பெயர் சூட்டல்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெயர் சூட்டல் வேண்டாம் .
------------------------------------------
சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரைச் சூட்டியது போல், உள்நாட்டு விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரைச் சூட்டியதுபோல எம்.ஜி.ஆரின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்துக்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறது என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது போன்று கட்டங்களுக்கு பெயர் சூட்டுவதும்,சிலைகளை நிறுவுவதும் திட்டங்களுக்கு பெயர் கொடுப்பதும் முன்னாள் தலைவர்கள் பெயர்களை பெருமைப்படுத்துவதாக தெரியவில்லை.
கண்ண்ணகி சிலையை ஒளித்து வைத்த ஆட்சிதான் இப்போதிய ஆட்சி.ஆட்சியாளர்களே இப்படி யிருந்தால் ?
மக்கள் இளைத்தவர்களா?
அம்பேத்கர்,முத்துராமலிங்கம்,வ.உ .சி. காமராஜர் ,காந்தி போன்றோர் சிலைகள் அவமதிப்பும் அதைத் தொடர்ந்த கலவரங்களும் தமிழ் நாட்டில் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இது பொன்ற தலைவர்கள் பிறந்த நாட்கள் வந்தாலே அவரின் சாதியினர் கொண்டாடும் விழாக்களால் எத்தனை உயிர் போகப்போகிறதோ எத்தனை பேருந்துகள் சேதமாகப்போகிறதோ என்ற கவலைதான் மக்களுக்கு வருகிறது.
முன்னாள் தலைவர்கள் எல்லோரும் இருக்கும் போது சீண்ட ஆளில்லாமல் இ ருந்தாலும் அவர்கள் இப்போது தனி ஆள் இல்லை அவர்களுக்கு பின்னர் ஒரு வெறி பிடித்த சாதி சனங்கள் இருக்கிறார்கள்.அவர்கள் பெயரால் அரசியல் நடத்தி வாழும் தலைவர்கள் இருக்கிறார்கள்.
முன்பு பேருந்து கோட்டங்களுக்கும்,மாவட்டங்களுக்கும் தலைவர்களின் பெயர்களை வைத்து விட்டு பின்னர் எடுத்த கடைக்கு அல்லது வரலாறுக்குப்பின்னர் எத்தனை சாதிய மோதல்கள் ,படுகொலைகள்,வீடுகள் தீவைப்பு,பேருந்துகள் உடைப்பு,சாலி மறியல்கள் இருந்தன என்பதை இப்போதைய முதல்வர் அப்போதும் முதல்வராக் இருந்து கண்டு களித்தவ்ர்தானே .
இப்போதும் தனக்கு பிடித்தவர் பெயர் வைக்க முயற்சிப்பது தவறு.
எம்.ஜி.ஆர்.தமிழகத்தை பொறுத்தவரை சாத்திய பின்னணி கொண்டவர் இல்லையே எனலாம்.
ஏற்கனவே முத்து ராமலிங்கத் தேவர் , பெயரை வைக்கச்சொல்லி ஒரு கூட்டம் போராட்டங்கள் நடத்துகிறது.அதையும் வைத்தால் அடுத்து
அம்பேத்கர்,வ.உ.சி.,பெரும்பிடுகு,இரட்டைமலை,ஒண்டி வீரன் என்று பெயர் வைக்க பெரிய பட்டியலுடன் ஒரு கும்பலே போராட தயாராக கலவரத்தை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
உலக நாடுகளில் அந்தந்த இடத்தின் பெயரால் தான் விமான,பேருந்து நிலையங்கள் அழைக்கப்படுகின்றன.
இங்கு தமிழ் நாட்டில்தான் அரசியல் நடத்த பெயர்கள் சூட்டி விளையாடுவது இருக்கிறது.சாதி பின்னணி இல்லாமலே அரசியில் காரணத்துக்காக எம்.ஜி.ஆர்.இறந்தவுடன் கருணாநிதியின் வெண்கலச் சிலையை உடைத்துள்ளார்கள்.காரணம் கருணாநிதியா எம்.ஜி.ஆர் சாவுக்கு காரணம்?
வெறும் அரசியல்.
அந்த காழ்ப்பு அரசியல் இன்னமும் தமிழ் நாட்டில் இறந்து விடவில்லை.
கருணாநிதி என்ற பெயர் வைத்துக் கொண்டு செருப்பையும் கழற்ற சொன்னதற்காகவே சிறையில் மருத்துவர்களை அடைக்கும் வீரியத்துடந்தான் இருக்கிறது .
ஆட்சி மாற , கட்சி மாற, சமாதிகள் கூட பல வடிவங்கள் பெரும் இறக்கையுடன் மாறிவிடும்
தங்கத் தமிழ் நாடு இது.
இடங்கள் பெயர்களையே வையுங்கள்.கலவங்க்களுக்கும்-போராட்டங்களுக்கும் இடங்கொடாதீ ர்கள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மாரத்தான் போட்டி மிகப் பழமையானது.
தொடர்ந்து நடக்கும் இப்போட்டி உலகப் புகழ் பெற்றது.பல நாடுகளில் இருந்தும் மாரத்தான் வீரர்கள் பங்கு கொள்வார்கள்.
இன்றைய போட்டி முடியும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்தது.இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர்.அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் தகவல் தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள் மேலும் 141பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என தெரிகி கிறது.இதனையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.