மனோகரா சிகிச்சை......,

மேற்கு வங்க மாநிலத் தில் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலை வர் காவல்துறையினர் தாக்குதலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தால்  அவரை மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் .
அங்கு அவரின் காலில் "மனோகரா பாணி"யில் இரும்பு சங்கிலி பிணைத்து காவலுடன் சிகிச்சை அளித்துள்ளனர்.மனநிலை பாதிக்கப்பட்டவர்களையே சங்கிலியால் பிணைப்பதை எதிர்க்கும் நாட்களில் இப்படி மனோகரா பாணி  சிகிச்சையா?
 இதற்கு மனிதத்தன்மை உள்ள பலர்  கடும் எதிர்ப்பு தெரிவித்த தால்  மாண வரின் காலில் மாட்டப்பட் டிருந்த சங்கிலி நீக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத் தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் சுதிப்தா குப்தா காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆவேசமடைந்த சில மாணவர்கள் கடந்த 9ம் தேதி தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மம்தா பானர்ஜி மற்றும் நிதியமைச்சர் அமித் மித்ரா ஆகியோரை முற்றுகை யிட்டு போராட்டம் நடத் தினர்.
 இதனால் ஆத்திர மடைந்த திரிணாமுல் காங் கிரஸ் கட்சியினர், மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலை ,கல்லுரி மாணவர்களை காவல்துறையினர் பாதுகாப்புடன் தாக்கினர்.
மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை சூறையா டினர்.
 இரண்டு நாட்களில் மட்டும் சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்ட சிபிஎம் அலுவலகங் களை அடித்து நொறுக்கியும், மாணவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர் களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி ஹில் கார்ட் ரோட்டில் சிபிஎம் மற்றும் திரிணாமுல் கட்சிகளுக் கிடையே நடைபெற்ற மோதலில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் "சந்தோஷ் சஹானி" உள்பட 49 பேரை சிலிகுரி போலீசார் கைது செய்து சிறையி லடைத்தனர். பின்னர் அடுத்த நாள் அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அப்போதுகாவல்துறையினர்,திரினாமுல் காங்கிரசார் தாக்கியதால்  சந் தோஷ் சஹானிக்கு உடல் பாதிக்கப் பட்டு காணப்பட்ட அவரை சிகிச்சைக்கு அனுப்ப கூறப்பட்டது.. இதனையடுத்து அவர் சிலி குரி சாதர் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார்.
 மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஞாயிறன்று அவர் மருத்துவமனை யிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் சிலிகுரி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மிக வும் மோசமானதையடுத்து, சிறை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் திங்களன்று வடக்கு பெங்கால் மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் அனு மதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சந்தோஷ் மருத்துவ மனையிலிருந்து தப்பித்துச் செல்லாமல் இருக்கும் வகையில், அவ ரது இடதுகாலில் போலீ சார் விலங்கை மாட்டி, மிரு கத்தைப் போன்று வழி நடத்தியுள்ளனர். இதனால், அவர் மிகவும் சிரமப்பட் டுள்ளார்.
 மேற்குவங்கத் தின் அனைத்துப் பகுதிகளி லிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கையில், போலீ சாரின் நடவடிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது. இது ஒரு மனித உரிமை மீறல் சம்பவமாகும்.
இச்சம்பவம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்ட தண்டனையை நினைவுக் குக் கொண்டு வருகிறது. மாணவர் சங்கத் தலைவர் விசாரணையிலேயே உள் ளார். அவர் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்பட வில்லை. அப்படியிருக்கை யில், போலீசார் எவ்வாறு விலங்கு மாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பினர். எனவே, மாணவர் தலை வரின் காலில் மாட்டப்பட் டிருக்கும் விலங்கை உடன டியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
  இதனை யடுத்து அவரது காலில் மாட்டப்பட்டிருந்த விலங்கு நீக்கப்பட்டது.\
 இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கூடுதல் துணை ஆணையாளரிடம் மனு அளித்துள்ளது.
இதை செய்ததே காவல்துறையும் -தி.காங், ஆட்சியாளர்க்களும்தானே மனு மீது என்ன நடவடிக்கை இருக்கும்?
குப்பைக் கூடைக்கு போவதைத் தவிர?
இப்போதாவது புரிந்து கொள்வார்களா.அம்மாவை எதிர்ப்பது சும்மா விடயம் அல்ல என்று .
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தங்கம் விலை குறைந்தால் வருத்தமா?

தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால், தங்க நகை கடன் வழங்கிய வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை மேலும் சரிவடையும் பட்சத்தில், நகை கடன் வழங்கிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை இழப்பை சந்திக்க நேரிடும் என, ஆய்வு நிறுவனமான, ரேட்டிங்ஸ் டுடே தெரிவித்துள்ளது.
தங்க நகை கடன் வழங்குவதில், மணப்புரம் பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. தென்னிந்தியாவை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், இந்தியன் பேங்க் ஆகிய வங்கிகளும், குறிப்பிடத்தக்க அளவிற்கு தங்க நகைகளுக்கு கடன் வழங்கியுள்ளன.
தங்கம் விலை வீழ்ச்சி கண்டு வருவதால், மேற்கண்ட நிறுவனங்கள் வசம் அடமானமாக உள்ள தங்க நகைகளின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தங்க நகை கடன் பிரிவில், அவற்றின் சொத்து மதிப்பும் சரிவடைந்துள்ளது.தங்க நகை கடன் நிறுவனங்கள், சந்தைப் போட்டி காரணமாக, தங்கத்தின் மதிப்பில், 80 - 90 சதவீதம் வரை கடன் வழங்கி வந்தன.
அதே சமயம் வங்கிகள் தங்க நகை மதிப்பில், 70 சதவீதம் வரை கடன் வழங்கி வருகின்றன.இந்நிலையில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தங்க நகையின் மதிப்பில், 60 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதே சமயம், வங்கிகளுக்கு கடன் வரம்பு நிர்ணயிக்கவில்லை.
இதையடுத்து, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தங்க நகை மதிப்பின் அடிப்படையில் வழங்கும் கடன் அளவை குறைத்துக் கொண்டன. எனினும், ஒரு சில நகைகளுக்கு, செய்கூலியை அடிப்படையாக கொண்டு, அவற்றின் மதிப்பில் 80 சதவீத அளவிற்கு கடன் வழங்கப்பட்டது.இவ்வகை கடன் பிரிவில் உள்ள நிலுவை தொகை (அசல் மற்றும் வட்டி), தற்போது வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலையை எட்டி இருக்கும் என, இந்தியா ரேட்டிங்ஸ் மதிப்பிட்டுள்ளது.இத்துடன், வரும் மாதங்களுக்கான வட்டியை சேர்த்தால், கடன் வழங்கிய நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
தங்கம் விலை வீழ்ச்சி காரணமாக, சென்ற 2012-13ம் நிதியாண்டின், மார்ச்சுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், இழப்பு ஏற்படும் என, மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம், அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஒரு வாரத்தில், தங்கத்தின் விலை, 12 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.வரும் நாட்களில், மேலும், 10 சதவீதம் சரிவடைந்தால் கூட, பெரும்பாலான தங்க நகை கடன் தொகை, தங்கத்தின் மதிப்பை விட உயர்ந்து, இழப்பு மேலும் அதிகரிக்கும் என, இந்தியா ரேட்டிங்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ தனிடையே, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தங்க நகைகளுக்கு வழங்கும் கடனை குறைப்பது குறித்து, பரிசீலிக்கப் போவதாக அறிவித்துள்ளது. தற்போது, வங்கியின் தங்க நகை கடன், அதன் மதிப்பில், 70 சதவீத அளவிற்கு உள்ளது. அதனால், தங்கம் விலை வீழ்ச்சியால் பாதிப்பு ஏதும் இல்லை என, இவ்வங்கியின் தலைவர் பிரதீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
:அதே சமயம், தனியார் துறையை சேர்ந்த பெடரல் பேங்க்-ன் நகை கடன், தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில், 60 சதவீதத்தில் இருந்து, 77 - 78 சதவீதமாக உயர்ந்து விட்டது.பெடரல் வங்கி, 6,200 கோடி ரூபாய் அளவிற்கு நகை கடன் வழங்கியுள்ளது. "சந்தை போக்கில் ஏற்படும் மாறுதலின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷியாம் சீனிவாசன் தெரிவித்தார்.


நன்றி:தினமலர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?