெற்ற பல அமைப்புகள், சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்ததும், இதுவரை மத்திய அரசு, 20 ஆயிரம், என்.ஜி.ஓ.,க்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. 

'கிரீன் பீஸ்' அமைப்பு, பல்வேறு உள் கட்ட மைப்பு கட்டுமான திட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வந்தது. பணப் பரிவர்த் தனை முறைகேடு புகார் காரணமாக, அதற்கு மத்திய அரசு தடை விதித்தது. உடனே, அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகள் பொங்கி எழுந்தன. 
அதனால், வேறு வழியின்றி, சில மாதங்களுக்கு முன், தடையை விலக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
விலங்குகள் மற்றும் பூச்சிகள் நலனுக்கு குரல் கொடுக்கும் இந்த  வெளிநாட்டு உதவி பெரும் தன்னார்வ குழுக்கள் மக்களின் ஆரோக்கியத்துக்கு கடும் சவாலாக அமையும் ஸ்டெர்லைட்,கோககோலா ,மான்செட்டோ போன்ற தொழிற்சாலைகள் எதிர்ப்பாக மக்கள் போராடும் போது எங்கே போட்டிருந்தன ?பொது நலவழக்குகளை போட்டனவா?
மக்களுக்கு குடிக்க ,சமையல் செய்ய குடிநீர் இல்லாமல் ஆற்று நீர்களை எல்லாம் ஸ்டெர்லை,கோககோலா ,பெப்சி போன்ற பகாசுர நிறுவனங்கள் உறிஞ்சி பாட்டிலில் மென்பானங்களாக லாபத்தில் மக்களிடம் விற்று லாபத்தை மூட்டை,மூட்டையாக அமெரிக்காவுக்கு கொண்டுபோகும் போது தடுத்தார்களா என்ன?

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுக்கணக்கில் இந்த தன்னார்வக்குழுக்கள் செலவில் அப்பகுதி மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடந்தது.
ஆனால் அக்கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்ய ஆதரவு இல்லாமல் அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட போராட்டமே நடந்திராது.சிலர் எதிர்த்துப்போராடினாலும் அவர்களை நலத்திட்ட உதவி என்ற பெயரில் அமுலாக்கிவிட்டிருக்கும் இந்த தன்னார்வக்குழுக்கள்.ஸ்டெர்லைட் போராட்டம் அப்படித்தானே ஒய்க்கப்பட்டது.
பொதுநல வழக்கு என்பது, அரசியலமைப்பு சட்டம், அனைத்து குடிமக்களுக்கும் தந்திருக்கும் நீதி நிவாரணம். அதன் மூல அம்சங்களின் அடிப்படையில், அந்த வழக்கை ஏற்பதா, வேண்டாமா என, நீதிமன்றம் முடி வெடுக்கிறது. 
அந்த வழக்கு, உண்மையாகவே, பொதுநலனுக்கு உகந்தது தானா என்பது, அதில் மிக முக்கிய அம்சம். பொதுநல வழக்கு களை, தனிநபர், அமைப்புகள் மற்றும் என்.ஜி. ஓ.,க்கள் தொடுக்கின்றன. 
வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகளை, பொதுநல வழக்கு தொடுக்க அனுமதிக்கலாமா என்பது, உடனடி யாக, விவாதத்திற்கு எடுக்க வேண்டிய விஷயமாகி உள்ளது. 
======================================================================================================
ன்று,
ஜனவரி-19.
  • நன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ்  கைப்பற்றியது(1806)
  • கிழக்கிந்திய கம்பெனி, ஏமனின் ஏடென் நகரை கைப்பற்றியது(1839)
  • ஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)
  • அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)
  • =========================================================================================
ரொக்கமில்லா பரிவர்த்தனை

இ.சி.எஸ்., முறை (Electronic Clearing System) எனும் வசதி, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
உங்கள் பெயரிலும், குடும்ப நபர்களின் பெயர்களிலும், நான்கைந்து ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருப்பீர்கள். 
