நடிகர்கள் சங்கம்



சில நாட்களுக்கு முன்னர் நடிகர்கள் இலங்கை பிரச்னைக்காக உண்ணாநிலை போராட்டம் நடத்தினார்கள்.
அதில் சில நிகழ்வுகள்.இந்த போராட்டமே முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறி பல் நாட்கள் கழித்து அனுமதி கிடைத்ததுதான் நடத்தப்பட்டது.தன்னிந்திய நடிகர் சங்கம் இப்போது அ .தி.மு.க, கிளப்பிரிவு போலாகி விட்டது.முன்பும் நடிகர்கள் சங்கம் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொள்ளும்.அதன் மூலம்  தங்கள்  காரியங்களை சாதித்துக்கொள்வார்கள்.
ஆனால் இப்போதோ தலைவர்,செயலர் இருவரும் அதிமுக தொண்டர்கள்.அதிலும் சரத் குமார் ஜெயலலிதாவின் முரட்டு பக்தர்.
உண்ணா போராட்டம் அன்று வந்த ஒரு சிலரைத்தவிர மற்ற அணைத்து நடிகர்களுமே வேறு வழியி ன்றிதான் வந்து சென்றார்கள் .
நடிகர் ரஜினி 11மணிக்கு வந்து விட்டு ஒரு மணிக்கு கிளம்பி விட்டார்.
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் இரண்டாம் பாக்க வேலை மும்பையில் இருக்கிறது.பணம் செலுத்தி வேலை நடக்கிறது என்று கூறி தனக்கு விதி விலக்கு கேட்டபோது எப்படியாவது மாலையில் கலந்து கொண்டாவது போராட்டத்தை பழ ரசம் கொடுத்து முடிக்க வாருங்கள்.என்று சரத் குமாரும்-ராதாரவியும் கேட்டுக்கொள்ள அவரும் அதை நம்பி கலந்து கொள்ள வந்தார்.அங்குதான் அவரை வர வைத்து கழுத்தறுக்கும் செயலை அம்மாவின் விசுவாசிகள் செய்துள்ளனர்.
கடைசியில் பேசி பழரசம் கொடுக்கும் வேலை வந்த போது ராதாரவி
"இங்கு ஒருவரையும் பேசவிடாமல் வைத்திருந்தோம்.நீங்கள் இப்போது பேசினால் பிரச்னையாகி விடும் ,எற்கனவே நடிகர் சிலம்பரசன்   தான் பேச வேண்டும் என்று கெட்டுக்கொண்டிருக்கிறானவன் பிரச்னையாக்கி விடுவான்.நீங்களும் பேச வேண்டாம் .வெறுமனே பழரசத்தை மட்டும் கொடுத்து முடித்து வையுங்கள்".என்று கமலிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.கமலு ம் சரி என சொல்ல  சிறிதுநேரத்தில் ஒலிபெருக்கியில்
"இப்போது மாணவர் போராட்டத்தை  வைத்த லயோலா கல்லுரி மாணவர் பழரசம் கொடுத்து இந்த போராட்டத்தை முடித்து வைப்பார்."
என்று முழங்கப்பட்டுள்ளது .அவ்வளவுதான் கமல்ஹாசனுக்கு தான் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது தெரிந்து விட்டது.அவர் முகம் சினத்தால் சிவந்தது போலாக சிறிது நேரத்தில் ஒருவரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டார்.
 காரணம் என்ன?
எல்லாம் கமலின் "விஸ்வரூபம் "தான்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில் அரசியல் செய்த ஜெயலலிதாவின் அடிப்பொடிகளின் அரசியல்தான் இது.
படம் வெளியாக தடை அது,இது என்று பரபரப்பாக இருந்த கட்டத்தில் நடிகர் சங்கம் வாயடைத்து தூங்க்கிக் கொண்டிருந்தது.அதை சிலர் நடிகர்களும்,மற்றவர்களும் தட்டிக்கேட்டனர்.அதனால் தட்டிக்கேட்ட நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக ராதாரவி மிரட்டினார்.குறிப்பாக விஷால் .
அதற்கு கமல்ஹாசன் பதிலளிக்கையில் "தம்பி விஷால் மீது நடவடிக்கை எடுத்தால் நான் அவருக்கு உறுதுணையாக இருப்பேன். நடவடிக்கையை சந்திப்பேன்."
என்றார்.அது முதல் புகைந்த பிரச்னைதான் உண்ணா நிலை போராட்டத்தின் மூலம் பழைய தீர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இது சங்கத்தின் உள் பிரச்னைதான்.ஆனால் விஸ்வரூபம் பிரச்னையின் போது நடிகர் சங்கம் நடந்து கொண்ட முறை தவறுதான்.
விஷாலுக்கு தயாரிப்பாளர் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதற்கு நடவடிக்கை எடுக்காததும் தவறுதான்.
நடிகர்கள் பிரச்னையை நடிகர் சங்கம் தானே தீர்த்து வைக்க வேண்டும் ?
அதை விட்டு விட்டு ஆள்வோர்களை பாரட்டிக்கொண்டிருப்பதும்-பாராட்டு விழா நடத்துவதும்துபாயில் நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும் ,சங்க கட்டிடங்களை குத்தகைக்கு விட்டு காசு பார்ப்பதும்தான் ஒரு சங்கத்தின் பணியா?
முதலில் இந்த அரசியல்வாதி நடிகர்களை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குங்கள்.சிவகுமார் போன்ற நேர்மையான நடிகர்களை தலைவர்-செயலாளராக்குங்கள் .
நடிகர் சங்கம் உருப்படும்.
இவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டமும் கூட சில பழி வாங்கல் களுக்காக நடத்தப்பட்ட நாடகம்தான்.வராமல் கமல்ஹாசனும்விஷாலும் இருந்தால் இதை சாக்கிட்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.வந்தால் அவமானப்படுத்தலாம்.
இரண்டாவது நடந்து விட்டது.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?