வெள்ளி, 5 ஏப்ரல், 2013

"2,00,000"

இன்று என்னை  பொறுத்தவரை முக்கிய நாள்.
"சுரன்"வலைப்பக்கம் துவக்கி  இடுகைகள் இட ஆரம்பித்தப்பின்னர் இந்த பக்கம் வந்து சென்றவர்கள்.எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டியுள்ளது.
இரணடு லட்சம்பேர்களாக வந்திருக்க வாய்ப்பில்லை.இதில் பலர் பலமுற்றை திருப்பி வந்து சென்றவர்களாகவே இருப்பார்கள்.
வந்து சென்ற அனைவருமே பக்கத்தை -இடுகையை படித்து சென்றவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லுவதற்கில்லை.
இடுகை பிடித்தவர்களும் இருக்கலாம்.என்ன இடுகை இது என்று வெறுத்துப்பொனவர்களும் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும்,எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் வந்து எண்ணிக்கையை 2,00,000
ஆக்கி சென்ற அனைவர்களுக்கும் எனது நன்றி.
இந்த எண்ணிக்கை இடுகையை படித்தவர்களாக -விரும்பியவர்களாக இருப்பார்களேயானால் இன்னமும் மகிழ்ச்சி அடைபவனாக இருப்பேன்.
எனது எண்ணங்களையே பதிவதினாலும்,செய்திகள் ஏற்படுத்திய தாக்கங்களே இடுகைகளாக
இருந்ததினாலுமே மற்றவர்கள் கருத்தை சொல்லும் வழியை எடுத்து விட்டேன்.காரணம் அவர்கள் கருத்து என்னை பாதித்து விடக்கூடாது.அவர்களுக்கு பதில் சொல்லி நான் சொல்லவந்தது மாறிவிடக்கூடாது என்ற பயம்தான்.மேலும் இவ்விடுகைகள் எல்லாமும் என் எண்ணங்களின் வெளியீடுகள்தான்.பொது கருத்துக்கள் அல்ல.எனது தனிப்பட்ட கருத்துக்கள்.அதில் பிறாருக்கு பங்கு எதற்கு?நல்லவையும் அல்லவையும் என்னை மட்டுமே சார்ந்தது.
எல்லாமே சொந்தமான இடுகைகள் அல்ல.சில என்னை கவர்ந்த மற்ற தளங்களில் வந்தவைகளும் மீள்பதிவாக்கியிருக்கிறேன் .
பொதுவாகவே "சுரனி"ல்  வந்த இடுகைகளில் 80 சதவிகிதம் அரசியலாக உள்ளது.இது தோழர்கள் சிலரின் குற்றசாட்டு.அல்லது உணர்த்தல்.
இன்று சமுக நடைமுறைகள் -விலைவாசிகள்,சட்டம்-ஒழுங்கு அனைத்திலும் அரசியல் கலந்துள்ளது.அரசியல் தவிர்க்க இயலாதது.நம் ஒவ்வொருவரையும் வாக்கு பதிவில் இருந்து அரசியல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்று பிறப்பு-சாதி சான்று வாங்குவது முதல் அரசியல் குத்தகைதாரர்கள் தலையீடு உள்ளது.
எனவே நம் வாழ்வின் போக்கையே தீர்மானிக்கும் அரசியல் இடுகையில் அதிகம் வந்தது.தவிர்க்க இயலாதது.மேலும் அரசியல் பற்றி ஏழுதுவதுதான் எளிதானதும் கூட நமக்கு பிடிக்காதவர்களை தாக்கிடவும் ,நமது எண்ணங்களை தாராளமாக சொல்லவும் எளிய வழி.
பிற .
பின்னர்.
"சுரன்  "


------------------------------------------------------------------------------------------------------------------------------------