ஒவ்வொன்றுக்குமான பிரீமியத்தை, வெவ்வேறு மாதங்களில் செலுத்த வேண்டி இருக்கலாம். 
சில பாலிசிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறையும், வேறு சிலவற்றை, ஆண்டுக்கு, நான்கு முறையும் செலுத்த வேண்டியிருக்கும். இதில், எந்த தவணையை செலுத்த மறந்தாலும் சிக்கல் தான்.
நீங்கள், ஜனவரி மாதம் கட்ட வேண்டிய ஆயுள் காப்பீடு பிரீமியத் தொகையை, மறந்து, ஏப்ரல் மாதத்தில் கட்டுகிறீர்கள் என்றால், அப்பாலிசி, காலாவதியானதாக கருத வாய்ப்பு உண்டு. 
அதாவது, உரிய காலத்திற்கு பின், நீங்கள் செலுத்திய தொகை வந்து விடும். ஆனால், இடையில் சம்பந்தப்பட்டவர் இறந்து விட்டால், குடும்பத்துக்கு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தொகை வராது.
இதை தவிர்க்க, நீங்கள், இ.சி.எஸ்., வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 
அது, எப்படி என்று பார்ப்போம்...
இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில், ஒரு விண்ணப்பம் தருவர். அதில், உங்கள் பெயர், பாலிசி எண் போன்ற விவரங்களை நிரப்பி, அதை, உங்கள் வங்கி கிளை மேலாளரிடம் அளிக்க வேண்டும்.
 'இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து, மேற்படி பாலிசிகளுக்கான பிரீமியத்தை அனுப்புமாறு, எங்கள் வங்கிக்கு நோட்டீஸ் வந்தால், நாங்கள், இந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து, அத்தொகையை கட்ட சம்மதிக்கிறோம்...' என்ற உறுதிமொழியின் கீழ், வங்கிக் கிளை அதிகாரி கையொப்பமிட வேணடும். பின், இந்த விண்ணப்பத்தை, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.
அதற்கு பின், நேரடியாக, இன்ஷூரன்ஸ் நிறுவனம், உரிய நாளில், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, பணத்தை எடுத்துக் கொள்ளும். 
எந்தத் தவணையாவது பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் கூட, அது, உங்கள் உரிமைகளை பறித்து விடாது; ஆனால், உங்கள் வங்கிக் கணக்கில், போதிய இருப்பு, தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் தொலைபேசி கட்டணம் போன்ற, பல சேவை கட்டணங்களை, இ.சி.எஸ்., முறையில் கட்டலாம்.

மின்னணு பணம்
இதுவும் ரொக்கமில்லாத பண பரிவர்த்தனைகளுக்கு, வழிவகுக்க கூடியது. அதாவது, நீங்கள் நேரடியாக சென்று செலுத்தாமல், கணினியில், இணையதளம் மூலம், மின் கட்டணம், சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி போன்றவற்றை செலுத்த முடியும். 
மேலும், உங்கள் வங்கி கணக்குகளில், ஒன்றிலிருந்து, மற்றொன்றிற்கு தொகையை மாற்றலாம். அவ்வங்கியில் உள்ள பிறரது கணக்கிற்கும், உங்கள் கணக்கிலிருந்து தொகையை மாற்றிக் கொள்ளலாம்.

இ பே., (Epay)
'இ.பே.,' என்ற அமைப்பு, 2001ல் உருவானது. இன்டர்நெட் வசதியுள்ளவர்கள், தங்களது வணிகம் தொடர்பான, கொடுக்கல், வாங்கல்களை, கணினி மூலமாக, ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதற்காக, இதை துவக்கினர்.

