புதிய ஆயுதங்கள்
வெற்றிக்காக நரேந்திர மோடியை மட்டுமே நம்பியிருப்பதை ஹரியானா தேர்தலிலிருந்தே பாஜக நிறுத்திவிட்டது. பிரதமர் இப்போது நட்சத்திரப் பிரச்சாரகர்களில் ஒருவர் என்பதோடு சரி. பழைய பிரச்சார உத்திகள் போய் இப்போது நுண் அளவிலான செயல்திட்டங்கள் வந்துவிட்டன.

பாஜகவின் புதிய ஆயுதக் கிடங்கில் உள்ள முக்கியமான ஆயுதங்கள் இவைதான்: அமலாக்க இயக்குநரகத்தையும் மத்தியப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களின் நற்பெயரைக் கெடுத்தல், லெப்டினன்ட் கவர்னர் அல்லது ஆளுநரின் தலையீட்டின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை மூச்சுத் திணறச் செய்தல், ஒன்றிய நிதியை நிறுத்தி வைத்தல் அல்லது மறுத்தல், வாக்காளர் பட்டியல்களை மாற்றுதல், பொறுப்பற்ற இலவசத் திட்டங்களை அறிவித்தல் ஆகிய செயல்திட்டங்கள் அரங்கேறுகின்றன.
இவை அனைத்தும் மாபெரும் தேர்தல் நிதிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் ஹரியானாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஷ்டிரத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போது தில்லியில் மத்திய அரசில் மிகவும் சக்தி வாய்ந்த இரண்டாவது நபர் தனது வடக்குத் தொகுதி அலுவலகத்திலிருந்து இவற்றையெல்லாம் நேரடியாக மேற்பார்வையிட்டு அமல்படுத்தினார்.
லெப்டினன்ட் கவர்னர், காவல்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, நகராட்சி நிறுவனம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் என தில்லியில், மத்திய அரசின் ஒவ்வொரு பிரிவும் பாஜகவின் இந்தச் செயல்திட்டத்தில் பங்கேற்றது. மற்றவர்களும் உதிரியாகச் சில வேலைகளைக் கவனித்துக்கொண்டார்கள்.
2021-ம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் NCT சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, நியமன அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசுக்கு மாற்றியது. அடுத்து தில்லி மாநகராட்சி சட்டம் வந்தது.
ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முனைகளிலிருந்தும் முற்றுகையிடப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால், அவரது நம்பிக்கைக்குரிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட அதன் உயர்மட்டத் தலைவர்கள் அமலாக்க நிறுவனங்களால் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் புதிய முதல்வர் அதிஷி கைது செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது.
சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கெஜ்ரிவாலும் மற்றவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் நீண்ட காலமாகச் சிறையில் இருந்ததால் ஆம் ஆத்மி கட்சி, தலைமை இல்லாமல் இயங்க வேண்டியிருந்தது. அது அந்த அமைப்பையே சீர்குலைத்தது. ஆம் ஆத்மி தலைவர்கள் பாஜகவுக்குத் தாவுவதற்கான மிரட்டல்கள் விடப்பட்டதாகவும் ஆசைகாட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
வாக்குப்பதிவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, எட்டுத் தலைவர்கள் கட்சியில் ‘வளர்ந்து வரும்’ ஊழல், ‘கொள்கைகளிலிருந்து விலகல்’ ஆகியவற்றைக் காரணம் காட்டி, ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்கள். வாக்குப்பதிவு தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கெஜ்ரிவால் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
ஆம் ஆத்மி ஆதரவாளர்களும் குடிசைவாழ் மக்களும் வாக்களிப்பதைத் தடுக்கக் காவல்துறையினர் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார் அளிக்க முதல்வர் அதிஷியும் கெஜ்ரிவாலும் முந்தைய நாள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்தனர்.
அரசு மட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆம் ஆத்மி நிர்வாகத்தை முடக்கப் பாடுபட்டார். மே மாதம் தில்லியின் துணை நிலை ஆளுநராக இருந்த அனில் பைஜாலை 2022-ம் ஆண்டு நீக்கிவிட்டுத் தனக்கு நம்பகமான வி.கே. சக்சேனாவை அமித் ஷா நியமித்தார்.
இத்தனைக்கும் பைஜால் ஒன்றும் ஆம் ஆத்மிக்கு உதவிகரமானவர் அல்ல. அவர் கெஜ்ரிவாலுடன் தொடர்ந்து மோதிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், தனக்கு மிகவும் நெருக்கமானவர் அங்கே இருக்க வேண்டும் என்பதால் அமித் ஷா சக்சேனாவைத் தேர்ந்தெடுத்தார். அரசாங்கம் எடுத்த ஒவ்வொரு முடிவையும் சக்சேனா எதிர்த்தார்.
இதன் மூலம் நிர்வாகத்தை முடக்கினார். ஒவ்வொரு பிரச்சினையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகத் துணைநிலை ஆளுநர் செயல்படுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பாஜக செயலாற்றியது.

ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி உருவாக்கிய நாட்டின் முதல் ஹைபர் லூப் பரிசோதனை வழித்தடம் தயார் நிலையில் உள்ளது.
நீண்ட தூர பயணத்துக்கான அதிவேக ரயில் போக்குவரத்து ஹைபர்லூப் என அழைக்கப்படுகிறது. இதில் வெற்றிட இரும்புக் குழாய்கள் வழியாக, ரயில்கள் எலக்ட்ரோ மேக்னடிக் தொழில் நுட்பத்தில் காற்றின் உராய்வு இன்றி, மேக் 1 வேகத்தில், அதாவது மணிக்கு 761 மைல் வேகத்தில் செல்லும்.
குறைந்த எரிசக்தியில் விமானத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும். இந்த புதுமையான ரயில் போக்குவரத்துக்கான 422 மீட்டர் நீள பரிசோதனை வழித்தடத்தை ரயில்வே அமைச்சகம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சென்னை ஐஐடி, அதன் தையூர் டிஸ்கவரி வளாகத்தில் உருவாக்கியுள்ளது.
இந்த ஹைபர்லூப் ரயில் போக்குவரத்து அமலுக்கு வந்தால் 350 கி.மீ தூர பயணத்தை அதாவது டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு அரை மணி நேரத்தில் செல்லலாம்.
ஹைபர்லூப் போக்குவரத்துக்கான 422 மீட்டர் பரிசோதனை வழித்தடம் தயார். ஹைபர்லூப் திட்டத்தை மேம்படுத்த ஏற்கெனவே இரண்டு கட்ட மானியமாக தலா 1 மில்லியன் டாலர் (ரூ.8.71 கோடி) வழங்கப்பட்டது. தற்போது 3-வது கட்ட மானியம் சென்னை ஐஐடிக்கு வழங்கப்படவுள்ளது.
மொழியை அழிப்பதுதான்
சிறந்த வழி!
அரசியல் காரணங்களுக்காக நாம் எதிர்ப்பதாகச் சிலர் உளறிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குப் பதில் சொல்லும் வகையில் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கரே பேசி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு மொழியின் பெருமையையும் அருமையையும் சொல்லி எச்சரிக்கிறார் தங்கர்.
டெல்லியில் 98 ஆவது அகில பாரதிய மராத்தி சாகித்திய மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார் இந்திய நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் அவர்கள். மாநிலங்களவை அவைத் தலைவர் அவர். அவரைப் பற்றி அதிகம் அறிமுகம் செய்யத் தேவையில்லை. அந்த மாநாட்டில் ஜகதீப் தங்கர் ஆற்றிய உரையின் சில வரிகளை வாசிக்கவும்...
"ஒரு நாடு, அதன் கலாச்சார வளம் மற்றும் கலாச்சாரப் பண்பாடுகளால் வரையறுக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் நமது கலாச்சாரத்தையும் மொழிகளையும் வளர்த்தனர். அதே வழியில் வளர்ப்பது நமது கடமை. இலக்கியத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கைகோத்துச் செயல்படுவதன் மூலம் மட்டுமே இதைச் செழிக்கச் செய்ய வேண்டும் முடியும். ஒரு வட்டாரத்தை (பிராந்தியத்தை, மாநிலத்தை) வீழ்த்த வேண்டுமானால் அதைக் கைப்பற்ற வேண்டிய- தில்லை.அந்த வட்டாரத்தின் மொழியை அழிப்பதுதான் சிறந்த வழி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்த ஆக்கிரமிப்பாளர்கள் அதே வழியைத்தான் கடைப்பிடித்தனர். அவர்கள் கொடூரமானவர்களாகவும் நமது மொழி, கலாச்சாரம், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றை வெறுப்பவர்களாகவும் அடக்குமுறையாளர்களாகவும் இருந்தனர். பழிவாங்கும் தன்மையுடனும் கொடுங்கோன்மையுடனும் திகழ்ந்தனர். நமது மொழிகள் வளர முடியாத அளவுக்குத் தடுத்தனர்.
நமது மொழி தழைக்காவிட்டால் நமது வரலாறு தழைக்காது”-- என்று பேசி இருக்கிறார் இந்திய நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர்.
உண்மையில் நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். உண்மையைப் பேசியதற்காக! அதுவும், உரக்கப் பேசியதற்காக! அதுவும், இந்தக் காலக்கட்டத்தில் பேசியதற்காக!
தமிழினத்தை வீழ்த்தவே இந்தி திணிக்கப்படுகிறது, தமிழர் பண்பாட்டை அழிக்கவே இந்தி திணிக்கப்படுகிறது, தமிழை அழிக்கவே இந்த திணிக்கப்படுகிறது சொன்னால், அதனை அரசியல் என்று ஒதுக்கித் தள்ளுகிறார்கள் பா.ஜ.க. கைத்தடிகள்.
