காமராசரை நினைப்போம்,,,,,,,,,,,.
இன்று காமராசர் பிறந்த நாள்,
1941 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு. இரண்டாம் உலகப் போரை முன்னிட்டு பொது மக்களிடம் வரி வசூலித்தது. வரி வசூலிப்பதை வன்மையாகக் கண்டித்ததால் காமராசர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் விடுதலை அடைந்தவுடன் தான் ஏற்றுக்கொண்ட பதவியில் நேர்மையாக முழுமையாக கடமையாற்ற முடியாத நிலையில் அந்தப் பதிவில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்று கூறி அந்தப் பதவியை துறந்தார்
காமராசர் 1903 ஆம் ஆண்டு சூலை திங்கள் 15 ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி சிவகாமி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் "காமாட்சி' நாளடைவில் காமாட்சி என்ற பெயர் "காமராசு' என்று ஆனது.
ஏழ்மையின் காரணமாக தனது பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார் இருப்பினும் அரசியலிலும், சுதந்திர போராட்டங் களிலும் ஆர்வம் காட்டி வந்தார். அவர் 16ஆம் வயதில் காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.
1924 ஆம் ஆண்டு கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அமைந்துள்ள வைக்கம் என்ற ஊரில் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் இந்து மதத்தைச் சார்ந்த ஈழவர் மற்றும் புலையர் என்ற அழைக்கப்படுகின்ற சாதியைச் சார்ந்தவர்கள் நடந்து போக அனுமதியில்லை. இதனை எதிர்த்து கேரளாவைச் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்து விடுமோ என பயந்து தந்தை பெரியரை அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். பெரியாரோடு காமராசரும் இளைஞராக அப்போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது வரலாறு.
1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரத்தில் கலந்து கொண்ட காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1936 ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியின் சென்னை மாகாண பிரதேச தலைவராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டப் போது காமராசர் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1946 ஆம் ஆண்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1952 வரை பதவி நீடித்தார்.
1953 ஆம் ஆண்டு முலமைச்சராக பதவி வகித்த ராசாசி குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்தியதால் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் பல தலைவர்கள் இக்குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடினர். காங்கிரஸ் கட்சியிலும் ராசாசிக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. ராஜாஜி தானே பதவி விலக முன் வந்ததோடு தனக்குப் பதில் சி. சுப்பிரமணியத்தை முன்மொழிந்தார். எம்.பக்கதவத்சலம் வழிமொழிந்தார். ஆனால் காங்கிரசுக் கட்சி சட்ட மன்றத் தலைவராக காமராசர் அவர்களே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சி.சுப்பிரமணியத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாத காமராசர் முதலமைச்சராக பொறுப் பேற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட எம்.பக்தவச லத்தையும் அமைச் சராக் கினார். அதோடு தி.மு.க ஆதரவில் போட்டியி"ட்டு வெற்றி பெற்ற இராமசாமி படையாட்சியையும், மாணிக்க வேலு நாயக் கரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை எதிரிகளாகவே கருதக் கூடாது. அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடைய தலைவர் ஒருவரைக் கூட நாம் இன்று காண முடியாது. தன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறாரா? அவர் என்னுடைய பரம விரோதி. அவரைத் தொலைத்துவிடாமல் வேறு என்ன வேலை எனக்கு என்று, வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு ஒரு கட்சியில் பல பிரிவுகள் வலம் வருவதை நாம் பார்க்கிறோம்.
தீண்டப்படாதவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லையா? தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பி. பரமேஸ்வரன் அவர்களை அறநிலையத்துறை அமைச்சராக நியமித்து அவர் கோயிலுக்கு வரும்போது கோயில் குருக்களால் கும்ப மரியாதை கொடுத்து அவரை உள்ளே அழைத்து செல்லும் நிலையை உருவாக்கியவர் காமராசர்.
தமிழகக் காவல்துறையில் சாதி உணர்வு உள்ளவர்களே அதிகம் என்பதை அறிந்ததோடு தாழ்த்தப்ட்டவர்கள் என்றால் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதிலை என்பதால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கக்கன் அவர்களை உள்துறை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தவர் காமராசர்.
44 ஆண்டுகளில் திராவிட இயக்க ஆட்சியில இதுவரை ஒரு தாழ்த்தப்பட்டவர்கள் கூட றநிலையத்துறை அமைச்சராகவோ உள்துறை அமைச்சராகவே நியாயக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடானது ஆகும்.
காமராசர் தனது ஆட்சியில் மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். கல்விப் பணிக்கு முன்னுரிமை தந்தார். ராசாசி ஆட்சியில் மூடப்பட்ட 6000 பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார் அதோடு புதியதாக 12,000 பள்ளிகளைத் தமிழகமெங்கும் தொடங்கினார். அவரது பகல் உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 7 விழுக்காட்டிலிருந்து 37 விழுக்காடாக உயர்ந்தது. கல்வி வள்ளல் என்றால் அவர் காமராசரே.
