சனி, 6 செப்டம்பர், 2014

பாலில் தண்ணீர் கலந்த அமைச்சர்

தகவல் தொழில் நுட்ப உலகில் இப்போது நாம் அடிக்கடி கேட்கும் பெயர் "மேக க் கணினி" எனும் க்ளவ்ட் (Cloud) கம்ப்யூட்டிங். 
அடிக்கடி பயன்படுத்தப்படுவதனாலேயே, இது குறிக்கும் பொருளும் பலவாறாக எண்ணப்படுகிறது. 
சரியாக இதன் பொருள் தான் என்ன? 
இதனைத் தெரிந்து கொள்வதனால் என்ன பயன்? 
அல்லது தெரிந்து கொள்ளாததனால் எதனை இழக்கிறோம்? 
இதனோடு தொடர்புடையதாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? 
அவை எவற்றைக் குறிக்கின்றன? 
சுரன் 06092014

இதற்கான சில விளக்கங்களையும் குறிப்புகளையும் இங்கு காணலாம்.

க்ளவ்ட் அறிமுகம்:

 Cloud computing என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப சொற்றொடராக இருந்தாலும், 1950 ஆம் ஆண்டிலேயே, இதன் வேர்கள் தென்பட்டன. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்களும், அதனுடன் இணைக்கப்பட்ட டெர்மினல்களையும் சற்று எண்ணிப்பார்த்தால், அன்றே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தொடங்கிவிட்டதனை அறியலாம். 
மெயின்பிரேம் சர்வருக்கும், அதன் டெர்மினல்களுக்குமான இன்றைய தொலைவு தான் மிக அதிகமாகி உள்ளது. 
க்ளவ்ட் என்பது பல்வேறு கம்ப்யூட்டர்கள், மொத்தமாக இணைக்கப்பட்டு ஒரே ஒரு சிஸ்டத்தால் இயக்கப்படுவதாகும். க்ளவ்ட் என்பது எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளை (data storage, content delivery, or applications) வழங்கும் சாதனமாகும். இவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கம்ப்யூட்டிங் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். 

அதாவது, பயனாளர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்துகையில், எந்தவிதமான செட் அப் பணிகளையோ அல்லது க்ளவ்ட் சாதனத்தினை பராமரிக்கும் பணியினையோ மேற்கொள்ள வேண்டியதில்லை. 
சரி, க்ளவ்ட் என்று ஏன் இதற்குப் பெயரிட்டனர்? 

யாருக்கும் இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லை. 
பல கம்ப்யூட்டர்கள் இணைப்பினை தூரத்திலிருந்து பார்க்கும் போது, அவை அனைத்தும் சேர்ந்து ஒரு மேகக் கூட்டமாகத் தானே தெரியும்.
 கூட்டமாகப் பறக்கும் வெட்டுக் கிளிகள் அல்லது வெளவால்களை எண்ணிப் பார்த்தால், இது புரியும். அதே கற்பனையைக் கம்ப்யூட்டர்களுக்கும் செலுத்திப் பார்த்தால், நாம் ஏன் இதனை க்ளவ்ட் என அழைக்கிறோம் என்பதுவும் புரியும்.

க்ளவ்ட் சாதனங்களின் அமைப்பினை இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

 
1. ஆயத்தப்படுத்தல் (Deployment) 

2. சேவை தருதல் (Service). 
முதல் வகையில் இயங்கும் க்ளவ்ட் அமைப்பினை இன்னும் சில பிரிவுகளில் வகைப்படுத்தலாம். 

