"ஜூன்" மாதம்- ஒரு பார்வை..

வழமை போல் இந்த மாதத்திற்கும் கிரேக்கத்திலிருந்து வந்த பெயர்தான் "ஜூன்'.
ஜூனியஸ் என்பது கிரேக்கர்களின் கடவுளர்களில் ஒருவர் பெயர்.அங்கு ஜூனியஸ் தான் இளமைக்கு கடவுள்.

முக்கிய தினங்கள்

5 உலகச் சுற்றுச்சூழல் தினம்
8 பெருங்கடல் தினம்
12 குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
14 ரத்த தானம் செய்வோர் தினம்
16 தந்தையர் தினம்
suran

17 பாலைவனம் மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்தும் தினம்
20 சர்வதேச அகதிகள் தினம்
21 உலக இசை தினம்
23 ஒலிம்பிக் தினம்
23 பொது சேவை தினம்
27 உலக நீரிழிவு தினம்

 முக்கிய நிகழ்வுகள்

2, 2003 ஐரோப்பிய நாடுகள் கூட்டாகத் தயாரித்த "மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற விண்கலம் 
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 
செலுத்தப்பட்டது.
suran
6, 1971 ரஷ்யாவின் சோயூஸ் 11 விண்கலம் பைகானூர் விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டது.
7, 1979 இந்தியாவில் ரஷ்ய உதவியுடன் இஸ்ரோவில் பாஸ்கரா ஐ விண்கலம் விண்ணில் 
ஏவப்பட்டது.
8, 1975 ரஷ்யாவின் வெனேரா 9 - வெள்ளி கிரகத்துக்கு அனுப்பப்பட்டது. 
.
10, 1940 இத்தாலி நாடு, இரண்டாம் உலகப் போரில் குதித்தது.
14, 2013 இந்தியாவில் 160 ஆண்டுகால தந்தி சேவை நிறுத்தப்பட்டது.
17, 1950 உலகில் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவில் நடந்தது.
17, 1911 தமிழ்நாட்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷ்துரையைச் 
சுட்டுக்கொன்று, தானும் சுட்டுக்கொண்டு இறந்தார்.
19, 1981 பிரெஞ்சு கயானாவிலிருந்து இந்தியாவின் ஆப்பிள் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக 
ஏவப்பட்டது.

பி றந்த தினங்கள்

3, 1924 மு.கருணாநிதி - முன்னாள் தமிழக முதல்வர்.
3, 1890 பாபுராவ் பெயிண்டர் - முதன்முதலாக 
மூவி கேமரா மூலம் படம் எடுத்தவர்.
5, 1896 காயிதே மில்லத் - 
7, 1811 சர்.ஜேம்ஸ் யங் சிம்சன் - குளோரபார்ம் (மயக்க மருந்து) கண்டவர்.
.
suran-karunanithi-june-03

10, 1931 எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் -  வயலின் வித்வான்.
.
12, 1895 ஏ.நேசமணி - குமரி மாவட்டம் 
தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர். 

16, 1923 டி.ஆர். மகாலிங்கம் - தமிழ்த் திரையுலக 
நடிகர், பாடகர்.
.
18, 1908 கக்கன் - முன்னாள் தமிழக அமைச்சர்.

19, 1947 சல்மான் ருஷ்டி - எழுத்தாளர்.

21, 1953 பேநசீர் பூட்டோ - பாகிஸ்தானின் முன்னாள் பெண் பிரதமர்.
24, 1927 கவிஞர் கண்ணதாசன்.
25, 1931 வி.பி.சிங் - முன்னாள் பிரதமர்.
26, 1906 ம.பொ. சிவஞானம் - முன்னாள் சபாநாயகர் - திருத்தணி தமிழகத்துடன் இணையக் 
காரணமான சுதந்திரப் போராட்ட வீரர்.
27, 1838 பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய - வங்கக் கவிஞர்.
27, 1880 ஹெலன் கெல்லர் - பிரெய்லி முறையைக் 
கண்டறிந்தவர்..
நினைவு நாள்கள்
suran

1, 1968 ஹெலன் கெல்லர்.
2, 1988 ராஜ் கபூர் - இந்தித் திரைப்பட நடிகர், 
தயாரிப்பாளர்.
3, 1657 வில்லியம் ஹார்வி - ரத்த ஓட்டம் பற்றிக் 
கண்டறிந்த இங்கிலாந்துக்காரர்.

17, 1911 வாஞ்சிநாதன் - ஆஷ்துரையை 
சுட்டுக்கொன்ற சுதந்திரப் போராட்ட வீரர்.
21, 1906 கனகசபைப் பிள்ளை - தமிழ் 
ஆராய்ச்சியாளர்.
26, 1827 சாமுவேல் கிராம்ப்டன் - நூல் நூற்கும் 
இயந்திரம் கண்டறிந்தவர்.
27, 2008 சாம் மானெக்ஷா - முன்னாள் ராணுவத் 
தளபதி.
28, 1972 தண்டபாணி தேசிகர் - கர்நாடக இசைப் 
பாடகர்.
30, 1975 விந்தன் (கோவிந்தன்) தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர்.

சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
4 டோங்கா, 10 போர்ச்சுக்கல், 12 பிலிப்பைன்ஸ், 
17 ஐஸ்லாந்து, 19 குவைத், 25 மொஸôம்பிக், 
26 மடகாஸ்கர், 29 சேஷெல்ஸ்.

=======================================================================
தனது 91-வது பிறந்த தினத்தைக் கொண்டாடவிருக்கும் திமுக தலைவர் மு. கருணாநிதி தனது கட்சித் தொண்டர்களுக்கு விடுத்துள்ள பிறந்த நாள் செய்தி..
suran
வழக்கமான செய்தியாக இல்லாமல் தனது,திமுக வரலாறை உணர்த்தி இனியாவது தேர்தலில் வெல்ல வெண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
 " என் இனிய உடன் பிறப்புகளுக்கு நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி! ’காலமும், அலையும் யாருக்காகவும் த்திருப்பதில்லை’ என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்! இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்துள்ள வற்றாத பாசத்தினால், இந்த 92 வயதிலும், இரண்டு முறை எனது வீட்டிற்கே வந்துவிட்டார்; நான் ஒப்புதல் அளித்த பிறகுதான் விட்டார். மேலும் என்னுடைய பிறந்த நாளை எப்படி யெல்லாம் கொண்டாட வேண்டுமென்று “முரசொலி”யில் நீண்ட விளக்க அறிக்கையும் வெளியிட்டுள்ளார். தமிழகத்திற்கும், மைசூருக்கும் இடையே காவேரி நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்ட அதே 1924ஆம் ஆண்டில் பிறந்து, 1938இல் கரங்களில் புலி, வில், கயல் பொறித்த தமிழ்க்கொடி ஏந்தி, “வாருங்கள் எல்லோரும் மொழிப் போருக்குச் சென்றிடுவோம்!” என்று பரணி பாடிக் கொண்டே பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான். நீண்ட, நெடிய என்னுடைய பொது வாழ்க்கையில் தமிழகத்தில் நான் செல்லாத ஊரில்லை; பார்க்காத தமிழ் மக்கள் இல்லை; பேசாத மேடையில்லை என்று சொல்லும் அளவுக்கு, கழகத்தை நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் கொண்டு செல்ல முதுகொடியப் பயணம் செய்திருக்கிறேன். தந்தை பெரியார் அவர்களால் செதுக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களால் செம்மைப் படுத்தப்பட்ட நான், அரசியல் வாழ்க்கையின் அத்தனை பரிமாணங்களையும் பார்த்து விட்டேன். கழகம் எனக்கு தாய் – தந்தைக்கு இணையானது. “முரசொலி” எனது மூத்த பிள்ளை! “நான் தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்” என்பது திரைப் படத்திற்காக என்னால் எழுதப்பட்ட வெறும் வசனம் அல்ல: அது தான் என் வாழ்க்கைச் சுருக்கம்! தமிழக அளவில் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் தேவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், பெரியவர் பக்தவத்சலம், பொதுவுடைமை வீரர் ஜீவா, பி. ராமமூர்த்தி, அருமை நண்பர் எம்.ஜி.ஆர்., மணலி கந்தசாமி என இன்னும் பலரோடு அரசியல் செய்திருக்கிறேன். அகில இந்திய அளவில், அண்ணல் ஜெயப்பிரகாஷ் நாராயண், திருமதி இந்திரா காந்தி அம்மையார், பாபு ஜெகஜீவன் ராம், காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா, மொரார்ஜி தேசாய், இளந்தலைவர் ராஜீவ் காந்தி, சமூக நீதிக் காவலர் வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், திருமதி சோனியா காந்தி, டாக்டர் மன்மோகன் சிங், என்.டி. ராமராவ், நம்பூதிரிபாத், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சுர்ஜித் பர்னாலா, ராம் விலாஸ் பஸ்வான் என இன்னும் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரோடு இணைந்தும், எதிர்த்தும் அரசியல் பணியாற்றியிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், “கல்லால் இதயம் வைத்து, கடும் விஷத்தால் கண் அமைத்து, கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கு அமைத்து, கள்ள உரு அமைத்து, கன்னக்கோல் கை அமைத்து, நல்லவர் என்றே சிலரை – உலகம் நடமாட விட்டதடா!”” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகளுக்கு உருவகமான சிலரை எதிர்த்தும், அரசியல் செய்திட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும், தமிழ் மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, அதை நான் தட்டிக் கழித்ததில்லை. 1957ஆம் ஆண்டு என்னுடைய 33வது வயதில், அறிஞர் அண்ணா அவர்களின் ஆணைப்படி, முதல் முறையாக குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2011ஆம் ஆண்டு 87வது வயதில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதுவரையில் சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு முறை கூடத் தோற்காமல், பன்னிரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இடையில் 1984 முதல் 1986 வரையில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது 1969 வரை இரண்டாண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், பின்னர் ஐந்து முறை மொத்தம் 19 ஆண்டுகள் முதலமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறேன். இவ்வாறு ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும், பன்னிரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய போதிலும், என்னுடைய எளிய வாழ்க்கை முறைகளை நான் எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை என்பதை தமிழகம் நன்கறியும். திரையுலகில் ஈடுபட்ட போது, குறைந்த விலைக்கு வாங்கி நான் தற்போது வசிக்கும் தெரு வீட்டைக் கூட, என் வாழ்நாளுக்குப் பிறகு ஏழை யெளியோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மருத்துவ மனையாக இயங்க எழுதிக் கொடுத்து விட்டேன். இதுவரை என் வாழ்க்கை