"கூடா நட்பு "


கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் பணியில்  "கொழும்பு டாக் யார்ட் "நிறுவனம் இயங்கி வருகிறது.

இதில்  பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே இதுவரை பணியாற்றி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 2000பேர்கள் .

இவர்களை அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இலங்கையர்களை வைத்து பணியைத் தொடர பக்சே அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
இதற்காக இலங்கையர்களுக்கு கப்பல் தொழில் பயிற்சி சீன அரசு மூலம் கொடுக்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் தமிழ்நாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்புத் துறைமுக சுமை  இறக்கும்தொழிலாளர்  சங்கத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இப்போது  இந்திய தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இங்குள்ள காங்கிரசு சோனியா அரசு இலங்கை நட்பு நாடு,அண்மை நாடு என்று பக்சே ஆதரவுடன் செயல்படுகிறது.ஆனால் இலங்கை நிலவரமோ இந்திய எதிர்ப்பு நிலையில் உள்ளது.பாகிஸ்தான்,சீனா,ரஷ்யா என்று பக்சே கைக்குழுக்கிக் கொண்டிருக்கிறார்.
suran
 தற்போது கொழும்புத்துறைமுக விரிவாக்கப்பணிகளை சீனா வசம் ஒப்படைத்துள்ள து.
மன்மோகன் சிங் முகத்தில் ஏற்கனவே உள்ள நிலக்கரி கறையுடன் இலங்கையும் தன பங்குக்கு கரியை பூசியுள்ளது.

இனியாவது தமிழர்கள்தான் இந்தியர்கள் சகோதரர்கள்,சிங்களர்கள் தங்களை வட இந்திய பிறப்புகள் என்று சொல்லிக்கொண்டாலும் எதிர் நிலையில்தான் உள்ளார்கள் என்பதை சோனியா கும்பல் அறிந்து கொள்ளுமா?
மனித தன்மையே இல்லாத புத்த பிக்குகள் நிறைந்த நாட்டில் நட்பு என்பதும் அதன் பேரில் ,இதுவரை தமிழர்கள் கொன்று குவித்திட சோனியா உதவியதும்  ஐ.நாவில் ஒரு காசு பெறா தீர்மானத்தில் ஆதரவாக  வாக்களித்ததற்கு இலங்கை கடுப்படிக்கிறது.
இந்தியாவின் நட்பு நாடு ,அண்டை நாடு இலங்கை என்று காங்கிரசு கட்சி பிரதமர் அடிக்கடி சொல்லுகிறார்.
ஆனால் இலங்கை ராஜா பக்சே அரசு சீனாவின் நட்பு நாடு என்றுதான் வளர்கிறது.
இந்திய மாக்கடலின் வடக்கே அமைந்துள்ள   இலங்கை முக்கியத்துவம் மிக்க, சுறுசுறுப்பான கப்பல் போக்குவரத்து வழிகளை  கொண்டு அமைந்துளது.
இது இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளினதும் வர்த்தகத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் இடத்தில் உள்ளது.
 மத்திய கிழக்கிலிருந்து சீனாவால் இறக்குமதி செய்யப்படும் 80 சதவீதம்  இலங்கை வழிகளில்தான்  50 கடல்மைல் தூரத்திற்குள் கப்பல்களில் செல்லப்படுகின்றன.

