உலகிலேயே ஏழைகள் நாடு
"உலகிலேயே ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா"தான் என உலக வங்கியின் ஆய்வறிக்கை வெளியிட்டு ள்ளது.
எப்படியோ இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் திட்டங்கள் எல்லாம் பகாசுர பணக்கார நிறுவனக்களுக்கும் -அந்நிய நிறுவனங் களுக்குமாக இருப்பதால்தான் இந்த நிலை.
எல்லா வழிகளும் பணக்காரர்கள் மேலும் பணத்தை குவிக்கும் வழியாகவே காங்கிரசு அரசு செய்து வருகிறது.உலகமயமாக்கல் ,தனியார் மயமாக்கல்,தாரள [கொள்ளை]மயமாக்கல் போன்ற அரசின் கொள்கைதான் ஏழை-பணக்காரன் வித்தியாசத்தை 1950களுக்குப்பின்னார் மீண்டும் கொண்டு வருகிறது.
விடுதளைக்குப்பின்னார் நேரு,இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் கொண்டூவந்த தேசியமயமாக்கல் மூலம் விலகிய ஏழ்மை கோடு குறைவு அதே காங்கிரசு அரசின் இன்றைய ஆட்சியாளர்களால் தனியார் மயமாக்கலால் மீண்டும் அதிகரித்து வருகிறது ஏழ்மை.
உலக நாடுகளில் 1.2 பில்லியன் ஏழைகள் வாழ்வதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை இந்தியாவில் வாழ்வதாக கூறியுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய ஆய்வின் மூலம், உலகின் ஏழ்மை அதிகமாக உள்ள நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
=============================================#
சகுந்தலா தேவி .6 வயதிலேயே மைசூர் பல்கலைக்கழகத்தில் தனது கணித திறமையை காண்பித்து மற்றவர்களை அசர் வைத்தவர் சகுந்தலா தேவி .
தனது கணித திறமையை காட்டி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி பெங்களூரில் இன்று மரணமடைந்தார்.
அவருக்கு தற்போது வயது 83.
மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் 'மனித
கம்ப்யூட்டர்' என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி.
1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
கணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், கடந்த சில வாரங்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா தேவி இன்று மரணமடைந்தார்.
முதல்வர் மம்தா க்கு
தொடர்பில்லை.
---------------------------------------------------- --------------------------மேற்குவங்க மாநிலத்தில் உள்ளது சாரதாகுழுமம்.
இக்குழுமம் பல்வேறு வங்க மொழிபத்திரிகைகள் மற்றும்நிதி நிறுவனத்தையும் நடத்தி வந்தது. இந்த நிறுவனம் திரிணாமுல் காங்கிரசு முக்கியத்துவர்களால் நடத்தப்படுகிறது.திரிணாமுல் கட்சி சார்பாக பத்திரிக்கைகளும் வெளியிடுகிறது முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இந்நிறுவனத்தில் பங்குகள் உண்டு என்றுதெரிகிறது.
இந்நிறுவனத்தின் தலைவரும் திரினாமுல் காங்கிரசு தலைகளில் ஒருவருமான சதீப்தா சென் கடந்த மார்ச் 26-ம் தேதி நிதிநிறுவனம் மூடப்படுவதாக அறிவித்து விட்டு தலைமறைவாகி விட்டா ர்.
சாரதா குழுத்தின் தலைமைநிர்வாகியும் , திரிணாமுல் காங்.எம்.பி.யுமான குணால்கோஸ் "நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தொடர்பில்லை.அவருக்கு இந்த விடயங்கள் தெரியாது " என்று கூறியுள்ளார்.
================================================#
தங்கம் விலை சரிவும் ஏழைகளுக்கு தொல்லைதானா?
---------------------------------------------------------------------------------- --------------------------------சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க பொருளாதார எழுச்சி, தங்க முதலீட்டாளர்கள் பங்கு சந்தை பக்கம் திரும்புவது போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வாரம், 22 காரட், ஒரு பவுன் ஆபரணத் தங்கம், 22,240 ரூபாய்க்கு விற்கப்பட்டு, ஏப்ரல், 15ம் தேதி, 20,640 ரூபாய், நேற்று முன்தினம் 19,520 ரூபாயாக குறைந்தது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகை மீது வழங்கப்படும் கடன் தொகை, கிராமிற்கு 1,200 ரூபாய் வரை குறைத்துள்ளனர்.
அரசு வங்கிகளை தொடர்ந்து தனியார் வங்கிகளும் இதே முடிவை கையாண்டுள்ளன. ஆனால் தனியார் நகை கடன் வழங்கும், நிதி நிறுவனங்கள், அடகு கடைகளின் நிலை தான் மிக மோசமாகியுள்ளது .
வாடிக்கையாளர் தங்க நகை மீது 95 சதவீதம் வரை கடன் வழங்கி உள்ள தால், தங்கத்தின் விலை சரிவால் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயம் மற்றும் தனிநபர் பிரிவில், தங்க
நகை கடன் வழங்குகிறது.
விவசாயிகளுக்கு, 9 சதவீத வட்டியில் இரண்டுலட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்குகிறது. சரியான காலக்கெடுவுக்குள்திருப்பி செலுத்தினால் 5 சதவீத வட்டிக்கு, ரிசர்வ் வங்கி விலக்கு
அளிக்கிறது.
தனி நபருக்கு தங்க நகை கடனாக இரண்டு லட்சம் ரூபாய் 10.5சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
கிராம் ஒன்றுக்கு, கடந்த வாரம் வரையில் 2,100 ரூபாய் வழங்கப்பட்டது. தங்கம் விலை சரிவால், கிராமுக்கு, 1,700ரூபாய் கடன் வழங்கும் அளவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி தங்க நகைகடன் வழங்கப்படுகிறது .
தங்கத்தின் விலைக்கும் கடன் வழங்கும் தொகைக்கும் இடைப்பட்ட அளவீட 70 முதல், 75 சதவீதமாக உள்ளன.
15 முதல் 20 சதவீதம் வாடிக்கையாளரின் தங்கம், நகையாக வங்கியில் உள்ளதால், அரசு வங்கிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
ஆனால் வெளிசந்தை தங்க ம் விலையில், 95 சதவீதம் கடனாக வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகளுக்கு 5 முதல்,7 சதவீதம் இழப்புஉணடாகியு ள்ளது.
தங்கத்தின் விலை பவு னுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் இறங்கலாம் என்ற தகவல்களால் தங்களின் நிறுவனம் நிதி நெருக்கடியில் மூழ்குவதில் இருந்து தப்பிக்க தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை அனுப்பித ங்கத்தை திரும்ப பெறும்படியும், அதிகப்படி தங்கள் நிறுவனம் கொடுத்த பணத்தை இழப்பீட்டுதொகையை திரும்ப செலுத்தும் படியும் நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இழப்பீட்டு தொகை செலுத்தாவிட்டால், நகை உடனடியாகஏலத்துக்கு கொண்டு வரப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இவை போன்ற நிறுவனங்கள் ரிசர்வ்வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வராததால்
வாடிக்கையாளர்கள் ரிசர்வங்கிஇடம் முறையிட்டு நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாது.