"பதிலடி"

சில நாட்களுக்கு முன்னர்தான் தண்ணீர் கேட்டு போராடிய விவசாயிகளுக்கு தனது அறிவுக்கு எட்டிபடி நிவாரணம் சொன்னார் மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார்.
"உங்களுக்கு தண்ணீர் தர நாங்கள் அணையில் மோண்டுதான் தார வேண்டும் .ஆனால் இது வெயில் காலம் ஒண்ணுக்கு கூட வர கஷ்டம்படும் ."
அஜித் பவார் 
   ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு மக்கள் தங்கள் துன்பத்தை சொல்லி அழுதால் அவர்களிடம் வாக்குகளை பொறுக்கி நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரின் பதில் எப்படி இருக்கிறது.
இதேபோல் இங்குள்ள அரசியல் வாதிகளும் பதிலை மனதில் எண்ணியிருப்பார்கள்.ஆனால் பதிலை வாயில் இருந்து உதிர்க்கும் போது நாகரிகமாக -பொறுப்புடன் பேசுவார்கள்.அந்த நாகரிகம் வடபகுதியில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.அங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசி விடுகிறார்கள்.
"முன்பு பெண்கள் இரவிலும் ஒப்பனையுடன் அலைவது தான் பாலியல் பலாத்காரங்களுக்கு வாய்ப்பை உருவாக்கி விடுகிறது." என்று ஒரு அ மைச்சர்  உள்ளதை சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார்.
குட்டை பாவாடையுடன் வந்த பெண்ணை மேடையிலேயே கண்டிக்க அந்த பெண் மயங்கி விழுந்ததும் நடந்துள்ளது.அவர்கள் இயல்பான நடமுறை யை சொன்னாலும் அமைச்சர் என்பதால் வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்.
ஆனாலும் அஜித் சொன்ன வார்த்தைகள் ரொம்ப அசிங்கம் பிடித்தது மட்டமல்ல.
மக்களை கேவலப்படுத்தும் வார்த்தைகளை போட்டு தாக்கியுள்ளார்.ஒருவேளை அவர் நீர்க்கடுப்பு கோபத்தில் இருந்திருக்கலாம்.
ஆனாலும் மக்கள் எப்போதுமே பதவிக்காரர்கள் சொல்லவதை எல்லாம் கேட்டு வாயை மூடிக்கொண்டு போய் விட மாட்டார்கள்.

தனது பேச்சுக்கு அஜித் பவார் மன்னிப்பு கேட்டு விட்டாலும் வார்த்தை வடு மனதில் தங்கி விட இப்போது  மகாராஷ்டிராவில் மாநிலத்தில் உள்ள "ஜல்னா "பகுதியில்  ஒரு பொது "இலவச கழிப்பறை"க்கு "அஜித் பவார் பெயர்" சூட்டி தடபுடலாக திறந்து விட்டார்கள்.
இனி சிறுநீர்  கிடைக்கவில்லை என்று அவர் கூற முடியாதில்லையா?
திறப்பு விழாவுக்கு தன்னை கூப்பிடாததுதான் அஜித்துக்கு இப்போதைய குறையாக இருக்க முடியும்.
அடுத்து அப்படியே பக்கத்தில் உள்ள மே .வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாணவர் தலைவர்
 காவலர்கள் தாக்கி இறந்ததை அடுத்து பேசிய "மனிதர்கள் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.ஆனால் இப்போது இவர் மின்கம்பம் தட்டி இறந்ததற்கு வருந்துகிறேன்."என்று பொன்மொழி மலர்ந்ததற்கு டெல்லியில் பாராட்டு பெற்றுள்ளார்.
அங்கு திட்டக்குழு கூட்டத்தில் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து வரும்போது அங்குள்ள இடது சாரி மாணவ்ர்கள் அமைப்பினர் திரண்டு வந்து எதிர்ப்பு குரல்களை எழுப்பி யுள்ளனர்.
மம்தாவுக்கு முன்னதாக வந்த அவரின்  நிதியமைச்சர் "அமித் மித்ரா 'வை கூட்டத்தினரிடம் சிக்கிக்கொள்ள அவரை ஒரு வழி செய்து விட்டனர்.கூட்டத்தில் இருந்து மீண்டவர் வேட்டியும் ,சட்டைப்பையும் கிழிந்ததுதான் மிச்சம்.
நல்ல வேளை இவர் மீதான் தாக்குதலை பார்த்து மம்தா உள்ளேயே இருந்து கொண்டு மாண்டேக் கை 'பாதுகாப்பில்லாமல் தங்களை மாட்டி விட்டதாக வறுத்து எடுத்துவிட்டார்.
என்ன செய்ய?நிதியமைச்சர் வேட்டி  கிழிந்ததுதான் மிச்சம்.புதிய வேட்டிக்கு  திட்டகுழுவிடம் நிதி ஒதுக்கவா சொல்ல முடியும்.
படத்தில்  மம்தா பின்னால் வளர்ந்திருப்பவர்தான் நிதி "அமித் வர்மா".மம்தா பாய்ச்சலுக்கு அலுவாலியா பம்மி விட்டாரே.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?