டா வின்சியின் சுய ஓவியம்


suran

டா வின்சி வரைந்த இயேசுவின் கடைசி விருந்து ஓவியமீட்கப்படவுள்ள டா வின்சியின் சுய ஓவியம்








1998ம் ஆண்டு முதல் டுரின் நகரில் இருக்கும் ராயல் லைப்ரேரியில் இருக்கும் வெப்பமும், ஈரப்பதமும் கொண்ட நிலவறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஓவியர் லியானார்டோ டா வின்சியின் ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் டா வின்சி தனது உருவத்தைத் தானே வரைந்த ஓவியம் என்று கருதப்படுகிறது. காகிதத்தில் சிகப்பு சுண்ணாம்பால் வரையப்பட்ட இந்த ஓவியம் தற்போது மங்கி வருகிறது. டா வின்சி தனது சுய உருவத்தை 1510 முதல் 1515க்குள் வரைந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளின் அழிவுக்கும் தேய்வுக்கும் ஆளான இந்த ஓவியம் வரையப்பட்ட காகிதம் பழுப்படைந்து விட்டது. இதைப் பதனப்படுத்த விரும்பும் நிபுணர்கள் ஓவியத்துக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடத் தொடங்கியுள்ளனர்.
பின்னர் அவருடைய அற்புதமான ஓவியத்தை மீட்பதற்கு தேவையான நுட்பத்தைத் தீர்மானிப்பார்கள் என்று என்பிசி நியூஸ் கூறுகிறது.போலந்து, இத்தாலி நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் காகிதங்களில் பழுப்பை ஏற்படுத்தும் குரோமோபோர்ஸின் அடர்த்தியை அழிவின்றி அடையாளம் காணும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். வெள்ளை காகிதத்தில் உள்ள முக்கிய வேதிப் பொருளான செல்லுலோஸில் உள்ள வெள்ளை வண்ணத்தை, பல நூற்றாண்டுகளாக ஒளி, வெப்பம், ஈரப்பதம், உலோக மற்றும் அமில அசுத்தங்கள், மாசுபடுத்தும் வாயுக்கள் சிதைத்து விடுகின்றன என்று போலந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஜோவன்னா லொஜூஸ்கா கூறுகிறார்.
இந்தப் படம் கடந்த ஆறு நூற்றாண்டுகளாக பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இது டா வின்சியின் ஓவியம் என்றும் அவர் 50 வயதாகும் போது வரைந்த படம் என்று சிலரும், இது அவருடைய சித்தப்பா அல்லது தந்தையின் படம் என்று சிலரும் கூறுகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் சில பத்தாண்டுகள் வரை இந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 1998ம் ஆண்டில் இது பூட்டி வைக்கப்பட்டது 2012ம் ஆண்டில் இந்த ஓவியத்தை சோதனையிடும் வாய்ப்பு ஆய்வாளர்களுக்கு கிடைத்தது. அதற்குப் பின் இந்த ஓவியத்தை மீட்டெடுக்கும் பணி தொடங்கியது.யார் இந்த டா வின்சி? ஓவியங்கள் மீது ஆர்வமில்லாதவர்கள் கூட மோனா லிசா பற்றித் தெரிந்திருப்பார்கள் . மோனா லிசாவின் முகத்தில் இருக்கும் மர்மப்புன்னகை எத்திசையில் இருந்து பார்த்தாலும் நம்மைப் பார்த்துச் சிரிப்பது போல் தோன்றும். இந்த ஓவியத்தை வரைந்தவர்தான் லியானார்டோ டா வின்சி என்ற இத்தாலிய ஓவியராவார்.
இவர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்தும் உலகின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். இவர் 1452 முதல் 1519 வரை வாழ்ந்தவராவார். இவர் ஒரு மறுமலர்ச்சிக்கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் என பன்முக ஆற்றல் கொண்டவராவார். இவர் உடற்கூறியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் ஏராளமான கண்டு பிடிப்புகளை செய்துள்ளார். இவரது காலத்தில் இவை வெளியிடப்படாததால் இவருடைய பெயர் அக்கண்டுபிடிப்புடன் இணைக்கப்படவில்லை. இவருடைய தந்தை செர்பியரோ டா வின்சி ஒரு நிலப்பிரபு ஆவார். தாய் கேதரீனா ஒரு விவசாயக் குடும்பப் பெண். இருவருக்கும் இருந்த தகாத உறவின் காரணமாக லியா னார்டோ டாவின்சி பிறந்தார் என்று கூறப்பட்டாலும் அதற்குரிய சான்றுகள் இல்லை. இவர் தன் தந்தையுடன் பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்தார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் சைவ உணவுப்பழக்கமுடையவராகவே வாழ்ந்தார். இவர் பின்னாட்களில் ஓவியங்களில் பெயர் குறிப்பிடும் போது டா வின்சி என்று குறிப் படுவதில்லை. முறை தவறிப் பிறந்த பிள்ளை என்பதால் இவர் தந்தையின் பெயரைப் பயன் படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவர் ரோம் நகரில் மூன்று ஆண்டுகள் வாழ்ந் தார். அதே காலகட்டத்தில் ரபாயேலொ சாண்டி மற்றும் மைக்கேல் ஏஞ்சலோ போன்ற புகழ்.பெற்ற ஓவியர்கள் அங்கு வாழ்ந்த போதும் இவர் அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை. 1516ல் இவர் பிரான்ஸ் அரசரிடம் பணியில் அமர்ந்தார். அரசரின் அரண்மனைக்கு அருகில் ஒரு வீடு இவருக்கு வழங்கப்பட்டது. அரசரின் நெருங்கிய நண்பரான இவருக்கு தாராளமான ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. 1519ல் பிரான்சில் உள்ள குளோக்ஸ் என்னுமிடத்தில் இவர் காலமானார். இவருடைய விருப்பத் தின்படி அறுபது பிச்சைக்காரர்கள் அவருடைய சவப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையில் புனிதர் ஹூ`யூபர்ட் சிற்றாலயத்தில் இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?