ஊழல். காப்பீடு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளே போய் வெளியே வந்து வீட்டில் அமைதியாக இருந்தாலும் துணை கிரகங்கள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவது வெளிப்படையாகவே மக்கள் அறிந்த உண்மை.
தினந்தொறும் ஒவ்வொரு ஊழல் முறைகேடுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த பணத்தாசையால் அதிகாரி [தற்]கொலை செயததால் அமைச்சர் ஒருவர் பாளை சிறையில் வாடுகிறார்.
இன்றைய ஊழல் பரபரப்பு செய்தி. உயிர் காக்கும் துறையையும் அதிமுக அமைச்சர்
பெருமக்கள் விட்டு வைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல்.
தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அரசு செயல்படுத்தும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தான் அதிநவீன முறையில் ஊழல் நடைபெற்றுகிறது.
முந்தைய ஆட்சியில் காப்பீடு திட்டத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி, அதற்கு பதிலாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் உள்பட 769 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 650க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவமனைகள்.
இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் பெரிய மருத்துவமனைகளின் உரிமையாளர்களை சென்னைக்கு அழைத்துப் பேசிய முக்கிய பிரமுகர், ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி, கடந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளதோ, அதில் 10 சதவீத அளவுக்கு ஆளுங்கட்சியின் தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும்படி கட்டாயப்படுத்தியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட தொகைக்கு விளம்பரம் தர மறுத்தால் அரசு தர வேண்டிய நிலுவை தொகையை வாங்க முடியாது என்று முக்கிய பிரமுகர் மருத்துவமனைகளைமிரட்டுவதாக கூறப்படுகிறது.
அதாவது லஞ்சமாக திரைமறைவில் கொடுக்கப்பட வேண்டிய பணம் விளம்பரக் கட்டணம் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு வெளிப்படையாக கொடுக்கப்பட்டு வருகிறது.
புத்திசாலித்தனமாக அதிமுகவினர் ஊழல் செய்கின்றனர். முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக இதுவரை ரூ.2110.64 கோடி செலவழிக்கப் பட்டிருக்கிறது.
நடப்பாண்டுக்கான ஒதுக்கீடு ரூ.781 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.2891.64 கோடி செலவழிக்கப்படுகிறது.
இதில் 10 சதவீத அளவுக்கு, அதாவது சுமார் ரூ.300 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. ஏழைகளுக்கு மருத்துவம் அளிப்பதற்கான திட்டத்தில் ஊழல் செய்வதை விட இவ்வுலகில் ஈனத்தனமான செயல் வேறு எதுவும் இருக்குமா?.
இவை எல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நடக்கிறது.என்று எழுதவும்.அமைச்சர்கள் கையுங்களவுமாக மாட்டி வேறு வழியில்லாமல் கைது நடந்தால்,அல்லது பதவி நீக்கம் நடந்தால் மட்டும் ஜெயலலிதா தவறு செய்தவர்களை தண்டிக்க சாட்டை எடுத்து விட்டார்.அடித்து விட்டாரா.உள்ளே தாலி விட்டார் என்று எழுதி செய்திகளை வெளியிடும் தினமலர் போன்ற பத்திரிகைகள் எவ்வளவு நாட்கள்தான் ஜெயாவின் ஊழல் ஆட்சியை தாங்கிப்பிடிக்கப் போகின்றன.?
ஜெயாவின் ஊழல்களுக்கு வர்க்கப் பாசத்துடன் தினமலர் வக்காலத்து வாங்கினாலும்.
உள்ளே சென்ற அக்ரி கிருஷ்ண மூர்த்தி முதல் அமைச்சர்கள் ,அதிமுக நிர்வாகிகள் செய்யும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கான ஊழல்களுக்கு அவர்கள் சொல்லும் வார்த்தை'மேலிடம் இவ்வளவு கேட்டுள்ளது.கண்டிப்பாக இவ்வளவு வேண்டும்.
என்பதுதான்.
அக்ரி மட்டுமல்ல அமைச்சர்கள் செய்யும் வழிப்பறியின் போது சொல்லும் பகிரங்க வார்த்தைகள்'அம்மாவுக்கு ரெல்லாம் தெரியும்"
அதை தினமலர் போன்றவர்கள் எப்படி வசதியாக மறந்து விட்டு இப்படி 'சிங்கி'அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தினமல்ர்களுக்கு ஒரு கேள்வி?"ஜெயா தொலைக்காட்சிக்கு இப்படி விளம்பரம் சேகரிப்பது கூட ஜெயாவுக்கு தெரியாமலா நடக்கும்?
அப்படி அவருக்கு தெரியாமலே நடந்துதான் இன்று சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று பிணையில் மீண்டுள்ளார்.
அது போலதான் என்றால் இவைகளை கூட தெரியாமல் ஜெயலலிதா என்ன ஆடிச் நடத்துகிறார்?கட்சி நடத்துகிறார்?
ஜெயாவுக்கு தெரியாமல் ஆட்சியிலும்,கட்சியிலும் ஒன்றும் நடக்காது என்பது தினமலருக்கு தெரியுமா?தெரியாதா?
கருணாநிதி ஆட்சியில் வட்ட செயலாளர் துட்டு வாங்கினால் கூட கருணாநிதி ஆட்சியில் ஊழல்
என்று செய்தி வெளியிடும் ஊடகங்கள் ஜெயா ஆட்சியில் மட்டும் அவருக்குத் தெரியாமல்தான் ஊழல்கள் ,முறைகேடுகள் எல்லாம் நடப்பதாக செய்தி வெளியிடுவது என்ன காரணம்?
அதுதான் பத்திரிக்கை தர்மம் என்கிறார்களே அதுவா?அல்லது நடு நிலை என்று போட்டுக் கொள்கிறார்களே அதுவா?
========================================================================
ஏப்ரல் -06.
- செலுலாயிட் கண்டுபிடிக்கப்பட்டது(1869)
- 1500 ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாயின(1896)
- ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது(கிமு 648)
- திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்டது(1947)