சென்ற ஆண்டு இதே மாதம் நடந்தவை.
நேற்றைய செய்தி இன்றைய வரலாறு?
செப்., 1: வட மாநிலங்களில் பிரபலமான சாமியார், ஆசாராம் பாபு, 72. இவருக்கு, ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில், ஆசிரமங்கள் உள்ளன. ராஜஸ்தானின், ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த, 16 வயது சிறுமி, ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆக., 1ல் போலீசில் புகார்.
இதையடுத்து செப்., 1ல் சாமியார் கைது. இந்நிலையில் சூரத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டிச., 4ல், ஆசாராம் பாபு மகன், நாராயண் சாயும் கைது.
செப்., 6: ஆப்கானிஸ்தானில், இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி படுகொலை.
செப்., 9: பாகிஸ்தானின் புதிய அதிபராக மம்நூன் ஹூசைன் பதவியேற்றார். இவர் இந்தியாவில் பிறந்தவர்.
செப்., 12: ரசாயன ஆயுதங்களை சர்வதேச ஆணையத்திடம் ஒப்படைப்பதாக சிரியா ஒப்புதல், இதையடுத்து அமெரிக்கா, சிரியா மீதான தனது, ஆயுத நடவடிக்கையை நிறுத்தியது.
செப்., 14: இலங்கையில் வடக்கு மாகாணங்களுக்கு ரயில் சேவை துவக்கம். இது இந்திய ரயில்வே துறையால் செய்யப்பட்டது.
செப்., 16: அமெரிக்காவின் வாஷிங்டன் கடற்படை தளத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலி.
செப்., 18: ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியோ கிலார்டு பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய பிரதமராக டோனி அப்போட் பதவியேற்பு.
செப்., 19: ஆப்ரிக்காவில் உள்ள, சுவாசிலாந்து நாட்டின் மன்னர் எம்ஸ்வாட்டி, 15வது மனைவியை தேர்வு செய்தார்.
செப்., 24: கென்ய தலைநகர் நைரோபியில், ஷாப்பிங் மாலில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வாடிக்கையாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். பிணையக் கைதிகளாகவும் பிடித்தனர். இதில் 2 இந்தியர்கள் உட்பட 68 பேர் பலியாகினர்.
செப்., 25: பாகிஸ்தானில் பெஷாவர் அருகே தேவாலயத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலி.
செப்., 26: அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட கோர்ட்டின் நீதிபதியாக, அமெரிக்க இந்தியரான சீனிவாசன் பதவியேற்பு.
செப்., 28: இந்தோனேசியாவின் பாலீ தீவில் நடந்த 2013 "மிஸ் வேர்ல்டு' அழகிப் போட்டியில், பிலிப்பைன்ஸ் அழகி மேகன் யங், உலக அழகியாக தேர்வு.
இந்தியா
செப்., 2: ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதா, ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது.
* இம்மசோதா ஆக,. 26ல் லோக்சபாவில் நிறைவேறியது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் உள்ள 50 சதவீதம் பேரும் பயன்பெறுவர் என தகவல்.
செப்., 3: முன்னணி மொபைல் நிறுவன மான நோக்கியாவை 4 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது.
செப்., 9: லிபெரியா அதிபர் எலன் ஜான்சன் சர்லீப் மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை. 2012ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
செப்., 13: வரும் 2014 பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிப்பு.
செப்., 14: இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை திரிபுரா (94.65) பெற்றது. முதல் இடத்தில் இருந்த கேரளா, 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
செப்., 15: இந்தியாவின் நீண்ட தூரம் சென்று தாக்கும் (5000 கி.மீ., ), "அக்னி-5' ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை.
செப்., 20: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மீதான ஊழல் வழக்கில், போதிய சாட்சியங்கள் இல்லாததால் முடித்துக்கொள்வதாக சி.பி.ஐ.,அறிவிப்பு.
செப்., 21: "தி குட் ரோடு' என்ற குஜராத்தி திரைப்படம் "2014 - ஆஸ்கார்' விருது போட்டிக்கு, இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டது.
செப்., 23: ஆதார் அடையாள அட்டை, அனைவருக்கும் கட்டாயமில்லை. மேலும் இது சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு வழங்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
செப்., 25: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்துவதற்கு "7வது ஊதியக் கமிஷன்' அமைத்தது.
