தமிழுக்கு மரியாதை!


தேனி. மு. சுப்பிரமணி 
நாம் பெருமைபடவேண்டிய விசையமா ? இல்லை வெட்கபடவேண்டிய விசையமா ?

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. 
அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. 

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது..!!!!!
நாம் பெருமைபடவேண்டிய விட யமா ?

இல்லை வெட்கபடவேண்டிய விட யமா ?

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே.
 (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) 
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . 
எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது..!


[முக நூலில் இருந்து மீள்பதிவு.]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ரச வாதம்  ரகசியம்" -இனி இல்லை,
-----------------------------------------------------------------------------
                                                             - நெல்லை சு. முத்து
முற்காலத்தில் "வேதியியல்'' என்றால் "ரசவாத முயற்சிகள்' மட்டுமே. செம்பைப் பொன்னாக்கும் ஆர்வம்தான் பலருக்கும் உயிர்த்து எழுந்தது. அந்நாளில் "" இரசவாதம்'' என்பது கார உலோகங்களைத் தங்கமாக உருமாற்றும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. "" உகந்த வானவியல் சூழ்நிலைகள் நிலவுமானால், காரீயத்தீனை பொன்னாக மாற்ற முடியும்'' என்று பண்டைய இரசாவதியர் நம்பினர்.
வெம்மையூட்டுவதலாலும், பல்வேறு வேதியியல் முறைகளில் சுத்தீகரிப்பதாலும் இந்த உருமாற்றத்தைத் துரிதப்படுத்த முடியும் என்று கருதினர். ஆயினும் இந்த ரசவாத முயற்சிகள்யாவுமே மிகுந்த ரகசியமாப் பாதுகாக்கப்பட்டன.

பண்டைய நாளில் சீனா, இந்தியா தொடங்கி, கிரீஸ் வரை பெரும்பாலான நாடுகளில் இந்த முறை வழக்கி“ல இருந்தது. ஹெல்லியக் காலகட்டத்தில் இரசவாத ஆர்வம். எகிப்திற்கும் பரவிற்று. பின்னர் அரபி மொழிப்பெயர்ப்புகள் பலவும் இலத்தீன் மொழிமாற்றம் பெற்றதால் 12ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலும் புத்துயிர் பெற்றது.

மத்தியக் கால ஐரோப்பிய இரசவாதியர் பலரும் கனிமஅமிலங்கள், ஆல்கஹால் போன்ற நிகழ்த்தினர். இந்த ஆய்வு எழுச்சி பாராசெல்சஸ் என்பவரின் முயற்சியினால் மருந்தியல் என்னும் துறை உருவானது. இதுவே நவீன வேதியல் துறை மல வழிவகுத்தது. இவ்வாறாக, 19ஆம் நுற்றாண்டு வரை ரசவாதியின் இத்தகைய தங்கம் உருவாக்கும் நம்பிக்கை மறையவில்லை.
சாதாரண உப்புகள், கனிமங்கள், தாதுக்கள் யாவும் உயிரற்று பொருள்களில் இருந்து எளிதில் பெறப்படுவை. ஆனால் ""சர்க்கரைச் சத்து, மாவுப்பொருள், கொழுப்புகள், எண்ணெய்கள், புரதங்கள், மூலிகைச் சத்துக்கள் போன்ற சிக்கலான பொருள்கள் ஒருவித உயிர் விசை உடையவை என்று வேதியிலார் கருதினார். 1807ஆம் ஜான்ஸ் ஜேக்கப் பெர்சீலியஸ் எனும் சுவீடன் வேதியியலார் தாவரம், விலங்கு போன்ற உயிரிகளில் காணப்படும் பொருளுக்கு "ஆர்கானிக் என்று பெயரிட்டார்.