பே டி எம் (Paytm)
பே டிஎம், பே யு மணி மற்றும் மொபிக்விக் என்று, பல, 'ஆப்'களின் மூலம், தொலைபேசியிலிருந்தே, பணத்தை செலுத்தலாம். இந்த ஆப்களை, உங்கள் மொபைல் போனிலுள்ள, 'ப்ளே ஸ்டோர்' என்பதிலிருந்தோ, உரிய வலைத்தளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவற்றில், இந்தியாவில் அதிக பேர் பயன்படுத்துவது, 'பேடிஎம்!'
நீங்கள் கடைக்கு சென்று, 1,500 ரூபாய்க்கு, பொருட்கள் வாங்குகிறீர்கள். உங்கள் மொபைல் போனில், 'பேடிஎம் - ஆப்'பை ஏற்கனவே தரவிறக்கம் செய்திருப்பீர்கள். 
அதை அழுத்தியவுடன், யாருக்கு செலுத்த வேண்டும் என்று விவரம் கேட்கும். கடைக்காரர்களின் தொலைபேசி எண்ணை நிரப்ப வேண்டும். அடுத்து, எவ்வளவு தொகை என்று கேட்கும். நீங்கள் நிரப்பிய பின், முடிவு என்ற பொத்தானை அழுத்தினால், அது, உங்கள் கணக்கிலிருந்து, கடைக்காரர்களின் கணக்கிற்கு, மாறி விடும்.
இது எப்படி சாத்தியம்? நீங்கள், உங்கள் வங்கி கணக்கிலிருந்து, பணத்தை எடுத்து, பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து, செலவு செய்வீர்கள். அதற்கு பதில், வங்கியிலிருந்து, உங்கள், 'பேடிஎம்' நிறுவனத்தின் பாக்கெட்டுக்கு, முதலில் பணத்தை மாற்ற வேண்டும். 
இதற்காக, வங்கிக்கு போக வேண்டாம்; தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவே இதை செய்ய முடியும்.
ஒவ்வொரு மாதமும், 20,000 ரூபாய்க்கு உள்ளாக, நீங்கள், 'பேடிஎம்' மூலம் பண பரிவர்த்தனைகள் செய்தால், உங்கள் தொலைபேசி எண்ணை மட்டுமே அந்நிறுவனத்துக்கு அளித்தால் போதும்; இதை விட, அதிக தொகை என்றால், உங்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண் போன்றவற்றையும், பகிர்ந்து கொள்ள வேண்டும்.
'பேடிஎம்' அமைப்பு என்ன சொல்கிறது? 
'நீங்கள், ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள்; உங்கள் கடைக்காரர்கள் பல்வேறு வங்கிகளில், கணக்கு வைத்திருக்கிறார். உங்கள் ஒவ்வொருவருக்கும், நான் ஒரு பொதுவான எண்ணை தருகிறேன். அதுதான், உங்கள் தொலைபேசி எண். அதுதான், எங்களிடமுள்ள ஒவ்வொரு பர்சுக்குமான அடையாள எண். 
இந்த எண்ணை, நீங்கள் எங்களிடம் பதிவு செய்து கொண்டால் போதும்.
ஆனால், மொபைல் போன் மூலம் இதை பயன்படுத்துவது என்றால், அது, 'ஸ்மார்ட்' போனாக இருக்க வேண்டும். மின்னஞ்சல் மூலமும், இதை செய்ய முடியும்.
'மொபிக்விக்' என்பதும், இதே போல தான். 
தன் மூலம் தொகைகள் செலுத்தப்படும் போது, அதில், ஒரு சிறு பகுதியை, மீண்டும் உங்களுக்கே அளிப்பதால், முன்பை விட, பிரபலமடைந்து வருகிறது. 
ஒருவேளை, உங்கள் தொலைபேசியை, நீங்கள் தொலைத்து விட்டால், அதில், நீங்கள் பதிவு செய்த, 'மொபிக்விக்' கணக்கை, முழுவதுமாக அழித்து விடும் வசதி உண்டு. 
அதாவது, உங்கள் பழைய கொடுக்கல், வாங்கல் விவரங்கள், பிறருக்கு தெரிய வராது.
