மாணவர் போராட்டத்தால் மட்டுமே
“1970ல் கேரளாவில் இந்திய மாணவர் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு
நடை பெற இருந்தது. அந்த மாநாட் டிற்கு செல்ல மேற்கு வங்கத்திலி ருந்து
ரயில் மூலம் பிரதிநிதிகள் சென்னைக்கு வந்து, பிறகு கேரள செல்ல
திட்டமிட்டிருந்த னர்.
அச்சமயம் மேற்குவங்கத் தில் இருந்து வந்த ரயில் கால தாமதமானது. கேரளாவிற்குச் செல்ல வேண்டிய ரயில் எழும்பூ ரில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.
ரயில் நிலைய மேலா ளரிடம் 30நிமிடம் காலதாமத மாக ரயிலை இயக்குமாறு கோரினோம்.
அவர் மறுத்தார்.
இதனால் ரயில் மறியல் செய் தோம்.
எங்கள் மீது ரயில்வே போலீசார் தடியடி நடத்தினர்.
அந்த தடியடியில் கால் உடைந்து போனவர்தான் தற்போதைய திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக்சர்க்கார்.
இந்திய மாணவர் சங்கத் தின் முதல் 4 மாநாடுகளில் பிரதி நிதியாக கலந்து கொண்டேன்.
மாணவர் அமைப்பில் ஈடுபட்ட போது கிடைத்த சமூகப் புரிதல் தான் எனது எதிர்காலத்தை வழி நடத்த உதவியது.
1970களில் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தது. இத னால் மாணவர் சங்கம் சென் னை பல்கலைக் கழக பட்ட மளிப்பு விழாவின் போது, ‘படித் தோருக்கு வேலை இல்லை; பட் டமளிப்பு ஒரு கேடா?’ என்று போராட்டம் நடத்தினோம்.
இதனால் பட்டமளிப்பு விழா நிறுத்தி வைக்கப்பட்டது.
2 வரு டம் எஸ்எப்ஐ-யின் முழுநேர ஊழியராகவும், சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம் பகுதி களை உள்ளடக்கிய சென்னை-செங்கல்பட்டு மாவட்டத்தின் செயலாளராக 5 ஆண்டுகள் பணியாற்றினேன்.
இந்த காலக் கட்டத்தில், பல்கலைக் கழகங்க ளில் கற்காத பாடத்தை மக்களி டம் கற்றுக்கொண்டேன்.அன்றைய காலக்கட்டத்தில் வியட்நாமில் ஏகாதிபத்தியத்தின் கொடூரத் தாக்குதலை எதிர்த்து ‘உன் பெயரும் என் பெயரும் வியட்நாம்’ எனக்கூறி அமெ ரிக்க தூதரகம் முன்பு போராட் டம் நடத்தினோம். சில நேரங் களில் ஒரே நபராக சென்று கூட போராட்டம் நடத்தினோம். வியட்நாம் இன்றைக்கு இறை யாண்மை மிக்க நாடாக இருப் பதற்கு உலகம் முழுவதும் இருந்த ஜனநாயக சக்திகளின் குரல்கள் தான் காரணம். தமிழக மாணவர் கள் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை ஊட்டிய தில் இந்திய மாணவர் சங்கத் திற்கு பெரும் பங்கு உண்டு.
காங் கிரஸ் கட்சியின் மக்கள் விரோ தக் கருத்தை எதிர்த்த நேரத்தில், சிறந்த குடிமக்கள் உருவாக தெருக்களே உதவின.
அரிசி உற்பத்தியில் செங்கல் பட்டு மாவட்டம் முன்னணியில் இருந்தது.
ஒரே ஒரு பாலாறு ஓடு கிறது.
வருடத்தின் பாதி நாட்கள் வறண்டு கிடக்கும். அங்குள்ள ஏரிகளை பயன்படுத்தி அதிக ளவு அரிசி உற்பத்தி செய்து, தாம்பரம் சந்தைக்கு கொண்டு வந்து விற்றனர்.
வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்து விலை யை ஏற்றினர்.
இதனையறிந்த மாணவர்களாகிய நாங்கள் அரி சியை எடுத்து மக்களுக்கு விநி யோகித்தோம். வியாபாரிகளும், சமூக விரோதிகளும், காவல் துறையினரும் சேர்த்து தாக்கி னர்.
என்.ராம், வி.கே.ராமச்சந்தி ரன், ஜி.ராமகிருஷ்ணன் உள் ளிட்ட 11 பேர் மீது 23 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய் தது.
அந்த சம்பவம் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது.
இன்றைக்கு காஞ்சிபுரத்தில் அரிசி உற்பத்தியும் இல்லை. தாம்பரம் அரிசிச் சந்தையும் இல்லை. பாலாற்றில் சாயக் கழிவுகளும், சாராயக்கழிவுக ளும் கலந்துவிட்டன. மணல் கொள்ளையர்களின் வேட் டைக்காடாக மாறி விட்டது.
விளை நிலங்களை ரியல் எஸ் டேட்காரர்கள் சூறையாடிவிட் டனர். தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கரச் சாலை என்று நிலத்தை அபகரித்து விட்டனர்.
அந்த சாலை தங்க நாற்கரச் சாலை இல்லை; ஆக்டோபஸ் சாலை. தருமபுரி செல்வதற்குள் 8 டோல்கேட்டுகளில் 300 ரூபாய் கட்டணம் வசூலித்து கொள் ளையடிக்கின்றனர்.
இதுவா வளர்ச்சி?
அன்றைய காலத்தில் சென் னைக்கு அருகில் உள்ள பெருங் களத்தூரில் 3ஆயிரம் பேர் வேலை செய்த ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் மூடப்பட்டது.
கார்களை வாங்க ஆள் இல்லை என்று கூறி நிறுவனத்தை மூடி னர்.
அந்த தொழிலாளர்களோடு இணைந்து மாணவர்களும் போராடினோம். பல தொழிற் சங்கத் தலைவர்களை உறவினர் கள் என்று கூறி விடுதிகளில் தங்க வைத்து பாதுகாத்தோம்.
இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள டெட்ராய்டு நகரம் திவா லாகி விட்டது என்கிறார்கள்.
அமெரிக்க தொழி லாளி வேலை இழந்து இந் திய தொழிலாளிக்கு வேலை கிடைத்தால் அது வளர்ச்சி அல்ல.
உலகமயக் கொள்கை யால் அமெரிக்காவில் நிறு வனத்தை மூடிவிட்டு இந்தி யாவில் தொழில் தொடங்கு கிறார்கள்.
அதாவது இந்தி யாவை அமெரிக்காவின் புறவாசலாக மாற்றுகிறார் கள். குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வேலை செய்து லாபம் கொழிக்கிறார்கள். இது வளர்ச்சிஅல்ல.
வளர்ச்சி யாருக்கு என்று கேட்க வேண்டும்?
அணை கட்டு வது, அணுஉலைகள் அமைப் பது வளர்ச்சி அல்ல. பூர்வ குடிகள் தங்கள் வாழ்விடங் களில் இருந்து வெளியேற் றப்படுவது, வாழ்விடங் களை ரியல் எஸ்டேட்காரர் களும், காண்ட்ராக்டர் களும் கொள்ளையடிப்பது வளர்ச்சியாகுமா?
இந்திய மாணவர் சங்கம் முன்வைக்கும் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்பவை சாதாரண கோஷங்கள் அல்ல.
அதற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
1971ம் ஆண்டு வாக்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுப் பதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தடியடியில் உதயக்குமார் என்ற மாணவர் இறந்து விட்டார்.
அதனை கண் டித்து மிகப்பெரிய மாண வர் போராட்டம் நடை பெற்றது.
அதன் விளைவாக ராமசாமி கமிஷன் அமைக் கப்பட்டது. அப்போது எஸ்எப்ஐ சார்பில் ஒரு உண்மையறியும் குழு பல் கலைக் கழகம் சென்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
அதன் ஒரு நகல் தற்போதும் என்னிடம் உள்ளது. அதனை மாணவர் சங்கத்திடம் வழங்குகிறேன். மாணவர் சங்கத்தின் பொன் விழாவின் போது இது போன்ற பழைய பிரசுரங் களை கண்காட்சியாக வைக்க வேண்டும் .
அவசரநிலைப் பிரக டன காலத்தில் எஸ்எப்ஐ மிகப்பெரிய போராட்டம் நடத்தியது. இடதுசாரித் தலைவர்களை பாதுகாப் பது, துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது எனப் பணி யாற்றினோம்.
அந்த காலக் கட்டம்தான் வர்க்க அரசி யலை புரிந்து கொள்ளவும், படிப்பிற்கும், வாழ்க்கை எதார்த்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ளவும் உதவியது.
வாழ்க்கைக்கான வழியைக் காட்டியது. அந்த காலக் கட்டத்தில்தான் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி யை மத்தியஅரசு மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்றது.
அதுவே மாநில உரிமை பறிப்பின் ஆரம்ப மாக இருந்தது.1981 காலக்கட்டத்தில் புதிய கல்விக்கொள்கை அமலாக்கப்பட்டது. கல்வி கொடுப்பது அரசின் கட மை அல்ல என்று அறிவிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உன்னிகிருஷ்ணன், மோகினி-ஜெயின், டிஎம்ஏ பாய் வழக்கு என அனைத் தும் கல்வி வியாபாரத்திற்கு துணை நிற்பதாகவே இருந் தன. கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று காலம் காலமாக எஸ்எப்ஐ போராடி வந்த தன் விளைவாகவே 2002ல் அரசியல் அமைப்பு சட்டத் தில் 21 (ஏ) பிரிவு சேர்க்கப் பட்டது. அது 2010 முதல் அமலாக்கப்பட்டு வருகிறது. அதுவும் 6-14 வயது வரை உள்ளவர்களுக்கே இலவசக் கல்வி பெறுவது அடிப் படை உரிமை என்றுள் ளது. அதேநேரத்தில் அரசே எல்கேசி, யுகேஜி வகுப்பு களுக்கு ரூ. 10ஆயிரம் கல் விக்கட்டணம் நிர்ணயிப் பது கேவலமாக உள்ளது.
மாணவர் போராட்டத்தால் மட்டுமே முடியும்
தனியார் கல்வி நிறு வனங்களில் 25 விழுக்காடு நலிவுற்ற பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்றுள் ளது. அதனை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
அந்த வழக்கு என்னவாகும் என்று தெரி யாது.
இலவசக் கல்வி என் பது கானல் நீராகவே உள் ளது. கல்வியிலும் ஏழை, பணக்காரன் என்ற பாகு பாடு காட்டப்படுகிறது.
21(ஏ)ல் கல்வி அடிப்படை உரிமை என்று கூறிவிட்டு ஏழைக்கு ஒரு கல்வியும், பணக்காரர்களுக்கு ஒரு கல்வியும் அளிக்கப்படு கிறது.
இதனை மாற்றிட மாணவர் சங்கத்தால் மட்டும்தான் முடியும்."

-ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு,
" இந்திய மாணவர் சங்க "மாநாட்டில் பேசியது.