இத்தகையக் கரிமப் பொருள் சோதனையில் ஈடுபாடு மிக்கவர் ஃப்ட்ரீச் வோஹ்லர் (1800-1882) என்னும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர். வெறும் 28 வயது மாணவர். வினோதமாக. ஒருமுறை தனது சிறுநீருடன் நாயின் சிறுநீரும் கலந்து ஆராய்ந்து வந்தார். அதில் யூரியா கிடைத்ததில் ஆச்சரியமில்ø. ரத்தம், சிறுநீர் ஆகிய உயிரிப் பொருள்களில் யூரியா அடங்கி உள்ளதென இன்று அறிந்ததே. சிறுநீரில் லிட்டருக்கு ஏறத்தாõழ இரண்டரை கிராம் வரையிலும், அதில் ஐந்திலொரு பங்கு அளவு ரத்தத்திலும் யூரியா காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்குள் வளர்சிதை மாற்றங்களால் விளையும் உப்பு இது.

ஆனால் நடந்தது. வேறு கதை, 1828ஆம் ஆண்டு அம்மோனியம் சயனேட்டு எனும் உப்பு தயாரிக்க முனைந்தவர் அம்மோனியம் சயனேட்டும், பொட்டாசியம் சயனேட்டு ஆகிய உப்புகளைச் சேர்த்துச் சுட வைத்தார்.இரட்டைச் சிதைவு முறையில் பாத்திரத்தில் அம்மோனியம் சல்பேட்டு எஞ்சி இருக்க வேண்டும். ஆனால் கரைசல் வற்றி எஞ்சியது பொதுக் கழிவறைகளில் அடிக்குமே அதே நெடி வீம் உப்பு சிறுநீரில் கிடைத்த உப்பு அல்லவா? அம்மோனியம் சயனேட்டு மாதிரியே ஒரே அளவு கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன் அணுக்கள் அடங்கிய புதியதோர் கூட்டுப்பொருளா? பெர்சீலியஸிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை "சமகூறுகள் எனும் பொருள்பட ஐசோமர் என்று அதற்குப் பெயரிட்டார். புதிய கலைச்சொல் அறிமுகம் ஆனது.
கனிமப் பொருள்களில் இருந்து ஒரு கரிமப் பொருள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது இவ்வாறுதான். பதினேழாம் நூற்றாண்டில் ஹென்னிங் பிராண்டு என்னும் ஜெர்மானிய வணிகர் சிறுநீரையே வாலையில் இட்டுக் காயச்சினார் செம்பை பொன்னாக்கும் முயற்சியாம் இன்றைய ராசிக் கல் மாதிரி அன்றைக்கு விஞ்ஞானக் கல் ஒன்றே பணம் ஈட்ட உகந்த வழியாகக் கருதப்பட்டது. அதற்கான விஞ்ஞானக்கல் ஒன்றை கண்டுபிடிக்கிற முனைப்பு, அந்நாளில் ஃபிலாசஃபர் என்றால் விஞ்ஞானி என்று பொருள், அதனால்தான் ஆய்வாளர்களுக்கு இன்றும் "மாஸ்டர் ஆஃப்பி என்றே பட்டம் வழங்கப்படுகிறது.

அந்த வாலையில் எண்ணெய் பிசுக்குள்ள திரவம் மிஞ்சியது அதை மேற்கொண்டு சூடாக்கியதில் கருத்த வீழ்படிவு கிடைத்தது. ஆனால் அது விஞ்ஞானக் கல் இல்லை. ஆத்திரத்தில் வாலையில் ஒரு பிடி மண்ணை வாரி போட்டார். பக்கத்தில் இருந்த கரித்தூள் டப்பாவையும் காலால் உதைத்து வாணலியில் தட்டினார். என்ன ஆச்சரியம்? வாலையில் பிரகாசான ஓளிர்பொருள் ஒன்று மினுங்கியது. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. தாம் எதிர்பார்த்த "மந்திரக் கல் கிடைத்து விட்டது. என்று மனம் வானம் வரை துள்ளியது . ஆனாலும் செம்பைப் பொன்னாக மாற்ற இயலவில்லை.
மனம் முறிந்த ஹென்னிங் கொஞ்ச காலம் அறிவியல் துறவறம் பூண்டார். தமது பரிசோதனைகள் பற்றி எவரிடமும் வாயே திறக்கவில்லை தம் கண்டுப்பிடிப்பை வெகுநாள் மறைத்து வைக்கவும் விரும்பவில்லை. "விஞ்ஞானக் கல் பற்றிய வியப்பை அறிவிது விட்டார்.இயற்கையாகவே இருளில் ஒளிரும் பொருளுக்கு கிரேக்க மொழியில் "பாஸ்பரஸ்' என்று பெயர் ஃபாஸ் என்றால் ஒளி ஃபேராரோ என்றால் சுமந்த என்பது பொருள், ஒளியேந்திய பாஸ்வரத்திற்கு வேதியியல் சூரியன் என்கிற செல்லப் பெயரும் உண்டு.

