"உயிர் பயமும்- 100 கோடிகளும் "


மராட்டியம் ,கோவா,குஜராத் என்று பல மாநிலங்களில் இருந்து  மக்களின் கடுமையான் எதிர்ப்பால் வெளியேறி தான் கால் பதிக்க இடம் தேடிய நச்சு தாமிர ஆலை ஸ்டெர்லைட் 1994இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் கடும் எதிர்ப்பையும் மீறி  எமனாக தூத்துக்குடியில் தனது கட்டுமானத்தை துவக்கி மாசு கட்டுப்பாடு தொடர்பான அனைத்து விதி மீறல்களுடன் அமைந்தது.
18-03-1996 இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்டது.
இன்று மூட ஆணை பிறப்பித்ததற்காக வைகோ நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கிறாரெ அதே அன்பு சகோதரி ஜெயலலி தாதான் .தனது திருக்கரங்களால் அடிக்கல் நாட்டினார்.
அதற்காக அன்று தூத்துக்குடி வந்த ஜெ 'க்கு  கருப்பு கொ டி காட்டப்பட்டது. 
 தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் எமனுக்கு உறு துணையாக இருந்ததால் மக்கள் போராட்டங்கள் அப்போது அமுக்கி வை க்கப்பட்டன.
இதனால் 07-11-1996 இல் ஸ்டெர்லைடுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை  தேசிய தூய சுற்று சூழலுக்கான அறக்கட்டளை ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,வைகோ போன்றோர் ஆகியோர் பங்கேற்று நடத்தி வந்தனர்.அதன் பேரில் நிலையை உணர்ந்த செ ன்னை உயர்நீதிமன்றம்  2010ல் ஸ்டெர்லைட்  இயங்குவதற்கு தடை விதித்து ஆலையை மூட ஆணை பிறப்பித்தது .
இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம்  உச்ச நீதிமன்றத்தில்  மேல் முறையீடு  செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,தமிழக உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு முதலில் இடைக்கால தடை விதித்தது.
இது தொடர்பான விசாரணைதொடர்ந்து நடந்தது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை மக்களின் பயத்தை உண்மையாக்கும் விதமாக  ளவுக்கு அதிகமாக நச்சு கழிவு வெளியேற்றியதால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர் .மக்கள் போராட்டம் மீண்டும் பலமாக ஆரம்பமானது.
 அதனால்வேறு  வழி இல்லாமல்  ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படிதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
"17 ஆண்டுகால போராட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற ஆணை வரும் "என்று மக்கள் எதிபார்த்திருந்த வேளையில்  ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பான தீர்ப்பை வழங்கிவிட்டது.
நீதிபதி, பட்நாயக் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு:-
" ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நீண்ட நாட்களாக வெளியான வாயுவால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு, அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக, அந்த நிறுவனம், அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபாரத தொகை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதி நிலையை, அடிப்படையாக வைத்து, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்டெர்லைட் நிறுவனம், சுற்றுச் சூழலை மாசுபடுத்தியதற்கு அபராதமாக, 100 கோடி ரூபாயை தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம், ஐந்து ஆண்டுகளில் செலுத்த வேண்டும். இந்த தொகையை, தண்ணீர், காற்று ஆகியவை மாசுபடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில்ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம்  விதித்த தடை நீக்கம்  செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட்  தொடர்ந்து இயங்கலாம். "
என்று  தீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் எப்போதும் மாசு கட்டுப்பாடு பற்றியும்,மக்கள் பாதுகாப்புமாக வே இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த தூத்துக்குடி மக்களை இந்த தீர்ப்பு கடுமையாக அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.ஒரு நம்பிக்கையான் இடமே இப்படி பொய்த்து பொய் விட்டது.
தீர்ப்பி வரிகளை பார்த்தால் ஸ்டெர்லைட் தாராளமாக நச்சு புகையை,கழிவுகளை வெளியிடலாம்.அதற்கு பணத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.அதை  வைத்து நிவாரணப்பணிகளை செய்து கொள்ள வெண்டும் என்றாகிறது.5 லட்சம் மக் கள் வாழ்வோடு விளையாட ஸ்டெர்லைட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்க்கரிசி போட 100 கோடிகளை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கவும் தீர்ப்பு வழி செய்திருக்கிறது.
மாவட்டத்திற்கு -மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் என்று எதிர்பார்ப்பவை எல்லாம் எப்போதுமே மக்களுக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்று தெரிகிறது.
ஸ்டெர்லைட்  பாதிப்பு தூத்துக்குடி மக்கள் எதிர்பார்ப்பு போல் வந்து இன்னொரு போபாலாக தூத்துக்குடி மாறி விட்ட பிறகு இந்த இழப்பிடுகளை வாங்கவும் -கொடுக்கவும் யார் மிஞ்சி இருப்பார்கள்.மாவட்ட ஆட்சியரும் அன்றைய நச்சு வாயு வெளியேற்றத்தில் தானும் உணர்ந்து துன்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை  என்று தெரிந்தும் இங்கு அனுமதித்த முன்னாள்-இன்னாள் முதல்வரும் ,இது போ ன்ற தீர்ப்புகளை வழங்கியவர்களும்தான் பாதுகாப்பான பகுதிகளில் இருக்கிறார்கள்.
 ஆனாலும் இப்போது  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலையை, மூட உத்தரவிட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம்  எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 2010இல் சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீது தான் உச்ச நீதிமன்றம் இத்  தீர்ப்பளித்துள்ளது.
இப்போதைய தடைக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் வேறு தடையாணைகேட்டு  வழக்குதான் தொடர வேண்டும்.
பழையபடி முதலில் இருந்து ஆரம்பம்.ஆக ஸ்டெர்லைட் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.தனது சேவையை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கும்.மக்களும் போராடி ,போராடி களை த்துதான் போவார்கள். ஸ்டெர்லைட் விட வாயு அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ.இந்த போராட்டமே அவர்களை ஒரு வழி செய்து விடும்.
காரணம் மக்களிடம் உயிர் பயமும் , ஸ்டெ ர்லைட்டுக்கு அரசுகளும்-நீதிமன்றமும் பக்க பலமும்  இருக்கின்றன.
இதே போன்ற போபால்  விச வாயு கசிவும் அதன் பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் இன்றுவரை வழங்கப்படாமல் இருப்பதும் இந்திய மக்கள் மனதில் இருந்து இன்னமும் மறைய வில்லை.
பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றிய யூனியன் கார்பைடு உரிமையாளரை பணத்தை வாங்கிக்கொண்டு பாதுகாப்பாக தனி விமானத்தில் தப்பிக்க வைத்தவர்களின் வாரிசுகள் தான் இன்றும் நம்மை ஆள்கிறார்கள். பின்னர் இந்த ஸ்டெர்லைட் விவகாரத்தில் எப்படி நீதியை எதிர்பார்க்கமுடியும்?
 அன்றைய போபாலின் சில காட்சிகள் .

