உள்ளமும் நலம்தானா?
இந்தியா முழுக்கவே நீதிமன்ற பணியில் உள்ள நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை நடுநிலையாக நின்று சோதித்து வழங்காமல் தங்கள் மனநிலைக்கேற்ப,சார்ப்புக்கேற்பத்தான் வழங்குகிறார்கள்.
சந்துரு போன்ற சிலர்தான் இதில் விதி விலக்கு .
இப்போது தமிழகத்தை சார்ந்த கர்ணன் செய்யும் நீதிபோர் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
சக நீதிபதிகளுக்கு மட்டுமல்ல சாதாரண நமக்கும் அவரின் மனநிலை மீது சந்தேகம் உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.
தடிமன்,தடிமனான சட்டப்புத்தகங்களை படித்தும்,ஓயாமல் வாத,பிரதிவாதங்களை கேட்டு,கேட்டும் மனம் வெறுத்துப்போயிருக்கலாம் .அதனாலேயே இந்த மனநிலை உண்டாகியிருக்கலாம்.
ஆனால் அவர் செய்யும் அபத்தங்களுக்கான எதிர் விளைவுகளை தடுக்க தனது தாழ்த்தப்பட்ட சாதியை கேடயமாக பயன் படுத்துவதை பார்த்தால் பின்னணி ஏதாகிலும் இருக்கலாமோ எனது தோன்றுகிறது.
இந்திய உயர் நீதிமன்றங்களில் கட்டப்பொம்மன் காலத்தில் போடப்பட்ட வழக்குகள் கூட தேங்கி லட்சக்கணக்கில் தூசி தட்டி வைக்கப்படுவதான நிலை இருக்கையில் தனக்கு வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி பணியை செம்மையாகப்பார்த்து தேக்கத்தை குறைப்பதை விட்டு விட்டு சக நீதிபதிகள் மீது புகார் மனுக்களை அனுப்பி அவை தவறான,உள்நோக்கத்துடன் தரப்பட்டவை என தள்ளுபடி செய்யப்பட்டவுடன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல்,தான் உயர் நீதிமன்ற நீதிபதி என்பதையும் மறந்து பரபரப்பு,அதிரடி என செய்திகளை வெளியிட்டதால் ,தனக்கும் மேல்நிலையில் உள்ள நீதிபதிகளுக்கே வழக்கு,தீர்ப்பு என்று தறிகெட்டு போனதால் கர்ணன் இன்று ஆறு மத சிறையை பரிசாகப்பெற்றுள்ளார்.
காரணம் அவர் உயர் நீதிமன்ற நீதிபதி அவர் மீது பிறர் தொடுக்க இயலாது.
நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் கர்ணனுக்கு அவரது நடவடிக்கைகளை ஆய்வு செய்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு தடை விதித்திருந்தது.
அதற்கான அறிக்கையை மே 8ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அது தொடர்பான வழக்கு மே 9ல் நடக்கும் என்றும் கூறியிருந்தது.
ஆனால், மனநல மருத்துவப் பரிசோதனைக்குஅவர் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், கோல்கட்டாவில் உள்ள தன் வீட்டில் இருந்து நீதிபதி கர்ணன் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் ல் கூறியது:
"சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் அமர்வில் உள்ள நீதிபதிகளும், என்னை பணி செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட அமர்வில் இருந்த நீதிபதி பானுமதியும், எஸ்.சி.. - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளனர்.
இந்த குற்றங்களுக்காக, இந்த எட்டு பேருக்கும், தலா, ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளின் கீழ்,ஒவ்வொருவருக்கும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஒரு வாரத்துக்குள், டில்லியில் உள்ள தேசிய எஸ்.சி., - எஸ்.டி., தேசிய கமிஷனில் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இந்த, 16 கோடி ரூபாயை, அவர்களின் சம்பளத்தில் இருந்து, சுப்ரீம் கோர்ட் பதிவாளர் பிடித்தம் செய்து, என் கணக்கில் சேர்க்க வேண்டும். "என அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.
ஏற்கனவே எடக்கு மடக்கான பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்த கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு கடிவாளம் போட எண்ணியிருந்த உச்ச நீதிமன்றம் இந்த கர்ணனின் அறிக்கை கோபத்தை உண்டாக்கியத்துடன்,கடிவாளம் போட்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்தது.
"நீதிபதி கர்ணனுக்கு, மே, 4ல் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது . டாக்டர்கள் குழு அவரது வீட்டுக்கு சென்ற போது நீதிபதி கர்ணன் மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உடன்பட மறுத்து விட்டார்.மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பைத்தியக்கார நீதிபதிகள் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து , மன நல பரிசோதனைக்கு ஒத்துழைக்காததுநீதிமன்ற அவமதிப்பதாகும் என அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இன்றுகாலை ( 9 ம் தேதி) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகளை வெளியிட்டு அவரை மேலும் உசுப்பேத்தி வந்த ஊடகங்கள் இனி அவர் தரும் பேட்டிகள் ,செய்திகளை வெளியிட தடையும் விதித்துள்ளது .
பணியில் உள்ள நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகும்.
நீதிபதி கர்ணன் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
=============================================================================================
இன்று,மே-09.
- குதிரை பயணிகள் வண்டி உலகில் முதலாவதாக பம்பாயில் அறிமுகப்படுத்தப்பட்டது(1874)
- ரோமானிய சுதந்திர தினம்(1877)
- காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)
- =============================================================================================
ஜெயலலிதா 25000 கோடிகள் எப்படி வந்தது.நடிச்சு சம்பாதித்ததா?அல்லது காவிரி தந்த கலைசெல்வி நாட்டியமாடி சம்பாதித்ததா?