எப்படியோ இந்தப் பாஸ்வரம் ஐரோப்பிய விஞ்ஞானிகள் கவனத்தில் சொக்குப் பொடிதூவிற்று, பிரசித்தி பெற்ற ரசவாதியான ஜோஹன்குங்கெல் (கி.பி. 1630-1702) என்பவர் ஹென்னிங்பிராண்டிடம் பாஸ்வர ரகசித்தைத் தட்டிவரத் திட்டம் இட்டார். இதற்காகத் தம் உதவியாளர் ஜோஹன் டானியல் கிராஃப்ட் என்பவரை ஹாம்பார்க் நகருக்கு அனுப்பினார். எவ்வளவு விலை கொடுத்தாவது அதனைப் பெற்றுவரும்படி கட்டளை. கூடனே பணமும் கொடுத்து அனுப்பினார். தமிழகத்தின் அரிமர்த்தனப் பாண்டியன் மாணிக்கவாசகரிடம் குதிரை வாங்க பணம் கொடுத்த மாதிரி.

ஆனால் இந்த கிராஃப்ட் ஒரு தந்திரசாலி, ஹென்னிங் பிராண்டிடம் தாம் பெற்று வந்த கொஞ்சம் "அரைகுறை' ரகசியத்தை ஆசானிடம் ஓப்படைக்கவில்லை. பாஸ்வர ஒளியில் மயங்காதோர் யாரோ? தாமே பாஸ்வரம் தயாரிக்கக் தொடங்கினார். தொடர்ந்து நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஆலாப் பறந்து சென்று "பாஸ்வர வெளிச்சம்' பாஸ்வரத்தை உருட்டிக் காட்டி இலண்டன் அரசவைக் கழகத்தினரிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டார்.
இதற்கிடையில் அரசவைக் கழக ஆஸ்தான விஞ்ஞானியான ராபர்ட் பாயில் எனும் வேதியிலார் இது குறித்து வினவினார். அது ஒரு சாதாரணப் பாதரசம் என்றும், மனித உடல் சார்ந்த என்றும் மட்டும் கோடு காட்டினார் டேனியல் கிராஃப்ட் அப்புறம் என்ன, ராபர்ட் பாயில் சுயமாக பரிசோதனைகள் தொடங்கினார். பாஸ்வரக் கண்டுபிடிப்பில் வெற்றியும் பெற்றார். பிற்காலத்தில் ஹாம்பர்க் நகரம் வந்த லீப்னிட்ஸ் எனும் கணித மேதையும், ஹென்னிங் பிராண்டிடம் நட்பு கொண்டு பாஸ்வரம் தயாரிக்க கற்றுக் கொண்டார். ராபர்ட் பாயிலுக்குப் பிறகு இத்தகையப் புதுப்பொருள் தேடும் ரசவாத முயற்சிகள் குறைந்து போயின.

ஆனால் கதிர்வீச்சு மற்றும் அனுக்கருச்சிதைவு முறைகளில் ஒரு தனிமம் இன்னொரு ஒரு தனிமமாக உருமாறும் விந்தைகள் எவ்வளவோ நிகழ்ந்து விட்டனவே.

நன்றி:"மஞ்சரி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------

suran


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?