பி.பி.ஸ்ரீனிவாஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தற்பொது அவருக்கு வயது 82 ஆகிறது .
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
1930. செப்.22ம் தேதி தற்போதைய ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி
மாவட்டத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்தவர் பிபி.ஸ்ரீனிவாஸ்.
பனிந்திரஸ்வாமி- சே ஷகிரியம்மா ஆகியோர் ஸ்ரீனிவாஸின் பெற்றோர்கள்.இவர்கள் பசலபுடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
கல்லூரியில் பி.காம் படித்துள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், தெலுங்கு, கன்னடம்,
தமிழ், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என எட்டு மொழிகளை
அறிந்தவர். தெலுங்கு மொழியில் கஸல் போன்ற பாடல்களை அதிகம் பாடியுள்ளார்.
கீதா தத், சம்ஷத் பேகம், ஜிக்கி ஆகியோருடன் இணைந்து பாடல்கள் பல
பாடியுள்ளார்.ஆர்.நாகேந்திர ராவின் ஜாதக பலம் (ஜாதகம்) என்ற படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் திரைப்படப் பாடலில் பாடி அறிமுகமானார்.
ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் ஹிந்திக்கும் அறிமுகமானார். ஹரிச்சந்திரா என்ற மலையாளப் படத்தில் 1955ல் அறிமுகமான பி.பி.ஸ்ரீனிவாஸ், பிரேம பாசம் படத்தில் பி.சுசீலாவுடன் டூயட் பாடல் பாடி மக்கள் மனங்கவர்ந்த பாடகராக உயர்ந்தார்.
க ன்னட நடிகர் ராஜ்குமாருக்கும், தமிழில் நடிகர் ஜெமினி கணேசனுக்கும் அதிக பாடல்கள் பாடியுள்ளார். இவர்களுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலே சரியாக வரும் என்ற அளவுக்கு இடம்பிடித்தார்.
எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஆகியோருக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.
திரைப் பாடல்களை பாமர ரசிகர்களும் அதிகம் கேட்டு விரும்ப வைத்தார்.
கண்ணதாசன் எழுதிய காலங்களில் அவள் வசந்தம் பாடல், அடுத்த வீட்டுப் பெண் படத்தில் "கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே" பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப் படுகிறது.
பி.சுசீலா, எஸ்.ஜானகி, பி.பானுமதி, கே.ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் காலத்தால் அழியாதவை.
திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது, பக்திப் பாடல்கள், சுலோகங்கள், தோத்திரங்களும் இவர் அதிகம் பாடியுள்ளார்.
சாரதா புஜங்க ஸ்தோத்திரம், ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம், முகுந்த மாலை, ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்தோத்ரம், புரந்தரதாஸர் தேவநாமாக்கள் என இவர் பாடிய ஸ்தோத்திரங்கள் இன்றளவும் அன்பர்களால் கேட்டு ரசிக்கப்படுகின்றன.
சென்னையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை அண்ணாசாலையை ஒட்டிய உட்லேண்ட்ஸ் ஹோட்டல் திறந்த வெளி செம்மொழிப் பூங்கா பகுதியில் தினமு ம் வந்து, தன் நண்பர்களுடன் உரையாடிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
மாலை நேரங்களில் தன் வயதையும் மறந்து, இளம் நண்பர்களுடனும், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் என அனைவரிடமும் அமர்ந்து பேசிப் பொழுது கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்த அனுபவங்களை வைத்து" ஹோம் அவே ஃப்ரம் ஹோம் "என்ற ஒரு தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
பல்வேறு நாடக மன்றங்கள், இசை அமைப்புகளில் தலைமையும் பங்கேற்பும் கொண்டிருந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
மனதை வருடிய இனிமையான குரல் வசந்தம் மறைந்து விட்டது.இனி அவரை பாடல் ஒலிகளில் மட்டுமே சந்திக்க முடியும்.
ஸ்ரீனிவாஸ் பாடியவற்றில் மறக்க முடியாதவை.
காலங்களில் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு
ஒன்று சேர்ந்த அன்று மாறுமா - மக்களை பெற்ற மகராசி
மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மகளே பார்
சின்ன சின்ன கண்ணனுக்கு - வாழ்க்கை படகு
காத்திருந்த கண்களே - மோட்டார் சுந்தரம் பிள்ளை
காற்றுவெளியிடை கண்ணம்மா - கப்பலோட்டிய
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே - பனித்திரை
இன்பம் பொங்கும் வெண்ணிலா - வீரபாண்டிய கட்டபொம்மன்
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - அடுத்த வீட்டு பெண்
அழகிய மிதிலை நகரிலே - அன்னை
ஆண்டுறொன்று போனால் வயதொன்று போகும் - போலீஸ்காரன் மகள்
எந்த ஊர் என்றவனே - காட்டுரோஜா
என்னருகே நீ இருந்தால் - திருடாதே
காதல் நிலவே கண்மணி ராதா - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
விஸ்வநாதன் வேலை வேண்டும் - காதலிக்க நேரமில்லை
உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா - காதலிக்க நேரமில்லை
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா -பச்சை விளக்கு
கண்ணிரண்டு மெல்ல மெல்ல - ஆண்டவன் கட்டளை
மெய்யேந்தும் விழியாட - பூஜைக்கு வந்த மலர்
மயக்கமா கலக்கமா - சுமை தாங்கி
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் - இதயகமலம்
நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கை படகு
பார்த்தேன் சிரித்தேன் - வீர அபிமன்யூ
உன்னழகை கண்டு கொண்டால் - பூவும் பொட்டும்
பால் வண்ணம் பருவம் கொண்டு - பாசம்
ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்
பொன் ஒன்று கண்டேன் - படித்தால் மட்டும் போதுமா
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் - ஊட்டி வரை உறவு
வளர்ந்த கலை மறந்துவிட்டால் - காத்திருந்த கண்கள்
லை மயங்கினால் இரவா - இனிக்கும் இளமை
பாடாத பாட்டெல்லாம் பாட - வீர திருமகன்
அவள் பறந்து போனாளே - பார் மகளே பார்
அத்திக்காய் - பலே பாண்டியா
ஆரோடும் மண்ணில் எங்கும் - பழநி
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா - காதலிக்க நேரமில்லை
தாமரை கன்னங்கள் தேன்மலர் - எதிர்நீச்சல்
தோல்வி நிலை என நினைத்தால் - ஊமை விழிகள்
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சாரதா
மாம்பழத்து வண்டு - சுமைதாங்கி
துள்ளித்திரிந்த பெண்- காத்திருந்த கண்கள்
பொன் என்பேன் சிறுபூ- போலீஸ்காரன் மகள்
பூவறியும் பூங்கொடியே- இதயத்தில் நீ
போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.
தற்போ து கடைசியாக செல்வராகவன் இயக்கிய "ஆயிரத்தில் ஒருவன் "படத்தில் "பெண்மானே பேர் உலகின் பெருமானே..." என்ற பாடலை பாடியிருந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்