"நாள் குறிக்கப்பட்ட கருணா "

இலங்கை சுதந்தரக்கட்சியை பலப்படுத்தப போவதகக்க் கூறி  இலங்கைத் தமிழினத் துரோகிகள் " பிள்ளையான், கருணா " என இரு கருங்காலிகளையும் அரசியலில் இருந்து ஒதுக்கி பின்னர்  அவர்களை போட்டு தள்ளிவிட ராஜபக் சே  முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடு பட்டுள்ளதாக  பரிஸ்தமிழ்.காம் தெரிவித்துள்ளது.
இரண்டு துரோகிகள் .கருணா-பிள்ளையான் 
இதனடிப்படையில, மகிந்த ராஜ பக்சே  முயற்சிக்கு எதிரா க பிள்ளையான் , கருணா செயல்பட்டாலோ தப்பிக்க முயற்சித்தாலோ எ ந்தவிதமான தயக்கமுமின்றி ஆனால் அரசு மற்றும் தன்  மீது எந்த  முறையான சந்தேகமும் வர இயலாத அளவில் மூளையுடன்  போட்டுத் தள்ளுவதற்கான உத்தரவை இரகசிய நடவடிக்கைகளுக்கான விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு கோத்தபாய வழங்கியுள்ளதாக  தகவல் தெரிவிக்கிறது.

  காட்டிக்கொடுக்கும் குணம்படைத்த கருங்காலி கருணா இனி தேவைப்படமாட்டார்.அவரை வைத்திருந்தால் நாளை  போர்க்குற்றங்களின் சாட்சியாக மாறிவிடும் ஆபத்தும் உள்ளது.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த பெருமிதத்தில் பிள்ளையான்.
சொந்த இன மக்களையே காட்டிக்கொடுத்த கருணா ,பிள்ளையான் இனி உயிருடன் இருப்பதே  தலைவலி யாக இருக்குமென்பதால், அவரை படுகொலை செய்யும் முடிவு  எடுக்கப்பட்டாயிற்று. ஆனால்  போட்டுத் தள்ளும் நாள்தான் குறிக்கப்படவில்லையாம்.
ஆனால் இந்தியா அரசு க்கும் பிள்ளையானுக்கும் இருக்கும் ரகசிய தொடர்பால், பிள்ளையானை படுகொலை செய்வது தொடர்பாக இன்னமும் முடிவான முடிவு  செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது .
இ வர்கள் படுகொலை நடந்த   பின்னர் பழியை விடுதலைப் புலிகள்  அல்லது முஸ்லீம் குழுக்கள் மீது  போடுவது தொடர்பாகவும் பேசி மு டிவெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மேலும் காண 
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பாப்லோ சாவில் நெருடல் 

சிலி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் பாப்லோ நெருடா.இடது சாரி சிந்தனையுடன் இவர் எழுதிய கவிதைகள் உலகப்புகழ் பெற்றவை.
 1971-ம் ஆண்டு இவர் எழுதிய சிறந்த இலக்கியத்துக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த 1973-ம் ஆண்டு அதாவது 40 ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
புற்றுநோய் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக மரண சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக சிலி கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2011-ம் ஆண்டு புகார் செய்தது. இதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
நெருடா இடதுசாரி அரசியல்வாதியாக இருந்தார். 
பாப்லோ நெருடா.
அப்போது நாட்டை ஆண்ட சர்வாதிகாரிக்கு எதிராக போராடினர். 
1973-ம் ஆண்டில் ராணுவ புரட்சி ஏற்பட்ட 12-வது நாளில் காண்டியாகோ ஆஸ்பத்திரியில் இறந்தார். அதனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. ஆகவே நெருடாவின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. முக்கிய உடல் உறுப்பு பாகங்கள் தலைநகர் காண்டியாகோவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
 அங்கு அவை பரிசோதிக்கப்படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?