நேர்மையாக பணி

சோனியா மருமகன் வதேராவின் முறைகேடான நில பேரத்தை அம்பலப்படுத்திய அதிகாரிஅசோக் கெம்கா ஆறு மாத காலத்தில் நேற்று இரண்டாவது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஊழலுக்கு எதிராக போராடுவதையும், நியாயமான முறையில் செயல்படுவதையும் வழக்கமாக கொண்டவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா. 47வயதாகும்  இவர் தனது  21 ஆண்டு கால ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவி காலத்தில் இதுவரைதனது நேர்மையான நடவடிக்கைகளுக்காக  40 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.                                             
அடாவடி - ஊழல் ஆட்சியாளர்களின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாகும் அசோக் கெம்கா, ஆறு மாதங்களுக்கு முன்பு  டி.எல்.எப்., கட்டுமான நிறுவனத்திற்கும் காங்கிரஸ் தலைவர், சோனியாவின் மருமகன்  ராபர்ட் வதேராவுக்கும் இடையே நடந்த 400 கோடி ரூபாய் நில பேரத்தை அம்பலப்படுத்தினார்.
இதனால் இவர் அரியானா விதைகள் மேம்பாட்டு துறையின் அதிகாரியாக தூக்கியடிக்கப் பட்டார்.
இப்போது அந்த பணியிடத்தில் இருந்தும் மாற்றப்பட்டு, பழமை பதிவேடுகள் பாதுகாப்பு துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் நேற்றைய பணியிட மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அரியானாவில், காங்கிரஸ் கட்சிஆட்சிதான் நடக்கிறது.அந்த கட்சி யை சேர்ந்தபூபிந்தர் சிங் ஹூடாதான் முதல்வர்.இவர் சோனியாவின் தீவிர ஆதரவாளர்.மற்றும் நெருக்கமானவர்.
இந்தியாவில் நேர்மையாக மக்கள் நலனை மட்டும் கருதி பணிபுரிவது,அதுவும் லட்சம் கோடிகள் என்ற கணக்கில் ஊழல் செய்யும் காங்கிரசின் நிர்வாகத்தில் வளைந்து கொடுக்காமல் இருப்பது  எவ்வளவு துன்பமானது ஆகி விட்டது.இது போன்ற நிலையில் இருக்கும் அதிகாரிகள் இனியும் நேர்மையாக பணிபுரிய எண்ணுவார்களா?அப்படி பணியாற்றும் அதிகாரிகளுக்கு பெயர் என்னவாயிருக்கும்?அதை  நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran


இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் தோழர் சுதிப்தா குப்தாவின் இரங்கல் பேரணி புதனன்று கொல்கத்தா மாநகரை உலுக்கியது.
 பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் அன்புத்தோழனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். செவ்வாய்க்கிழமையன்று கொல் கத்தாவில் காவல்துறையினரால் காட்டு மிராண்டித்தனமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சுதிப்தா குப்தாவின் உடல் மருத்துவமனையில் உடல் கூராய் வுக்குப் பின்னர், அவரது இல்லத்திற்கும், கொல்கத்தா, நேதாஜி நகரில் உள்ள அவரது கல்லூரிக்கும் எடுத்துச் செல்லப் பட்டது.
பின்னர் அவரது உடல் ஏஜேசி போஸ் சாலையில் உள்ள இந்திய மாணவர் சங்கத்தின் மேற்குவங்க மாநிலக்குழு அலுவலகத்திற்கும் எடுத்துச் செல்லப்பட் டது. அங்கே சுதிப்தா குப்தாவுடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளை ஞர்கள் அவரது உடலைப் பார்ப்பதற்காக மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருந் தனர்.
 அவரது உடல் அங்கே வைக்கப் பட்ட பின்னர் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பிமன்பாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, சூர்யகாந்த மிஸ்ரா, அசோக் கோஷ் உட்பட ஏராளமானோர், அந்த இளம் தோழனுக்கு இறுதி அஞ்சலி செலுத் தினர். மாணவர் சங்க போராளிகள், சங்கத்தின் பொதுச் செயலாளர் ரித்த பிரதா பானர்ஜி, மாநிலத் தலைவர் மதுஜா தலைமையில் சுதிப்தா குப்தாவிற்கு வீர வணக்கம் செய்து முழக்கமிட்டனர்.
மாநில அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதி ரான போராட்டம் தொடரும் என்றும் கூறி னர்.
பின்னர் லட்சக் கணக்கானோர் கலந்து கொண்ட  பேரணி எரியூட்டும் இடம் வரை சென்றது. மேற்குவங்கத்தில் மம்தா தலைமை யிலான" திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னர், இடதுசாரி இயக்கம் இழந் துள்ள 93வது தியாகி இளம் மாணவர் தலைவர் சுதீப்தா குப்தா" என்று மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது..
கொல்கத்தாவில் முழு அடைப்பு ;
 சுதிப்தா குப்தா படுகொலையை கண்டித்து மேற்குவங்கம் முழுவதும் மாணவர்கள் வியாழனன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலை நகர் கொல்கத்தாவில் ஆயிரக்கணக் கான மாணவர்கள் சாலை மறியலும், அரசு அலுவலகங்கள் முன்பும் மறிய லிலும் ஈடுபட்டனர்.சுதிப்தா குப்தா பயின்ற பள்ளி மற் றும் கல்லூரிகள் அமைந்துள்ள காரியா மற்றும் டோலிகஞ்ச் பகுதிகளில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப் பின்பேரில் 12 மணி நேர முழு அடைப்பு நடைபெற்றது. இதனிடையே, சுதிப்தாவின் மர ணம் குறித்து முழு விசாரணை நடத்தப் படும் என்றும், சம்பவம் நடந்த இடத் தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்றும் கொல் கத்தா மாநகர காவல்துறை இணை ஆணை யர் ஜாவேத் ஷமீம் தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?