வெள்ளி, 12 ஏப்ரல், 2013

"கல்லணையை கட்டியதே "

முன்பு நாட்டு மருந்துக்களை மட்டும் உட் கொண்டு நோயில் இருந்து தப்பித்த மக்கள்.இடையே ஆங்கில மருத்துவமான "அல்லோபதி"யில் நம்பிக்கை வைத்து அதன் வழியில் மாத்திரைகளையும்,மர்ந்துக்களையும் உட் கொண்டும்,ஊசியை போட்டுக்கொண்டும் நோய்களை விரட்டினர் .
இப்போது பழைய படி மாற்று மருத்துவம் என்று ஆயுர்வேதம் ,ஓமியோபதி,சித்தா  என்று மாறிக்கொண்டிரு க்கின்றனர்.
காரணம் இந்த முறையில் பக்கவிளைவுகள் -பின் விளைவுகள் இல்லாததுதான்.சித்தம்,ஆயுர் வேத மருந்துக்களில் கொஞ்சம் பத்தியம் காக்க வேண்டும் .அப்போதுதான் அதன் முழு பயனும் கிடைக்கும் .
ஒமியோபதியில்  அந்த பத்தியம் கடுமையாக இல்லை.ஆனால் மருந்துகளை அதன் வீரியம் போய்விடாமல் இருக்க கொஞ்சம் அதிக வாசனை உள்ள பொருட்கள் பக்கம் வைக்கவோ அது போன்ற உணவை உண்டவுடன் உட் கொள்ளவோ கூடாது .அவ்வளவுதான்.வெயில் படு இடங்களில் மருந்து-மாத்திரைகளை வைப்பதும் கூடாது.வெங்காயம்,பூண்டு ,காபி,பத்தி,சாம்பிராணி வகைகளை ஒண்டவிடக்கூ டாது .
suran
எதையும் சாப்பிட  அரை மணி நேரத்துக்கு முன்போ  பின்போ ஓமியோபதி மருந்துகளை உட் கொள்ளலாம்.இது போன்ற முறைகள் மருந்து வீரியத்தை குறைக்காமல் இருக்கத்தான்.
ஓமியோபதி மருந்து அதிக அளவு அல்லது அலோபதி போல் பெயர் பெறாததற்கு காரணம்
எல்லா மாத்திரைகளும் வெள்ளை சிறு உருண்டைகளாகவும் -இனிப்புடன் மாத்திரை  என்று நாம் அறிந்த  குணாதிசயங்கள் இல்லாமல் இருப்பதும்தான் காரணம்.
எல்லா மாத்திரைகளும் வெறும் சீனி-மாவால் செய்யப்பட  உருண்டைகள்தான்.அதில் உங்ககள் நோய்க்கான மருந்தை கலக்கி தருவார்கள் .எனவே இந்த நிலை.
மருந்துக்கும் தனியான வாசம்,நிறம்  இருப்பதில்லை .
மேலும் அலோபதி மாத்திரைகள் போன்று போட்டவுடனே கப் என்று வியாதியை முடக்குவதில்லை.
நம் உடலோடு  இணைந்து வியாதியை நீக்கி விடுகிறது.அது கூட வியாதி தன்னாலே குணமான உணர்வையே மனதுக்கு தருகிறது.
அதனால் ஓமியோபதி மருந்தை  நாம் நினைவில் நன்கு பதிய வைக்க இயலாமல் போய் விடுகிறது.அதுதான் நம்மை குணப்படுத்தியது என்பதை மறக்கடித்தும் விடுகிறது.காரணம் ஒமியோ மருந்துகள் மனதிலும் வேலை செய்யும்தன்மை உள்ளது.நோய்க்கான மருந்தாகாமல் மனித உடல்-மனத்துக்குமான மருந்து ஓமியோபதி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் வெளியிடும் அறிக்கைகள் தமிழக மக்களின் தலைவிதி என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டசபையில், தி.மு.க., ஆட்சியில், குடிநீர்த் திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை என்பதைப் போலவும், முதல்வர் ஜெயலலிதா தான் நரிப்பையூர், ராமநாதபுரம், மீஞ்சூர், ஒகேனக்கல், நெம்மேலி குடிநீர்த் திட்டங்களை கொண்டு வந்ததைப் போலவும், சபையில் பெருமையாக பேசிக் கொள்கிறார். போகிற போக்கைப் பார்த்தால், கல்லணையை கட்டியதே கரிகாலன் அல்ல. 
தான்  தான் என்று 110 வது விதியின் கீழ் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 இது 110வது விதி அல்ல.   தமிழக மக்களின் தலைவிதி. "
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 "நாணய"க்குவியல் ,

