புதன், 10 ஏப்ரல், 2013

மனிதன் மட்டுமா குரங்கில் இருந்து .........,?


       " விக்கி லீக்ஸ் "-  லீ க்கிய  விடயங்கள்.,

  கொஞ்ச காலம் சும்மாயிர்ந்த விக்கி லீக்ஸ் இப்போது மீண்டும் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு  வருகிறது .
அதிலும்  இந்தியா -அமெரிக்க தொடர்பு செய்திகள் அதிகம் .
 இந்தியாவின்  பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது சுவீடன் நாட்டு நிறு வனங்களுக்கான தரகராக ராஜீவ்காந்தி செயல்பட்டிருக் கிறார் என்று ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் அதிரடித் தக வல்களை வெளியிட்டிருக் கிறது.
' இந்து’ நாளிதழ் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளதாக வெளியிட்ட  தகவல் களின்படி" 1970-ல் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கானியா இந்தியாவுக்கு போர் விமா னங்களை விற்பனை செய்ய முன்வந்தது. இதில் ராஜீவ் காந்தி இடைத்தரகராக செயல் பட்டிருக்கிறார். இந்தியாவின் போர் விமான கொள்முதலில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது என்று கூற ப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள அமெ ரிக்க தூதரகத்தின் 1975ஆம் ஆண்டு ஆவணத்தில், சுவீடன் தூதரக அதிகாரி ஒருவர், இந்தி யன் ஏர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்து வந்த ராஜீவ் காந்தி ‘தொழில்முனைவோர்’ என்ற பெயரில் விமான நிறுவனங்க ளுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறியுள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆவணங்களை யும் இந்து நாளிதழ் வெளி யிட்டிருக்கிறது.ஆனால் இதை நிராகரித் திருக்கும் காங்கிரஸ், விக்கிலீக் ஸின் நம்பகத்தன்மை கேள் விக்குரியதாகும். இதற்கெல் லாம் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்று கூறியுள் ளது.

 நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாரா யணன் 2005-ல் நியமிக்கப் பட்டபோது பிரதமருக்கான நெருக்கமான இடத்தில் ‘கேரள மாஃபியா’ உட்கார்ந் திருக்கிறது என்று அமெரிக்கத் தூதராக இருந்த முல்போர்டு கருத்து தெரிவித்த ஆவணத் தையும் விக்கிலீக்ஸ் வெளியிட் டிருக்கிறது.
எம்.கே.நாராயணன் 2005 ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டார். அப்போது ஏற்க னவே பிரதமரின் முதன்மை ஆலோசகராக டிகேஏ நாயர் இருந்தார். அவர் ஒரு கேரளக் காரர். பொதுவாக மத்திய அரசு வட்டாரங்களில் இந்தி மொழி பேசுவோர் ஆதிக்கமே அதி கம். ஆனால் தற்போது மன் மோகன்சிங்குக்கு மிக நெருக் கமான இடத்தில் கேரளத்தைச் சேர்ந்த 2 பேர் செயல்படுவது ஆச்சரியாமக இருக்கிறது. இவர்கள் ‘கேரள மாஃபியா’ என்று முல்போர்டு அமெரிக் காவுக்கு அனுப்பிய ஆவணத் தில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது.
இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசர நிலை நடை முறையில் இருந்த போது அர சுக்கு எதிராக செயல்படுவ தற்காக அமெரிக்காவின் நாச கர உளவு அமைப்பான சிஐஏ வின் நிதி உதவியை முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோரியதாக வும் விக்கிலீக்ஸ் தகவல் வெளி யிட்டிருக்கிறது.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் 
ஐக்கிய ஜனதா தளம் கட்சி யின் தலைவர்களில் ஒருவரும் பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந் தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1975-ல் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசரநிலை அமல் படுத்தப்பட்டது. அதை எதிர்த்து கடுமையாகப் போராட்டம் நடத்தி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் பெர்னாண்டஸ். அமெரிக்காவை எதிர்த்து ‘சோசலிசம்’ பேசக் கூடியவ ராக அப்போது பார்க்கப்பட் டார்.ஆனால் அதே பெர்னாண் டஸ் அவசரநிலைக் காலத்தில் மத்திய அரசுக்கு எதிராக சீர் குலைவு நடவடிக்கைகளுக் காக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவிடம் நிதி கோரினார் என்கிறது விக்கி லீக்ஸ். விக்கிலீக்ஸ் தகவலின் படி, 1975 ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று பிரெஞ்சு தொழில்துறை அமைச்சர் மான்பிரெட் துரல்ச்சை பெர் னாண்டஸ் சந்தித்துப் பேசி யிருக்கிறார். 
அப்போது இந் திய அரசுக்கு எதிரான போராட் டத்துக்கு பிரெஞ்சு அரசின் உதவியை பெர்னாண்டஸ் கோரியிருக்கிறார். ஆனால் பிரெஞ்ச் அரசு உதவி செய்ய மறுக்கிறது. 
அதை தொடர்ந்து சிஐஏவின் தொடர்புகளை ஏற் படுத்தித் தருமாறு ஜார்ஜ் பெர்னாண்டஸ் கேட்டிருக் கிறார். 
மேலும் இந்த உரை யாடலின் போது" இந்திய அர சுக்கு எதிராக சீர்குலைவு நட வடிக்கையில் ஈடுபட 300 பேர் தம்முடன் இருப்பதாகவும் தென்னிந்தியாவில் ரயில்வே பாலங்களையும் மும்பை- புனே இடையேயான ரயில் பாலத்தையும் தகர்த்திருக்கி றோம்" என்றும் பெர்னாண் டஸ் கூறியுள்ளார் என அதில் இடம்பெற்றுள்ளது.
 இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் இந்திரா காந்தியின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாமல் ஒரு பக்கம் அமெரிக்கா கடுமை யாக திணறியபோதும், இந் திராவின் வீட்டுக்குள்ளேயே கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத் திற்கு தனது உளவாளியை வைத்திருந்தது என்ற அதிர்ச் சித் தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
1975ம் ஆண்டு முதல் 1977 வரை இந்த உளவாளி, இந்திரா காந்தியின் வீட்டுக்குள் ஊடுரு வியிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரி விக்கிறது.
1975ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அவசர நிலையை பிர கடனம் செய்தார் இந்திரா காந்தி. அப்போது அவருக்கு பின்பலமாக இருந்தவர்கள் இளையமகன் சஞ்சய் காந்தி யும், ஆர்.கே.தவாணும்தான். இதை இந்திரா வீட்டில் நுழைந்த உளவாளி மூலம் உறு திப்படுத்த முடிந்ததாக அமெ ரிக்கத் தூதரகத்தகவல் தெரி வித்துள்ளது.
 நெருக்கடி நிலைக் குப் பிறகு சஞ்சய் காந்தியின் பிடி காங்கிரஸ் கட்சிக்குள் ளும், ஆட்சி அதிகாரத்திற்குள் ளும் வலுத்து வருவதாகவும் அந்த உளவாளி தெரிவித்ததாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மனிதன் மட்டுமா குரங்கில் இருந்து வந்தான்.?
--------------------------------------------------------------------