தூங்கவில்லை.விஷவாயுவால் உயிரிழந்த தாயும்-சேயும் 




இன்னொரு முறையும் இந்த அவலம் தேவையா?



அன்றைய வாயு வின் இன்றைய விளைவுகள் .
                                         -----------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் பணம் இனி அவர்களி பையில் 
"ஏழை-எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு பொருட்கள், உரம் போன்றவற்றை பெற மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
 இந்த மானியத்தை மக்களி டம் நேரடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விரை வில் நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு கள் நடந்து வருகின்றன. ஏழை, நடுத்தர மக்களுக்கு மானியத் தொகையை நேரடியாக வழங்குவ தன் மூலம் என்னென்ன நன்மை கள் கிடைக்கும் என்று மத்திய அரசின் வேளாண் செலவு மற்றும் விலைக்கான ஆணையம் ஒரு ஆய்வை நடத்தியது.
 இந்த ஆய்வு மூலம் நேரடி மானிய உதவி பெறும் பயனாளி களுக்கு வேறு எந்த கடுமை யான விளைவுகளும் ஏற்படாது என்று தெரியவந்தது. மேலும் மத்திய அரசின் உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம் மூலம் மத்திய  அரசுக்கு ரூ.60000 கோடிகள்  மிச்சமாகும்.
 இத னால் நேரடி மானியத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தும் ஏற்பாடுகள் தீவிர மாக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் குடும்ப அட்டையும் -நியாய விலைக்கடைகளையும் ஒழித்துக்கட்டி விடலாம்.
அதன் பின் சில ஆண்டுகளில்  இந்த நேரடி மானியத் திட்டத்தையே  ஒழித்து விடாலாம்.இதுதான் இப்போதைய பொருளாதாரப்புலிகள்  மன்மோகன் சிங்.ப.சிதம்பரம் மனதில் உள்ள திட்டம்.
காரட்டை காட்டை முயலை பிடிக்கும் பழைய வழிதான்.இப்போது கையில் காசை காண்பித்து நம் பையில் உள்ள பணத்தை பிடுங்கும் திட்டமாக வடிவெடுத்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?