செப்., 26: காஷ்மீரின் ஹிராநகர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சம்பா ராணுவ முகாம் ஆகிய இரண்டு இடங்களில், பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல். ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் பலி. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
செப்., 27: அமெரிக்கவில் "சர்க்கியூட் கோர்ட்' எனப்படும் மேல்முறையீடு நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியர் சீனிவாசன், பொறுப்பேற்பு.
* 16 மாத சிறைவாசம்: கடப்பா தொகுதி எம்.பி.,யும் , ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், 2012 மே 27ல் ஐதராபாத் - சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், 16 மாதங்களுக்குப் பின் செப், 23ல், சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
செப்., 28: ஓட்டுப்பதிவு எந்திரத்தில், "யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' (நோட்டா) என்ற பட்டன் கட்டாயம் வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
*தெற்கு மும்பையில் டக்யார்டு என்ற இடத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலி.
செப்., 30: இங்கிலாந்துக்கான இந்திய தூதராக ரஞ்சன் மாத்தாய் நியமனம்.
தமிழகம்
செப்., 5: ஆசிரியர் தினத்தன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வைகைசெல்வன் நீக்கம். உயர்கல்வி துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கூடுதலாக அப்பொறுப்பு ஒப்படைப்பு.
செப்., 7: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில், கேயார் வெற்றி.
செப்., 15: தமிழகத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10க்கு விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெ., துவக்கினார்.
செப்., 21: நூற்றாண்டில் இந்திய சினிமா: தென்னிந்திய வர்த்தக சபை - தமிழக அரசு இணைந்து நடத்திய "இந்திய சினிமா நூற்றாண்டு' விழா சென்னையில் செப்., 21 முதல், 4 நாட்கள் நடந்தன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மண் சாண்டி மற்றும் தென்னிந்திய திரைத்துறையினர் பங்கேற்றனர். இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திரா 1913ல் வெளியானது.
செப்., 28: மலைக்கோட்டை டூ செங்கோட்டை: செப்., 26ல் திருச்சியில் நடந்த பா.ஜ., "இளந்தாமரை' மாநாட்டில் குஜராத் முதல்வர் மோடி பங்கேற்பு. இது, அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் நடந்த முதல் பொதுக்கூட்டம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
மங்கள்யான்
செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா முதன்முதலாக ஏவிய மங்கள்யான் செயற்கைக்கோள், 300 நாட்களாக 5 கோடி கி.மீ., தூரம் பயணம் செய்து, நாளை (செப்.24) செவ்வாயின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைகிறது.
பூமியிலிருந்து செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம், அதிகபட்ச தூரம் என உண்டு. சூரியனை இரண்டு கிரகங்களும் வெவ்வேறு பாதையில் சுற்றுவதால் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது. செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம் 5 கோடி கி.மீ., அதிகபட்ச தூரம் 40 கோடி கி.மீ., குறைந்தபட்ச தூரத்தில் செவ்வாய் வருவதை கணித்து, செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
தற்போது தவறவிட்டால் 2016ம் ஆண்டுதான் மீண்டும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
இதுவரை செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலங்கள் 50 சதவீதம் மட்டுமே வெற்றியடைந்துள்ளன. எந்த நாடும் இதுவரை முதல் முயற்சியில் செவ்வை அடைந்ததில்லை.சில தோல்விகளை சந்தித்தே வெற்றி பெற்றுள்ளன.ஆனால் இந்தியா மட்டுமே முதல் முயற்சியிலேயே சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை மட்டுமே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளன. நான்காவது நாடு இந்தியாதான்.
பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
மங்கள்யான் திட்டம் முழு வெற்றியடைந்தால் செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.
மங்கள்யான், ஆறு மாதங்களில் 60 முறை செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்.
முழுவதும் சூரிய சக்தியில் செயல்படும் மங்கள்யானில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்து உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மங்கள்யான் 426 கோடிகளில் உருவாக்கப் பட்டுள்ளது.தற்போது அமெரிக்கா செவ்வாய்க்கு அனுப்பி சோதிக்க அனுப்பிய 'மாவென் "களம் தயாரிக்க 2500 கோடிகள்.
ஏழைக்கேத்த எள்ளுருண்டை.?