"ஒரு பார்வை" ஏப்ரல் -2012

இதே ஏப்ரல்  மாதம் 2012 -ல் நடந்த முக்கிய சம்பவங்ளைப் பார்ப்போம்.
உலகம் :-

ஏப்ரல்- 2: ரஷ்யாவில், 43 பேருடன் புறப்பட்ட விமான விபத்தில் 31 பேர் பலி.

 3: மும்பை தாக்குதலுக்கு காரணமான, ஜமாத் உத் தவா தலைவர் ஹபிஸ் சயீதை பிடித்துக்     கொடுப்போருக்கு, அமெரிக்கா 10 மில்லியன் டாலர் வெகுமதி அறிவிப்பு.

 7: ஆப்ரிக்க நாடான மலாவியின் அதிபர் பிங்கு-வா- முதரிக்கா மறைந்தார். புதிய அதிபராக, ஜாய்ஸ் பாண்டா பதவியேற்பு.
 15: காபூலில் பார்லிமென்ட், நட்சத்திர ஓட்டல், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மன் தூதரகங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 47 பேர் பலி.

 17: வாஷிங்டனில் உலக வங்கியின் புதிய தலைவராக, அமெரிக்க குடியுரிமை பெற்ற, ஜிம் யோங் கிம் தேர்வு. 

 21: கராச்சியில் இருந்து இஸ்லாமா பாத்துக்கு சென்ற விமானம், விபத்துக் குள்ளானதில் 127 பேர் பலி.

 24: பாகிஸ்தானில் போலி பி.ஏ., சான்றிதழை வைத்திருந்த இந்து எம்.எல்.ஏ.,வுக்கு ஓராண்டு சிறை தண்டனை.

இந்தியா : -

ஏப்ரல்- 7: இந்திய - அமெரிக்க கடற்படை வீரர்களின் 10 நாள் கூட்டுப்பயிற்சி "மலபார் - 2012' என்ற பெயரில் சென்னையில் நடந்தது.

 8: இந்தியா - கத்தார் இடையே எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள், பிரதமர் மன்மோகன் - கத்தார் மன்னர் ஷேக் ஹமாத் கலீபா ஆகியோர் இடையே கையெழுத்தானது.
 16: இலங்கை தமிழர்கள் நிலையை அறிய, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.,க்கள் குழு, இலங்கை பயணம்.

 19: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி - 5 ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. 5,500 கி.மீ., தூரம் செல்லக்கூடியது.

 21: "அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள், இனி கட்டாயமாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவு.

 23: நாடு முழுவதும் சமூக பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு துவங்கியது.&
 ஆபாச "சிடி' விவகாரத்தில் சிக்கிய காங்கிரசின் அபிஷேக் சிங்வி, பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா.

pslv c19
 24: நார்வேயில் இந்திய தம்பதியரிடம் இருந்து, அந்நாட்டு கோர்ட்டால் பிரிக்கப்பட்ட 2 குழந்தைகளும், உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு டில்லி திரும்பினர்.
&
 ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருண் ஜெட்லி, மாயாவதி, சிரஞ்சீவி, ஜெயா பச்சன் உள்ளிட்ட 50 பேர், எம்.பி.,க்களாக பதவியேற்பு.

25: மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் (ஆர்.டி.இ.,) ராஜ்யசபாவில் தாக்கலானது.

 26: ஐ.நா., பொதுச்செயலர் பான் கி மூன், இந்தியா வந்தார்.
&
இரவிலும், பகலிலும் பூமியைத் துல்லியமாக படம் பிடிக்கும், "ரிசாட் - 1' செயற்கைக்கோளுடன், "பி.எஸ்.எல்.வி., - சி 19' ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

தமிழ் நாடு :-

ஏப்ரல் - 10: சட்டசபைக்குள் மொபைல் பயன்படுத்த அன்றைய சபாநாயகர் ஜெயக்குமார் தடை.

20: தே.மு.தி.க., வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம். முரசு நிரந்தரமானது. இதற்கு சட்டசபை தேர்தலில் 2 எம்.எல்.ஏ., மற்றும் 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.
suran

21: சென்னை சிறுவன் தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜுக்கு ஆயுள் தண்டனை.

 25: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கிற்கு, மணி மண்டபம் அமைப்பதற்காக, முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டு .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

-





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?