நிகழ்வுகளை “நெஞ்சுக்கு நீதி” என்ற தொகுப்பாக ஆறு பாகங்கள் – சுமார் 4,600 பக்கங்கள் – எழுதி நுhலாக வெளியிட்டிருக்கிறேன். இதுதவிர சட்டமன்றத்தில் நான் ஆற்றிய உரைகள் 6000 பக்கங்கள் கொண்ட நூல்களாக வெளி வந்துள்ளன. மேலும் “ரோமாபுரிப் பாண்டியன்” , “கவிதை மழை”, “தென்பாண்டிச் சிங்கம்” , “முத்துக்குளியல்” இரண்டு பாகங்கள், “புதையல்”, “சங்கத் தமிழ்”, “பொன்னர்-சங்கர்”, “பாயும் புலி பண்டாரக வன்னியன்”, “குறளோவியம்”, “குறள் உரை”, “தொல்காப்பியப் பூங்கா” என நூற்றுக்கும் மேலான என்னுடைய நுhல்கள் வெளி வந்துள்ளன. சுமார் 75 திரைப் படங்களுக்கு கதை வசனம் தீட்டியிருக்கிறேன். மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் நான் எழுதியவை நுhல்களாக வெளி வந்துள்ளன. இவற்றையெல்லாம் நான் என்னுடைய பெருமையைப் பறை சாற்றிக் கொள்வதற்காகக் கூறவில்லை. என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமல், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பயன்படத் தக்க வகையில் என்னால் இயன்ற வரை உழைத்திருக்கிறேன் என்பதை விளக்குவதற்காகவே குறிப்பிட்டுள்ளேன். 1969ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் கழகத்தை நம்முடைய கரங்களிலே ஒப்படைத்து விட்டு மறைந்தார். கடந்த 45 ஆண்டுகளாக கழகத்தின் தலைமைப் பொறுப்பு என்னுடைய தோள்களிலே ஏற்றப்பட்டுள்ளது. இந்த 45 ஆண்டுகளில் நம்முடைய கழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள், துரோகங்கள், துhற்றல்கள், எள்ளல் ஏகடியங்கள், சச்சரவுகள் – ஆர்ப்பரித்து வந்த அத்தனையையும் சாதுர்யமாக அடக்கிச் சமாளித்துத் தான் கழகம் அமைதியாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. “கழகத்தை உடைத்து விட்டேன்” என்று கர்ச்சனை செய்தவர்கள், அண்ணா அறிவாலயத்தையும், அண்ணா தந்த இரு வண்ணக் கொடியையும் கைப்பற்றிச் சொந்தம் கொண்டாடத் துடித்தவர்கள், தீக்குண்டத்தில் கிடத்தப்பட்ட போது, அதன் மீது பெட்ரோலை ஊற்றத் துணிந்தவர்கள் என உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்ற எத்தனையோ அதிசய மனிதர்களின் சதிகளையும், தந்திரோபாயங்களையும் தவிடு பொடியாக்கி, இரட்டிப்பு எழுச்சியோடு ஏற்றம் பெற்று கழகம் வளர்ந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்களிடம் பெற்ற பயிற்சியைக் கருத்தில் தேக்கி, அறிஞர் அண்ணா அவர்கள் கற்றுத் தந்த வழிமுறை களிலிருந்து கிஞ்சிற்றும் பிறழாமல்; சுயமரியாதையும், பகுத்தறிவும் பெற்ற சாதிமதப் பேதமற்றதும், சோஷலிச அடிப்படையில் ஆனதுமான சமுதாயம் – சமத்துவம் - சமூக நீதி – தமிழ் மொழியின் முதன்மை – தமிழர் மேம்பாடு என; இவற்றுக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவன்; தோல்வியாயினும், வெற்றியாயினும் துவளாமல் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவன் நான். “அடித்தாலும், அணைத்தாலும் நான் உந்தன் பிள்ளை” என்பதற்கொப்ப, எந்த நிலையிலும் நான் நாட்டிற்காகவும், மொழிக்காகவும் ஆற்ற வேண்டிய பணியை தள்ளி வைத்ததும் இல்லை; தமிழ் மக்களிடமிருந்து என்றைக்கும் விலகி நின்றதும் இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் பெரும் தோல்வி கண்டுள்ளது. இது போன்ற தோல்விகளை கடந்த காலத்தில் கழகம் பெற்று, மீண்டெழுந்து வெற்றி முகட்டை எட்டிப் பிடித்திருக்கிறது. எனினும் இப்போதைய தோல்விக்குப் பலராலும் பல்வேறு காரணங்கள் விமர்சனமாக வைக்கப்படுகின்றன. கழகச் செயல்வீரர்கள் சிலர் அவர்கள் வழக்கமாக ஆற்றிட வேண்டிய தேர்தல் பணிகளைப் புறக்கணித்து முடங்கி விட்டனர்; அல்லது அவர்களது நடவடிக்கைகள் வாக்காளர்களின் வெறுப்பையும், வருத்தத்தையும் வரவழைத்துள்ளன; என்பதும் ஒரு காரணமாக முன் வைக்கப்படுகின்றது. அண்ணா அவர்கள் ஒரு முறை, “தம்பீ! உன்னை யாராலும் அழித்திட முடியாது; உன்னை நீயே அழித்துக் கொண்டால் தவிர!”” என்று சொன்னார்கள். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநூனூற்றுப் புலவர் கணியன் பூங்குன்ற னாரின் வாக்கு! அதாவது நன்மைகள் வந்தாலும், தீமைகள் வந்தாலும், அவற்றுக் கெல்லாம் காரணம் நாம் தானே தவிர, பிறர் அல்ல. எனவே அந்த அரிய கருத்துகளை யெல்லாம் எண்ணிப் பார்த்து இந்தத் தேர்தல் முடிவினை உடன் பிறப்புகள் தம்மை கூர் தீட்டிக் கொள்ளவும், செம்மைப்படுத்திக் கொள்ளவும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்; ஒவ்வொருவரும் சுய பரிசீலனை (Self-Introspection)செய்து நாம் எங்கிருக்கிறோம் – என்ன செய்கிறோம் – அதன் விளைவுகள் என்ன – நமது பயணமும், பாதையும், கட்சியின் இலட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் முழுவதுமாய் இயைந்த வகையில் இருந்திட எப்படிப்பட்ட சிந்தையும் செயலும் வேண்டுமென்று உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே நாம் அடுத்து பெறப் போகும் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். இதுவே என் இனிய உடன் பிறப்புகளுக்கு நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி! - -                                                                                                                                             -மு.கருணாநிதி,
                                                                                                                                            திமுக தலைவர் 
========================================================================


