ஓசோன் பாதுகாப்பு தினம்.....!

சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு மண்டலத்தில்' தான் ஓசோன் உள்ளது. 
1840ல் ஜெர்மன் அறிஞர் பிரடரிக் ஸ்கான் பெயின் ஓசோனைக் கண்டறிந்தார். 
ஓசோனின் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். 
இதன் அளவு குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரீல் ஒப்பந்தம்' எனும் உடன்படிக்கை ஏற்பட்டது. 
இதைக் குறிக்கும் வகையில், செப்.16ல் "சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. "ஓசோன் படலத்தை பாதுகாத்தல்: இதற்கான பணி தொடரும்' என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்து.

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு, நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் தான் காரணம். குறிப்பாக, குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி.,) எனும் குளிரூட்டிப் பொருள் ஓசோனைச் சிதைத்து, அதன் அளவைக் குறைப்பதில் முதல் இடத்தில் உள்ளது. 
ஏ.சி., நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், தீயணைப்புக் கருவி, பாடி ஸ்பிரேஸ் போன்றவற்றில் இக்கார்பன் குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சி.எப்.சி., ஓசோன் பகுதியை அடைந்ததும், புறஊதாக் கதிர்களால் தாக்கப்பட்டு, குளோரினைத் தோற்றுவிக்கிறது. 
இந்தக் குளோரின் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது. ஒரு சி.எப்.சி., மூலக்கூறு, ஆயிரம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியது. அதனால் இதை "ஓசோன் கொல்லி' என்கின்றனர்.

ஓசோன் அளவு குறைந்தால், பூமியின் வெப்பம் உயரும். துருவப்பகுதிகளில் பனி உருகி, கடலின் நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். 
ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். 
இக்கதிர்கள், கடல் உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ள பிளாங்டான் எனும் மிதவை உயிரினங்களை எளிதில் கொல்லும். இவை அழிவதால், மற்ற கடல் உயிரிகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகும்.
ஆனால் இப்போது ஓசோன் படலம் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் மிக்கது.
வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை தங்கள் பிடியி வைக்கவே இந்த ஓசோன் ஓட்டை பீதியை கிளப்பியிருக்கிறார்கள் என்றும் செய்திகள் பர்வலாக வருகிறது.

சமூக தளங்கள் மூலம் 

வேலைக்கு ஆட்கள் தேர்வு.?

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில்,  வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் நிறுவனங்கள், படிப்பு, அனுபவம் அடிப்படையில் மட்டும் இல்லாமல், வேலைக்கு விண்ணப்பித்துள்ளவர் சமூக  வலைதளங்களில் பதிவு செய்துள்ள விவரங்களை வைத்து, அவரை வேலைக்கு சேர்ப்பதா வேண்டாமா என முடிவு செய்கின்றன என்று ஆய்வு  ஒன்றில் தெரியவந்துள்ளது. வேலை வாய்ப்பு தொடர்பாக வெப்சைட் நடத்திவரும் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியதில் இது தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு நாடு முழுவதும் சுமார் 1,200 நிறுவனங்களில் நடத்தப்பட்டுள்ளது. 59% நிறுவனங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தகவல்கள்  சேகரிக்கின்றன. இவர்களில் 68% நிறுவனங்கள், தாங்கள் வேலைக்கு எடுக்கும் நபர் சமூக வலை தளங்களில் என்ன பதிவு செய்துள்ளார்  என்றெல்லாம் ஆராய்ந்து, சரியில்லாத பட்சத்தில் வேலை வழங்க மறுத்துள்ளன. 
மேலும், 33% நிறுவனங்கள் எதிர்காலத்தில் இந்த முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளன. 75% நிறுவனங்கள் வேலைக்கு ஆள் தேட கூகுள்  போன்றவற்றை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. படிப்பு பற்றி பொய்யான தகவல்கள் கொடுத்திருப்பதன் மூலம் 50% பேருக்கு வேலை  மறுக்கப்பட்டுள்ளது. வலைதளத்தில் தகவல்களை கோர்வையாக பதிவு செய்யாததால் 50% பேருக்கு வேலை கிடைக்கவில்லை. தகவல் தொடர்பு  திறன் இல்லை என்ற காரணத்துக்காக வேலை மறுக்கப்பட்டுள்ளது. அதுபோல், கோபமூட்டும் வகையில் அல்லது பொறுத்தமற்ற வகையில்  தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட காரணத்துக் காக 47% பேருக்கும், முன்பு பணிபுரிந்த நிறுவனம் பற்றிய ரகசிய தகவல்களை  வெளியிட்டதற்காக 42% பேருக்கும் வேலை கிடைக்கவில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமின்றி போதைப்பொருள், குடிப்பழக்கம் பற்றி  வெளியிட்டவர்கள் 38% பேரும், கிரிமினல் நடவடிக்கை உள்ளதாக 35% பேரும், முந்தைய நிறுவனம் பற்றி மோசமாக விமர்சித்தவர்கள் 32% பேரும்  வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 

 ‘சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவல்கள் வேலைக்கு விண்ணப்பித்தவரின் பின்னணி, தோற்றம், நிறுவன கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பாரா  என்பன போன்ற விவரங்களை அறிய உதவுகின்றன‘ என பெரும்பாலான நிறுவனங்கள் ஆய்வின்போது கூறியுள்ளன. எனவே, வேலை தேடுபவராக  இருந்தாலும், வேறு நிறுவனத்துக்கு மாற முயற்சிப்பவராக இருந்தாலும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை பற்றிய  விவரங்களை பதிவு செய்யும்போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு நிறுவனம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?