காமராசர் மூன்று முறை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1954–57, 1957–62, 1962–63) அரசுப் பதவியைவிட தேசப்பணியும், கட்சிப் பணியும் மிக முக்கியம். எனவே மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கூறினார். அவரும் அதனை ஏற்று அந்த திட்டத்திற்குக் காமராசர் திட்டம் என்று அறிவித்தார். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற காமராசர் அவர்களே தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி பக்தவச்சலத்திடம் ஆட்சியை ஒப்படைத்து கட்சிப் பணியாற்ற தில்லி சென்றார். நேரு காமராசரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார்.
இன்று 80 வயதைக் கடந்தாலும் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் ரதயாத்திரை என்ற பெயரில் சொகுசு வாகனங்களில் காவல்துறையின் பாதுகாப்போடு பவனிவருதை நாம் பார்க்க முடிகிறது.
காமராசர் முதலமைச்சராக இருந்த போது அவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டு காமராசரிடம் தெரிவித்தர். அதற்கு அவர் நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் இங்கு வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் எனக்கு கெட்டப்பெயர் தான் உருவாகும். என்ற கூறி தாயாரின் விருப்பதை ஏற்க மறுத்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு சிவகாமி அம்மையார் காமராசரிடம் மேலும் ஒரு கோரிக்கையை வைத்தார். "நீ முதலமைச்சராக ஆகிவிட்டதால் என்னைப் பார்ப்பதற்கு நம் வீட்டிற்கு பலர் வருகிறார்கள். அவர்களுக்கு கலர் சோடா போன்வற்றை வாங்கித் தர வேண்டிய உள்ளது. எனவே மாதந்தேறும் ரூ.150 ரூபாயை அனுப்பிவை என்றார். அதற்கு காமராசர் மாதம் ரூ.120 ரூபாயை அனுப்புகிறேன் அதைவிட ஒரு ரூபாய் கூட அதிமாக தரமுடியாது. கொடுக்கிறதையே சிக்கனமாகச் செலவு செய்துக்கொள் என்று இந்தக்கோரிகையையும் நிராகரித்தார்.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட காமராசர். தி.மு.க வேட்பாளர், மாணவன் சீனிவாசனிடம் தோற்றபோது அவரது கட்சிக்காரர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள் "இதுதான்யா ஜனநாயகம், ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப்போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்'' என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னார் காமராசர்.
காமராசர் தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர், தன்னலமில்லாத அரசியல்வாதி, பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற வாழ்ந்து காட்டியவர்.
தனக்கென ஒரு குடும்பம் வேண்டாம், சொத்தும் வேண்டாம், உறவு வேண்டாம் ஏன் பெற்றத் தாயின் அரவணைப்பும் வேண்டாம் எனப் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தவர் காமராசர்.
இவரைப்போல ஒரு அரசியல்வாதியை நாம் இன்று காணமுடியுமா? "காமராசர் ஆட்சி மீண்டும் வரவேண்டும்' என்று காங்கிரசுக் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்; எதற்கு? காமராசரைப் போல இறுதிவரை வாடகை வீட்டில் வாழ்ந்த மடிவதற்கா? இல்லை இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் மூலம் கோடிகளில் புரள்வதற்கா!
1975 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் மாலை காமராசர் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். அவர் இறந்த போது அவருடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா? பத்து கதர் சட்டை, வேட்டி, ரூ.100 இவ்வளவு தான் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழ்ந்து மறைந்த தன்னகரில்லாத தலைவர் காமராசர்.
[பாசறை முரசு ஜனவரி 2012 ] நன்றி:கீற்று தளம்,
8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
காமராசர் நினைவை அதிகமாக பகிர காரணம்.ஒரு தலைவர்,அரசியல்வாதி எப்படியிருக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்காகத்தான்.
வாடகை வீட்டில் ரூ 100 ரொக்கத்துடன் மறைந்த காமராசர் மூன்று முறை நம் தமிழ் நாட்டின் முதல்வராக இருந்திருக்கிறார்.
ஆனால் இன்று தியேட்டரில் திருட்டுத்தனமாக டிக்கெட் விற்று வாழ்வு நடத்தி வந்தவர்கள் எல்லாம், அரசியலுக்கு வந்து வெறும் கவுன்சிலராகி மூன்றாம் மாதமே டாடா சபாரியில் சொகுசு வாழ்வை வாழும் விந்தை காட்சிகளை காணுகிறோம்.
வெறும் கவுன்சுகளே இப்படி என்றால் அதற்கு மேலான பதவிகள் வகிக்கும் அரசியல்[ வியாதி]களை சொல்ல வேண்டுமா?
நம்மால் முடிந்த பெருமூச்சுகளை விட்டுக்கொள்வோம்.
99999999999999999999999999999999999999999999999999999999999999999