"ஆண்டுக்கு முப்பதாயிரம்"{கணக்கில் வந்தது மட்டும்.}
இன்று இந்தியாவில் தலையாய பிரச்னை மட்டுமல்ல இந்திய தலைநகரையே ஆட்டிப் படைக்கு ம் பிரச்னை பாலியல் பலாத்காரம்தான்.
அதிலும் சிறார் கற்பழிப்பு அதிகரித்து வருகிறது.
மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிக அளவு உணர்ச்சி பூர்வமாக இருந்தாலும் பலாத்காரங்களும் அதே அளவு உணர்சியுடன் தொடர்கிறது.அதுவும் டெல்லியில் அதிகமாகவே உள்ளது.காரணம்.?புரியா த புதிர் .
காவல்துறையினர் மீதுதான் இப்போது முழு குற்றமும் உள்ளது.அவர்களின் உருப்படியான நடவடிக்கைகள் இல்லாமை இப்படியான பாலியல் செயல்கள் பெருக காரணம்.
மேலும் குற்றவாளிகளிடம் காட்ட வேண்டிய கோபத்தையும் -அடக்குமுறைகளையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் போராடுபவர்கள் மீதும் காட்டுவது டெல்லி காவல்துறையினரின் கையாலாகத் தனத்தின் வெளிப்பாடுகள் தான்.
இப்போது 5 வயது சிறுமி பலாத்கார நிகழ்வில் அவரின் தாயாரையும் உடன் வந்தவர்களையும் தாக்கிய காவல்துறையின் செயல் மிக அதிக பட்ச கேவலம்.
இது தொடர்பாக உலக அளவிலான நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவில் பெண்கள் மீதான் பாலியல் வன்முறைகளை உலகமெங்கும் எடுத்துக்காட்டி அசிங்கப்பட வைத்துள்ளது.
தற்போது யு னி செப் வெளியிட்டுள்ள அறிக்கை:-
"கடந்த சில நாட்களாக டெல்லியில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை பார்க்கையில் வீதிகளிலும், பள்ளிகளிலும், பணியிடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக துரித நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.
தற்போது டெல்லி ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடி வரும் 5 வயது சிறுமி பூரண நலமடைய வேண்டும் என்ற அவரது பெற்றோரின் பிரார்த்தனையில் யூனிசெஃபும் பங்கேற்கிறது.
சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, "ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காகின்றனர்.
இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுமிகள்" என தெரிய வந்துள்ளது.
பச்சிளம் தளிர்கள் உள்பட சுமார் 7 ஆயிரத்து 200 சிறுமிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இதைவிட பன்மடங்கு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமல், புகார்களாக பதிவு செய்யப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன.
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அரசு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பினும், உரிய முறையில் பிரயோகப்படுத்தாத வரை இந்த சட்டங்களினால் பெண்களுக்கு பாதுகாப்போ, நிவாரணமோ அளிக்க இயலாது.
5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடுமை, சட்டங்களை சரியான முறையில் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாய நிலையை தற்போது எற்படுத்தியுள்ளது.'
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறியபடி பல கற்பழிப்பு குற்றசாட்டுகளை காவல்துறையினர் வாங்குவது இல்லை அதை பதிவதும் இல்லை.
சொல்லப் போனால் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அனுப்பிவைப்பதுதான் காவல்துறையினரின் பாதுகாப்பாக உள்ளது.
இதை டெல்லி முதல் குமரி வரை மாநில வேறுபாடுகளில்லாமல் எல்லா காவல் துறையினரும் கடை பிடிப்பதில் மட்டும் நம் இந்திய ஒற்றுமை அதிகமாக உள்ளது.
இந்திய முதல் குடிமகன் இந்த பாலியல் வன்முறைக்கு எதிராக அறிக்கை மட்டுமே விட்டு வைக்க முடிகிறது.தனது கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க முடியாதது மட்டும் ஏன் என்று தெரியவில்லை.
உலக வங்கியும்,அமெரிக்காவும் இந்தியாவில் பாலியல் வன்முறை குறைந்தால்தான் இனி அந்நிய முதலீடு என்று மன்மோகன் சிங் அரசிடம் சொன்னால் மட்டுமே இந்த பாலியல் பலாத்காரங்களை நம் இந்திய அரசு கடுமையாக கட்டுப்படுத்தும் என்று எனக்கு தோ ன்றுகிறது.
அதிலும் சிறார் கற்பழிப்பு அதிகரித்து வருகிறது.
மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிக அளவு உணர்ச்சி பூர்வமாக இருந்தாலும் பலாத்காரங்களும் அதே அளவு உணர்சியுடன் தொடர்கிறது.அதுவும் டெல்லியில் அதிகமாகவே உள்ளது.காரணம்.?புரியா த புதிர் .
காவல்துறையினர் மீதுதான் இப்போது முழு குற்றமும் உள்ளது.அவர்களின் உருப்படியான நடவடிக்கைகள் இல்லாமை இப்படியான பாலியல் செயல்கள் பெருக காரணம்.
மேலும் குற்றவாளிகளிடம் காட்ட வேண்டிய கோபத்தையும் -அடக்குமுறைகளையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் போராடுபவர்கள் மீதும் காட்டுவது டெல்லி காவல்துறையினரின் கையாலாகத் தனத்தின் வெளிப்பாடுகள் தான்.
இது தொடர்பாக உலக அளவிலான நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவில் பெண்கள் மீதான் பாலியல் வன்முறைகளை உலகமெங்கும் எடுத்துக்காட்டி அசிங்கப்பட வைத்துள்ளது.
பாலியல் வன்முறைக்கு எதிராக |
தற்போது யு னி செப் வெளியிட்டுள்ள அறிக்கை:-
"கடந்த சில நாட்களாக டெல்லியில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை பார்க்கையில் வீதிகளிலும், பள்ளிகளிலும், பணியிடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக துரித நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.
தற்போது டெல்லி ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடி வரும் 5 வயது சிறுமி பூரண நலமடைய வேண்டும் என்ற அவரது பெற்றோரின் பிரார்த்தனையில் யூனிசெஃபும் பங்கேற்கிறது.
சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, "ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காகின்றனர்.
பாலியல் வன்முறைக்கு வயதில்லை.இவன் அசாம் மாவட்ட காங்கிர சு தலைவர். |