ஆதாரம் வேண்டும்
சஞ்சார் சாத்தி மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தும், 'தேசிய அலைவரிசை மிஷன் 2.0' திட்டத்திற்கான கையேட்டையும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் செல்போன் டவரில் இருந்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் எழும்பூரில் உள்ள தொலைத்தொடர்பு சிறப்பு தலைமை இயக்குநர் அலுவலகத்தில் சியாம் சுந்தர் சந்தக், எம்.சந்திரசேகர், ஸ்ரீகாந்த் வேதபள்ளி ஆகியோர் இது தொடர்பான நிகழ்வில் பங்கேற்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் துணை இயக்குநர் சந்திரசேகர், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நோக்கத்துடன் ‘சஞ்சார் சாதி’ செயலி (Sanchar Saathi Mobile App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர், "செல்போன்களுக்கு வரும் போலி அழைப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலியில் பதிவுசெய்வதன் வாயிலாக, அந்த செல்போன் எண் தொடர்பான அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த செல்போன் எண்ணைத் தடைசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
மேலும், அதேபோல் நமது பெயர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி வேறு யாராவது செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்தால், அதையும் இந்த செயலி மூலமாக கண்டறிந்து அவற்றை துண்டித்துவிடலாம். ஒரு ஆதார் எண்ணில் எத்தனை செல்போன் எண் வாங்கி இருந்தாலும், தற்பொழுது செயலில் உள்ள எண்ணை தவிர பிற எண்களின் செயல்பாட்டை துண்டித்து விட முடியும் என்று தெரிவித்தார்.
சொல்போன்கள் தொலையும் பட்சத்தில் அதன் ஐஎம்இஐ (IMEI) எண்ணை இந்த செயலியில் பதிவு செய்தால், அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதை யாரேனும் பயன்படுத்த முயன்றால் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து செல்போனை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முக்கியமாக இந்த செயலியின் உதவியுடன் புதிதாக செல்போன் வாங்கும்போது அது புதிய தயாரிப்பா? அல்லது திருடப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
அலுவலர்கள் பகிர்ந்த தகவலின்படி, சஞ்சார் சாதி இணையதளத்தில் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 1,44 லட்சம் மாெபைல் எண்கள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செல்போன் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 17,203 செல்போன்கள் திரும்பி அளிக்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 50 ஆயிரம் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளது.
தமிழ்நாட்டில் 223 கிராமங்கள் உள்பட நாடு முழுவதும் தொலைத்தொடர்பு இல்லாத 27 ஆயிரம் கிராமங்களிலும் டிஜிட்டல் பாரத் நிதி மூலம் பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 197 இடங்களில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 18 இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. எட்டு இடங்கள் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டியுள்ளது.
ஐஐடி இயக்குனருக்கு எதிர்ப்புமாட்டு பொங்கலையொட்டி சென்னையில் உள்ள கோசாலையில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் அழிக்கும் சக்தி மாட்டு கோமியத்தில் உள்ளது எனவே கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் அஜீரணக் கோளாறு சரியாகும் என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஐஐடி இயக்குனரின் சர்ச்சை கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் 15.01.25 அன்று மாட்டுப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சென்னை 8.8.14 இயக்குனரான திரு.காமகோடி, கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார். அறிவியல்படி கோமியம் (மாட்டின் சிறுநீர்) என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.
ஆதாரத்தை வெளியிட வேண்டு
இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது.
மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.