அவை, 1. தன் பணிக்கான க்ளவ்ட் (Private cloud) இது ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு மட்டும் பயன்படும் வகையில் அமைக்கப்படுவதாகும். இதனை இவர்கள் இருக்கும் இடத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்பதில்லை. தூர இடங்களிலும் வைத்து இயக்கலாம். 
இந்த க்ளவ்ட் சேவையை, பயன்படுத்துபவர் அல்லது நிறுவனமே இயக்கலாம்; அல்லது இவர் சாராத ஒருவர் அல்லது நிறுவனம், இவர்களுக்காக அமைத்து இயக்கலாம். 
1. பொதுவான க்ளவ்ட்: பொது க்ளவ்ட் சேவை பொதுவான எவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகின்றன. முதலில் சொல்லப்பட்ட தனி நபர் க்ளவ்ட் அமைப்பிற்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. பயனாளர்கள் யார் என்பதில் மட்டுமே வேறுபாடு உண்டு.
2. கலப்பான க்ளவ்ட் இயக்கம் (Hybrid Cloud): ஒரு க்ளவ்ட் தனிநபர் மற்றும் பொதுவான எவருக்கும் என இரண்டு வகையினருக்கும் தன் சேவையினை வழங்குகையில் அது Hybrid Cloud என அழைக்கப்படுகிறது. இரண்டு க்ளவ்ட் சர்வர்கள் இணைந்து சேவைகளை, இரண்டு வகையினருக்கும் வழங்க முன்வரும்போதும், இதே பெயரில் அது அழைக்கப்படுகிறது. ஒருவர் தனக்கென ஒரு க்ளவ்ட் சர்வரை அமைத்துப் பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் பயன்படுத்த அனுமதித்தால், அது Hybrid Cloud என அழைக்கப்படும். 
3. சமுதாய க்ளவ்ட் (Community Cloud): தனிப்பட்ட க்ளவ்ட் சர்வர் ஒன்று, பல நிறுவனங்களால், பல தரப்பட்டவர்களால் பயன்படுத்தப்படும்போது, அது Community Cloud என அழைக்கப்படுகிறது. வேறு கோணத்தில் பார்க்கையில், ப்ரைவேட் க்ளவ்ட் பொதுவான ஒன்றாகவும் சேவை தரும் ஒரு அமைப்பாகக் கருதப்படும். 
சேவைகள் என்ற வகையில் இவை மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. தற்போது க்ளவ்ட் சேவைப் பணிகள் பலவாறாக மேற்கொள்ளப்படுவதால், இந்த பிரிவுகளும் பல வகைகளாகக் காட்டப்படுகின்றன. 

அவை,
1. அடிப்படைக் கட்டமைப்பு சேவை (Infrastructure- as -a -Service (IaaS): ஒரு க்ளவ்ட் சேவையில் சர்வர் ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் அலைவரிசை அல்லது லோட் பேலன்சிங் போன்ற சேவைகள் வழங்கப்படுகையில், அது அடிப்படைக் கட்டமைப்பு சேவை என அழைக்கப்படுகிறது. அமேஸான் நிறுவனம் வழங்கும் இணைய தள சேவை இதற்கான ஓர் எடுத்துக் காட்டு.


2. சாப்ட்வேர் கட்டமைப்பு சேவை (PaaS = Platform- as -a -Service): 

ஒரு க்ளவ்ட் சர்வர், அதன் பயனாளர்களுக்கு சாப்ட்வேர் தொகுப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான சூழ்நிலையை, தேவையான மென்பொருட்களைத் தந்தால், அது ஓர் மேடைக் கட்டமைப்பினைத் தருவதற்கு ஒப்பாகும். இதனால், மென்பொருட்களைத் தயார் செய்பவர், அதற்குத் தேவையான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அமைப்புகளை வாங்கி, தங்களது கம்ப்யூட்டர்களில் அமைத்துப் பயன்படுத்த வேண்டியதில்லை. இதற்கான ஓர் எடுத்துக் காட்டு Force.com
3. சாப்ட்வேர் சேவை (Software-as-a-Service (SaaS): அப்ளிகேஷன்கள் மற்றும் புரோகிராம்களைத் தன்னகத்தே கொண்டு, அவற்றைத் தேவைப்படும் பயனாளர்கள் அணுகிப் பெற்றுப் பயன்படுத்தும் சேவையை வழங்கும் க்ளவ்ட் சேவை இந்தப் பிரிவில் வரும். Gmail, Basecamp, and Netflix ஆகியவை இதற்கான எடுத்துக் காட்டுகளாகும்.

க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பணிகளின் எதிர்காலம்: மேலே சொல்லப்பட்ட க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிகள் மற்றும் எடுத்துக் காட்டுக்களையும் பார்க்கையில், வரும் எதிர்காலத்தில் இவை இல்லாமல் இயங்க முடியாது என்பது உறுதி. 
மொபைல் அப்ளிகேஷன்கள், தங்கள் பேக் அப் பைல்களை, க்ளவ்ட் ஸ்டோரேஜில் தான் வைத்துப் பாதுகாக்கின்றன. 
ட்ராப் பாக்ஸ், கூகுள் ட்ரைவ் மற்றும் இது போன்ற க்ளவ்ட் சர்வர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். அமேஸான், யு ட்யூப் போன்றவை க்ளவ்ட் கட்டமைப்பு சேவைக்கு அடையாளங்களாகும். 

க்ளவ்ட் இல்லை என்றால், இன்றைக்கு நாம் அனைவரும் 
பயன்படுத்தும் பாதிக்கு மேற்பட்ட இணைய அப்ளிகேஷன்களை இழக்க வேண்டியதிருக்கும். அப்படியானால், இவற்றின் எதிர்காலப் பணிகளும், அவற்றிற்கான இடங்களும் எப்படி இருக்கும்?
இதில் உள்ள அபாயம் என்ன? 

