மோடி அரசில் அதிமுக?

மத்தி யில் ஆட்சியமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக இணைந்து கொள்ளலாம் என்று எக்னமிக் டைம் ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வரும் செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவு ள்ளார்.
suran

இதன் போது, இந்தக் கூட்டணிக்கான இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருடன் செவ்வாயன்று ஜெயலலிதா பேச்சு நடத்தவுள்ளார்.
பாஜக தலைமையிலான கூட்டணிக்கு இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபையில், பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், ராஜ்யசபையில் பெரும்பான்மை இல்லை.
எனவே, காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக உணர்கிறது.
அதன் மூலம் ராஜ்யசபையில் சட்டமூலங்களை நிறைவேற்ற முடியும் என்று பாஜக நம்புகிறது.
அதிமுகவுக்கு ராஜ்யசபையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர்.
இங்கு ஆதரவளிப்பதற்காக, ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு நிதி உதவிகளைக் கோரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதம் தொடர்பாக, இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜெயலிதாவுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கும் நரேந்திர மோடிக்கும் நீண்டகாலமாக நல்லுறவு இருந்த வந்த போதிலும், கடந்தவாரம் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அழைப்பு விடுத்ததால், அந்த உறவுகளில் சிறிய நெருடல் ஏற்பட்டிருந்தது.
சிறிலங்கா அதிபர் பங்கேற்ற பதவியேற்பு நிகழ்வை ஜெயலலிதா புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து ஆட்சியமைத்ததால், தமிழ்நாட்டின் செல்வாக்கு புதுடெல்லியில் இல்லாமற்போய் விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தது.
தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையக் கூடும் என்றுவெளியாகியுள்ள தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
அதேவேளை, நரேந்திர மோடி – ஜெயலலிதா சந்திப்பில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் அப்பாற்பட்ட விவகாரங்கள் குறித்தும் பேசப்படவுள்ளதாகவும் புதுடெல்லி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
suran-angry bird

1981 ஆம் ஆண்டு ஜூன்-1

======================================================
suran
யாழ் நூலகம் 
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் நாள் அதிகாலை தமிழர்கள் மனங்களில் நெருப்பெரிந்தது. ஆயிரமாயிரமாக முள்ளிவாய்க்காலில் மக்களை எரித்துச் சாம்ப்லாக்கிய அதே சிங்கள பௌத்த பேரினவாதக் கும்பல் நூல்களை எரித்து தம்மை அடையாளம் காட்டியது.
பிரிந்து செல்லும் உரிமைக்காகத் தமிழ்ப் பேசும் மக்கள் போராட வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது.
சிங்கள பௌத்த பேரினவாதிகளால் யாழ் பொது நூலகம் நூல்களோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாள் இன்று. ஜூன் முதலாம் திகதி நள்ளிரவு கடந்த வேளையில் இலங்கை யூ,என்.பி அரச அமைச்சர் காமினி திசானாயக்க தலைமையிலான காடையர் கும்பல் ஒன்று அரச படைகளின் துணையுடன் நூலகத்திற்குத் தீ மூட்டியது. தேசிய இன முரண்பாட்டைத் கூர்மைப்படுத்தி அதனூடாக சிங்கள பௌத்த இனவாதத்தைத் தூண்டி தேர்தலில் வாக்குப் பொறுக்கும் நோக்குடனேயே யாழ்ப்பாண நூலகம் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் 1981 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அதிகாலையில் தீக்கு இரையாக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பொது நூலகம் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு,
மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?