இவ்வாறு சீனாவால் மேற்கொள்ளப்படும் வர்த்தக இறக்குமதி- ஏற்றுமதிகள்  இலங்கை தென் கரையோரத்தின்  வழிகளில்தான்  நடைபெறுகிறது.
 தற்போது சீனா, இலங்கையின்  மிகப் பெரிய வர்த்தக தளம் என்ற நிலையில் உள்ளது.இந்தியா அல்ல.
 2007ல் சீனா இலங்கைக்கு17.7 சதவீத நிதியுதவி, கடன்  வழங்கியது. இந்த உதவி  2009ல்  44.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி இலங்கையின் அடிப்படை கட்டுமான  திட்டங்கள், பராமரிப்பு மற்றும் ஏனைய திட்டங்களுக்காக 3 பில்லியன் டாலர்களை  சீனா வழங்க அனுமதித்துள்ளது .
இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதற்காக தற்போது இந்தியா பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் Airborne எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு முறை, இந்தியாவின் வடபிராந்தியத்தில் 3500கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய அக்னி – 03 ஏவுகணைகள் போன்றவை சீனா இப்பகுதியில் இலங்கை மூல ம்  அதிகரித்துவரும் செல்வாக்கை தடுப்பதற்காக இந்தியாவால் எடுக்கப்பட்டுள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் . இலங்கை வட பகுதியில் வங்காள விரிகுடாவில் விமானத் தளம் ஒன்றை அமைப்பதற்கு  இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சீனா ‘முத்துமாலை’ என்கின்ற திட்டம்  மூலம் இந்திய மாக்கடலில் தன்னைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதன் ஒருகட்டமாக பாகிஸ்தானின் குவாடரிலும், வங்க தேசம்  சிட்டகா ங்கிலும், இலங்கையின்  அம்பாந்தோட்டையிலும் புதிய துறைமுகங்களை அமைக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் தெற்கு பகுதியில்  சீனா பலமாக தனது கால்களை ஊன்றி நின்று இந்தியாவுக்கு வடபகுதி அருணாசல பிரதேசத்தில் கொடுக்கும் குடைச்சலை  தென் பகுதியில் தரவே இலங்கையில்  சீனா தற்போது மேற்கொள்ளும் செயற்பாடுகள் காட்டுகின்றன. இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா அ மைக்கும்  மூன்று சரக்கு ஏற்றியிறக்குமிடங்கள் ஒவ்வொன்றும் கால் மைல் நீளமானவை. இங்கு சீன கப்பல்களுக்கு  எரிபொருள் நிரப்பு நிலையம் போன்ற பல்வேறு வசதிகளை சீனா மும்முறமாக செய்துவருகிறது.
இலங்கை  தொடர்பான இந்தியாவின் கொள்கை  தமிழ்நாட்டு அரசியல் அழுத்தங்களால் க ட்டுப்படுத்தப்படுகிறது. இந்த தமிழ் நாட்டு அழுத்தத்தால் இலங்கை  தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு கட்டாயம் ஆதரவளிக்க வேண்டிய கட்டாயம்.
 அத்துடன் இலங்கை - சீனா - பாகிஸ்தான்  மூன்றூ நாடுகளின் கூட்டை எதிர்கொள்ளவும் இந்தியா இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஆதரவளிக்க வேண்டிய கட்டாய நிலை   உ ள்ளது.
இதைத்தான் முன்பு இலங்கைத்தமிழர்கள் விடயத்தில் இந்திராகாந்தி கடைப்பிடித்தார்.விடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் மூலமே இலங்கையை மட்டம்தட்டி வைத்திருந்தார்.ஆனால் சோனியா-மன்மோகன் சிங் அரசு குறுகிய தனிப்பட்ட காரணங்களால் இலங்கை அரசின் வலையில் விழுந்து புலிகளையும்,ஈழ மக்களையும் அழிக்க இலங்கைக்கு உதவி இப்போது தவிக்கும் நிலையில் உள்ளது.வரம் கொடுத்தவன் தலையிலேயே கரம் வைக்கும் நிலைக்கு பக்சே பொய் விட்டார்.
சீனா-இலங்கை  உறவை இந்தியா கட்டுப்படுத்த வேண்டுமாயின் முதலில் தமிழ்நாட்டு மக்களின் இலங்கை பக்சே  அரசுக்கு  எதிரான போராட்டங்களை  கவனத்தில் கொள்ளவேண்டும்.

இலங்கையில் இந்தியாவில் உள்ளது போல் மொழி இன வாரி மாநிலங்கள் அமைய வாக்கெடுப்பு நடத்த உலக நாடுகள் மூலம் கட்டாயப்படுத்த வேண்டும் .இலங்கையில் கிழக்கிலும்,வடக்கிலும் தமிழ் வழி மாநிலங்கள் அமைவதன் மூலம்   இலங்கை அரசின் கொள்கை முடிவுகளை கட்டுப்படுத்தலாம்.
இது மட்டுமல்லாது இந்திய மாக்கடல்  அதிகாரத்தை தற்போது போல்  இந்தியா தக்கவைத்துள்ளவும் முடியும்.

இவை எல்லாவற்றுக்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியற் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கம் கவனத்திற் கொண்டு செயற்படவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் முக்கியத்துவப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் சீனப் போர்க்கப்பல்கள் தென்  இலங்கை பகுதியிலும்   தளம் அமைப்பதையும்  அல்லது இலங்கை  கடல் பகுதியில் தங்கு தடையின்றி நடமாடுது தவிர்க்க முடியாததாகும். 
இதற்கு சேது சமுத்திர திட்டத்தை உடனே நடமுறைக்கு கொண்டுவருவது இலங்கையின் கடல் வழி போக்குவரத்தின் முக்கியத்து வத்தை குறைக்கும்.அதன் மூலம்  இந்தியாவுக்கான  அச்சுறு த்தல்களும்   குறையு ம்.

புலிகளின் பதுங்குமிடங்களில் ஒன்று .இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

கண் மூடி இவர்கள் யாருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்?
இது இறுதி அஞ்சலி கூட்டமல்ல.தமிழ் நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழர் பிரச்னைக்காக நடிகர்-நடிகைகள் உண்ணாநிலை போராட்டம் செய்தார்கள் அல்லவா?
அதற்கு போட்டியாக இலங்கையில் பக்சேயின் ஏற்பாட்டில் அல்லது வற்புறுத்தலில் நடந்த இலங்கை நடிகர்-நடிகைகள் போராட்டம்தான்.இதில் திரைப்பட நடிகர்களை விட அரசு தொலைக்காட்சி கலைஞர்கள் தான் அதிகமாக கலந்து கொண்டார்களாம்.
ஆனால் இவர்கள் அமர்ந்து ஆழ்நிலையில் இருப்பதை பார்த்தால் குவியல்,குவியலாக உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துவது போல்தான் இருக்கிறது.இவர்கள் போராட்டம் யாரை எதிர்த்து-யாருக்காக-எதற்காக ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?