“ஒரு மாநிலத்தை வீழ்த்த வேண்டுமானால் அந்த மொழியை அழிப்பதுதான் சிறந்த வழி என்று சொல்லி, இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் அந்த வழியைத்தான் கடைப்பிடித்தார்கள் என்றும் சொல்லி தமிழ்ச் சமுதாயத்துக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ஜகதீப் தங்கர். இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாதீர்கள், இறுதி வரை போராடுங்கள் என்று 'மறைமுகமாக'த் தூண்டி இருக்கிறார் தங்கர்.
தமிழ் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் போன்ற மொழிப் படையெடுப்புகளில் சிக்கி வருகிறது. வடக்கே இருந்து வந்த ஆரியர்கள் தமிழ்நாட்டின் மீது நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பாக தங்களது வைதீக மதத்தை, வருணக் கோட்பாட்டை இங்கு திணித்தார்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தமிழர் பண்பாட்டைச் சிதைத்தார்கள். இறைப்பெயர்களை மாற்றினார்கள். இறைவழிபாட்டு முறையை மாற்றினார்கள்.
தமிழ் இருந்த இடத்தில் சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள். வேத மறைகளை, தமிழ் மறைகளாக மாற்றினார்கள். சமஸ்கிருதம்தான் தேவபாஷை, தமிழ் நீஷ பாஷை ஆனது. திருக்குறளும் சங்க இலக்கியங்களும் இருந்த இடத்தில் வேத இலக்கியங்களைக் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள். சங்க இலக்கிய ஓலைச் சுவடிகள் ஆண்டுதோறும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
பல்லவர் ஆட்சியில் வடமொழி ஆதிக்கமே மேலோங்கியது. மகேந்திரவர்மப் பல்லவ மன்னர், 'மத்தவிலாசப் பிரகசனம்' என்ற தலைப்பில் வடமொழியில் தான் நாடக நூலை எழுதினார். விஜயநகரப் பேரரசு காலத்தில் தெலுங்கு கோலோச்சியது. இசைத்துறையில்தெலுங்கு முழுமையாக நுழைந்த காலம் இது. இன்று வரை தமிழ்நாட்டு இசை மேடைகளை ஆட்சி செய்கிறது.
மராத்திய மன்னர்கள் ஆளுகையில் அந்த மொழியும் உள்ளே வந்து சில பகுதிகளில் பரவி- யது. மொகலாயர்கள், நவாப்புகள் ஆட்சியில் நிர்வாகத் துறையில் பாரசீக, அரபியச் சொற்கள் நுழைந்தன. ஜில்லா, தாலுக்கா, ஜாமீன், வாய்தா, வக்காலத்து ஆகியவை அப்போது நுழைந்தவைதான். அடுத்து வந்த பிரிட்டிஷ் ஆட்சி- யானது ஆங்கிலத்தை முழுமையாகக் கொண்டு வந்து புகுந்தது.
இவர்கள் யாருடைய ஆட்சியாக இருந்தாலும் 'சமஸ்கிருத' ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட ஆட்சியாக நடத்தினார்கள். 'உள்ளூர் விவகாரங்களில்தலையிடுவது இல்லை' என்ற கொள்கையானது சமஸ்கிருத - - வேத மரபுக்குவசதியாகப் போனது. மாற்று மொழியினர் - - மாற்று மதத்தவர் மாற்றுப் பண்பாட்டவர் படையெடுப்பானது தொடர்ந்து நடந்து வந்துள்ளது. அதனால்தான் தமிழ் புறக்கணிக்கப்பட்டது.
சிந்துச் சமவெளி நாகரிக காலத்தில் ( கி.மு.3000 - -1500) இந்தியா முழுவதும் பரவியிருந்தது தமிழ். கி.மு. 1580 ஆம் ஆண்டு இந்தோ - - ஆரிய மொழி பேசுவோர் இந்திய நாட்டுக்குள் நுழைந்த தமிழின் பரப்பானது தெற்குப் பகுதியில் மிகமிகச் சுருங்கியதை உணர வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/13/vQ302kTGVcLuY6xMtidH.jpg)
'சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்த இந்துஸ்தானியைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்றார் காந்தி. 'இந்தி கற்றுக் கொடுத்தால் 15 ஆண்டுகளில் இந்தியா, இந்திநாடாக மாறிவிடும்' என்று எடுத்துக் கொடுத்தார் சத்தியமூர்த்தி. 'இந்தியைக் கற்றுக்கொண்டால் சமஸ்கிருதம் படிப்பது எளிது' என்று சட்டமன்றத்தில் சொன்னார் அன்றைய முதலமைச்சர் இராஜாஜி. 'இந்த வேலைக்காரியாக இருக்கட்டும்' என்றார் இராஜாஜி.
அதனால்தான் பெரியார் இந்த மொழித் திணிப்பை எதிர்த்தார். 'இந்தியால் தமிழ் அழியாது, தமிழ்ப் பண்பாடு அழிந்து போகும்' என்றார் பெரியார்." வயிற்றுப் பிழைப்புக்காக தென்நாட்டில் புகுந்த ஆரியர்கள் மதத்தின் பேரால், கடவுள் பேரால் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி விட்டது போல இன்று வேலைக்காரியமாக வரும் ஹிந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம்”என்று தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் பெரியார்.