"உலக பூமி நாள் "
இன்று நாம் வாழ்வில் தங்கி செல்லும் "பூமி" நாள்.
நாம் அதி கப்பட்சமாக 100 ஆண்டுகள் வாழும் பூமி ப்பந்தை அப்படியே விட்டுச்செல்லுகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .அவரவர்களால் முடித்த அளவு நாசப்படுத்தியே வருகிறோம்.
இயற்கைவளம்-கனிம வளம் மிக்க பூமியை காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கி வாழ்கிறோம்.சக வாழ்விகளான விலங்குகள்-பறவைகளை வாழ வழியில்லாமல் செய்கிறோம்.
ஸ்டெர்லைட் பொன்ற தொழிற்சாலைகளை உருவாக்கி வளி மண்டலத்தையும் ஒரு வழிப டுத்தி வருகிறோம் .
பருவநிலை மாற்றத்தால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன.
சீனா சமீபத்திய அழிவு.
அன்டார்டிகாவில் 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது, பனிப்பாறைகள் உருகி வருகின்றன.
இதற்கு அங்கு வெப்பநிலை அதிகரித்திருப்பதே காரணம்.
உலக தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
ஓசோன் பாதிப்பால் பருவநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது.
காற்று, நீர் மாசுபடுகிறது.
இது போன்ற உலகை கெடுக்கும் செயல்களை மனித விலங்குகளான நாம்தாம் செய்கிறோம் மற்ற விலங்குகள் பகுத்தறிவு இல்லாததால் நம்முடன் போட்டியிட்டு உலகை நாசம் செய்யவில்லை.நாம் செய்யும் தவறுகளுக்கு அத்தனை உயிர் வாழிகளும் நம்முடன் சேர்ந்து அழிவை நோக்கி பயணிக்கின்றன.
இவை போன்ற சுற்று சூழல் கெடுப்பதை தவிர்க்க -பூமியை காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "உலக பூமி நாள் "
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி[இன்று] கடைப்பிடிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் "கைலார்ட் நெல்சன்' என்பவரின் தீவிர முயற்சியால், 1970ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
தற்போது இந்த "எர்த் டே நெட்வொர்க்' அமைப்பில் 175க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.வனப்பகுதிகளில் பாக்சைட் வெட்டியெடுத்து வனப்பகுதிகளையெ இல்லாமல் செய்யவும் -பழங்குடியினர் வாழ்வாதாரத்தையே இல்லாமல் செய்யும் படி வேதாந்தாவுக்கு உரிமம் கொடுத்து பேராதரவு தரும் மன்மோகன் சிங் ஆளும் இந்தியாவும் இதில் அங்கம் என்பதுதான் உச்சம்.
இவர்களைப்போன்ற நாடுகள் உறு ப்பினர்களாக இருப்பதால் நிச்சயம் உலகை ஒரு வழியாக்கி விடுவார்கள் என்பதை பாமரனும் உணர்ந்து கொள்வான்.
உலகை காக்க நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்யலாம் .அவை விபரம்.
"ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும். அனைத்து வகை குப்பைகளையும் குறைக்க வேண்டும்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும். சி.எப்.எல்., பல்பை பயன்படுத்த வேண்டும்.
"பாலிதீன்,மக்கா பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்த தூரம் செல்ல, மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.சைக்கிள் செலவை இல்லாமல் செய்வதுடன் உடல் நலத்துக்கும் மிக நல்லது.உங்கள் சர்க்கரை,கொழுப்பை குறைக்கும். மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சசாலைகள் தேவையான மின் சக்தியை சூரிய ஆற்றல், காற்றாலைகள் மூலம் பெற அரசு ஆணையிட வே ண்டும்.
பாடப்புத்தகங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களை சேர்த்து வருங்கால மக்களாவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளச் செய்யலாம். ஆனால் பள்ளி பாடங்களை பணிக்கு சேர்ந்தவுடனே மறப்பதை வடிக்கையாகக்கொண்ட நமக்கு அரசுதான் கண்டிப்பான சட்டதிட்டங்களை உருவாக்கி செயல்படுத்தவேண்டும்.பாலிதின் பைகளை உற்பத்தி செய்யவும் விற்கவும் அம்பானி போன்றோருக்கு உரிமை கொடுத்து விட்டு மக்களை உபயோகிக்காதீர்கள் என்று சொல்லுவது கொஞ்சம் கேனத்தனமாக இருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று பூமி தினம் மட்டுமல்ல.
இப்பூமியில் புத்துலகு படை க்க வந்த
மாமனிதன் "வி.இ.லெனின் .
பிறந்த நாளும் கூட ....,
------------------------------------------------------------------------------------------------------------------------------------