இன்றைய மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தது என்பதை தெரிவிக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
எத்தியோப்பிய காடுகளில் வசிக்கும் பபூன் ரக குரங்குக்கு நெருங்கிய பிரிவான கெலாடா ரக குரங்குக்கு சொந்தமான சிக்கலான குரல்கள் மனிதர்களின் ஆதிமொழியை ஒத்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். குரங்கினங்களிலேயே, மிகவும் சிக்கலானதாக கருதப்படும் கெலடா குரங்கின் ஒலிகள், மனிதர்களிடம் மொழிகள் தோன்றிய விதத்தை விளக்கப் பயன்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
"ரொம்ப புகழாதிங்க "
கரண்ட் பயாலஜி என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் புதிய ஆய்வின் முடிவுகளின்படி, இந்த கெலடா குரங்குகளின் ஒலிகள், மனிதர்களின் பேச்சு ஒலிகளின் அம்சங்களுக்கு மிகவும் நெருங்கி வருகிறது. கெலடா குரங்குகள் எழுப்பும் ஒலிகள் வித்தியாசமானவை மட்டுமல்ல, சிக்கலானவையும் கூட. கிப்பன்ஸ், சிம்பன்சி உள்ளிட்ட பெரும்பான்மை குரங்குகள் வெறும் அடிப்படை ஒலிகளை மட்டுமே எழுப்பவல்லவை. இது பரிணாமவியல் அறிஞர்களுக்கு பலநாட்களாக புரியாத புதிராகவே இருந்தது. அதாவது பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு மிக நெருங்கிவரும் குரங்கினம், மனிதர்களின் வாய்மொழி ஒலிகளைப்பொறுத்தவரை மிகவும் விலகி இருப்பது ஏன் என்கிற கேள்விக்கு விஞ்ஞானிகளால் இதுவரை விடைகாண முடியவில்லை.
ஆனால் தற்போது தங்களின் இந்த நெடுநாள் கேள்விக்கு விடை காண்பதில் கெலெடா குரங்குகளின் ஒலிகள் உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்த கெலடா குரங்குகளின் வித்தியாசமான ஒலிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, மனிதர்களின் வாய்மொழி ஒலிகளின் பொதுவான ஒலிவடிங்களோடு, இந்த கெலடா குரங்குகளின் வாய்மொழி ஒலி அலைகள் மிகவும் ஒத்துப் போவதை இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் மனிதர்கள் பேசும்போது தாடையும், உதடும் நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து இயங்குவதைப்போலவே, இந்த கெலடா குரங்குகள் ஒலியெழுப்பும்போது, அவற்றின் தாடைகளும், உதடுகளும், நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து செயற்படுவதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள்.
குரங்கினங்களில் இப்படியான வாயசைவுகளை தாங்கள் கவனிப்பது இதுவே முதல்முறை என்கிறார் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் முனைவர் தோர் பெர்கம். மனிதர்களின் பேச்சுவடிவத்தின் ஆரம்பகட்ட ஒலிகள் இந்த கெலடா குரங்குகளின் ஒலிகளை ஒத்து இருப்பதாக கருதுகிறார் அவர்.
தங்களின் ஆய்வின் அடுத்த கட்டமாக, கெலடா குரங்குகளின் ஒலிகளுக்கு குறிப்பாக அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதை ஆராயவிருக்கிறார்கள்.
மனிதரகள் குழுக்களாக வாழும்போது ஒருவர் மற்றவருடன் நெருக்கமாவதற்கு தங்களின் பேச்சை பயன்படுத்துவதைப் போலவே, பெருங்கூட்டமாக வாழும் இந்த கெலடா வகை குரங்குகளும் தங்களுக்குள் ஒன்றோடொன்று நெருக்கமாவதற்கு தமது வாயொலிகளை பயன்படுத்துவதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

நன்றி:BBC
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran