உலக புத்தக தினம்
இன்று நம் வாழ்வை செழுமை படுத்தும் உலக புத்தக தினம்.
மக்கள் தலைவன் "லெனினி"டம் நண்பர் ஒருவர் உங்கள் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டபோது உடனே "புத்தகங்கள் "என்றாராம்.
பிறந்த நாள் அன்று அவர் மீது அன்பு கொண்ட மக்கள் அனைவரும் புத்தகங்களை பரிசளிக்க எண்ணிக்கை லட்சத்தை தொட்டு விட்டதாம்.
நல்ல புத்தகத்தை போல் நல்ல நண்பன் இல்லை.நல்ல வழிகாட்டியும் இல்லை.
இன்று கணினியும்-இணையம்- மின்னணு புத்தகங்களும் வந்து விட்டாலும் அச்சில் வரும் புத்தகங்களை படிக்கும் இன்பம் தனியேதான்.
டாஸ்மாக்கில் செலவிட்டு போதையை எற்படுத்தி தன்னையே மறக்கும் குடிமக்கள் புத்தகங்களை படிக்கும் போதையை பெற இந்த புத்தக நாளில் வாழ்த்துகிறேன்.முன்னதின் போதை உங்களை மற்றவர்களிடம் சிறுமையாக்கும்.புத்தக போதையோ உங்களை பெருமை படுத்தும் பாதை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
சத்யஜித் ராய் மறைவு , [1992]---------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------
டெல்லியில் விடிந்தால் ஒரு பாலியல் பலாத்கார வன்முறை.
இந்தியாவின் தலை நகரிலே நடக்கும் குற்றங்கள் நம் இந்தியாவையே அசிங்கப்படுத்தி வருகிறது.உலக நாடுகள் ஆய்வு செய்து உலகிலேயே அதிக பாலியல் வன்முறை இந்தியாதான் என்று சான்றிதழ்கள் வரிசையாகத்தருகிறது.
அதை தடுக்க வக்கற்ற இந்திய அரசு உலகிலேயே பெரும் பணக்காரர் வரிசையில் 20-வது இடத்தை தக்க வைத்துள்ள.3000கோடிகளில் குடிசையை கட்டி அதில் வாஸ்து சரியில்லை என்று புலம்பிவரும் ஒரு பண முதலைக்கு பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை அவர் வீட்டின் கூர்கா வேலையை செய்ய சொல்லுவதும் அவர் போகும்போது பாதுகாப்பு தரக் வைப்பதும் மக்களாட்சி நடப்பதற்கான அறிகுறியாக இல்லை.
முகேஷ் அம்பானி.
அவருக்கு, "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு, முகேஷ் அம்பானி செல்லும் போதுஅவருக்கு 28 வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர்.
அவர் செல்லும் வாகனத்திற்கு முன், "பைலட்' வாகனம் செல்லும்.பின்னால் திறந்த ஜீப்பில் அதிநவீன ஆயுதங்களுடன் வீரர்கள் வாகனங்களில் செல்வர்.
இந்த பாதுகாப்பு 24 மணி நேரமும்உண்டு.
உத்தர பிரதேசத்தின் உள்ள,
சி.ஆர்.பி.எப். படைப் பிரிவில் இருந்து முதற்கட்டமாக, அம்பானிக்கு
பாதுகாப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஏற்கனவே மும்பையில் உள்ள முகேஷின் 3000கோடி கள் "அன்டில்லா' வீட்டிற்கு மும்பை காவல்துறை பாதுகாப்பு வழங்குகிறது.
இப்போது துணை ராணுவங்களில் ஒன்றான சி.ஆர்.பி.எப்., படைப் பிரிவின் வீரர்கள் இ துவரை மத்திய அரசின் தொழிற்சாலைக[ரெயில்வே,அணுமின் நிலையம்,துறைமுகங்கள்,கண் நீர்த்தொழிற்சாலை போன்ற மு க்கியமான]ளுக்கு மட்டும்தான் ஒரு பகாசுர தனியார் நிறுவனத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவது இதுவே முதல் முறை. தவறான வழிமுறையும் கூட.அம்பானிகளிடம் கொட்டிக்கிடக்கும் பனக்குவியலுக்கு அவர்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை காசு கொடுத்து வைத்துக்கொள்ளலாம் .ஒரு அரசு தனது படைப்பிரிவுகளில் ஒன்றை மக்களை பாதுகாப்பதில் அக்கறை இல்லாமல் தனி நபரை பாதுக்காக்க அனுப்புவது.அவர் போடும் எச்சில் காசுக்குக்காக த்தான் .இந்த அம்பானி எப்படி பட்ட தொழில் அதிபர்?
1400 கோடிகள் தொலைத்தொடர்புத்துறையில் ரிலையன்ஸ் அரசை ஏமாற்றியுள்ளது.2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் கையை வைத்து ள்ளது.
நிலக்கரி உரிமையை வாங்கி வைத்துக்கொண்டு செயற்கையாக நிலக்கரியை தொண்டி வழங்காமல் தட்டுப்பாட்டை எற்படுத்தி இந்தியாவின் அனல் மின் உற்பத்தியையே கேள்விக்குரியதாக்கி அதிக விலைக்கு தன்னிடமிருந்து மின்சாரத்தையும்,நிலக்கரியையும் விற்கும் அம்பானி.
கோதாவரி,கிருஷ்ணா நதிப்படுகை பெட்ரோலியம் எடுக்கும் உரிமையை வைத்து வாராவாரம் பெட்ரோல் விலையை அதிகரிக்க வைத்த அம்பானி.
இயற்கை எரிவாயுவை தான் சொன்ன விலைக்கு வாங்கவில்லை என்பதற்காக பூமியில் இருந்து அதுவும் அரசு இடங்களில் இருந்து எடுத்து விநியோகம் செய்யாமல் அடம் பிடித்து ஒவ்வொரு வீட்டிலும் அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை வாங்க வைத்த மாமனிதன் இந்த அம்பானி .முரைகெடுகள்தான் அம்பானி சாம்ராஜ்யத்தின் அடிக்கல்லே.இல்லாவிட்டால் திருபாய் அம்பானி துபாயில் பெட்ரோல் பல்க்கில் வேலைபார்த்து உழைத்தவர் மகன் உலகில் 20வது பணக்காரனாவது எப்படி நடந்திருக்கும்.?
முறைகேடுகளும் வரி ஏய்ப்பும் தான் இவர் உலக அளவில் 20 வது பணக்காரராக உருவெடுக்க வைத்துள்ளது.எத்தனை முறை கே டுகள் செய்தாலும்,அரசை -வரியை எய்த்தாலும் அம்பானி கொடுக்கும் தேர்தல் நிதி -கட்சி நிதிதான் காங்கிரசு அரசை இப்படி எடுபிடி வேலையை செய்ய வைத்துள்ளது.மன்மோகன் ,சோனியா கட்சி அளவில் என்னவும் செய்து விட்டு போகட்டும்.மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு எந்திரத்தை அம்பானி வீட்டு காவலுக்கு அனுப்புவது சரியானது அல்ல.
நாடெங்கும் நடக்கும் சிறுமிகள் முதல் கிழவிகள் வரையிலான பாலியல் வன்முறைக்கு முடிவு கட்ட -வாக்களித்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத அரசு .கட்சி நிதி என்ற எச்சில் காசுக்காக யார்,யார் வீட்டுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்குகிறது பார்த்தீர்களா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------