ஏப்ரல் வாழ்த்துக்கள்.

*இன்று வழக்கமாக 7 மணிக்கு வர வேண்டிய மின்சாரம் வரவில்லை.
வருமென்று மாத்திருந்த போது வரவே இல்லை.
பின்னர் சாவகாசமாக 8 மணிக்குத்தான் வந்தது.
நண்பர் சொன்னார் "இன்று ஏபரல் முதல் தேதி மறந்து விட்டாயா?மக்களை முட்டாள் தினத்தில் அரசு  ஏமாற்றி விளையாடுகிறது."
-இன்று தனியே ஏமாற்றி விளையாட என்ன இருக்கிறது.வாக்களித்த அன்றே முட்டாள்களாக நிருபணமாகி விட்டதே.?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
செருப்பும்-வெறுப்பும் 

செருப்புக்கும் அரசியலுக்கும் இணைபிரியா நட்பு இருக்கிறது.
அரசியல் கூட்டங்களில் பிடிக்காத தலைவர்களின் மீது வீசவும்,வீசி விடுவதாக காட்டவும் அதை விட சிறந்த ஆயுதம் அல்லது ஏவுகணை வேறு உள்ளதாக தெரியவில்லை.முட்டை வீச்சை விட செருப்பு வீச்சுதான் அவமானத்தை உடனே தரக்கூடிய செயலாகக் கருதப்படுகிறது.
புஷ் மீது செருப்பு வீச்சு உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் மீதான செருப்பு வீச்சுகள் புஷ் மீது வீசப்பட்டது போல் இலக்கை தாக்காமல் இலக்கு தவறி விட்டதால் உலக அளவில் சென்று பேசப்பட வில்லை.அந்த செருப்பு தாக்குதல்கள் உலக அளவு செல்லாததற்கு இந்தியா அமேரிக்கா போல் வல்லரசு ஆகாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.மன்மோகன் சிங் இந்தியா விரைவிலேயே வல்லரசாகி விடும் என்று சொல்லியிருக்கிறார்.பார்க்கலாம்.
ராமாயண காலத்தில் பெயருக்கு ராமரின் செருப்பை வைத்துக்கொண்டு பரதன் ஆட்சி செய்ததாக கதை உண்டு.பரதன்  இரண்டு மாங்காய்களை இதன் மூலம் அடித்து ஊறுகாய் போட்டு சுவைத்திருப்பது தெரிகிறது.
1,அண்ணன் ராமன் மீது  தனக்கு அதிக பற்று,பாசம் இருப்பதாக எல்லோருக்கும் காண்பித்துக்கொண்டது.[அண்ணா என்றால் மூன்றெழுத்து என்று அவனுக்கு கவிதை பாட தெரியாததால் செருப்பின் மூலம் பாசத்தை காண்பிக்க வெண்டிய நிலை]
2,ராமரின் செருப்பு  ஆள்வதாக கூறிக்கொண்டு இடைஞ்சல்கள் இல்லாமல் தான் ஆண்டது.[ஜெயலலிதாவுக்கு பதில் ஒ.பன்னீர் செல்வம் ஆண்டதற்கும் இதற்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது.]

இந்த பரதனின் பெயரைத்தானே இந்தியாவுக்கும் பாரதம் என்று வைத்திருப்பதாக சொல்லுகிறார்கள்.
இந்த பெயர் வைப்புக்கும் செருப்புகளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கலாம் என்று இப்போதைய சின்ன ஆய்வு கூறிவருகிறது.

    காரணம் இந்த பெயர் வைப்பு-மற்றும் செருப்பு கதைகள் இத்துடன் முடியவில்லை.அப்போலாவி ல் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவரை செருப்புக்காலுடன் வந்து பார்ப்பது சுகாதாரக்கேடு என்ற எளிய உணமையை சொன்ன மருத்துவர் மீது செருப்பு கோபம் கொண்டுமன்னிக்கவும் அதிகாரிகள் கோபம் கொண்டு சொன்னவரை புழலில் அறை ஒதுக்கி குந்த சொன்ன கதை தான் புதுசு.
இந்த மருத்துவர் செய்துள்ள குற்றங்கள் இரண்டு.

1,செருப்பை இகழ்ச்சியாக எண்ணியது.[பாட்டாளியின் செருப்புக்கும்,பதவியில் உள்ளோர் செருப்புக்கும் வேறுபாடு தெரியாமல் இவர் என்ன மருத்துவம் படித்தார்?அதுவும் இன்று தமிழகத்தில் வாழ்கிறார்.]
2,தனது பெயரை கருணாநிதி என்று வைத்துக்கொண்டிருப்பது.
இரண்டாவது மன்னிக்க முடியாத குற்றம்.சரி. பெயரை 70 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பெற்றொர் வைத்து விட்டார்கள்.இப் போது ஆள்வோர்களுக்கு தக்கபடி இந்த 70 வயதிலாவது பெயரை மாற்றியிருக்கலாம் அல்லவா?
அல்லது தனது பெயரை இப்படி வைத்துக்கொண்டு அதன் பே[ய]ரில்  ஒவ்வாமை உள்ளவர்கள் முன்னாள் நிற்பது உடல் நலத்துக்கு [அவரின் உடலுக்குத்தான் ] நல்லதல்ல என்று கொஞ்ச நேரம் தலை மறைவு வாழ்க்கை நடத்தியிரு க்கலாஂம் .
என்னவோ நடந்து விட்டது.இனி நடப்பதாவது நல்லவையாக செருப்புடன் நடக்கட்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?