ஒரு கேள்வி

விஸ்வரூபம் -2 வெளியாகப் போ கிறதாமெ?அதற்கு முன்னர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி.



-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்றுபட்ட எருதுகளிடம் சீறும் சிங்கம் புறமுதுகிட்டு ஒடுகிறது.சிங்கமே சின்னாபின்னமாகும்போது ஒன்றுபட்ட தமிழர் போராட்டம் முன் சிங்களன் என்னாவான்?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வெற்றி நிச்சயமாக 


'நாம் விண்ணப்பித்திருக்கும் வேலைக்கு தேவையே இல்லாத பல விஷயங்களில் நமது கவனத்தை செலுத்தி நேர்காணலுக்கு நாம் தயாராகி இருப்போம். உதாரணமாக நமது கவனம் அதிகபட்சம் நாம் முடித்த பட்டப் படிப்பின் பாடத்திலேயே இருப்பதைச் சொல்லலாம். பட்டப்படிப்பில் நாம் பெற்ற மதிப்பெண்கள், நமது சிறப்பு தகுதி நிலை ஆகியவற்றை நாம் சமர்ப்பித்திருக்கும் சான்றிதழ்கள் வாயிலாக நமது பணி வாய்ப்பாளர் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருப்பார். எனவே அது குறித்து அதிக அக்கறையை அவர் காட்டுவதில்லை என்பதே உண்மை.
நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தோண்டிப் பார்க்க அவருக்கு நேரம் இருப்பதில்லை. அப்படியானால் எதற்காக இந்த நேர்காணல் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது அல்லவா? நேர்காணல் என்பதன் மூலம் இந்த சாதனைகளைச் செய்தவரை அவர்கள் நேரில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதுதான் யதார்த்தமாகும்.
உலகளவில் பெயர் பெற்ற டாக்டர் சாமுவேல் ஜான்சன் அவர்களை அவரது சுமாரான தோற்றத்தை வைத்து எடை போட்டவர்கள் அவருடன் பேசத் துவங்கிய சில நொடிகளிலேயே அவரது பேச்சை கவனிப்பதை மட்டும் செய்யும் அளவிற்கு ஜான்சன் அவர்கள் ஆளுமைத் தன்மை கொண்டவராக இருந்தாராம். இந்த ஆளுமைத் தன்மையை எடை போடுவதுதான் ஒரு நேர்காணலின் முக்கிய நோக்கம் என்பதை நாம் மனதில் இருத்த வேண்டும்.
ஒரு நேர்காணலின் போது கேட்கப்படும் கேள்வி வெளித்தோற்றத்தில் தேவையற்ற கேள்வி என்பது போல் இருந்தாலும், அதற்கு பதில் சொல்வதன் மூலம் நம்மைப் பற்றிய கருத்தை அழுத்தமாகப் பதிய வைக்க முடியுமா என்ற கோணத்திலேயே யோசித்து பதில் அளிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு நமது இயல்புத் தன்மையை இழப்பதோ, கோபமாகப் பதில் தருவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதே போல், நமது கல்வித்தகுதி எவ்வளவு சிறப்பானதாக இருப்பினும், நமது நேர்காணலை நடத்துபவர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நமது சாதனைகளே நமது சிந்தனையை மறைத்து நமது வெற்றியைத் தடுக்கும் பிரச்னையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.
மிகச் சிறந்த கல்வித் தகுதிகளை கொண்டவர்கள் தங்களை பிரதிநிதிப்படுத்தும் முயற்சிக்காக தங்கள் இயல்புத் தன்மைக்கு மாறாக செயற்கைத் தன்மையுடன் நேர்காணலை எதிர்கொள்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். செயற்கையான அமைதியும், இயல்புக்கு பொருந்தாத நடையுடை பாவனைகளும் தோல்விக்குத்தான் வழிகாட்டும்.
ஏற்கெனவே தோல்வியைச் சந்தித்திருந்தாலும் சரி, இனி எதிர்காலத்தில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தாலும் சரி, இதற்கு நாம்தான் காரணம் என்று புரிந்து கொண்டு உங்களைப் பற்றிய சுய ஆராய்ச்சியை பாரபட்சமின்றி செய்யுங்கள். உங்கள் பலம், பலவீனம், வாய்ப்புகள், பிரச்னைகள் என்று நான்கு கோணத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். இதில் கிடைக்கும் விடைகளைக் கொண்டு உங்களை மேன்மைப்படுத்துங்கள். ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது என்ற தங்க வார்த்தையில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
பணி வாய்ப்பாளர் என்பவர் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை. பல ஆண்டுகளுக்கு தங்களுடன் பணி புரியப் போகும் நபர் அப்பழுக்கின்றி முற்றிலும் பணிக்கு தயாரானவராக இருக்க வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பணி வாய்ப்பாளருடன் தகவல் பரிமாற வாய்ப்பு கிடைக்கும் போது உங்களை அவரிடம் விற்பதற்கு உரிய அழுத்தமான விபரங்களை தவறாமல் எடுத்துக் கூறுங்கள்.
நம் எல்லோரிடமும் இருக்கும் நம்மை முன்னிறுத்தும் விஷயங்களை நேர்காணல் முடிவதற்கு முன்னர் நமது பணி வாய்ப்பாளரிடம் தெரிவித்து விட்டோமா என்பதை உறுதி செய்யுங்கள். இந்த பார்வை ஒரு தொடு திரைதான். இன்னமும் அறிந்து கொள்ள, அவற்றைப் புரிந்து கொள்ள நிறைய இருப்பதால் முழு முயற்சி செய்யுங்கள். உங்கள் வெற்றி நிச்சயமாக பக்கத்தில்தான் உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?