க்ளவ்ட் ஸ்டோரேஜ் பயனாளர் அனைவருக்கும், அதில் அவர்கள் சேவ் செய்துள்ள டேட்டாவிற்கு அணுக்கத்தினைத் தருகிறது. பயனாளர்களின் கம்ப்யூட்டர்களின் இயக்கம் முடங்கிப் போனாலும், வேறு கம்ப்யூட்டர்கள் அல்லது பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் இருந்து கூட இவற்றை இயக்கலாம். 
ஆனால், நாம் க்ளவ்ட் ஸ்டோரேஜ் சேவையைத் தரும் நிறுவனத்தை நம்பி, அனைத்து டேட்டாக்களையும் தருகிறோம். இது என்றைக்கும் அபாயம் தான் என்று பலரும் கருதுகின்றனர். இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், க்ளவ்ட் சர்வர்கள் புதிய தொழில் நுட்பத்தினை உருவாக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையைப் பின்பற்றுவார்கள்.

அனைத்துமே இணையமாய்: 

இனி வருங்காலம், நமக்கு அனைத்துமே இணையம் தான் என்ற சூழ்நிலையை உருவாக்கும். 
நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும், கம்ப்யூட்டர் மட்டுமின்றி, டி.வி., மியூசிக் பாக்ஸ், மைக்ரோ ஓவன் அடுப்பு, ஏ.சி. 
மின் சாதனங்கள் என அனைத்தும் க்ளவ்ட் சர்வர்களுடன் இணைக்கப்பட்டு, நாம் எங்கு சென்றாலும், அவற்றை இயக்கும் வகையிலான ஒரு சூழ்நிலை கிடைத்தால் எப்படி இருக்கும்? 

எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
க்ளவ்ட் சர்வர்கள் நம்மைச் சுற்றி அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து நாம் சேவைகளை மேற்கொள்வோம். 

இன்றைய தொலைபேசி இணைப்பகங்களைப் போல, நம் அருகிலேயே அவை அமைக்கப்படலாம். அதன் மூலம் நம் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகலாம். வாழ்க்கை தரம் உயரலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
பாலில் தண்ணீர் கலந்த அமைச்சர் விலக்கல் .

 தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 
இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. 
சுரன் 06092014தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி
மிழகத்தில் ஆட்சி அமைத்து ஜெ., அமைச்சர் நீக்கம் இத்துடன் 19 வது முறை. 

 ஜெ., இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கப்படுவதாகவும், இவருக்கு பதிலாக பி.வி.,ரமணா நியமிக்கப்படுவதாகவும், இவர் இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரமணாவும் முன்பு அமைச்சராக இருந்து ஓரங்கட்டப்பட்டவர்தான்.[இம்முறை எத்தனை நாட்களோ? ]
அமைச்சர் மூர்த்தியை பொறுத்த வரை பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. இவரது மகன்கள் கண்ணதாசன், தமிழ்செல்வன் ஆகிய இருவரும் பல்வேறு அரசு துறை பணிகள் டெண்டருக்கு தனி கமிஷன் கலெக்சன் பண்ணி வந்தனராம். மேலும் மணல் வளம் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் சட்ட விரேதாமாக குவாரிகளை கொண்டு கொள்ளை லாபம் அடித்தது வெளிச்சத்திற்கு வந்தது. 
கட்சியில் பொறுப்புகள் வாங்கி தரவேண்டுமென்றால் மாவட்ட செயலராக இருக்கும் அமைச்சர் மூர்த்திக்கு ஒரு தொகை கல்லா கட்ட வேண்டுமாம். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. 
தமிழகம் முழுவதும் ஆவின் பாலில் தண்ணீர்  கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. 
இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது. 

அமைச்சர் மூர்த்தி தயவில் பாலில் தண்ணீர் கலப்பது எப்படி.? 
சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது. வந்தவாசி ரோடு, கோவிந்தாபுரம் அருகே, வெள்ளிமேடுபேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோட்டார் பைக்கில் வந்த திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் சுரேஷ்பாபு, 35, ராணிபேட்டை அன்பு, 24 ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பாலைத் திருட, ஒரு வாகனத்தில் கேன்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர். இவை அனைத்தும் மூர்த்தியின் அறிவுரைப்படி நடந்துள்ளது.இதற்காக மாதாமாதம் பெரும் தொகை கை மாறியுள்ளது.

 வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. 
சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில்,மட்டுமே  தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------