 ஜிமெயில் பயன்படுத்துபவரா? 

கணினியில் மின்னஞ்சல் பயன்படுத்தாதவர் வெகு சிலரே இருக்க முடியும். பல்வேறு வசதிகளைத் தரும் கூகுளின் வெப் மெயில் தளமான ஜிமெ யில், இப்போது புதியதாக இன்னொரு வசதியையும் தருகிறது. இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத் தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல் செய்திகளைப் பெற முடியும். ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும் எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது அஞ்சல் செய்தியின் சொற்கள் வழி தேடிப் பெற்று வந்தோம். 
suran

தற்போது, மெயில் உடன் இணைக்கப்பட்டுள்ள டாகுமெண்ட்கள் எந்த பார்மட்டில், (டாக், பி.டி.எப்.,) இருந்தாலும், அவற்றிலும் தேடலை நடத்தி நாம் விரும்புவதைப் பெறலாம். தேடல் கட்டத்தில் has:attachment என்றபடி அமைத்து, அதன் பின்னர், தேடலுக்கான சொல்லை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒபாமா (Obama) என்ற சொல் உள்ள இணைப்பு கோப்பினை அறிய, has:attachment Obama எனத் தர வேண்டும். நீங்கள் இந்த தேடலை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேட விரும்பினால், has:attachment filename:PDF Obama என அமைக்கப்பட வேண்டும். 
முன்பு அட்டாச்மெண்ட் பைல்களில் தேட வேண்டும் எனில், அவை டெக்ஸ்ட் அல்லது எச்.டி.எம்.எல். பைல்களாக இருக்க வேண்டும். Word, Excel, and Powerpoint போன்ற பார்மட் கொண்ட பைல்களில் தேட முடியாது. தற்போது இந்த வசதி தரப்பட்டுள்ளது. 
============================================================================================================




suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?