மேலும், 'USSB' (Unstructured Supplementary Service Data) என்பதை பயன்படுத்த, இன்டர்நெட்டோ, 'ஸ்மார்ட்' போனோ தேவையில்லை.
இதற்கு, உங்கள் தொலைபேசி எண்ணை, வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். 
உங்கள் தொலைபேசியிலிருந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு, 'டயல்' செய்ய வேண்டும். பின், உங்கள் வங்கியின், ஐ.எப்.எஸ்.சி., எண்ணின், முதல் நான்கு எழுத்துகளை, 'டைப்' செய்ய வேண்டும்.
பின், யாருக்கு பணம் செலுத்துகிறீர்களோ, அவரது தொலைபேசி எண்ணையும், அடையாள எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். 
கடன் அட்டையும் இல்லை; டெபிட் அட்டையும் இல்லை. எவ்வித மொபைலும் இல்லை என்றாலும் கூட, நீங்கள் ரொக்கம் இல்லாமலேயே, உங்கள் வங்கி கணக்கிலிருந்து, கடைக்காரர்களுக்கு பணம் செலுத்த முடியும். இதற்கு, நீங்கள் ஆதார் அட்டை பெற்றிருக்க வேண்டும்.
இதை, 'ஏ.இ.பி.எஸ்.,' என்கின்றனர். 
அதாவது, 'ஆதார் எனேபிள்ட் பேமென்ட் சிஸ்டம்!' இதை பயன்படுத்த, மைக்ரோ 
ஏ.டி.எம்., என்கிற சிறு கருவி தேவைப்படும். இக்கருவியை, நீங்கள் வாங்க வேண்டாம்; நீங்கள் பொருட்களை வாங்கும், வணிகர்கள் தான் வாங்க வேண்டும்.
நீங்கள், ஒரு பொருளை வாங்கிய உடன், வணிகர், உங்கள் ஆதார் எண்ணையும், நீங்கள் வாங்கிய பொருட்களின் தொகையையும், அக்கருவியில் பதிவு செய்வர். நீங்கள், உங்கள் கைரேகையை, அக்கருவியில் பதிக்க வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, இத்தொகை, வணிகரின் கணக்குக்கு சென்று விடும். 
நீங்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கை, ஆதார் எண்ணுடன் ஏற்கனவே இணைத்திருக்க வேண்டும்.
ரூபே அட்டைகளை பயன்படுத்தியும், நீங்கள், 'ஆன்லைன்' மூலமாக பொருட்களை வாங்கலாம். 'பே செக்யூர்' என்ற பாதுகாப்பு அமைப்பின் மூலமாக தான், இதை செய்ய முடியும்.
இவற்றில், சில வழிமுறைகளை படிக்கும் போது, லேசான குழப்பம் தோன்றுவது இயல்பு. ஆனால், ஓரிரு முறைகள், அவற்றை பின்பற்றி விட்டால், பின் இயல்பாகி விடும். ஏ.டி.எம்., கருவியை பயன்படுத்துவற்கு கூட, துவக்கத்தில், பலருக்கும் தயக்கம் இருக்கத்தானே செய்தது!
 பின், அது நமக்கு பழக்கமாகிவிட்டதைப் போல், கால ஓட்டத்தில், நம் வாழ்வை, எளிதாக்கிக் கொள்ள, மேற்படி வழிகளை, நாம் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஆனால் இந்த பண பரிமாற்றங்களுக்கு பொருட்களின் விலையைத் தவிர அதிகமாக சேவை வரி,சேவை கட்டணம் தண்டம் அழ வேண்டியுள்ளது.இதை மத்திய அரசு நீக்கி விட்டால்  மக்கள் இச் சேவையை அதிகமாக பயன் படுத்துவார்கள்.
                                                                                                                                                                                    - ஜி.எஸ். சுப்ரமணியன்
நன்றி:தினமலர்.
==========================================================================================