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எஃப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள  தங்க,வெள்ளி நகைகள் ,வைரங்கள்,விலைமதிப்பு மிக்க கற்கள் உள்ளன.
இதில் " பி" அறையை தவிர மற்ற 5 அறைகளும் திறக்கப்பட்டு அவற்றில் உள்ள செல்வங்களை உச்ச நீதிமன்றம் நியமித்த 6 பேர் அடங்கிய குழு மதிப்பீடு செய்து வருகிறது. 
மதிப்பீடு விவரம் பற்றி 4 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 
அதன்படி, இதுவரை செய் யப்பட்ட மதிப்பீட்டின் விவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இக்குழு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
"சி, டி, இ மற்றும் எஃப் அறை களில் உள்ள செல்வங்களை மதிப் பிடும் பணிகள் முடிந்து விட்டன. ஏ அறையில் உள்ள செல்வங்களை கணக்கிடும் பணி நடைபெறுகிறது. 216 நாட்கள் கணக்கெடுப்பு நடந்தது.
 மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 656 பொருட்கள் கணக்கிடப்பட்டு உள்ளன. ஒரு நாளில் அதிகபட்சமாக 3 அல்லது 4 அணிகலன்களை மட் டுமே மதிப்பீடு செய்ய முடிந்தது.
ஒவ்வொரு அணிகலனிலும் குறைந்தது 75 முதல் 300 வரையிலான வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது தான் மதிப்பீடு தாமதத்துக்கு காரணம்
ஒரு அணிகலனை மதிப்பிடுவது 300 பொருட்களை பரிசோதிப்பதற்கு சமம். 
ஒரு தங்கச் சங்கிலியின் பதக்கத் தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு 997 வைரக்கற்கள் பதிக்கப் பட் டுள்ளன. பெரும்பாலான தங்கச் சங்கிலி பதக்கங்களில் நூற்றிற்கும் மேற்பட்ட வைரக் கற்கள் உள்ளன. 
இதுவரை 19.50 லட்சம் தங்க நாண யங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எடை 700 கிலோ.
இந்த நாணயங்களை மதிப்பிடு வதற்கு குறைந்தது 2 மாதங்களாகும். 
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, போன்ற நாடுகளின் தங்க நாணயங்கள் இந்த செல்வப்புதையலில் ஏராள மாக உள்ளன. 
13ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்களும் கண்டு பிடிக் கப்பட்டுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
 இவ்வளவு நகைகளும்,செல்வங்க்களும்தங்க்க நாணயங்களும் இதுவரை உபயோகத்தில் இல்லாமல் வெறும் கருங்கற்கள் அறையில் முடங்கிக் கிடந்துள்ளன.
இவற்றை மொத்தமாக அமுக்கி ஆட்டையை போட  திரு வாங்க்கூர்  முன்னாள் அரச குடும்பத்தினர் முயற்சித்துள்ளனர். முயற்சித்தும் வருகின்றனர்.
பாயாச வாளியிலும் ,பிரசாத கூடையிலும் மன்னர் பரம்பரையினர் கடத்தியது போக மிச்சம்தான் இது.அவர்கள் அரண்மனையிலும் சோதனையிட்டு கடத்திய நகைகளை கைப்பற்ற வே ண்டும்.
இவை அனைத்தும் மக்கள் தங்களின் மூட நம்பிக்கையால் வழங்கிய காணிக்கைகள்தான் அரசு இவற்றை கையகப்படுத்தி நலத்திட்டங்களுக்கு உபயோகிக்க வேண்டும் .மக்கள் பணம் மக்களுக்கே சேர வேண்டும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 திரிபுரா வழியில் தமிழக ம் செல்லுமா?
-----------------------------------------------------------

மூடநம்பிக்கை வியாபாரிகள் இப்போது அறிவியல் கண்டுபிடிப்புகளை தங்கள் மூட தொழிலுக்கு  சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம், சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் முதலில் நுழைபவர்கள் இவர்கள்தான். வெகு மக்களைச் சென்றடையும் ஊடகங்களின் மூலம் மக்களின் மூடநம்பிக்கையை வளர்த்துப் பணம் சேர்க்கும் கொள்ளைக்காரர்களாக உருவாகின்றனர். அரசோ, நீதிமன்றங்களோ இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சாமியார்கள், ஜோசியக்காரர்களின் ஆட்சி ஊடகங்களில் பெருகிவிட்டது. இந்நிலையில் மிகச் சரியான நடவடிக்கையை அண்மையில் திரிபுராவின்  மார்க்சிய கம்யூனிஸ்ட் அரசு எடுத்துள்ளது.
iPiccy: Loading picture
ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, அவர்களின் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் ஜோசியர்கள் சிலரும் சாமியார்கள், மந்திரவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும்  தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனராம். இதன் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு திரிபுரா தலைநகர் அகர்தலாவில்  ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடத்த, பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதி(?)யை அழைத்து வந்தனர். ஆனால், இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். சாமியார்களும், மந்திரவாதிகளும் ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.
ஓட்டல்களில் தங்கிக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்து தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும் மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர். இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.
suran
தமிழ்த் தொலைக்காட்சிகள் சிலவற்றில் தாயத்து, மந்திரத்தகடு விற்கும் புதிய கும்பல் சில மாதங்களாக அடியெடுத்து வைத்துள்ளது என்பதைத் தமிழகக் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவர்களைப் போலவே நித்தியானந்தா,ராஜவைத்தியர் விஜயகுமார்  போன்ற ஹைடெக் சாமியார்களும் தியானம், யோகா என்கிற பெயரில் தொலைக்காட்சி மூலமாகத்தான் விளம்பரம் பெறுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
கசாரே விவகாரத்தை ஒட்டி தானும் பரபரப்பை எற்படுத்தி போலிசுக்கு பயந்து சுடிதாரில் ஒடி தப்பிய சாமியார் சொந்தமாக தொலைக்காட்சி யே நடத்துகிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran